"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 10, 2024

ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா - 11.1.2024

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் தளம் சார்பில்  சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இம்மாத சேவைகளுக்கு பொருளுதவி செய்து வரும் அனைவரின் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றோம். சென்ற வாரம் திமிரியில் தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் சார்பில்  நடைபெற்ற சத்சங்கத்தில் கலந்து கொண்டோம். நம் அகத்திய அடியார்களை அன்று சந்தித்து மகிழ்ந்தோம். குருநாதரின் வாக்கினை கேட்டும் மகிழ்ந்தோம்.அன்றைய தினம் அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரர் தரிசனம் பெற்று வந்தோம். இது போன்ற நிகழ்வுகள் நாம் நினைத்தால் பங்கு பெற இயலாது. குருவருள் துணை கொண்டே இவற்றில் நாம் பங்கு பெற முடியும். இவற்றுடன் தினம் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது பன்னிரு திருமுறை படித்து வருகின்றோம். 

இந்த பயணத்தில் இன்றைய நாள் முருக பக்தர்களுக்கு ஒரு பொன்னாள். ஆம். இன்றைய நன்னாளில் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்றைய விழாவின் அழைப்பிதழை இன்றைய பதிவில் அறிய தருகின்றோம்.

பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும் ஆறுமுகப்பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்ய பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார். 



 1923ம் ஆண்டு டிசம்பர் 27ம் நாள், சுவாமிகள் சென்னை தம்பு செட்டி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு குதிரை வண்டியின் சக்கரம் அடிகளாரது இடது கணை காலின் மீது ஏற, கால் முறிவடைந்தது. அங்கிருந்த அன்பர்கள் சுவாமிகளை சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமை மருத்துவரான ஆங்கிலேயர், சுவாமிகளின் கால் குணப்படாது என்று கூறினார். அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர்.

 பதினோராவது நாள் இரவு அடிகளார், படுக்கையில் படுத்த வண்ணம் முருகனை வேண்டினார். அப்போது முருகனின் வாகனமாகிய மயில்கள் வானத்தில் நடனம் புரிந்து வருவதை கண்டார். அப்பொழுது, முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார். மறுநாள் இரவு அடிகளார் அருகில் முருகன் குழந்தை உருவில் படுத்திருப்பதை கண்டார். "முருகா" என்று அழைத்தவுடன் இறைவன் மறைந்து போனார். முருகனின் திருநாமத்தை பன்னிரு முறை கூறி வணங்கினார். உடனே கால் கூடி விட்டது. பெரிய மருத்துவரான ஆங்கிலேயர், இவரை சோதித்து இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்து புதுப்பாக்கத்தில் உள்ள அன்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.


 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் தூய பக்தியையும், அவர் இயற்றிய சண்முகக் கவசத்தின் மகிமையையும், முருகப்பெருமான் தம் மெய்யடியார்களுக்கு அருளும் கருணையையும் மக்கள் அறியும் வண்ணம், சென்னையில் முருகப்பெருமான் திருவிளையாடல் புரிந்தார். உருத்ரோத்காரி ஆண்டு, மார்கழி மாதம், 12-ஆம் நாள் வியாழக்கிழமையன்று (27.12.1923) வடசென்னை, தம்புச் செட்டித் தெருவில் வேகமாக வந்த குதிரை வண்டி பாம்பன் சுவாமியின் மீது மோதியதால் அவரின் இடக்கால் எலும்பு முறிந்தது. அதைக்கண்டு சுவாமி கலங்கவில்லை; மருத்துவம் செய்து குணப்படுத்தி வாழ நினைக்கவில்லை. இத்துடன் உடற்பற்றும், உயிர்ப்பற்றும், உலகப்பற்றும் ஒருங்கே ஒழிந்துவிட்டன என்றும், மீண்டும் பிறவித் துன்பம் வராது என்றும் எண்ணி முருகப்பெருமான் திருவடியையே சிந்தித்திருந்தார்.

இந்த விபத்தைக் கண்ட சுவாமியின் அன்பர் ஒருவர் அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். பாம்பன் சுவாமி 73 வயதுக்கு மேற்பட்டவர் என்பதாலும், உப்பில்லாத உணவையே உண்பவர் என்பதாலும் அவரின் முறிந்த எலும்பு ஒன்று சேராது என்றும், அறுவைச் சிகிச்சைச் செய்ய வேண்டுமென்றும் மருத்துவர்கள் கூறினர்.

அவர்கள் கூறியதை ஏற்காமல் பாம்பன் சுவாமி, முருகப்பெருமானையே சிந்தித்த வண்ணமாய் இருந்தார். சீடர்கள், 1891-ஆம் ஆண்டில் சுவாமி இயற்றிய சண்முகக் கவசத்தை தினந்தோறும் பாராயணம் செய்தார்கள். மருத்துவமனையில் சேர்ந்த 11-ஆம் நாள் இரவில் முருகப்பெருமானின் பெரிய மயில் ஒன்று தனது தோகையை விரித்து, அழகிய வானை மறைத்திருப்பதையும், மற்றொரு மயில் அதனுடன் சேர்ந்து நடனமாடிய காட்சியையும் கண்டார். அக்காட்சி மறைவதைக் கண்டு, முருகப்பெருமானின் திருவருளைச் சிந்தித்து அழுதார்.

அவர் மனம் மகிழுமாறு செவ்வேட் பரமன் ஓர் இரவில் ஒரு சிவந்த நிறக் குழந்தைவடிவில் சுவாமி படுத்திருந்த படுக்கையில் படுத்திருந்தான். குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே என்று அறிந்துகொண்டதும் அக்குழந்தை மறைந்துவிட்டது.

பிறகு, மருத்துவர்கள் ஆராய்ந்து, எலும்பின் ஒடிந்த பகுதி கூடி வருவதைக் கண்டு மகிழ்ந்தனர். இந்த அற்புத தெய்வீக நிகழ்ச்சி அந்த மருத்துவமனை கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பு வருமாறு:

""பாம்பன் ஸ்ரீமத் குமரகுருபர சுவாமிகள் கால் முறிவுண்டு சென்னை பொது மருத்துவமனையில் 11வது வார்டு (மன்றோ வார்டு) 11வது படுக்கையில் 27.12.1923 அன்று சேர்க்கப்பட்டிருந்தார். முருகப்பெருமான் திருவருளால் 11-ஆம் நாள் இரவு (6.1.1924) வளர்பிறை பிரதம திதியும், பூராட நட்சத்திரமும் சேர்ந்த நன்நேரத்தில் சுவாமிகள் மயில் வாகனக் காட்சி கண்டு, அறுவை சிகிச்சை இல்லாமலேயே பூரண குணம் பெற்றார். அந்நாள் "மயூர வாகன சேவன' விழாவாக ஒவ்வோராண்டும் சுவாமிகள் காலம் தொடங்கி, விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது''.





அவ்வகையில்÷மகிமை பொருந்திய "மயூரவாகன சேவன விழா' 100-ஆம் ஆண்டு விழாவாக 10.1.2024 மற்றும் 11.1.24 தேதிகளில் சிறப்பாக மஹாதேஜோ மண்டல சபையால் பாம்பன் சுவாமியின் சமாதி நிலையத்தில் நடத்தப்படுகிறது. ஆண்டவன் அருள்பெற்ற அடியார்களின் பூஜையே ஆண்டவனுக்கு உகந்த - சிறந்த பூஜையாகும். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கூறியதுபோல மயூரவாகன சேவனம் ஒரு மகத்தான சேவனம்! தொடர்ந்து நிகழ்த்தினால் துன்பங்கள் தொலைந்தோடும்!

என்னை  ஆதரித்தருள்  பரம  ரகசிய  சக்தி என்னை  நம்பியோரை   ஆதரியாது நிற்குமோ    ஐயம்  வேண்டாம் - பாம்பன் சுவாமிகள்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html


 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

No comments:

Post a Comment