"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 24, 2024

தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள்! - இன்றைய வழிபாடு அழைப்பிதழ்கள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று தைப்பூசம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்களை இங்கே கூறி மகிழ்கின்றோம். இன்றைய நன்னாளில் அனைத்து முருகப் பெருமான் தலங்களிலும், வள்ளலார் சபைகளிலும் சிறப்பான வழிபாடுகள் நடைபெற உள்ளது. இன்றைய நாளின்  வழிபாட்டு அழைப்பிதழ்களை இங்கே பகிர்கின்றோம்.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் வேண்டி பணிகின்றோம். மேலும் இன்றைய நாளில் ஒரு சிறப்பு பதிவு அளிக்க உள்ளோம். இதற்கு குருவின் அருளை வேண்டுகின்றோம்.






முருகன், தமிழ்க்கடவுள் என்று தமிழர்கள் சொந்தம் கொண்டாடி மகிழும் தெய்வம். அப்படிப்பட்ட முருகனைக் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானவை வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலியன. இவற்றில் தைமாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் சிறப்புடையது. தைப்பூச நாளில்தான் இந்தப் பிரபஞ்சத்தில் நீரும் பின் அவற்றிலிருந்து பிறவும் தோன்றின என்கின்றன புராணங்கள். அப்படிப் பட்ட தைப்பூசத்தின் சிறப்புகள் அநேகம் அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

முருகப்பெருமான் வள்ளியை மணந்துகொண்ட நாள் தைப்பூசம் என்பது நம்பிக்கை. எனவே அந்த நாளில் முருகப்பெருமானை மனமுருக வேண்டிக்கொண்டால் திருமண வரம் கிடைக்கும் என்பார்கள் பக்தர்கள்.

தைப்பூசம் ஏன் கொண்டாடுகிறோம்?

சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் கடும் தவத்தின் மூலமாக பல வரங்களைப் பெற்றனர், சூரபதுமனும் அவனது தம்பிகளான தாரகாசுரன் மற்றும் சிங்கமுகன் ஆகியோரும். அதில் முக்கியமானது, ‘தங்களது மரணம் நிகழ்ந்தால், அது சிவபெருமானுக்கு நிகரான சக்தியால்தான் நிகழ வேண்டும்’ என்பதாகும்.

இவர்கள் மூவரும் தாங்கள் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவர்களை சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினா். தேவர்களின் தலைவனான இந்திரனும் கூட, யாரும் அறியாத ஓரிடத்தில் போய் மறைந்து கொண்டான். சிறையில் வாடியபடியே தேவர்கள் அனைவரும் பிரம்மனையும், விஷ்ணுவையும் நோக்கி தங்கள் பிரார்த்தனையை வைத்தனர்.

அவர்கள் ஈசனால்தான் இதற்கு தீர்வு காண முடியும் என்று அவரிடம் சென்றனர்.
அங்கு ஈசன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அவரை தியானத்தில் இருந்து எழுப்பும் தைரியம் எவருக்கும் இல்லை. எனவே மன்மதனை அழைத்து, சிவபெருமான் மீது காம பாணம் வீசச் செய்தனர்.
இதனால் கண் விழித்த ஈசன், தன் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறியை வெளிப்படுத்தினார். அவை ஆறு தீப்பொறிகளாகப் பிரிந்து கங்கையை அடைந்தது. அதனை வாயுதேவன், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார்.

அங்கு அந்த ஆறு தீப் பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. அவரே முருகப்பெருமான்.
முருகப்பெருமான் அவதரித்தது வைகாசி விசாகம் ஆகும். அவர் சூரபதுமர்களை வதம் செய்தது ஐப்பசி மாதம் சஷ்டி திதியில். அன்றைய தினம்தான் கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. அப்படி சூரபதுமர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு பார்வதேவி ஞானவேல் வழங்கினார்.
பார்வதியிடம் இருந்து முருகன் ஞானவேல் பெற்ற தினத்தையே, தைப்பூசத் திருநாள் என்று பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.

பழத்திற்காக கோபித்துக் கொண்டு, ஆண்டி கோலத்தில் முருகப்பெருமான் நின்ற இடம் பழனி. அந்தத் திருத்தலத்திற்குச் சென்றுதான், பார்வதி ஞானவேலை வழங்கியதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே தான், தைப்பூசத் திருநாள், பழனியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை நெருங்காது. முருகப்பெருமானுக்கு நடைபெறும் திருவிழாக்களிலேயே புகழ்பெற்றதும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் முதல் வெளிநாட்டவர் வரை மனம் விரும்பி கொண்டாடும் விழாவாகவும் தைப்பூசம் உள்ளது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சொல் வழக்கு. எனவே மலை மீது இருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தைப்பூசத் திருநாளில் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்திகளும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது. அதனால் தான் ‘சுக்குக்கு மிஞ்சுன மருந்தும் இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சுன கடவுளும் இல்லை’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

தைப்பூச திருநாளில் தான் உலகம் தோன்றியதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
அதே போல் சிவபெருமான், பார்வதியுடன் இணைந்து தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆனந்த திருநடனம் புரிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்ததும், இந்த தைப்பூசத் திருநாளில்தான். இரணியவர்மன் என்ற அரசன், தில்லையம்பலத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்தான். அவனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது இந்த தைப்பூசத் திருநாளே ஆகும்.
எனவே தைப்பூசம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், இறைவனுக்கு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும்.

தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை அளிக்கும்.

முருகப்பெருமானுக்கு சூரனை அழிக்க தேவியானவள் தன் சக்தி முழுவதையும் கொண்டு ஒரு வேலை உருவாக்கி வழங்கி அருளி நாள் தைப்பூசம். முருகன் தேவியிடமிருந்து பெற்ற அந்த வேல் 'பிரம்ம வித்யா' சொரூபமானது. இன்றைய திருநாளில் ஓதிமலை ஆண்டவரையும், வள்ளிமலை வள்ளலையும் ஒரு சேர போற்றுவோம். 


1. அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க சபை, செங்கல்பட்டு - தைப்பூச விழா 


2. வடலூர் ஜோதி தரிசனம் 




3. சூரப்பட்டு சன்மார்க்க சங்க விழா அழைப்பிதழ் 



4. கண்டியன்கோவில் திருவடி திருவருட்ச்செங்கோல் சபை - 5 ஆம் ஆண்டு அழைப்பிதழ் 




5. பாலாம்பிகை அருட்குடில் மதுரை 



6. சென்னிமலை அருள்மிகு ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில், தைபூசத் தேர்த்திருவிழா அழைப்பிதழ் 


7. சதுரகிரி வள்ளலார் அறக்கட்டளை 




8. பௌர்ணமி பூஜை -  ஸ்ரீலஸ்ரீ செல்லப்ப சுவாமிகள் எக்க குடி, ராமநாதபுரம் 



9 .மாதவரம் - வள்ளலார் வழி சுத்த சன்மார்க்க அறக்கட்டளை - 153 ஆம் ஆண்டு தைப்பூச திருநாள் வழிபாடு 







10 .ஸ்ரீமத் ஈசூர் சச்சிதாநந்த சுவாமிகள் 138 ஆம் ஆண்டு மகா குருபூஜை விழா அழைப்பிதழ் 



11 .குருந்தமலை - அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் - தைப்பூச வழிபாடு 





12. திண்டுக்கல் மலையடிவார அருட்பெருஞ்சோதி சன்மார்க்க சங்கம் 





13. மலைக்கோயில் ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் - தேர்த் திருவிழா அழைப்பிதழ் 


14. திருஅண்ணாமலை அருட்பெருஞ்சோதி வள்ளலார் அறக்கட்டளை அழைப்பிதழ் 









15. கூடுவாஞ்சேரி வழிபாடு அழைப்பிதழ்  



அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 

25/01/24வியாழக்கிழமை பௌர்ணமி தைப்பூசம் அதை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனையும் அருள் பிரகாச வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும் அகவல் பாராயணம் ஜோதி தரிசனமும் அன்னதானமும் நடைபெறும் அனைவரும் வருக அருள் பெறுக

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி*

17. செந்தண்ணீர்புரம் வள்ளலார் அருள்மணி மாடத் திருக்கோயில் - தைப்பூச விழா 

முத்துமணி டவுன் செந்தண்ணீர்புரம் திருச்சிராப்பள்ளி

 தைப்பூச விழா நிகழ்ச்சிகள் 

தை மாதம் 11ம்நாள் 25 1 2024
 காலை 6 மணிக்கு கொடி கட்டுதல் 
அகவல் பாராயணம் காலை 8 மணிக்கு 
அருட்பெருஜ்ஜோதி தரிசனம் காலை 8:30 மணிக்கு 
சிறப்பு அன்னதானம் நடைபெறும்

 அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஆண்டவரின் திருவருளுக்கும் குரு அவர்களுக்கும் பாத்திரமாகும் படி அழைக்கின்றோம் 

அன்புடன் திருச்சிராப்பள்ளி மாநகர் /புறநகர் சன்மார்க்க சத்திய சங்கத்தார்
ஜெயவிலாஸ் ஆ.லோகநாதன்பிள்ளை தலைவர்திருவானைக்கா சி. விஸ்வநாதன் பிள்ளை துணத்தலைவர் அம்பிகாபுரம் சண்முகம் சோமசுந்தரம்செயலாளர் மே.க.கோட்டைநித்யானந்தம் துணைசெயலர் மலைக்கோட்டைஇராஜரெத்தினம் முன்மை செயலர் வள்ளலடியார் வடலூர் ஞானசேகரன் திருக்கோயில் நிர்வாகி சித்ரா வள்ளலடியார் தர்மச்சாலை நிர்வாகி வள்ளலார் கோயில்செந்தண்ணீர்புரம். திருவரங்கம் அ. கிருஷ்ணகுமார் பொருளாளர் மற்றும் திருக்கோயில் திருத்தொண்டர்கள் சன்மார்க்க சக்தி முற்றத்தார் பதினெண் திருமுறை வழிபாட்டு மன்றத்தார் சன்மார்க்க மாணவர் மன்றத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள்.

இது போன்று இன்னும் எண்ணற்ற கோயில்களில், வழிபாட்டு தலங்களில் , வள்ளலார் சபைகளில் இன்றைய தைப்பூச வழிபாடு நடைபெற உள்ளது. நாமும் இன்று முருகப்பெருமானையும், அருட்பெருஞ்சோதி ஆண்டவரையும் ஒரு சேர போற்றி வழிபாடு செய்வோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஓம் ஸ்ரீ பெரியபுன மங்கையாம் வாலைத்தாய் திருவடிகள் போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_23.html

 தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள்! - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_18.html

 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி... - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_24.html

 உலகம் தழைக்க வந்துஉதித்த உருவே வருக! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_4.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_5.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - உலோபாமுத்ரா சமதே அகத்தியர் பெருமான் - வருஷாபிஷேகம் - 24.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/24012024.html

அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/08/blog-post_4.html

 இன்றைய கும்பாபிஷேக அறிவிப்புகள் - 13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/13072022_12.html

 பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_9.html

பாக்கம் பாளையம், அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_29.html

 தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_15.html

 பொங்கலோ பொங்கல் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_81.html

 தைத் திருநாள் வாழ்த்துக்கள்  - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_15.html

 திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_12.html

திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!! - https://tut-temples.blogspot.com/2023/08/3000.html

திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023 - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா - 11.1.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/100-1112024.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html


 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே! - https://tut-temples.blogspot.com/2022/10/blog-post_14.html

அண்ணாமலை எம் அண்ணா போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/10/blog-post_14.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

No comments:

Post a Comment