அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! என்ற பதிவிலிருந்து தைப்பூச கொண்டாட்டங்கள் பற்றி நம் தளத்தில் பேசி வருகின்றோம். தைப்பூசம் என்றாலே நம் நினைவிற்கு முருகப்பெருமானும், வள்ளலாரும் வருகின்றார்கள். இன்றைய பதிவில் அருட்பெருஞ்சோதி பற்றி சிறிது தொட்டுக்காட்ட உள்ளோம்.
பதினெண் சித்தர்கள் வரிசை பற்றி நாம் அறிவோம். இது பதினெட்டு சித்தர்கள் என்று இல்லை. சித்தர்கள் வரிசையில் ஒவ்வொருவரும் ஒருவித நிலையில் அடங்குவர். சிலர் பக்தி பற்றி பேசுவார்கள். சிலர் யோகம் பற்றி பேசுவார்கள். சிலர் ஞானம் பற்றி பேசுவார்கள். இந்த வரிசை பற்றி பேசும்போது அருட்பெருஞ்சோதி பற்றி பேசிய வள்ளலார் பற்றி தான் நாம் இன்றைய பதிவில் அறிய உள்ளோம். வள்ளலார் என்றதும் நமக்கு அன்னதானம் என்று தான் நினைவிற்கு வரும். ஏன்? இந்த உயிர் வாழ உடம்பு வேண்டும். உடல் இயங்க பசி போக்க வேண்டும். வள்ளலார் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் பார்க்கும் போது, பசியோடு பலர் இருந்திருக்க, ஆன்மிகம் பற்றி சொல்ல முடியுமா என்ன? உண்மையான ஆன்மிகம் மற்றவர் துயர் போக்குதலே. அதனால் தான் வள்ளலார் என்றதும் அன்னசேவை நமக்கு தெரிகின்றது. அன்னசேவை மூலம் இறைவனை காணலாம். ஆன்மிகத்தில் முன்னேற விரும்புபவர்கள் அன்னதானத்தை கையில் எடுத்து பாருங்கள். அன்னதானத்தின் மூலம் எத்துணை எத்துனை விஷயங்களை சொல்லி, செய்து காட்டி இருக்கின்றார் நம் பெருமானார்.
அன்பு, கருணை, இரக்கம், தயவு என்று அனைத்திற்கும் இலக்கணம் நம் வள்ளலார் தான் என்று சொல்லத் தோன்றுகின்றது. கீழே உள்ள அருள்காட்சி காணும் போதே தைப்பூச வழிபாட்டின் உயர்வு தெளிவாக உணர்த்தப்படுகின்றது.
சிறந்த சொற்பொழிவாளர்,போதகாசிரியர்,உரையாசிரியர்,சித்தமருத்துவர்,பசிப் பிணி போக்கிய அருளாளர்,பதிப்பாசிரியர்,நூலாசிரியர்,இதழாசிரியர்,இறையன்பர்,ஞானாசிரியர்,அருளாசிரியர்,
சமூக சீர்திருத்தவாதி,தீர்க்கதரிசி,மொழி ஆய்வாளர் (தமிழ்) என்றெல்லாம் உணர்த்தப்பட்டு வருகின்றார்.இதெல்லாம் சாதாரண மானிடனுக்கு வாய்க்குமா? ஞானிகளுக்கு வாய்க்குமா?
சன்மார்க்கம் கூறும் செய்திகளை மேலே இணைத்துளோம். ஒரு தடவை படித்தால் புரியாது. ஓராயிரம் தடவை படித்தால் தான் உணர்ந்து நாம் கைக்கொள்ள முடியும். அடுத்து வள்ளலார் என்று சொன்னால் நம் நினைவிற்கு வருவது திருஅருட்பா. நமக்கு என்று வாய்க்கும் என்று தெரியவில்லை. உணர்ந்தபின் இங்கே அறிய தருகின்றோம்.
No comments:
Post a Comment