நம் தளம் சார்பில் சிறு மரியாதை செய்த போது
அங்கிருந்து
புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும் வழியில் அன்னதானம் செய்ய விழைந்தோம்.
ஏற்கனவே இது போன்று சில அன்பர்கள் ஒவ்வொரு பகுதியாக வாங்கி சென்று
இருப்பதால் நாம் தாம்பரம் சென்று கொடுக்க எண்ணினோம். இந்த அன்னசேவையிலே
நாம் இந்த ஆண்டு வழக்கமாக செய்த மகாளய பட்ச அன்னசேவையும் இணைத்து விட்டோம்.
உணவுப் பொட்டலங்களை பெறும்போது சுவாமியிடம் சிறு காணிக்கை கொடுத்து
பெற்றோம்.. தாம்பரம் பேருந்து நிலையம் சென்று, அங்கிருக்கும் அன்பர்களுக்கு
உணவு வழங்கினோம்.
கூடுவாஞ்சேரி சென்று வழக்கமாக நாம் உணவு
கொடுக்கும் அன்பர்களை காண சென்ற போது அவர்களிடம் ஏற்கனவே மற்றவர்கள்
கொடுத்த உணவுப் பொட்டலங்கள் இருந்தது. அன்றைய தினம் மகாளய அமாவாசை என்பதால்
அனைவரும் அன்னதானம், பசுவிற்கு அகத்திக்கீரை என அள்ளி அள்ளி கொடுத்துக்
கொண்டிருந்தார்கள். இதனை நாம் கண்கூடாகவே கண்டோம். நமக்கு இதில்
உடன்பாடில்லை. ஏற்கனவே உணவு வைத்திருக்கும் அன்பர்களிடம் நாமும் உணவு
கொடுத்து அவர்கள் வீணாக்குவதை நாம் விரும்பவில்லை. எனவே அன்று பார்த்து
பார்த்து சேவை செய்தோம்.
ஆதி சிவன் டிரஸ்ட் செய்து வரும் அடுத்து தொண்டு ஆலய வழிபாடு ஆகும். இந்த அமைப்பும் ஜீவ நாடி பார்த்து அதற்கேற்ப ஆலய திருப்பணி செய்து வருகின்றார்கள், அதில் அருள்மிகு ஸ்ரீ ஞானபிரசன்னாம்பிகை தாயார் உடனுறை ஸ்ரீ காளத்தீஸ்வரர் ஆலயதில் கடந்த ஆண்டுகளில் உழவாரப்பணி செய்து நித்திய வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். சென்று ஆண்டில் மகா சிவராத்திரி அன்று அங்கே 1000 பேருக்கு அன்னசேவையும் செய்துள்ளார்கள். இதோ.சென்ற ஆண்டின் அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பிரளயம்பாக்கம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள, அருள்தரும் ஸ்ரீஞானப்பிரசன்னாம்பிகை உடனுறை ஸ்ரீகாளத்தீஸ்வரர் என்ற மிகப்பழமையான ஒரு சிவாலயம் உள்ளது.
ஆலயத்தின் பெயர் : அருள்மிகு ஞானபிரசன்னாம்பிகை உடனுறை ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஆலயம்
ஆலயம் உள்ள இடம் : பிரளயம்பாக்கம் கிராமம்
வட்டம் : பொன்னேரி
மாவட்டம் : திருவள்ளூர் மாவட்டம்
பிரளயம்பாக்கம் கிராமம் ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் வழி :
பிரளயம்பாக்கம் எனும் ஊர் திருவள்ளூரில் இருந்து 68 கிலோமீட்டர் தொலைவும்,
கும்மிடிபூண்டியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவும்,
பொன்னேரியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவும்,
பழவேற்காட்டில் இருந்து 06 கிலோமீட்டர் தொலைவும்,
சென்னை - ஆவடியில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
ஆலய புனரமைப்பு மேற்கொள்வதற்கும், ஆலய வரலாறு அறிந்து கொள்வதற்கும், ஆலய புனரமைப்பு குழுவின் நிர்வாகியான சிவசண்முக சுவாமிகள் அவர்கள், ஸ்ரீநந்தியம்பெருமான் ஜீவநாடி தொடர்புகொண்டு ஆலய வரலாற்றை தெரிந்து கொண்டார்!
ஸ்ரீநந்தியம்பெருமான் ஜீவநாடியில் உரைக்கும் பிரளயம்பாக்கம் ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஆலய வரலாறு :
1. இப்பொழுது ஆலயம் உள்ள இடம் ஒரு நந்தவனமாக இருந்தது அந்த காலத்தில்.
2. ஒரு காலத்தில் மிகப்பெரும் பழமையான ஆலயமாக இருந்தது.
3. துவாபரயுகத்தில் தோன்றிய ஆலயம். இந்த இடத்தில் பல சித்தர்கள், முனிவர்கள் வந்து தவம் செய்த இடம்.
4. கருநாவல், கள்ளிச்செடிகள் சூழ்ந்த காடாக இருந்தது ஒரு காலத்தில் இந்த இடம்.
5. பிரளயம் ஏற்பட்டு காடுகள் அழிந்து பின் கள்ளிச் செடிகள் நிறைந்த காடாக மாறியது இந்த இடம்.
6. வானளவு உயர்ந்து இருந்த கள்ளிச் செடிகள் நிறைந்திருந்த இந்த இடத்தில் வாழ்ந்த மக்களுக்கு, கள்ளிச்செடியால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு பெரும் துன்பம் அடைந்தனர்.
7. பின் அங்கு வந்த ஒரு சித்தர் நல்ல மூலிகைகளை எடுத்து மக்களின் கண் நோய்களை நீக்கி அருள் புரிந்தார்.
8. பின் அந்த சித்தர் கருநாவல் மரத்தின் அடியில் இருந்துகொண்டு தவம் செய்தார். தவம் செய்ததை பார்த்து மக்கள் அனைவரும் இவர் சக்தியுள்ள சித்தர் என்பதை உணர்ந்து கொண்டனர்.
9. கண் பார்வை இழந்த மக்களுக்கு அந்த சித்தர் ஈசனிடம் பிராத்தனை செய்தபாேது, அந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றியது. மக்களுக்கு கண்பார்வை கிட்டிட சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தார் அந்த சித்தர். சிவபெருமானின் அருளால் சூரியதேவனும் அந்த இடத்தில் எழுந்தருளினார். சிவபெருமானை வணங்கி சூரியபகவான் அனைவருக்கும் கண் பார்வையை பெறச் செய்தார். கண்பார்வை முழுவதும் பெற்ற மக்கள் அந்த இடத்தில் பார்க்கும்பாேது ஒரு சிவலிங்கமும், ஒரு சித்தரும் அமர்ந்து இருந்ததை பார்த்து மகிழ்ந்தனர். பின் அருகிலேயே அந்த சித்தர் ஜீவசமாதி அடைந்தார்.
10. அங்கு சமாதி அடைந்த சித்தரை "கண்ஒளிச்சித்தர்" என்று மக்கள் அழைத்தனர்.
11. விண்ணிலுள்ள வானவர்களும், தேவர்களும் எண்ணிலா பூக்கள் தூவியபாேது அந்த சித்தர் அங்கேயே சமாதி அடைந்தார்.
12. கண்ஒளி சித்தர் செய்த மகிமையை அறிந்த கண்ணப்பநாயனார் இங்கு வந்து வணங்கினார்.
13. விண்ணிலுள்ள வானவர்களும், தேவர்களும் எண்ணிலா பூக்கள் தூவிய போது அந்த சித்தர் அங்கேயே சமாதி அடைந்தார்.
14. கண்ஒளி சித்தர் செய்த மகிமையை அறிந்த கண்ணப்ப நாயனார் இங்கு வந்து வணங்கி, ஈசனுக்கு அபிஷேகங்கள் செய்து "கண் உடைய ஈசன்" என்ற திருநாமத்தில் அழைத்தார். தற்சமயம் ஸ்ரீகாளத்தீஸ்வரர் என்ற திருநாமத்தில் ஈசன் அருள்புரிகிறார்.
15. கண்ணப்ப நாயனார் இந்த இடத்திலேயே பல காலம் ஈசனை வணங்கி பின் காளஹஸ்தி சென்றார்.
16. பின்பு பல சித்தர்கள் போகரோடு புலிப்பாணி, அகஸ்தியர், கொங்கணர் சித்தர், அழுகண்ணி சித்தர் இன்னும் பல சித்தர்கள் வந்து இங்கு சிலகாலம் தவம் செய்தனர்.
17. யாருக்கு எல்லாம் கண்பார்வை, கண்நோய்கள், கண் குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த இடத்தில் வந்து வணங்கினாலே, அவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நாேய்கள் நீங்கும் என்பது உண்மையாகும்.
18. சூரியபகவான் ஆலயத்தில் உள்ள ஈசனை நாள்தாேறும் வணங்கும் தலமாகும்.
19. இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கும் பொழுது சூரியனின் சாபங்கள், தோஷங்கள் எல்லாம் நீங்கிவிடும்.
20. இவ்வாலயம் வந்து தரிசனம் செய்யும்பாேது கண் ரோகங்கள், கண் நோய்கள், கண் குறைபாடுகள், சூரியனால் வரும் துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
21. சூரியபகவானால் இருள் அகற்றி ஒளி கொடுத்த இவ்விடத்தில், மனிதர்கள் இங்கு வந்து வணங்கும்பாேது, இருள் நீங்கி மகத்தான ஞான ஒளி கிடைக்கும்.
22. சூரிய பகவான் அருளாசியினால் மாயை இருள் அகன்று ஞான ஒளி கிட்டும் இவ்வாலய தரிசனத்தில்.
23. இங்கு ஜீவசமாதி அடைந்த "கண் ஒளி சித்தர்" நித்தமும் பஞ்சாட்சர மந்திர ஜெபம் ஜெபித்துக் கொண்டிருக்கிறார் இன்னமும்.
24. இங்கே வந்து ஆலய தரிசனம் செய்யும்போது உடல் நோய்கள் பல நீங்கும்.
25. நாள்தோறும் இவ்வாலயத்தில் அமர்ந்து சூரிய காயத்ரி ஜபிப்பவர்களுக்கு, உடலிலுள்ள பிணிகள் போகும். உள்ளத்தில் இருக்கின்ற பயங்கள் போகும். மனதிலேயே வருகின்ற வீணான மனசஞ்சலங்கள் போகும். திடமாேடு தைரியம் அதிகமாகும். தோல் நோய்கள் இருந்தாலும் அழிந்துபோகும். கண்ணிலே வருகின்ற துயரங்கள் எல்லாம் காணாமல் போகும். கண் ஒளியும் சேரும்.
26. நாள்தோறும் ஒருமுறை இவ்வாலயத்தில் "ஆதித்த ஹ்ருதயம்" ஜெபிக்க மிகப்பெரும் சக்திகள் வந்து சேரும்.
28. "ஓம் ஸ்ரீகண்ஒளி சித்தரே நமஹ" என்ற திருநாமத்தை 108 முறை தினமும் கூறிவர, சித்தரின் அருளினாலே மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி வாழ்வார்கள்.
இன்னும் இந்த ஆலயத்தை பற்றிய வரலாற்றை பின்னாளில் உரைப்பதாக ஸ்ரீநந்தியம்பெருமான் வாக்குரைத்துள்ளார்.
சுபம்!
ஓம் ஸ்ரீகாளத்தீஸ்வரர் திருவடிகள் பாேற்றி!
ஓம் ஸ்ரீகண்ஔி சித்தர் திருவடிகள் பாேற்றி!
ஆலய புனரமைப்பு குழு நிர்வாகி தொ டர்புக்கு : சிவசண்முக சுவாமிகள் - +918925457595 (Whats app)
No comments:
Post a Comment