அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவில் முருகன் அருள் பெற இருக்கின்றோம். முருகா! என்று கூப்பிடுவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். நம் தலத்தில் நேற்று முதல் தைப்பூசத்திருநாள் கொண்டாட்டங்களை பதிவுகளின் மூலம் காண இருக்கின்றோம். ஏகப்பட்ட செய்திகள் தைப்பூசம் விழா தொட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தேனி மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ ஷண்முகநாதர் ஆலய மஹா கும்பாபிஷேகம் & தைப்பூசத்திருநாள் அழைப்பிதழை பகிர விரும்புகின்றோம்.
தென்றல் தவிலும் தேனி மாவட்டத்தில் எண்ணற்ற கோயில்கள், மலைகள் உள்ளன. நாமும் தேனி என்றால் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் என்று மட்டுமே நினைத்து இருந்தோம். அம்மன் அருகிலேயே அருள்மிகு கண்ணீசுவரமுடையார் கோயில் இருக்கின்றது.எத்தனை பேர் இங்கு சென்று இருக்கின்றீர்கள் என்று நமக்குத் தெரியவில்லை. காரணம் எங்கு சென்றாலும் அவசரம். அதுவும் இது போன்ற கோயில்களுக்கு சென்றால் சொல்லவே வேண்டாம் அவ்வளவு அவசரம். சிவன் கோயிலில் உள்சென்று ஆகம விதிப்படி வழிபட்டு வெளியில் வர குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும். இத்தகைய வழிபாட்டில் தான் நாம் நம்மை அவனிடம் பூரண சரணாகதியாய் ஒப்படைகின்றோம். அப்போது தான் நாம் வேண்டியது கிடைக்கும். ஆனால் இன்று போகின்ற போக்கில் கன்னத்தில் போட்டுக் கொண்டு செல்கின்றோம். இதில் நாம் நினைப்பதை அவர் நிறைவேற்ற வில்லை என்று குறை வேறு கூறிக் கொள்கின்றோம்.
சரி..கன்னத்தில் போட்டுக் கொள்வதை நிறுத்த வேண்டாம். அடுத்த முறை கோயிலை கடந்து செல்லும் போது, திருக்கோயில் உள்ளே சென்று வழிபடுங்கள். அப்போது தான் உங்கள் மனக்கோயில் திறக்கும். தேனிக்கு மீண்டும் வருவோம். தேனியில் அடுத்து நாம் மிருகண்ட மகரிஷி மலைக்கு சென்றோம். அது ஒரு தனி அனுபவம். பதிவின் இறுதியில் மீண்டும் தருகின்றோம். இந்த பயணத்தில் தான் சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் பற்றி அறிந்து தரிசித்தோம். அருகில் இருக்கின்ற மாணிக்கவாசகர் நம்மை எப்போது அழைப்பார் என்று காத்திருக்கின்றோம். என்னப்பா இது? இந்த நவீன யுகத்தில் காத்திருப்பா என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. கையில் பணம் இருந்தால் நாம் விரும்பும் தரிசனம் பெற முடியுமா? முடியவே முடியாது..அப்படியானால் கையில் பணம்,உடலில் வலு மட்டும் போதாது. நம்மை அந்த எம் பெருமாள் அழைக்க வேண்டும்.அப்படி அழைத்தால் தான் நாம் தரிசிக்க முடியும்.
அது போன்ற ஒரு அனுபவமே இந்த சண்முகநாதன் தரிசனம். சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்னதாகவே தேனியில் சண்முகநாத மலை இருப்பதாகவும் அங்கே குழந்தை முருகன் இருப்பதாகவும் கேள்விப்பட்டோம். எங்கே? எப்படி செல்வது என்று கேட்டால், என்னப்பா? தேனியில் இருக்கின்றாய்? இது தெரியாதா? என்பார்கள். அந்த முருகப் பெருமானை இணையத்தில் கண்ட போது, எப்போ அழைப்பாரோ? என்று தான் நமக்குத் தோன்றியது.
முருகன் அருள் முன்னிற்க அந்த நாளும் வந்தது. நம் சகோதரன்,சகோதரியோடு
இம்முறை யாத்திரைக்கு சென்றோம். தேனியில் மாவட்டத்தில் உள்ள கம்பம் என்ற
ஊருக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து காமய கவுண்டன் பட்டி .விளக்கமாக
சொன்னால் கே.கே பட்டி என்ற ஊருக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து ஊர்தி மூலம் சென்று தரிசனம் செய்தோம்.
அடர்ந்த மலைப்பகுதியில் ஒரு 30 நிமிட பயணத்தில் ஷண்முகநாத மலை அடிவாரம் அடைந்தோம். அங்கே இருந்த வேலை வழிபட்டோம். நம் தமிழ் மரபில் வேல் வழிபாடு இன்றியமையாத ஒன்று. வேலை வணங்குவதை வேலையாக மாற்றிக் கொண்டால் வேலன் வெற்றியைத் தருவான் என்பது உண்மை.
வேல் வழிபாடு மிக மிக முக்கியம். முருகன் வேறு, வேல் வேறு அல்ல..இரண்டும் ஒருவரே...குமரனைக் கண்டீர்களா?
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு
கை கொடுக்கும் வீர வேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு
கை கொடுக்கும் வீர வேல்
எய்த பின்பு மீண்டும்
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எய்த பின்பு மீண்டும்
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்
வெற்றி வேல் வீர வேல்.
அடுத்து கோயிலுக்குள் சென்று பல அபிஷேகங்கள் கண்டு இன்புற்றோம். அங்கே இருந்த மற்றும் சில இடங்களுக்கு சென்று இயற்கையோடு இன்புற்றோம்.
அட..இந்த மலைக்கு பசுமலை என்றும் பெயரும் உண்டு.
அங்கிருந்த பாறைகளுக்கு நடுவில் ஒரு சிறிய குகை இருந்தது. இங்கு சித்தர்கள்
வாசம் எப்போதும் உண்டு என்று கூறினார்கள்.இவர்களை இங்கு வழிபட்ட பின் தான்
நாம் கோயிலில் சென்று முருகனை தரிசிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
நம்மால் உள்ளே செல்ல முடியவில்லை. தீபம் இட்டு வழிபாடு செய்த காட்சி மேலே
உங்களுக்காக இணைத்துள்ளோம்.
சரி..இனி..குருநாதரின் குருவாம் ஸ்ரீ ஷண்முகநாதரின் தரிசனம் பெறலாம்
இனி.. சிறப்பு தரிசனமாக அழகின் ...பாலகனின் ..அழகனின் தரிசனம் ..
அட..தரிசனத்திற்கு பின் இப்போது அழகெல்லாம் முருகனே ...
அருளெல்லாம் முருகனே...என்று பாடத் தோன்றுகின்றது அல்லவா? இதோ.பாடலின்
வரிகள்..மீண்டும் மீண்டும் பாடி பரவசம் அடையுங்கள்.
ஏற்கனவே பதிவின் ஆரம்பத்தில் வழிபாட்டு அழைப்பிதழ் இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகின்றோம்.
மீண்டும் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment