"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, January 5, 2021

அனுமன் ஜெயந்தி (12.01.2021) - ஸ்ரீ மங்கள ஆஞ்சய சுவாமிக்கு 35 ஆம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை பெருவிழா

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

புதிய ஆண்டில் 2021 வழிபாடும், குருநாதர் ஸ்ரீ அகக்தியர் மகா குரு பூஜை வழிபாடும் கூடுவாஞ்சேரியில் நம் தளம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. உலகம் முழுதும் ஸ்ரீ அகத்தியர் மகா குரு பூஜை வழிபாடு மிக மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது. நமக்கு கிடைத்த அருள்நிலைகளை தனிப்பதிவில் தொகுத்து தருகின்றோம். அடுத்து மார்கழி மாத மோட்ச தீப வழிபாடு வருகின்ற 12.01.2021 அன்று கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் அனுமன் ஜெயந்தியும் சேர்த்துள்ளது இன்னும் சிறப்பை தருகின்றது.அனுமன் ஜெயந்தி தமிழகம் முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழா ஆகும். இன்றைய பதிவில் அனுமார் ஜெயந்திக்கான அழைப்பிதழ் கண்டு அவரைப்பற்றி சிறிது இங்கே அறிய உள்ளோம்.






அனுமன் என்றாலே நாமக்கல், நங்கைநல்லூர் என்று பிரசித்தம் என்றாலும் நமக்கு அனுமன் என்றாலே சுந்தர காண்டம் தான். எப்பொழுதெல்லாம் சோர்வாக இருக்கின்றீர்களா அப்பொழுதெல்லாம் சுந்தர காண்டம் படியுங்கள். படித்த பின்பு, உங்களுள் ஒரு ஆற்றல் பிறக்கும், புது மூச்சு பிறக்கும்.







மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இந்த ஆண்டு நாளை ஜனவரி 5ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயங்களில் அவருக்கு அணிவிக்க ஒரு லட்சம் வடைகள், லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் அனுமன் சிரஞ்சீவியாக இந்த மண்ணில் இருக்கிறார். ராம நாமம் கேட்கும் இடங்களில் அஞ்சநேயர் அமர்ந்திருப்பார் என்று நம்பப்படுகிறது. ராமாயண காவியத்தில் ஈடு இணையற்ற இடத்தைப் பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ராமபிரானின் சேவகன் அனுமனை அவதரித்த நாளில் வணங்கினால் தொல்லைகள் தீரும்.

திதிகளில் புண்ணியமான திதி அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா ஜனவரி 5ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும் நாம் நாளை மோட்ச தீப வழிபாடும் செய்ய உள்ளோம். ஹி..ஹி ஒரு சுய விளம்பரம் தான்.




 நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 5ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.




சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள 18 அடி ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா நாளை காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகர் மற்றும் தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், பகல் 11 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனை நடக்கிறது.






இராவணனை போரில் வீழ்த்தி வென்றார் இராமர்.

இந்த தகவலை சீதையிடம் சொல்ல அனுமன் சென்றார். அந்த சமயம் சீதையை கண்ட ஸ்ரீஅனுமனுக்கு மகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை.

அவரின் கண்களில் ஆனந்த கண்ணீர்.

ஆஞ்சநேயரின் கண்களில் இருந்து வரும் கண்ணீரை கண்ட சீதை, இராமருக்கு ஏதும் ஆபத்தோ என பயந்து போனார்.

அப்போது அங்கு இருந்த மணலில், “ஸ்ரீராம ஜெயம்” என்று எழுதினார் அஞ்சநேயர்.

போரில் ஸ்ரீஇராமருக்கு வெற்றி என்பதை மிக ரத்தின சுருக்கமாக “ஸ்ரீ இராம ஜெயம்” என்று அனுமன் எழுதியதை கண்ட சீதை மகிழ்ந்தார்.

“எழுத்தின் வித்தகன் நீ” என்று சீதை, அனுமனை பாராட்டினார்.




அனுமன் எழுதிய “ஸ்ரீ இராம ஜெயம்”என்கிற வாக்கியம், மந்திர சொல்லாக இன்றும் நமக்கு எண்ணற்ற வலிமையை-ஆற்றலை- நல்வாழ்க்கையை-வெற்றியை தந்துக்கொண்டிருக்கிறது.




தினமும் உங்களால் முடிந்த அளவில் ராம நாமம் கூறுங்கள், அதே போல் சுந்தர காண்டம் படியுங்கள். இதோ..கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் தரிசனம் உங்களுக்காக.


அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்களை இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.

ராம் ராம் ராம் 


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

திருமண தடை நீக்கும் தைலாவரம் ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயர் திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_3.html

உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

No comments:

Post a Comment