அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! என்று அரோகரா கோஷம் இட்டு பதிவை தொடர விரும்புகின்றோம். முருக வழிபாடு நம்மை எப்போதும் காக்கும் வழிபாடு. முருகப் பெருமானை வழிபட நாள்,நட்சத்திரம், திதி என அனைத்தும் வருகின்றது. நாள் என்றால் செவ்வாய்கிழமையாகவும், நட்சத்திரம் என்றால் கிருத்திகை என்றும், திதி என்றால் ஷஷ்டி என்றும் எடுத்து கொள்ளலாம். முருக வழிபாடு நம்மை முன்னின்று காக்கும் வழிபாடு, ஞானத்தை தரும் வழிபாடு. முருகப் பெருமான் பற்றி பேசுவது என்றால் ஒரு பதிவு போதாது என்றே சொல்ல வேண்டும். தீபாவளி முடித்து ஷஷ்டி விரதம் முடித்து விட்டு பார்த்தல் அடுத்து தைப்பூசம் வருகின்றது.
சென்ற ஆண்டில் தைப்பூசத் திருநாளின் போது நம் குழு நண்பர்களோடு இணைந்து சதுரகிரி யாத்திரை சென்று வந்தோம்.விரைவில் தனிப்பதிவில் யாத்திரை பற்றி காண்போம். இந்த ஆண்டில் தைப்பூச வழிபாடு எங்கே? எப்படி? என்று இன்னும் நாம் தீர்மானிக்கவில்லை. அவன் அருளாலே என்றும் அவன் தாள் வணங்கி வேண்டி நிற்கின்றோம். இந்த ஆண்டில் தைப்பூச திருவிழா நம் தளத்தில் பதிவுகள் மூலமாக களைகட்ட போகின்றது என்று நாம் நினைக்கின்றோம்.
நம்மை முருக சிந்தனையில், முருக வழிபாட்டில் இணைத்து கொள்வதில் யாத்திரை தோழன் குழுவும், அருணை முனிவன் திருப்புகழ் குழுவும் விட்டு கொடுப்பதில்லை.
சென்ற ஆண்டில் நமக்கு யாத்திரை தோழன் குழுவிலிருந்து அழைப்பு வந்தது. இரண்டு குழுவினரும் இன்று பழனி பாதயாத்திரை செல்கின்றனர். இன்று பழனி பாத யாத்திரையின் முதல் நாள் ஆகும்.
பழனி பாத யாத்திரை என்றால் பல புண்ணியங்கள் தருகின்ற யாத்திரை ஆகும். இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு, நாளை காலை பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசித்து, பிள்ளையார் பட்டியில் இருந்து பாதயாத்திரை துவங்க உள்ள அனைத்து அடியார்களும் மற்றும் திண்டுக்கல்லில் எங்களோடு வந்து கலந்துகொள்ள உள்ள அடியார்களும் மற்றும் ஏனைய இடங்களில் இடையில் எங்களோடு கலந்து கொள்ள உள்ள மற்ற அடியார்களும், அனைவரும் எவ்வித சிரமமுமின்றி பாதயாத்திரையை சிறப்பாக நிறைவு செய்து, எந்த சிரமங்களும் இன்றி பழனி மலை ஏறி, பழனி ஆண்டவரை சிறப்பாக கண்குளிர தரிசனம் செய்ய அனைத்து அடியார்களும் இயற்கையையும் இறைவனையும் மற்றும் உங்கள் குல தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு யாத்திரை சிறப்பாக ஆரம்பித்து சிறப்பாக நிறைவடைய பிரார்த்தனை செய்து கொள்ளும்படி அனைத்து அடியார்களையும் யாத்திரை தோழன் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிள்ளையார்பட்டியில் இருந்து புறப்பட்டு பழனி வரை பாத யாத்திரை சென்று, தைப்பூசத்திருநாள் அன்று முருகப்பெருமானை தரிசிப்பது என்றால் கொஞ்சமாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும். சென்று ஆண்டில் இதே யாத்திரை நாளில் நம்மால் முடிந்தளவில் அடியார்களுக்கு சிறு புண்ணியம் செய்தோம்.
சென்ற ஆண்டில் தாம்பரத்தில் சில காட்சிகள்
நமக்கு தெரிந்து இரண்டு குழுக்கள் பழனி பாத யாத்திரை செல்கின்றார்கள். இது போல் இன்னும் எத்தனை அடியார்கள் என்று நினைக்கும் போது உள்ளம் உருகுதய்யா ....முருகா..உன் அடியார்களைக்காணும் போதே..என்று கூற விரும்புகின்றோம். இரண்டு கண்களும் நமக்கு தேவை. அது போல் தேடல் உள்ள தேனீக்கள் குழுவின் பார்வை இந்த இரண்டு முருக குழுக்களான யாத்திரை தோழன் மற்றும் அருணை முனிவன் திருப்புகழ் குழுவை சாரும்.
யாத்திரை தோழன் திரு. பார்த்திபன் சாமி, அருணை முனிவன் திருப்புகழ் குழு திரு. ஆறுமுகம் சாமி இருவரையும் இந்தப் பதிவின் வழியே பாதம் தொட்டு வணங்கி மகிழ்கின்றோம்.
மீண்டும் பல முறை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
மீள்பதிவாக:-
திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_17.html
மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_21.html
No comments:
Post a Comment