"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 27, 2021

தைப்பூச ஜோதி தரிசன 1008 சக்திகள தீப திருவிழா - 28.01.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் தைப்பூசத்திருவிழா ஒட்டி தினமும் பதிவுகள் கண்டு வருகின்றோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். ஆம்..தை மாதம் தொட்டு பல்வேறு வழிபாடுகள் நாம் செய்து வருகின்றோம். தைப்பூசம் தை மாதம் நடைபெறுகின்ற விழாவாகும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன்  கோயில்களிலும் தைப்பூச விழா இனிதே நடைபெற்று வருகின்றது. பழநியாண்டவருக்கு தைப்பூசம் என்பது உயரிய வெற்றி விழாவாகும். தை மாதம்  பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கள நாளில் பழநியாண்டவனுக்குக் கொண்டாடப்படும் உயரிய வெற்றித் திருவிழாதான் தைப்பூச விழா. இந்நாளில் தான் முருகப் பெருமானின் அன்னை உமாதேவியார் கொடிய அரக்கன் தாரகன் என்ற அரக்கனைக் கொன்று அழிப்பதற்கு  வெற்றிவேல் வாங்கிய தினமாகும்.

கொடிய அரக்கன் தாரகனை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினம் தை மாதப் பூச நட்சத்திர தினமாகும். இதனைப்  போற்றும் விழாவாகத் தைப்பூச விழா ஆண்டு தோறும் முருகன் கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற்ற வருகின்றது எனலாம். பழநியில் உள்ள  ஊர்க்கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்து நாட்கள் வெகு சிறப்பாக  இத்திருவிழா நடைபெற்று வருகின்றது. தைப்பூச முருகனைக் காணப் பல இலட்சக்கணக்கான முருகப் பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனான  காணிக்கையைச் சுமந்து, பாதயாத்திரையாய் பழநியை நோக்கி வந்த வண்ணமாய் உள்ளனர். இதில் நமக்கு வழிகாட்டி வரும் யாத்திரை தோழன் மற்றும் அருணை முனிவன் திருப்புகழ் குழுவும் பழனி பாதயாத்திரையில் உள்ளனர். நித்தம் வேல்பூஜையுடன் அன்னசேவையும் செய்து வருகின்றார்கள். இன்றைய பதிவில் மீண்டும் முருக அருளில் திளைத்து முருக நாடி உணர்த்தி வரும் 1008 சக்திகள தீப திருவிழா அழைப்பிதழ் பகிர விரும்புகின்றோம்.


சக்திகள தீப வழிபாடு பற்றி விரிவாக பின்னர் காண்போம். இந்த 1008 சக்திகள தீபத் திருவிழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் தீராத நோய் தீரும்,தொழில் இல்லாதோருக்கு தொழில் கை கூடும்,வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,திருமணம் தடை பட்டவர்களுக்கு திருமணம் நடைப் பெறும், புத்திர பாக்கியம் வேண்டுவோருக்கு  புத்திரன் கிட்டும், ஞானம் வேண்டுவோருக்கு ஞானம் அளிப்போம், அனைத்து குறைகளும் நீங்கும், என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அது நிறைவேற்றுவோம் என முருகக்கடவுள் உரைத்துள்ளார். 

தமிழ் கடவுள் முருகனின் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். முருகனுக்கு நான்கு நட்சத்திரங்கள் உகந்தது.

1. வைகாசி விசாகம் - முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம் திருநாள்

2. கார்த்திகை - அறுவராக உதித்த முருகன் சக்தியின் துணையால் ஒருவனான நாள் கார்த்திகை திருநாள்.

அசுரர்களை அழித்து, அவர்களை ஆட்கொண்ட நாள் ஐப்பசியில் வரும் சஷ்டி.

3. பங்குனி உத்திரம். - வள்ளியை திருமணம் புரிந்த நாள் பங்குனி உத்திரம் திருநாள்.

4.தைப் பூசம் - அன்னையிடம் வேல் வாங்கி, திருக்கையில் வேல் ஏந்திய நாள் தான் தை பூசம் திருநாள்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். கரம் கூப்பிய பக்தர்களை தேடி கந்தன் வருவான். யாமிருக்க பயமேன் என அபயம் காட்டும் கடவுள் முருகப்பெருமான்.தைப்  பூசம் மறுநாள் பெரும்பாலும் பௌர்ணமியாக இருக்கும். 27 நட்சத்திரங்களில் 8வது நட்சத்திரம் பூச நட்சத்திரம். இதனை புஸ்ய நட்சத்திரம் என்பார்கள். இது சனியின் நட்சத்திரம், ஆனால் இதன் அதிதேவதையாக குரு பகவான் வருகின்றார்.இதன் காரணமாக அறிவு, தெளிவு, ஞானம் தரும் நாளாகவும், தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக தை பூச திருநாள் அமைகிறது.

பூசத்தின் சிறப்புகள்

எந்த காரியத்தையும் பூசத்தில் செய்தால் அல்லது தொடங்கினால் பூர்த்தி ஆகும் என்பார்கள். அதனால் திருமணத் தடை உள்ளவர்கள், பூச நட்சத்திரத்தில் திருமண பேச்சை தொடங்கினால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகம்.

பள்ளியில் சேர்க்காத சிறு குழந்தைகளுக்கு, இந்த நாளில் வீட்டிலேயே கல்வியை தொடங்க அந்த குழந்தை முருகனைப் போல அறிவார்ந்த குழந்தையாக இருக்கும்.

உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் பார்க்கப்படுகிறது. அதாவது தேவர்களின் பகல் பொழுது தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

சூரியனை நாராயணன் என சொன்னாலும், ஜோதிடத்தில் அவர் சிவனின் அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். பெளர்ணமி என்பது சூரியன் - சந்திரன் ஒரே நேர் கோட்டில் நிற்பது தான். மகரம் எனும் புண்ணிய ராசியில் சூரியனும், தன் சொந்த வீட்டில் சந்திரனும் நிற்க தை பூச திருநாள் அமைகிறது.

மகா விஷ்ணு தன் மார்பில் மகா லட்சுமியை வைத்திருக்கிறார். சிவ பெருமானோ தன் உடலின் ஒரு பாகத்தை உமையாளுக்குக் கொடுத்திருக்கிறார். பிரம்மா தன் மனைவியான சரஸ்வதியை நாக்கிலே வைத்திருக்கிறார்.முருகன் தான்னை வணங்கும் பக்தர்களை தன் மனதில் வைத்திருக்கிறார் என்பது புராணங்கள் கூறும் உண்மை . முருகன் சோதித்து பார்ப்பார் என சொல்லப்பட்டாலும், அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக் கூடியவர்.

ஆண்டி கோலத்தில் நிற்கும் முருகனுக்கு அன்னை பார்வதி தேவி வேல் வழங்கிய நன் நாள் தைப்  பூசம்.

உலகம் தோன்றிய நாள் எனவும், ஈசன் - உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி தரிசனம் அளித்த நாள் தைப் பூச திருநாள்.

முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு தைப்பூச நாளில் ஆலயம் சென்று வழிபாட்டால் போதும்.

காவடி எடுத்தல், அலகு குத்துதல், உள்ளிட்ட வேண்டுதல் இருந்தால் நிறைவேற்றலாம். தீராத நோய் ஏற்பட்டு அவதிப்படுவோர், முருகனுக்கு பால் காவடி எடுக்க நோய் தீரும் என்பது ஐதீகம்.

பால் காவடி என்பதும் பால் குடம் என்பது ஒன்று தான்.

மறக்காமல் தடைப்பட்டு வரும் திருமண பேச்சை தொடங்க பூசம் நாள் சிறந்தது என்பதால் உடனே தொடங்கி முருகனின் அருளால் திருமண பாக்கியம் பெறுங்கள்.

இனி..பழனி பாதயாத்திரை பற்றி தொட்டு காட்ட விரும்புகின்றோம்.

பாதயாத்திரை விளக்கம்: தைப்பூச முருகனை காண பக்தர்கள் காவியுடை அணிந்து, விரதம் இருந்து பலநூறு மைல்கள் பனி, வெயில் பாராது நடந்து வருகின்றனர். குறிப்பாக காரைக்குடியைச் சுற்றியுள்ள செட்டிநாட்டு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக ஆறுமுகக்காவடி சுமந்து வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டு செல்கின்றனர். பழநியைச் சுற்றியுள்ள மண்டபங்களில், கிரிவீதியில் மற்றும் சண்முகாநதியில் பக்தர்களின் காவடி ஆட்டம் அதிகளவு காணப்படும். நத்தம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஜெயங்கொண்டம் போன்ற நகரங்களில் இருந்து பக்தர்கள் சேவல் காவடிகள், மயிற்காவடி, வேல்காவடி, ஆறுமுகக்காவடிகள் சுமந்து வருகின்றனர். 











ஒட்டன்சத்திரம் வேல்பூசையில் ..அருணை முனிவன் திருப்புகழ் மையம். அடுத்து யாத்திரை தோழன் குழுவின் சில அருட்காட்சிகள் 






பாதயாத்திரையால் தங்களின் பாவ வினைகள் நீங்குகின்றன என்று பக்தர்கள் நம்புகின்றனர். வழிநடையாய் பக்தர்கள் நடந்து வருகின்ற பொழுது, முருகன் தங்களுடன் நடந்து வருவதாய் பக்தர்கள் கூறுகின்றனர், நம்புகின்றனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக பாதயாத்திரையாக பக்தர்கள் இங்கு வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து தைப்பூச முருகனைக் காண வருகின்றனர். 


பாதயாத்திரை பாடல்கள்:

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தங்களது உடல் சோர்வை போக்க முருகனை பற்றிய பாடல்களைப் பாடி வருகின்றனர். அவற்றில் ஒன்றை பார்ப்போம்.


‘சந்தனமாம் சந்தனம் பழநி மலை சந்தனம்
சந்தனத்தைப் பூசிக்கிட்டு
சந்தோஷமாய்ப் பாடுங்க
குங்குமமாம் குங்குமம் குன்றக்குடி குங்குமம்
குங்குமத்தைப் வச்சுக்கிட்டு குணமுடனே பாடுங்க....’


என்று முருக பக்தர்கள் கூட்டம் கூட்டமாகப் பாடி, ஆடி வருவதைக் காண முடிகிறது. வழிநடையின் துன்பம் தீர பக்தர்களின் முருகனின் பெருமையை வாய்விட்டுப் பாடி வருகின்றனர். 


காணிக்கைகள் விளக்கம் : 

தைப்பூசம் காண வருகின்ற பக்தர்கள் தங்களது குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்க பல்வேறு காணிக்கைகளைச் செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர். 

* முடிக்காணிக்கை செலுத்துவதால் பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தைப்பேறு கிடைக்கவும் பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்துகின்றனர். 

* முருக பக்தர்கள் பணம், நாணயங்கள், வேல், கடிகாரம், மோதிரம் போன்றவற்றையும், உண்டியல் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

* சேவல், மயில், பசு போன்ற உயிரின காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. 

* தைப்பூச நாளில் பக்தர்கள் பலர் நோய் தீர அன்னக்காவடி சுமந்து வருகின்றனர்.

* ஆறுமுகக்காவடி என்ற மயிற்பீலி காவடியை பக்தர்கள் மிகுதியாக கொண்டு வந்து நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டு செல்கின்றனர். விரதப்பலன்கள்பழநியை நோக்கிப் பாதயாத்திரையாய் வந்து  முருகப் பெருமானை மனம் உருகி வழிபட்டால் பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன என்று பக்தர்கள் நம்புகின்றனர். தங்களுக்கு உடல் ஆரோக்கியம், மனம் ஆரோக்கியம், குடும்ப ஆரோக்கியம் பெருகிடும் என்று நம்புகின்றனர்.

நிலத்தில் விளைச்சல் பெருக, தைப்பூச நாளில் பக்தர்கள் தானியங்களை சூறை விட்டு வழிபாடு செய்கின்றனர். நெல், கம்பு, தினை, கடலை, மிளகாய் போன்ற தானியங்கள் பழநிக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்படுகின்றது. பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வளமை அடையும் என்று முருக பக்தர்கள் நம்புகின்றனர். சண்முகநதி: பழநி திருத்தலத்தில் சண்முகநதி பழநி மலைக்கோயிலில் இருந்து வடமேற்கு திசையில் ஏறக்குறைய 6 கிமீ தூரத்தில் கோவை செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஆறு கிளை நதிகளின் முழுவடிவம் சண்முகநதி. மேற்குமலைத் தொடரில் அமைந்துள்ள பாலாறு, பொருந்தலாறு, வரட்டாறு, பச்சையாறு கானாறு, கல்லாறு ஆகிய ஆறு நதிகளின் ஒட்டுமொத்த நதிகளின் முழு வடிவமே சண்முகநதி என்பர். 

நாம் வீட்டிலிருந்தே முருகனை நினைத்து தைப்பூச விரதத்தை எப்படி கடைபிடிப்பது? எப்படி என்று காண்போமா?

பூஜை அறை மற்றும் வீட்டை முந்தைய நாளில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். சுத்தமான ஆடை உடுத்தி, பூஜை அறையில் எல்லா படங்களையும் அலங்காரம் செய்து முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வேல் என்பது முருகனுடைய அம்சமாகவே பாவிக்கப்படுவதால் வேல் வைத்திருப்பவர்கள் கட்டாயம் வேல் வழிபாடு செய்யுங்கள். வீட்டில் பஞ்சலோக வேல் வைத்திருப்பது வீட்டிற்கு காவல் தெய்வமாக அமையும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இல்லாதவர்கள் முருகனுடைய பிரசித்தி பெற்ற கோவிலுக்கு செல்லும் பொழுது இதனை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

வேல் வைத்திருப்பவர்கள் அதனை கங்கை நீர் இருந்தால் கங்கை நீரால் அபிஷேகம் செய்து கொள்ளலாம். அல்லது சாதாரண தண்ணீரால் அபிஷேகம் செய்து கொண்டு, பின்னர் காய்ச்சப்பட்ட சுத்தமான பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் பன்னீர் கொண்டு சுத்தம் செய்து விட்டு, செம்பு, பித்தளை அல்லது வெள்ளிக் கிண்ணத்தில் ஏதாவது ஒன்றில் பச்சரிசியை நிரப்பி அதில் மலர்களை அலங்காரம் செய்து நடுவில் இந்த வேலை சொருகி வையுங்கள். வேலிற்கும் மஞ்சள், குங்குமம் இரண்டு புறமும் இட்டு கொள்ள வேண்டும்.

பின்னர் முருகனுக்கு பிடித்த நைவேத்தியங்கள் படைத்து, தீப, தூப ஆராதனைகள் காண்பிக்கப்பட வேண்டும். அன்றைய நாள் முழுவதும் ஓம் சரவண பவ என்று உச்சரிக்கலாம். முருகனுடைய பக்தி பாடல்களை பாடி பூஜையை செய்யலாம். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உபவாசம் இருப்பவர்கள் மாலையில் பூஜையை முடித்து விட்டு முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். தைப்பூச விரதம் இருப்பவர்களுக்கு கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும். ஆரோக்கியமான திடகாத்திரமான உடல் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். தைப்பூசத் திருநாள் அன்று நல்ல காரியங்கள் எதுவானாலும் துவங்க சிறந்த பலனை கொடுக்கும் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

இவையனைத்தும் செய்ய முடியதாவர்கள் என்ன செய்யலாம் என்று பதிவின் இறுதியில் காண்போம்.

நாளை வேலனை துதிப்பதுடன் அருட்பெருஜோதி ஆண்டவரையும் வணங்குங்கள். 





            


வடலூர் சென்று ஜோதி தரிசனம் செய்ய இயலாதவர்கள், கோயிலுக்கு சென்று வழிபட இயலாதவர்கள் நாளை காலை வீட்டிலே நெய் தீபம் ஏற்றி வைத்து  அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி... என்ற மகா மந்திரத்தையும், தங்களுக்கு தெரிந்த முருக மந்திரத்தையும் உச்சரித்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பிரார்த்தனை செய்து வழிபட வேண்டுகின்றோம்.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி...

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி... - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_24.html

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_21.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (2) - https://tut-temples.blogspot.com/2019/07/2_25.html

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - தேனி சண்முகநாத மலை தரிசனம் (3) - https://tut-temples.blogspot.com/2019/07/3_23.html

திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_17.html

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_21.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

No comments:

Post a Comment