"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 6, 2021

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மாதங்களில் நான் மார்கழி என்ற பயணத்தில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். மார்கழி மாதம் என்றாலே விழாக்கோலம் தான். மார்கழி மாத திருப்பாவை, திருவெம்பாவை நம்மை ஒருபுறத்தில் வழிநடத்த, மறுபுறத்தில் பல குருமார்களின் அருளும் வழிநடத்தி வருகின்றது. பட்டதாரி சித்தர் ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் 61 ஆவது குரு பூஜை,  பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகளின் 141 ஆவது ஜெயந்தி தினம், சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் மகா குருபூஜை  என்ற வரிசையில் திருஅண்ணாமலையில் பல அற்புதங்களை நிகழ்த்தி தற்போதும் பல குருவிளையாடல் நடத்தி வரும் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று. மார்கழி மாத ஹஸ்த நட்சத்திரத்தில் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழா கொண்டாப்பட்டு வருகின்றது. இன்றைய நன்னாளில் சுவாமிகளைப் பற்றி சிந்திப்பது நமக்கு குருவருளைத் தரும் என்பதில் ஐயமில்லை.

சுவாமிகள்  பிறப்பு

ஆதிகுருவாகிய சங்கரர், காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தை அமைத்து, காமாட்சி தேவியை அமைத்து, ஸ்ரீவித்யா முறைப்படி வழிபாடு செய்ய முப்பது தேவி பக்தர்களை ஏற்பாடு செய்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இவர்கள் காமகோடி வம்சம் என அழைக்கப்பட்டனர். இந்த வம்சத்தை சேர்ந்த வரதராஜன் - மரகதம்பாள் தம்பதிகளுக்கு 1870, ஜனவரி 22ம் நாள் சனிக்கிழமை அஸ்த நட்சத்திரத்தில், உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் மகான் அவதாரம் நிகழ்ந்தது . மகான் பிறந்தது  சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாதலால் சேஷாத்ரி என பெயர் சூட்டப்பட்டார். 

அன்னை வழிகாட்டிய அண்ணாமலையார் திருக்கோவில் 

சனிக்கிழமை, ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்த இவர் சாஸ்திரங்களைக் கற்று வல்லவராக இருந்தார். ஒருநாள் சேஷாத்ரி தாயாருடன் கோயிலுக்கு செல்லும்போது, ஒரு வியாபாரி வைத்திருந்த நவநீதகிருஷ்ணர் பொம்மைகளில் ஒன்றை கேட்டார். வியாபாரியும் சேஷாத்ரியை தூக்கிக் கொஞ்சி, இந்த குழந்தையின் கை தங்கக்கை நேற்று ஆயிரம் சிலைகளும் விற்றுவிட்டது என்று கொண்டாடினான். அதுமுதல் இவர் கை பட்ட காரியம் வளர்ச்சி அடைந்ததால் நான்கு வயதிலேயே தங்கக்கை சேஷாத்ரி என்று அழைக்கப்பட்டார். 

சேஷாத்ரி சிறு வயதிலேயே வேதங்கள் கற்று பற்பல சாஸ்திரங்களில் வல்லவராக விளங்கினார். சேஷாத்ரியின் 14ம் வயதில் தகப்பனார் இறந்தார். ஒரு சமயம் வந்தவாசியில் உபன்யாசம் செய்பவர் உடல்நலக் குறைவால் வராததால் சேஷாத்ரி அங்கு சென்று ஓராண்டு ராமாயண பாகவதம் சொற்பொழிவாற்றினார். 

 சேஷாத்ரிக்கு 17 வயதில் தாயார் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். சேஷாத்ரியின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் இவருக்கு சன்னியாசி யோகம் தான் உள்ளது. சன்னியாசி ஆகி பிறகு யோகியாக ஆவார் என கூறிவிட்டார்கள். 

தாயார் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் ஒருநாள் சேஷாத்ரிக்கு தன் முதுகில் ஆதிபராசக்தி பாம்பின் வடிவமாக தன்னை ஆட்கொண்டதை உணர்ந்தார். சில நாட்களில், தாயார் சேஷாத்ரியை அழைத்து, பிறக்க முக்தி திருவாரூர், தரிசிக்க முக்தி சிதம்பரம், இறக்க முக்தி காசி, நினைக்க முக்தி திருவண்ணாமலை என்று பொருள் கொண்ட சுலோகத்தை மகனின் மார்பில் 3 முறை அடித்து அடித்து சொல்லிவிட்டு. அருணாசல, அருணாசல, அருணாசல என்று 3 முறை உரக்க கூவிவிட்டு மகனின் மடியில் இயற்கை எய்தினார். 

சேஷாத்ரி சுவாமிகள் திருவண்ணாமலை விஜயம்

தாயின் அந்திமச் சொற்களாகிய அண்ணாமலை அடிமனதில் ஆணிவேர் போல் பதிந்துவிட்டது. திருவண்ணாமலை மனத்தால் கண்டு, ஒரு அட்டையில் அதைப் போல் வரைந்து, பூஜை அறையில் வைத்து காலை முதல் பிற்பகல் வரை அறையை உள்தாளிட்டு பூஜையில் ஈடுபட்டு விடுவார். சரியாக குளிப்பதில்லை. சாப்பிடுவதில்லை. உடம்பைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஞானப்பைத்தியம் என்று பலரும் பரிகசித்தனர். 

அன்று சுவாமிகளின் தந்தைக்கு சிரார்த்த நாள்.வெகுபாடுபட்டு சுவாமிகளை அவரது சித்தப்பா வீட்டிற்கு அழைத்து வந்தார். சுவாமிகளோ நான் சன்னியாசி. சன்னியாசிகளுக்கு கர்மம் கிடையாது,தொல்லை தாரதீர்கள். என்று தடுத்தும் சித்தப்பா கேட்கவில்லை. சுவாமிகளை ஓர் அறையில் தள்ளிப் பூட்டினார். சிராத்தம் முடிந்து பித்ருக்களிடம் ஆசி பெற வேண்டிய நேரத்தில் சித்தப்பா கதவைத் திறந்தார்,உள்ளே சுவாமிகள் இல்லை. மாயமாய் மறைந்து விட்டிருந்தார். ஊரெங்கும் செய்தி பரவியது,பெரிய மகானாக அல்லவா இருக்கிறார்,அவரது அருமை தெரியாமல் இருந்து விட்டோமே என்று வருந்தினர்.

வீட்டை விட்டு மாயமாய் மறைந்த சுவாமிகள் சில காலம்  மாமண்டூர் கிராமத்தில் உள்ள பஞ்ச பாண்டவர் குகையில் தவம் செய்தார். பின்னர் வேலூர், வாணியம்பாடி, ஆவத்தம்பாடி, துரிஞ்சிக்குப்பம் வழியாக திருவண்ணாமலை வந்தடைந்தார்கள்.

தன்னுடைய 19வது வயதில் கிபி 1889ல் தை மாதத்து ரத சப்தமி திருநாளில் திருவண்ணாமலையில் திருப்பாதம் பதித்தார். வந்த உடனே கிரிவலம் போனார். கோயிலில் பல இடங்களில் தியானம் புரிந்தார். இதனால் அம்மா ஏன் இறக்கும் முன் அண்ணாமலை என்று கூற வேண்டும் என்ற கேள்வி   சேசாத்திரியின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.அதற்கான விடை தேடி தானாக திருவண்ணாமலைக்கு வந்தார். அதன் பிறகு முக்தி பெறும் வரை திருவண்ணாமலையிலேயே இருந்தார்.

சேஷாத்ரி சுவாமிகள் மகிமை

திருவண்ணாமலையில் அவர் தவம் செய்ய மிகவும் பிடித்த இடம் துர்க்கையம்மன் கோயில். அவர் திருவண்ணாமலை வந்தவுடன் தினசரி சித்து விளையாட்டுகள் செய்யலானார். பைத்தியம் போல் வேகமாக சிரிப்பார். நடப்பார். ஓடுவார். வசீகர கண்கள். அழுக்கே இவர் உடையின் நிறம். நிலையான இருப்பிடம் கிடையாது. நல்லவர்கள் வணங்கினால் ஆசிர்வதிப்பார். தீயவர்களை வசைமாரி பொழிவார். எந்த பெண்ணைக் கண்டாலும், என் தாய் என்று சொல்லி வணங்குவார். தூக்கமே கிடையாது. இரவில் சுற்றுவார் அல்லது தியானத்தில் இருப்பார். 

பக்தர்களுக்கு மும்மூர்த்திகளையும் காட்டி தானே பராசக்தி வடிவமாக காட்சி தந்துள்ளார். விஷத்தை அல்வா போல் விழுங்குவார். வியாதியால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு நிவாரணம் அளிப்பார். இவர் கட்டியணைத்தால் தோஷம் நீங்கும், கன்னத்தில் அறைந்தால் செல்வம் பெருகும். எச்சில் உமிழ்ந்தால் எல்லாம் கைகூடும்.இரமணர் தவம் புரிந்த குகை அருகில் சென்று என் குழந்தை கந்தன் உள்ளே தவம் செய்கிறான் என்றார். ரமணரை உலகிற்கு காட்டியவர் சேஷாத்ரி 

பக்தருக்கு இரமணர் காட்டிய சூட்சுமம் 

ஒருமுறை சேஷாத்திரி சுவாமிகள் மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, பக்தர் ஒருவர் அவருக்கு உணவு பொட்டலம் ஒன்றை கொடுத்து, உண்ணுமாறு வேண்டி கேட்டுக்கொண்டார். அவரும் மறுக்க முடியாமல் பக்தருக்காக அந்த பொட்டலத்தில் இருந்து சிறிது உணவை எடுத்து சாப்பிட்டார். அப்போது திடீரென்று மீதம் இருந்த உணவை மேலும் கீழும் அள்ளி வீசினார். உணவைக்  கொடுத்த பக்தருக்கோ ஒன்றும் புரியவில்லை. 

அது குறித்து கேட்க அவருக்கு பயமாக இருந்தாலும், "உணவை உண்ணாமல் இப்படி கீழே இறைக்கிறீர்களே, ஏன் சுவாமி" என்று கேட்டார்.  அதற்கு சுவாமிகள்,  ''நீ எனக்கு தந்த உணவை பூதங்களும் தேவதைகளும் கேட்கிறார்கள். அதனால்தான் இப்படிச் செய்கிறேன்'' என்றவர், மீண்டும் பொட்டலத்தில் இருந்த உணவை அள்ளி வீசினார்.

பக்தருக்கோ நம்பிக்கையில்லை. ''சுவாமி நீங்கள் சொல்லும் 'பூதம் தேவதைகள்" என் கண்களுக்கு தெரியவில்லையே?'' என்று கிண்டல் தொனியில் கேட்டார்.  சுவாமிகள்  அந்த பக்தரை பார்த்து "பூதம், தேவதைகளை பார்த்தால்தான் நான் சொல்வதை நம்புவேன் என்கிறாய்.  அப்படித்தானே?''  என்றார். 

 அதற்கு பக்தரும் வேறு வழியின்றி  "ஆமாம்" என்றார் .

உடனே சுவாமிகள் அந்த பக்தரை அருகில் அழைத்து, பக்தரின் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் தனது கட்டைவிரலை வைத்து சிறிது அழுத்தி, கண்களை மூடி, திறக்கச் சொன்னார்.

பக்தர் கண்களைத் திறந்து பார்த்த போது, சுவாமிகள் வீசி எறிந்த உணவை கோரைப்பற்களும் நீளமான நாக்கும் இருந்த  பூதங்கள் வேகமாக எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தன.  அந்த காட்சியை கண்டு நடுநடுங்கி போன பக்தர், தவறுக்கு வருந்தி அவரது திருவடிகளில் விழுந்து மன்னிக்க வேண்டினார்.

முக்காலமும் உணர்ந்த சித்தர்

சுந்தரேசச் செட்டியார் என்ற பக்தர் ஒருவர்; அவருடைய மனைவி சேஷாத்திரி சுவாமிகளைத் தரிசிக்கப் போகும் பொழுதெல்லாம் அந்தப் பெண்மணியைப் பார்த்து, நீ எம பட்டணம் பார்த்திருக்கிறாயா? " என்று சேஷாத்திரி சுவாமிகள் கேட்டுக் கொண்டே இருந்தார். சுமார் இரண்டு மூன்று மாதமாக இப்படியே கேட்டு வந்தார். அந்த அம்மாள் என்ன இப்படிக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். நாம் இறந்து போய்விடுவோமோ? என்று கவலை கொண்டு விட்டார்.

ஒருநாள் அவ்வாறு கேட்டபோது, மனம் துணிந்து அவள், " நான் பார்த்ததில்லை," என்று பதிலளித்தாள்.

"நான் காண்பிக்கிறேன், பார்க்கிறாயா?" என்றார் சுவாமிகள். 

“சரி!” என்றாள் அவள் துணிச்சலாக.

உடனே சுவாமிகள் அந்த அம்மாவின் இடது கையைப் பற்றிக்கொண்டு “பார்!” என்று சொல்லித் தன் வாயைத் திறந்தார். அவ்வளவுதான்! மகாகோரமான பூத பிசாசு கணங்களும், வேட்டை நாய்களும், செந்நாய்களும், பாம்புகளும் நிறைந்த கோரமான ஒரு பட்டணத்தை சுவாமிகள் வாய்க்குள் பார்த்தார்.

உடனே திகிலடைந்து திடீரென்று கீழே விழுந்து மூர்ச்சித்து விட்டாள். ஐந்து நிமிடம் உணர்வு வரவேயில்லை.

பிறகு சுவாமிகள் தன் மேல்துண்டை அவள் முகத்தில் வீச அவள் எழுந்து விட்டாள். அதை அவள் வீட்டிலுள்ளோரிடம் சொல்லி ஆச்சரியம் அடைந்தாள்.

சில தினங்கள் கழிந்த பிறகு சென்னையில் ஒரு கல்யாணத்திற்கு அவசியம் அவள் போகவேண்டியிருந்தது. சுவாமிகளிடம் உத்தரவு கேட்டதற்குப் போகவே கூடாது. என்று அறவே மறுத்து விட்டார். அந்த அம்மாவும்அவ்வாறே தீர்மானித்தாள். 

பிறகு அவளே, நாம் போகாவிட்டால் உறவினர்களின் மனஸ்தாபம் ஏற்படும் என்றெண்ணித் திடீரென்று சுவாமிகளின் உத்தரவையும் மீறிச் சென்று விட்டாள்.

சென்ற மறுதினமே அவள் அங்குக் காலராவில் இறந்து விட்டாள்.

இதனால் அவள் மரணமடைவதை சுவாமி முன்னரே அறிந்து விட்டார் என்றும், எம பட்டணத்தைக் காட்டியாவது மரண தோஷத்தை நீக்கித் தன் பக்தையைக் காப்பாற்ற சுவாமிகள் முயற்சித்திருக்கலாம் என்றும், தன் பக்கத்திலிருந்தால் எமன் வரமுடியாது. சென்னைக்குச் சென்றால் கட்டாயம் கொண்டு போய் விடுவான் என்றெண்ணித்தான் அங்குப் போகக் கூடாது என்றும் அப்போது தான் பக்தரின் குடும்பத்திற்கு புரிந்தது. 

சுவாமிகள் முக்தி பெறுதல்

சுவாமிகள் தன் தேகத்தை மறந்தார். அழுக்கு மலிந்த ஆடைகள், நிலையாக ஒரிடத்தில் இருக்க மாட்டார், தேரடி, சடைச்சி மடம், கோபுர வாயில், சிவ கங்கைப் படிக்கட்டு, சாது சத்திரம் முதலிய பல இடங்களிலும் இருப்பார். எந்தக் கடைகளிலும் சுவாமிகள் நுழைவார். கல்லாவிலிருந்து காசுகளை அள்ளி விளையாடுவார். அன்று அந்தக் கடைக்காரர்களுக்கு யோக திசைதான்,சுவாமிகளை ஒரு பெரிய ஞானியாகவே ஊர் மக்கள் மதித்தனார். பாவிகள் தம்மை வணங்குவதற்கு இடங்கொடுக்க மாட்டார். நல்வர்களைக் கண்டால் மனம் மகிழ்ந்து அன்பு காட்டுவார். ரமண மகரிஷி, வள்ளிமலை  திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் போன்ற மகான்கள் சேஷாத்திரி சுவாமிகளின் ஆசி பெற்றனர்

1929ம் ஆண்டு ஜனவரி மாதம் தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்ளும் நாட்களில் மகானின் முகத்தில் பிரகாசமான ஒளி, மூன்று நாட்கள் சிவசக்தி நிலையில் தியானம் செய்து முக்தி அடைந்தார். சுவமிகள் பிறக்கும்போது கிரகங்கள் இருந்த நிலையிலேயே முக்திநாளிலும் அமைந்தது. இது மகான்களுக்கே கிடைக்கூடிய மாபெரும் வாய்ப்பு. 

திருவண்ணாமலையில் மலைக்குத் தென்புறம் செல்லும் கிரிவலப் பாதைக்கு செங்கம் சாலை என்று பெயர். அச்சாலையின் கிழக்குப் பாகத்தில் சாலைக்கு வடப்புறம் ஸ்ரீ சேஷாத்திரி ஆஸ்ரமம் அமைந்துள்ளது. அவ்வாஸ்ரமத்துள் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் சமாதிக் கோயில் அமைந்துள்ளது.இன்றும் ஜீவசமாதியில் இருந்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.


அக்னி லிங்கம் தாண்டி நாம் சென்றால் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் காணலாம். இங்கே நாம் சென்று சுவாமிகளின் அருள் அலைகளை பெறலாம். மூக்கு பொடி சித்தரின் தரிசனம் நமக்கு இங்கே தான் கிடைத்தது.










 திருஅண்ணாமலையாருக்கு அரோகரா!

-  மீண்டும் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

 திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_29.html

தமிழ்நாட்டு திருவிழாக்கள் தொகுப்பு - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_48.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_98.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_70.html

 தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் (1)  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_21.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_11.html

அறம் செய்ய விரும்பு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_57.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

 இன்றைய இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_14.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

 தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html

  நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html

 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

No comments:

Post a Comment