"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, January 11, 2021

மார்கழி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 12.1.2021

அனைவருக்கும் அன்பு  வணக்கங்கள்.

நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில்  அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. 2018 ம் ஆண்டு  ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ மார்கழி மாதம் மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம்.

மார்கழி  மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 12.1.2021

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான சார்வரி  வருடம் மார்கழி மாதம் 28 ஆம் நாள் (12.1.2021) செவ்வாய்க்கிழமை  இரவு  7 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

மறைந்த  நம் தாய் தந்தையர்க்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் சிராத்தம் - பண்ணுவதால் என்ன பயன்?

யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுத்தால் அது முன்னோர்களைச் சேருமா?

அற்புத விளக்கமும், பதிலும் கொடுத்த மகா பெரியவா.

ஒருவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருக்கிறது. உடனே அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது என்றார்.

குமாஸ்தா பணத்தை பெட்டியில் போட்டதையும், ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர், என் பணம் இங்கேதானே இருக்கிறது. அதில் ஒட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே. அது எப்படிப் போய்ச் சேரும் என்று கேட்டார். அது போய்ச் சேர்ந்துவிடும் என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார். கட்டுக் கடகடஎன்று தந்தியும் அடித்தார். ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ரூபாய் இங்கே இருக்கிறது. லொட் லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய் சேரும். என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது.

ஆனால் பணம் போய் சேர்ந்து விட்டது. தர்ப்பணம் முதலிய பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கென சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள்.

பித்ருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போட்டிருப்பார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேச்வரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிராத்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.தந்தி மணியார்டர் அனுப்பியவனுடைய பணமோ வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லையல்லவா?

மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டு செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் காட்டிலும் வெளி தேசத்தில் டாலராகவோ, பவுனாகவோ மாற்றித்தரவும் ஏற்பாடு இருக்கிறது. ஆனால், நம் ஊரில் டாலரையோ பவுனையோ மாற்ற முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள். அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.



இனி சென்ற கார்த்திகை  மாதம் நடைபெற்ற மோட்ச தீப வழிபாட்டின் துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம். கார்த்திகை மாதம் சோமவாரம் அன்றைய தினம் ஆதலால் அன்று நம் அம்மையப்பருக்கு அபிஷேக பூசை நடைபெற்றது. அதனை நிறைவு செய்த பின்னர் வழக்கமாக மோட்ச தீப வழிபாடு நடைபெற்றது.


அன்றைய தினம் நம் செல்லப்பன் அண்ணனின் நண்பர் கலந்து கொண்டார். அன்று நமக்கு நம் குருநாதருக்கு விளக்கேற்ற சொல்லி உத்திரவானது. நாம் இயல்பாக விளக்கேற்றி அந்த அருள்நிலையை மனதுள் இறுத்தினோம். இந்த அருள்நிலையை நன்கு பாருங்கள். பதிவின் இறுதியில் சொல்கின்றோம்.



அடுத்து வழக்கம்போல் மோட்ச தீப வழிபாட்டிற்கு தயாரானோம்.


அம்மையப்பருக்கு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

















தென்னாடுடைய சிவனை போற்றி வணங்கி முதலில் விளக்கேற்றி வழிபாட்டை துவக்கினோம்.









அன்பர்கள் ஒவ்வொருவராக மோட்ச தீபத்தை ஏற்றினார்கள்.
 



21 தீபங்களும் ஏற்றப்பட்டது. அடுத்து அனைவரும் இரண்டு மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.



முதல் வணக்கம் நம் முதல்வனுக்கே..ஆம்..விநாயகரை துதித்து வழிபட்டோம்.










மோட்ச தீப மந்திரம் 108 முறை சொல்ல ஆரம்பித்தோம்.






அன்பர்கள் அனைவரும் ஒருங்கே மனம் திறந்து மந்திரங்களை உச்சாடனம் செய்தார்கள்.




அடுத்து பீஜ மந்திரம் 108 முறை தொடங்கினோம்.













அடுத்து வழிபாடு முழுமை செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தோம். 




தீப வழிபாடு மிக மிக உயர்ந்த வழிபாடு. அதுவும் மோட்ச தீப வழிபாடு இன்னும் உயரிய வழிபாடு. பொதுவாக வழிபாட்டில் நாம் நமக்காக வேண்டுவோம். ஆனால் இங்கே மோட்ச தீப வழிபாட்டில் பொதுவான வழிபாடாக மற்ற ஆத்மாக்களுக்க வேண்டுகின்றோம். மற்ற ஆத்மாக்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்றால் நாம் எவ்வளவு உயர்ந்த எண்ணம் வேண்டும் என்று சிந்தித்து பாருங்கள். இது போல் வழிபாடு செய்கின்றோம் என்றால் நாம் நம்மை செம்மைப்படுத்தி வருகின்றோம் என்பது புரிகின்றது அல்லவா?















வழக்கம் போல் குருநாதரின் அருளால் சிறப்பாக மோட்ச தீப வழிபாடு நடைபெற்றது.  இந்த மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில் பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று. இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.



கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாட்டில் நாம் இயல்பாக குருநாதருக்கு விளக்கேற்றினோம். நன்கு கண்களை உற்றுப் பாருங்கள். குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் கண்கள் திறந்து ஆசி அளிப்பது தெரிகின்றது அல்லவா? எத்தனை கோடி இன்பம் வைத்தாய் அகத்தீசா! என்று உள்ளம் துள்ளி குதிக்கின்றது. 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

கார்த்திகை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 14.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/14122020.html

ஐப்பசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 14.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/14112020.html

புரட்டாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 16.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/16102020.html

மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 16.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/16092020.html

பித்ரு தோஷம் நீங்க - நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/09/blog-post_7.html

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 02.09.2020 முதல் 17.09.2020 வரை - https://tut-temples.blogspot.com/2020/09/02092020-17092020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

 தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html

மகா பெரியவா அருள் வழியில் "மோட்ச தீபம்" வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post.html

ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும் - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_21.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020  - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html

தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html

மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm

திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html

 பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

 தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

No comments:

Post a Comment