"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, January 25, 2021

அருள்மிகு உலோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய சற்குரு ஆலய வருஷாபிஷேக அழைப்பிதழ் - 26,27.02.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் ஜீவநாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவு கண்டு வருகின்றோம். இந்த தொகுப்பில் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி வாக்கின்படி இரண்டு திருக்கோயில்கள் கடந்த 2020 ஆண்டில் கும்பாபிஷேகம் கண்டு அடியார்களுக்கு அருள் புரிந்து வருவதை இங்கே சொல்ல விரும்புகின்றோம். ஒன்று சென்னை திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம். மற்றொன்று மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலயம் ஆகும். குருவருளால் இரண்டு கோயில்களிலும் தரிசனம் பெற்றுள்ளோம் என்று பார்க்கும் போது குருவின் கருணைக்கு எல்லையேது என்றே தோன்றுகின்றது. சென்னை திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் அன்று கலந்து கொண்டு இறையருள் உணர்ந்தோம். மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு அடுத்த நாள் நம் குழு நண்பர்களோடு தரிசனம் பெற்றது தற்போது வரை ஆச்சர்யமாகத் தான் உள்ளது. ஏனென்றால் நாம் விரும்பினால் மட்டும் போதாது. அந்த பரம்பொருள் விரும்பினால் தான் இது போன்ற ஆலய தரிசனம் பெற முடியும். இப்போது தான் மதுரை ஸ்ரீ அகத்திய மகரிஷி தரிசனம் பெற்றது போல் இருந்தது. ஆனால் அதற்குள் ஓராண்டு கடந்து விட்டது. நாளை நடைபெற உள்ள அருள்மிகு உலோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய சற்குரு ஆலய வருஷாபிஷேக அழைப்பிதழ் மற்றும் ஆலய தரிசன அனுபவத்தை இன்றைய பதிவில் காண உள்ளோம்.







மதுரை பசுமலையில் பிப்ரவரி7ஆம் தேதி 2020ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா கண்ட அகத்திய மஹரிஷி ஆலயம் குறித்த முருகப்பெருமான் நாடியில் அருளிய வாக்கு

வல்லான வகையான முறையான அமைப்பில் வந்ததொரு பாண்டிமாநகர நாடும் சீர்புகழும் நலமதுவும் உண்டு நண்மை கண்டனன்.அகத்தியன் ஆலயம் அரும்ப குடமுழுக்கு செய்தி அது கந்தன் மகிழ்ந்தேன்.சீருண்டு முறையாக கந்தசீடனது தனக்கும் அகத்தியனுக்கும் சிறப்புறவே ஓர் ஆலயம் அமைவது தொண்டர்கள் அனைவருக்கும் பரிபூரன ஆசிர்வாதம் உண்டு உண்டு. நலமாக கந்த சீடன் தனக்கு ஓர் ஆலயம் அமைப்பதில் கந்தனுக்கு மகிழ்ச்சியே தான்.

சிறப்புண்டு நலமாக இதை அமைக்கும் குழுமம் என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்விதன்னை அது தொடுத்ததால் லாபம் ஆகும். நலமுண்டு கிருத்திகை நன்நாள் இன்றும் உறைகின்ற நேரத்தில் மகிழ்ந்து உரைக்கும் நிலை அதுவும் கண்டனன் லாபம் லாபம். சீருண்டு முறையாக லாபம் மார்கழி  ஆயில்யம் முதல்ஆகவே நண்மை முன்னர் அனுகூலம் கன்டனன் குருவின் பூசை அனுகூலம் ஆனபடி கண்டேன் ஆதலால் நட்ப்பாக கண்டதொரு வேளை முடித்தது விட்டிடலாம்.

குடமுழுக்கு கண்ட பின்னே ஒவ்வொரு ஆயில்யம் வரும் நேரம் முறையாக நண்மை நிலை அகத்தியன் ஜென்மம் நட்சத்திரம் தன்னில் முழுத்திருமஞ்சனத்தோடு அன்னதான தருமங்கள் செய்வதே இந்த குழுவிற்க்கு பணியது என்பேன்.ஓர் வருடம் அப்படியே செய்து வரலாம்.

இவ்வாலயத்தில் நடக்க உள்ள அற்புத மகிமை திருவிளையாடல்கள் எல்லாம் பின்வருமாறு கந்தன் உரைத்துள்ளார். நன்கு படித்து மகிழ்க.

பிள்ளை இல்லாதோர் பிள்ளை பெறுதல், கணவன் மனைவி சந்தோஷப்படுதல், மணம் ஆகாதோர் மணம் அமைக்கப்பெறுதல், பணி இல்லாதோர் பணி அமைக்கப்பெறுதல், பணம் இல்லாதோர் பணம் கிடைக்கப்பெறுதல், அருள் பெறுவோர் அருள் கிடைக்கப்பெறுதல், பொருள் கேட்ப்போர் பொருள் கிடைக்க பெறுதல், அவர் அவர் இச்சை எப்படியோ அப்படி அகத்தியன் படி அளப்பான். அனுகூலம் இது எல்லாம் திருவாதிரை மண்டலத்தில் பதிந்து சித்தர்கள் மண்டலத்தில் பதிந்து இருக்கும் செய்தி. முறையாக ஈசன் அருளும் பரிபூரணமாக கிட்டும்.

செய்யும் தானம் அன்னதானம் பூசை முறையாக நல்லதாம் அடியார்களை ஒன்று கூட்டி சிறப்புறவே நல்லதோர் அகத்தியன் புகழ்பாடி சீராக அவ்வாலயம் தன்னில் எல்லோரும் செல்ல முடியாவிட்டாலும் அவர் அவர் உரிய நிதி திரட்டி முறையாக அவ்வாலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஆயில்ய பூசை தனை அமர்த்த வேணும் செய்ய வேணும் என்பதே இந்நேர கட்டளை என்பேன் கேட்டு நட என்று கந்தன் பகர்ந்தார்.

 கந்த நாடி முற்றே - 

அஉம் ஶ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்குக


ஆலயம் குறித்த கந்த நாடி வாக்கு

சிறப்பாகவே நல்லதாம் திருக்கயிலாய காட்சி அதுபோலும் கல்யான கோலம் பூர்வ ஜென்மத்திலே கண்ட இடமதாகும். ( *ஏற்கனவே அகத்தியருக்கும் அந்த கோயிலுக்கும் தொடர்பு உண்டு
கோயிலில் சிவபெருமானின் அம்பிகை பார்வதி கல்யான காட்சியை முருகனோடு வைக்கவும். முருகனின் அலங்காரங்களை விதவிதமாக அங்கு வைக்கனும்னு சொல்லபட்டிருக்குது) 

முறை உண்டு செய்யலாம் ஆதலால் செய்கின்ற அனைவரும் சீர் புகழாய் சீர்த்தி ( பெரும் புகழ்) பெருவர். சிறப்பு பெருவர். உரிய காரியம் நடக்க பெருவர். இறை அருளும் சித்தர்கள் திருவிளையாடல்கள் காணப்பெருவர்.

பூர்வ ஜென்மத்தில் அகத்தியன் தொடர்புடையவர்கள் தான் வந்து அங்கு ஆலயம் அமைக்க வழி புரிவர். 

கந்த வடிவேலன் புகழ் ஓங்குக

சென்ற ஆண்டு தைப்பூச நாளில் நாம் சதுரகிரி யாத்திரை குருவருளால் ஏற்பாடு செய்தோம். 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 7,8 ஆம் தேதி சதுரகிரி யாத்திரை ஏற்பாடானது. பிப்ரவரி 7 ஆம் தேதி காலை மதுரை சென்றோம். அங்கிருந்து சதுரகிரி யாத்திரை செல்ல பேசிக்கொண்டிருந்த போது, அருகில் உள்ள ஆலயம் சென்று வழிபட முடிவெடுத்தோம். அன்னை மீனாட்சியம்மன் தரிசனம் செய்யலாம் என ஒவ்வொருவரும் ஒரு ஆலயம் சொன்னார்கள். நமக்கு உடனே மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலயம் கருத்தில் உருவானது. அனைவரும் சரி என்று கூற, மதுரை பரமசிவன் ஐயாவிற்கு அலைபேசியில் கூறி, நேரில் சந்திக்க விருப்பம் என்று கூறி மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலயம் நோக்கி சென்றோம்.


                                           

சுமார் காலை 8 மணி அளவில் கோயிலை அடைந்தோம்.

                                              

                         

காலை நேரத்தில் கூட்டம் இல்லை. அமைதி ததும்பும் சூழலில் அம்மையின் தரிசனம் பெற்றோம். சற்று நேரத்தில் குருக்கள் கோயிலுக்கு வந்தார்கள். நாம் முன்கூட்டியே குருநாதர் தரிசனம் பெற வந்துள்ளோம் என்று கூறியதால் நமக்கு சிறப்பு தரிசனம்ஏற்பாடு செய்தார்கள்.முதலில் கோயிலை முழுதும் வலம் வந்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான் என அனைத்து இறை சொரூப தரிசனம் பெற்றோம்.













அடுத்து நம் மனம் குருநாதர் நோக்கி சென்றது. எந்த கோலத்தில் தரிசனம் பெற உள்ளோம்? நின்ற கோலமா? அமர்ந்த கோலமா? அன்னையின் தரிசனம் கூடவே பெற உள்ளோம் என்று மனதுள் பல கேள்விகளுடன் ஸ்ரீ அகத்திய சற்குரு பீடம் நோக்கி சென்றோம்.


மிக சரியாக மதுரை பரமசிவன் ஐயா தம் துணையோடு வந்து சேர்ந்தார்கள். குருக்களும் அர்ச்சனைக்கு தயார் ஆனார்கள்.





வழக்கம் போல் லோக ஷேமத்திற்கு சங்கல்பம் செய்து அருள்மிகு உலோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய சற்குரு தரிசனம் பெற்றோம். 

பெற்றோம் ஆசிகள் அனைவரும் 
அனைவரும் பெற்ற ஆசிகள் செப்பிடவே 
என்றும் குருநாதர் தாள் பணிந்து 
மதுரையம்பதி மண்ணில் எங்கள் தாள் 
பதித்தல் விட மனம் பதிக்கவே 
என்றும் விரும்புகின்றோம் குருநாதா 









கும்பாபிஷேக விபூதி பிரசாதமும் லட்டு பிரசாதமும் அன்று நமக்கு கிடைத்தது. இதனை பெரும் பாக்கியமாவே கருதுகின்றோம்.









அடுத்து சிறு கலந்துரையாடல் நடைபெற்றது. முதலில் திரு.பரமசிவன் ஐயாவிற்கு சிறு மரியாதை செய்தோம். பின்னர் திரு.பரமசிவன் ஐயா அவர்கள் சதுரகிரி தலம் பற்றி அவருடைய அனுபவங்களை தம்மோடு பகிர்ந்து கொண்டார். நாமும் பல செய்திகளை அன்றைய தினம் குறித்து வைத்துக் கொண்டோம். அடுத்து திரு.பரமசிவன் ஐயாவின் தொண்டுகள் பற்றி சிறிது நேரம் நாம் பேசினோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவை மகத்தானது. 2019 ஆம் ஆண்டில் நாம் நேரில் அன்னசேவையில் கலந்து கொண்டோம். இவற்றையெல்லாம் அன்று நாம் சற்று பேசினோம்.






சுமார் 30 நிமிட கலந்துரையாடல் பெற்று, திரு பரமசிவன் ஐயாவிற்கு நன்றி கூறி, அங்கிருந்து சதுரகிரி நோக்கி புறப்பட்டோம். விரைவில் சதுரகிரி யாத்திரை பதிவுகள் குருவருளால் காண உள்ளோம்.




மீண்டும் ஒரு முறை பதிவின் ஆரம்பத்தில் பகிர்ந்த கந்த நாடி வாக்கினை படித்து பார்த்து , வாய்ப்புள்ள அன்பர்கள் தரிசனம் செய்து வருஷாபிஷேக வழிபாட்டில் கலந்து கொள்ள நம் தளம் சார்பில் வேண்டுகின்றோம்.

எப்படி செல்வது?

இக்கோவில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் மூலக்கரை (பசுமலை) என்னும் பேருந்து நிறுத்தத்தில் உள்ளது.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

 அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

No comments:

Post a Comment