"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, January 15, 2024

தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் இன்றைய பொங்கல் வழிபாடு மிக சிறப்பாக நடைபெற்றது. நமது உறவுகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தோம். இன்றைய கூட்டு வழிபாடும் குருவருளால் மிக மிக சிறப்பாக திருவாசகத்தில் சிவபுராணம், போற்றித் திருஅகவல், திருக்கோத்தும்பி படித்து  மகிழ்வுற்றோம். இன்றைய சேவையாக நம் தளம் சார்பில் சமயபுரத்தில் அன்னசேவையில் இணைந்தோம். இது நாம் திட்டமிட்டு இணையவில்லை. ஆனால் குருவருளால் இன்று நடைபெற்றது. இன்றைய நன்னாளில் இயற்கைக்கு நன்றி கூறி மகிழ்கின்றோம். 

இன்று அண்ணாமலையார் பற்றி சில துளிகள் அறிய உள்ளோம். 



காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.

பஞ்சபூதத் தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.ஆறு ஆதாலத் தலங்களில் திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது.

இங்கு மலையே இறைவனின் சொரூபம்.சோணாசலம், அருணாச்சலம், அண்ணாமலை எல்லாம் இத்தலத்தைக் குறிப்பவையே.

ஒரு முறை பிரம்மாவிற்கும், மஹாவிஷ்ணுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் சோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் சோதியின் அடி முடியைக் காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும் அவரை வணங்கினர். சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி காட்சி கொடுத்தார். அதுவே இத்தலமான அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார். (சிவலிங்கம் என்றால் இறைவனைக் குறிக்கும் குறியீடு என்று பொருள்.) லிங்க உத்பவம் (சிவலிங்கத்தின் தோற்றம்) நடைபெற்ற தலம் இது. திருஞானசம்பந்தர் பதிகங்களில் ஒன்பதாம் பாடல் தோறும் அடிமுடி தேடிய இந்த வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

தமிழில், அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் அளக்க முடியாத வடிவாகத் தோன்றிய சிவபெருமானின் மலை என்பதால் அண்ணாமலை எனப் பெயர் வந்தது.

வடமொழியில், அருணம் என்றால் சிவப்பு. அசலம் என்றால் மலை. சிவந்த நெருப்பு வடிவில் தோன்றிய மலை என்பதால் அருணாசலம் எனப் பெயர் பெற்றது. 

அண்ணாமலையானது கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.

உமையம்மை இங்கு தவம் இருந்து சிவபெருமான் திருமேனியில் ஒரு பாகம் பெற்றார் 

சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் முதலியோர் பூசித்துப் பேறுபெற்ற தலம்.

வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனையாகவும் குதிரையாகவும் இருந்த நிலையில் வச்சிராங்கத பாண்டியன் குதிரை மீதேறி பூனையைத் துரத்திவர திருவண்ணாமலையை வலம் வந்து இரண்டும் இச்சாபம் நீங்கி வித்தியாதரர்களாயினர். 

வச்சிராங்கதன் என்னும் பாண்டியன் தினமும் வலம் வந்து திருப்பணி பல செய்துள்ளான்.

நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. 

இங்கு மலையே இறைவனின் சொரூபம். மலைவலம் (கிரிவலம்) இங்குச் சிறப்புடையது.

இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர். பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பு. 

மலைவலம் சுற்றி வரும் போது எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் காணலாம். அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம்.உயர்ந்தோங்கிய அருணாசலத்தின் - அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும். 

வெளிச்சுற்று மதிலில் திசைக்கு ஒன்றாக அமைந்துள்ள நான்கு கோபுரங்கள் பிரதான கோபுரங்களாகும். 5-ம் பிரகாரத்தில் இருந்து 4-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள், 4-ம் பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் கிளி கோபுரம் என்று அழைக்கப்படும் கோபுரம் ஒன்று ஆக மொத்தம் 9 கோபுரங்களுடன் இவ்வாலயம் திகழ்கிறது. இவற்றில் கிழக்கு திசையிலுள்ள இராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். இது 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தெற்கு திசை கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்றும், மேற்கு திசை கோபுரத்திற்கு பேய் கோபுரம் என்றும், வடக்கு திசை கோபுரத்திற்கு அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் பெயர்.

கிழக்கு கோபுரத்தில் நடனக் கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.

கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம்; தரிசிக்கத் தக்கது.திருவண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பேய்  கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. 

அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.)

உள்ளே சென்றால் கம்பத்திளையனார் சந்நிதியும், ஞானப்பால் மண்டபமும் உள்ளன; 

'அதலசேடனாராட' என்னும் திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சந்நிதி.விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

சாதாரணமாக கோயில்களில் அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வது போலன்றி, இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம் (சுத்தமான தங்கத்தால் பந்தனம்) செய்யப் பெற்றுள்ளார்.மூலவர் - அருணாசலப் பெருமான், தங்கக் கவச நாகாபரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.

சதுர் முக லிங்கம் இங்கு உள்ளது.25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ளது 

இத்திருக்கோயில்.(திருவாசகத்தில்) திருவம்மானை, திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது. திருவாசகத்துள் திருவெம்பாவை என்ற பனுவல், இத்தலத்துப் பெண்கள் ஒருவரை ஒருவர் வழிபாட்டுக்கு எழுப்பிச் சென்றதை அடிப்படையாகக் கொண்டது.

தலபுராணம் - அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார்.

'அண்ணாமலை வெண்பா ' குருநமசிவாயர் பாடியது.

குருநாமசிவாயர், குகைநமசிவாயர், அருணகிரியார், விருபாக்ஷதேவர், ஈசான்ய ஞானதேசிகர், தெய்வசிகாமணி தேசிகர் முதலியோர் இப்பதியில் வாழ்ந்த அருளாளர்கள்; இவர்களுள் பெரும் யோகியாகத் திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர் என்பர் இராமேஸ்வரத்திற்கு யாத்திரையாகச் சென்றபோது, இராமநாதபுர ராஜா சேதுபதி அவர்களின் வேண்டுகோளையேற்று, இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோயில்களின் நிர்வாகத்தைக் தாம் மேற்கொண்டதோடு குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஓர் ஆதீனத்தையும் ஏற்படுத்தினார்; அதுவே 'குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்' என்று வழங்கப்பட்டுவருகின்றது.























இங்கே நாம் மகிழ மரம் தல விருட்சம் கண்டு , இங்கே இருந்து 9 கோபுரங்களை தரிசனம் செய்யலாம்.








திருவண்ணாமலை - சித்தர்கள் பார்வையில் ஒரு அதிசயமாக பாவிக்கப் படுகிறதே!


திருவண்ணாமலை, அகத்தியர் கூற்றின்படி, நித்தம் நித்தம், ஒவ்வொரு நொடியும், அதிசயங்கள் நடக்கும் இடம். நிறைய மனிதர்களுக்கு, அவரவர் கர்மாவின்படி, அதிசயத்தில் பங்குபெறுகிற, காண்கிற வாய்ப்பை சித்தர்கள் அளித்துள்ளனர். அப்படிப்பட்ட நிகழ்ச்சியே, பலரது வாழ்விலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, என்பதும் உண்மை. ஒவ்வொரு கிரிவலமும், முறையாக, அமைதியாக, சிவநாம ஜெபத்துடன், உள் முனைப்புடன் செய்தால், அந்த ஒருவன்/ஒருவள், வந்த பொழுது வாங்கி வந்த மிகப்பெரிய கர்மா கட்டை, அவிழ்த்து, அண்ணாமலையார், தன் மீது கட்டிக்கொள்வர். இவனுக்கு/இவளுக்கு கர்ம பாரம் குறையும்.

மேலும், சித்த மார்கத்தில் ஒரு வழக்கு சொல் உண்டு.  "வட்டம் என்பது ஒரு நேர்கோடு" என. திருவண்ணாமலை கிரிவலம் அது என்னவென்று புரியவைக்கும்.

வாழ்க்கையில் மனிதன் இயல்பாகவே சேர்த்துக் கொள்கிற கர்மா என்பது, கிரிவலத்தின் பொழுது செய்கிற தானத்தினால், உடனேயே விலகும்.

கர்மா கழிதல்:-

மரணம் என்பது எல்லோருக்கும் உள்ள ஒரு நிலைதான். அது எங்கு, எப்பொழுது, எப்படி என்பதில்தான் வித்தியாசப்படுகிறது. உடல் அசந்து போகும்முன் பௌதீகத்தை சேர்த்துவிடவேண்டும் என்று முனைப்புக்காட்டுகிற மனிதன், உயிர் நீத்தபின் கூட வருவது அவனது பாபமும், புண்ணியமும் தவிர சேர்த்துவைத்த எந்த பொருளோ, தனது உறவோ, சுற்றமோ இல்லை என்பதை உணர்வதே இல்லையே. முனைப்பு அனைத்தும், உலகாயாத பொருட்களில், தன் குடும்பத்தாரிடம் மட்டும் வைத்துவிட்டு, தனக்கொரு பிரச்சனை வந்தால் மட்டும் சித்தர்களை நாடியில் தேடி வந்து, அன்றுவரை செய்த கெட்ட கர்மாவை, அவர்கள்  மொத்தமாக கழித்துவிட, வழி கூற வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். சாப்பிட்டது ஜீரணமாக, குறைந்தது ஒரு மணி நேரம் உடலுக்கு தேவைப்படுகிறதென்றால், எத்தனை ஜென்ம கர்மாவுக்கு, எவ்வளவு நேரம் வேண்டி வரும்? இதை ஏன் யோசிப்பதில்லை?

சித்த மார்கத்தில் தானம் செய்யும் முறை:-

சித்த வித்யார்த்திகள், தானம் செய்வது, தங்கள், மூச்சை. அது பார்க்கக் கிடைப்பது அரிது. அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பிப்பதாக வரித்துக் கொண்டு, இரு கையையும் சேர்த்து, இரு கட்டை விரலும் மூக்கின் இரு பக்கமும் வைத்து, இரு ஆள்காட்டி விரலும் ஒன்றாக சேர்த்து, சுழுமுனையில் இருக்க, மற்ற விரல்கள் மூக்கை மறைத்து நிற்க, பிறர் காணா வண்ணம், இடது மூக்கை அழுத்தி மூடி, வலது மூக்கு வழியாக காற்றை உள்ளிழுக்கும் பொழுது "ஓம் நமச்சிவாய" என்று மனதுள் தியானித்து, கும்பமானதும், "சிவாய நமஹ" என தியானித்து, அந்த நேரத்தில், இடது மூக்கின் வழி மூச்சை, மூடிய விரல்களை திறந்து, இறைவன் பாதத்தில் சமர்ப்பிப்பார்கள். 

தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்;
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.

தெளிவுரை : திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவ பெருமானை மனதார எண்ணிச் சென்று, அப் பெருமானின் தூய மலர்ப் பாதங்களை ஏத்துமின். பக்தியில் திளைத்து மெய்மறந்து ஆடுமின்; கசிந்து உருகிப் புகழ்ப்பாடல்களைப் பாடுமின்; கைதொழுது வணங்குமின். அத்தன்மையில் அப்பெருமான் நமது உள்ளத்தில் புகுந்து நம்மை ஆட்கொள்வார். நமது வினைகள் யாவும் நம்மை விட்டு ஓடிப் போகும்.

நினைத்தால் முக்தி தரும் திருஅண்ணாமலையாரை தேடி சென்று ஆடிப் பாடி தொழ வேண்டும் என்பது இங்கே தெளிவாக நமக்கு கூறப்பட்டுள்ளது. இப்படி தேடி சென்று அண்ணாமலையாரை தொழுதால் வர நம்மை ஆட்கொள்வது திண்ணம். இதன் மூலம் நமது வினைகளும் ஓடிப் போகும். இதன் பொருட்டே நாம் திருஅண்ணாமலையாரை நினைத்து, நினைத்து அகத்துள் வழிபாடு செய்து மகிழ்வோமாக!

அல்லல் தீர்க்கும் அண்ணாமலையார் பாதம் தொழுது நம் வினைகளை போக்குவோமாக!  

 5.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஐந்தாம் திருமுறை  

திருக்குறுந்தொகை  -  திருவண்ணாமலை -  அருணாசலேசுவரர்: உண்ணாமுலையம்மை) திருவண்ணாமலை ; 

அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி 

பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம்

இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும்

அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக்

கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே! [ 1]


பெற்றம் ஏறுவர், பெய் பலிக்கு ஏன்று அவர்;

சுற்றமா மிகு தொல் புகழாளொடும்

அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ

நல்-தவத்தொடு ஞானத்து இருப்பரே.  [ 2]


பல் இல் ஓடு கை ஏந்திப் பல இலம்

ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்,

அல்லல் தீர்க்கும், அண்ணாமலை கைதொழ

நல்லஆயின நம்மை அடையுமே. [ 3]


பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர்

ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ?

ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ

ஓடிப் போகும், நம் மேலை வினைகளே.  [ 4]


தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!

நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்;

ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ

ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.  [ 5]


கட்டி ஒக்கும், கரும்பின் இடை; துணி

வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்,

அட்டமூர்த்தி, அண்ணாமலை மேவிய

நட்டம் ஆடியை, நண்ண நன்கு ஆகுமே.  [ 6]


கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர்,

பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்,

ஆணிப் பொன்னின், அண்ணாமலை கைதொழப்

பேணி நின்ற பெருவினை போகுமே. [ 7]


கண்டம்தான் கறுத்தான், காலன் ஆர் உயிர்

பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்,

அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ

விண்டு போகும், நம் மேலைவினைகளே. [ 8]


முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்,

அந்திவாய் ஒளியான் தன் அண்ணாமலை!

சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்,

கந்தமாமலர் சூடும் கருத்தனே. [ 9] 


மறையினானொடு மாலவன் காண்கிலா

நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்

உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்

பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.  [ 10]


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருஅண்ணாமலை பதிகத்தை  பாடி மகிழ்வோம்.

திருச்சிற்றம்பலம்!

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.

பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே.


கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.

ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரன் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட வடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே

வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே.

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.

திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!! திருச்சிற்றம்பலம்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_12.html

திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!! - https://tut-temples.blogspot.com/2023/08/3000.html

திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023 - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா - 11.1.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/100-1112024.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html


 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே! - https://tut-temples.blogspot.com/2022/10/blog-post_14.html

அண்ணாமலை எம் அண்ணா போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/10/blog-post_14.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_29.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

 தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

No comments:

Post a Comment