அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி உழவாரப்பணி குழு இணைந்து நாளை குடும்ப விழா கொண்டாட உள்ளார்கள். அதன் பொருட்டு இன்றைய பதிவில் அனைவரையும் சந்திக்கின்றோம். வழக்கம் போல் குருவருளால் ஒவ்வொரு நாளும் நம் குழுவின் சேவை நடைபெற்று வருகின்றது. கடந்த மதுரை அஷ்டமி சப்பரம் சேவையை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். விரைவில் தனிப்பதிவில் இது பற்றி பேசுவோம். குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் தலைமையில் நாம் இயங்கி வருவது நாம் செய்த புண்ணியமே. இதற்கு நாம் ஒவ்வொருவரும் நம் பெற்றோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம். ஏனென்றால் சித்தர் அருட்குடில் சேவையில் நாம் சாதாரணமாக இணைய இயலாது. குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் இருந்தால் தான் சித்தர் அருட்குடில் சேவையில் நாம் இணைய முடியும்.
சித்தர் அருட்குடில் சேவையில் நாம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து உள்ளோம். வருடத்திற்கு ஒருமுறை சித்தர் அருட்குடில் சென்று வருவது வழக்கம். இந்த ஆண்டில் நாளை நடைபெற உள்ள விழாவில் நாம் சித்தர் அருட்குடில் அன்பர்களை சந்திக்க உள்ளோம். நம் தளம் சார்பில் முதல் சேவையாக மாதந்தோறும் சித்தர் அருட்குடில் சேவைக்கென்று சிறு தொகையாக அனுப்பிவிடுவது வழக்கம். சித்தர் அருட்குடில் சேவைகளைப் பற்றியும் சிறிது தொட்டுக் காட்டி உள்ளோம். சரி. இனி நாளை நடை பெற உள்ள விழாவின் அழைப்பை அனைவருக்கும் அறிய தருகின்றோம்.
ஜீவ நாடி என்றால் என்ன?
ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம் ஜோதிடரிடம் போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.
“இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள் முறை தவறி நடந்து கொண்டால் நாடி பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும்” என்பது நாடி ஜோதிடர்களின் கூற்று.
தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றனர் பலர்.
ஹனுமத்தாஸனைப் போலவே தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாது, ஜோதிடத்தை ஒரு சேவையாக எண்ணிச் செய்து வருபவர் திரு கணேசன். இவரிடம் இருப்பதும் அகத்தியர் ஜீவநாடிதான். பல ஆண்டுகளாக இவர் தன்னிடம் இருக்கும் ஜீவநாடி மூலம் பலன் சொல்லி வருகிறார். உலகெங்கிலுமிருந்தும் பலர் இவரிடம் நாடி பார்க்க வருகின்றனர். பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் இவரிடம் வந்து ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளனர்.
இதற்காக இவர் ”கட்டணம் இவ்வளவு கொடு” என்று கேட்டு வாங்குவதில்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறார். அவ்வாறு வரும் பணத்தையும் நாடியில் வரும் கட்டளைப்படி அன்னதானத்திற்கும், தீப வழிபாட்டிற்கும், யாகங்கள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார். ஒரு ஆன்மீக சேவையாகவே எண்ணி இதைச் செய்து வருகிறார்.
சித்தர் அருட்குடில் முகவரி
Mr. J.Ganesan
Siddhar Arut Kudil
No. 33/56,2nd street
co-operative colony
opp. co-operative bus stop
Thanjavur-7
இதில் முக்கியமான விஷயம். இது சாதாரண நாடிகளைப் போன்றதல்ல. ஜீவநாடி. ஆகவே ஆன்மீகம், ஞானம், சித்த யோகம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு மிகத் தெளிவான பதில்கள் கிடைக்கும். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தகுந்த ஆலோசனைகள் கூறப்படுகின்றன.
சித்தர் அருட் குடிலுக்குச் செல்லும் வழி : தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். வழியில் பழைய ஹவுஸிங் யூனிட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அருட் குடிலுக்குச் செல்லலாம்.
மற்றொரு வழி : பழைய பேருந்து நிலையத்தில் இருந்து K74 அல்லது B6A ஆகிய பேருந்துகளில் ஏறி கோ-ஆபரேடிவ் காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் அருகிலேயே குடில் பார்வைக்குக் கிடைக்கும்.
முக்கியமான விஷயங்கள்:
அது ’அகத்தியர் அருட் குடில்’ என்பதால் அதற்கேற்றவாறு மனம், உடல் சுத்தத்துடனும் பக்தியுடனும் செல்வது நல்லது.
பாத்திரத்துக்கேற்றவாறு நீர் நிரம்பும் என்பது போல பார்ப்பவர்களின் ஆன்ம பலத்துக்கேற்ப நல்ல, விரிவான பலன்கள், வழிகள் கிடைக்கும்.
சித்தர்கள் கூறும் ஆலோசனைப் படி நடந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
இனி சில தரிசனப் படங்களை கண்டு மகிழ்வோம்.
No comments:
Post a Comment