அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
மார்கழி மாத வழிபாடு மிக மிக சிறப்பு வாய்ந்தது ஆகும். மாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும் தான் திரு என்னும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில் ஆருத்ரா என்று கூறுவார்கள். இத்தகு சிறப்பு பெற்ற மார்கழி திருவாதிரை அன்று திருஉத்தரகோசமங்கை தரிசனம் செய்ய நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமான் உத்திரவு கொடுத்து இருந்தார்கள். இன்றைய பதிவில் குருவின் ஜீவ வாக்கை இங்கே அருளுகின்றோம்.
அப்பனே
எவை என்று கூற இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன். அப்பனே தற்போது நல்
முறையாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்று ஓர் முறை சொல்லி விடுகின்றேன்.
அப்பனே ஒரு ரகசியத்தை.
அப்பனே அங்கும் வருவான் என்பேன் ஈசன் எப்பொழுது வருவான் என்பதுகூட எந்தனுக்கு தெரியும்.
அதை அங்கு அவன் (ஈசன்) வரும் பொழுது அவன் கண்ணில் பட்டாலே போதும் பாவங்கள் தொலைந்துவிடும் என்பேன்.
அவ்
சூட்சுமத்தையும் ஆருத்ரா தரிசனம் என்கின்றார்களே அவ் ஏழு நாட்களையும்
அப்பனே சேர்த்துப் பார்த்தால் ஒரு நாள் வரும் கடைசி நாளில் வருவான்.
நேரமும் சொல்கின்றேன் வரும்பொழுது உங்களுக்கு.
இவையன்றி கூற
அப்பனே ஒரு நாள் தங்குவான் என்பேன் உத்தரகோசமங்கையில்.
பின் எவை என்று கூற இப்பொழுதும் கூட அதை சொல்லி விடுகின்றேன். அப்பனே மார்கழி மாதத்திற்கு முன் ஒரு மாதத்தில் சொல்கின்றேன்.
அப்பனே
எவை என்று கூற நல் முறைகள் ஆகவே அப்பொழுதுதான் அவனுக்கு (ஈசனுக்கு) நல்
முறையாக வருடத்தில் ஒரு நாள் அபிஷேகங்கள் (திருவாதிரை நாள் ஆருத்ரா
தரிசனம்) நடக்கும் என்பேன்.
அப்பனே அவனுக்கு பிடித்தமான தலம் உண்டு என்பேன் அங்கு கூட.
அவன் எங்கு அமர்ந்திருப்பான் என்பதைக்கூட இப்பொழுதே சொல்லிவிடுகிறேன் அப்பனே அங்கு ஒரு மரம் இருக்குமே அங்கேதான்.
ஆனாலும்
அதை தெரியாத மனிதர்கள் அப்பனே அவ் அபிஷேகத்தை காண அபிஷேகத்திற்காக தான்
அனைவரும் காத்திருப்பார்கள். ஆனால் ஈசனோ இங்கு மரத்தடியில் அமர்ந்து கொண்டு
இருப்பான்.
அவ்விடத்தில் (மரத்தடியில்) நீங்கள் நிச்சயம் அமருங்கள் அங்கு சென்று.
இவ்வாறு குருநாதர் அகத்தியர் வாக்கு உரைத்திருந்தார்.
அடுத்து நாம் உத்திரகோச மங்கை தரிசனம் நம் குருநாதர் கூறியபடி காண இருக்கின்றோம்.
அன்றைய தினம் குருநாதர் கூறிய ஸ்தல விருட்சத்தில் இரவு 10 மணி முதல் அமர்ந்தோம். தீபமேற்றி, அகத்திய அடியார் ஒருவர் சங்கு நாதம் ஒலிக்க அன்பில் திளைத்தோம். பின்னர் சிவபுராணம் படித்தோம். நேரம் செல்ல செல்ல கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தோம். திருநீற்றுப் பதிகம் படித்தோம். அடியார் பெருமக்கள் அங்கே சூழ, உத்தரகோச மங்கை பதிகங்கள் கேட்க வாய்ப்பு கிடைத்தது. நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கே மரகத நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது, நாம் ஸ்தல விருட்சத்தில் அமர்ந்து மனதுள் சில மந்திரங்களை மனம் திறம் பட கூறிக் கொண்டே இருந்தோம் அகத்திய அடியார்கள் அங்கே முழுதும் மரத்தை சூழ்ந்து அமர்ந்து இருந்தார்கள்.பின்னர் அதிகாலை 3 மணி அளவில் இறை நமஸ்காரம் செய்து விட்டு , இல்லம் நோக்கி திரும்பினோம். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனின் தரிசனம் எப்படி இருந்தது என குருவின் மொழியில் கேட்டோம்.
உத்திரகோச மங்கை ஈசன் தரிசனம் குறித்து குருநாதர் அகத்தியர் உரைத்த பின்வாக்கு .
ஆருத்ரா தரிசனம் அன்று
உத்தரகோசமங்கையில்
கூட ஈசனார் பின் பார்வதி தேவியுடன் வந்தானப்பா வந்தானப்பா அப்பனே சுற்றி
அப்பனே வளைத்து கொண்டீர்கள் நீங்களும் அப்பனே இவை என்று கூற சோதித்தான்
ஈசன் யார் இதை கூட தெரிவித்துவிட்டது என்பதைக்கூட பின் நெற்றிக் கண்ணில்
பார்க்கும் பொழுது இவையோ
என்று
கூற அப்பனே இவ் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது என்பேன் நினைத்தாலே அப்பனே
முக்தி தருவது இறைவனுடைய கருணை ஈசனே என்பேன் அதனால் அப்பனே வர
இயலாதவர்களுக்கும் அங்கு செல்லவில்லையே என்று யார் யோசித்து இருந்தார்களோ
அவர்களுக்கும் அப்பனே நிச்சயமாய் அங்கிருந்தே ஆசீர்வதித்தான் அப்பனே அப்பனே
நல்விதமாக ஒவ்வொருவருக்கும் அப்பனே எதனை என்று கூற சில சில வழிகளிலும்
கொடுத்தனுப்பினான் ஆசிகள் .
இதனால் கவலைகள் இல்லை.
மறு வாக்கும் செப்புகின்றேன் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
No comments:
Post a Comment