அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நமக்கு அகத்தியம் காட்டி, அகத்தியம் ஊட்டி வருவது சித்தனருள். நம்மை வழிநடத்தும் சித்தனருள் இணையத்தளம் மூலம் நாம் பெரும் அருள் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று. அந்த நாள் இந்த வருடம் என்ற தொகுப்பின் மூலம் அகத்தியர், சித்தர்கள், தாமிரபரணி என்று நம் பயணமும் நீண்டு வருகின்றது. 2019 ஆம் ஆண்டு கோடகநல்லூர் தரிசனமும், நம்பிமலை தரிசனமும் சிறப்பாக கிடைத்தது. 2020 ஆம் ஆண்டில் தொற்றுக்கிருமி கட்டுப்பட்டால் நம்மால் தரிசனம் பெற இயலவில்லை. 2021 ஆண்டில் ஓதிமலை தரிசனம் பெற பிரார்த்தனை செய்கின்றோம் என்று 2020 ஆம் ஆண்டில் டிசம்பர் மாத பதிவில் வேண்டி நின்றோம். வேண்டத்தகத்தை அறிந்து, நாம் வேண்டியதை இந்த 2021 ஆண்டில் நம் குருநாதர் அளித்துள்ளார்.2021 ஆம் ஆண்டில் அனைத்தும் இரண்டாக கிடைத்து வருகின்றது. ஓதிமலை வழிபாடு, கோடகநல்லூர் வழிபாடு, நம் குருநாதரின் மார்கழி ஆயில்ய வழிபாடு என அனைத்தும் இவ்வாண்டில் இரண்டாக கிடைத்து வருகின்றது, இதில் கார்த்திகை ஷஷ்டி ஓதியப்பர் தரிசனம் பெற்றோம். 12.12.2021 அன்று கோடகநல்லூர் பூஜை நம் குழுவின் சார்பில் சிறப்பாக குருவின் அருளால் செய்தோம். அடுத்து மார்கழி ஆயில்ய வழிபாட்டிற்கு தயாராகி வருகின்றோம்.
இனி..சித்தன் அருள் இதயத் தளத்திலிருந்து....
நம் குருநாதரின் மேற்பார்வையில் ஆன்மீக
பயணம் செய்வது மிக இனிமையான ஒன்று. பலமுறை, நம்மை கழட்டிவிட்டு, "நீ விலகி
நின்று வேறு ஒருவரை செய்ய விடு" என்று உத்தரவிடுவார். குருநாதர் என்ன
சொல்கிறாரோ அதற்கு தலைவணங்கி அதன் படி விலகிநின்று வேடிக்கை பார்ப்பது ஒரு
சுவாரசியமான விஷயம்.
கோடகநல்லூர்
ப்ரஹன்மாதவ பெருமாளுக்கு, இரண்டாவது அபிஷேக பூஜையை அவர் எண்ணப்படியே
நடத்தி எடுத்துக்கொண்டார். இவ்வுலகில் அதர்மம் வளர்ந்துபோய், காலத்தில்
கலியின் விளையாட்டால், விஷம் ஏறிப்போய், மிக ஆபத்தான "கிரகநிலைக்குள்" பூமி
அகப்பட்டுக்கொண்டு, காலசர்ப்ப தோஷமும், "தூமகேதுவின்" வரவுக்குள் மனிதம்
மிகவே சிரமங்களை அனுபவிக்கும் என்றறிந்து, காலசர்ப்ப தோஷத்தை
நிர்வீர்யமாக்க, பெருமாளின் அருள் தேடி, நம்மை ஒன்று சேர வைத்து, அவரை
அபிஷேக பூசை செய்து குளிரவைத்தார். இதுதான் நடந்த உண்மை. ஒருமுறை கூட
நிதானமாக படித்துப்பார்த்தால், எத்தனை பெரிய விஷயத்துக்கு, நம்மை எல்லாம்
அகத்தியப்பெருமான் ஒன்று சேர்த்து, லோகஷேமத்திற்கு உபயோகப்படுத்திக்
கொண்டார் என்பது விளங்கும்.
பூசை
முடிந்து, கோவிலை சுற்றி மட்டும் பெய்த மழையே, பெருமாள் நம்
பிரார்த்தனையை, மனமகிழ்ந்து, அபிஷேக பூசையுடன் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு
ஒரு நற்சான்று.
மிக
மிக சிறப்பாக, அனைத்தையும் ஏற்பாடு செய்து, உழவாரப்பணி செய்து, மனதாலும்,
உடலாலும் தன்னை அகத்தியர் பாதத்தில் அர்பணித்துக் கொண்டு, அன்றைய தின
பூசையை நிறைவாக செய்த அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் அடியேனின் சிரம்
தாழ்ந்த வணக்கங்கள். நீவீர் நலமாய் வாழ்கவென அகத்தியப்பெருமானிடம்
வேண்டிக்கொள்கிறேன்.
இந்த
வருடத்தின் மற்றொரு நிகழ்ச்சியாக, அனைத்து அடியவர்களும் மனம் மகிழ்ந்து
பங்கு கொள்ளும் "நம் குருநாதரின் மார்கழி-ஆயில்ய திருநட்சத்திரம்" வருகிற
23/12/2021 வியாழக்கிழமை அன்று வருகிறது. நம்மை பொறுத்தவரை அந்தநாள் மிக
முக்கியமான தினம். ஆம்! அவரது இரண்டாவது முறை வருகிற நட்சத்திர நாள்.
2022இல் மார்கழி-ஆயில்யம் வருவதில்லை. 2023இல் ஜனவரி 09ம் தியதி மறுபடியும்
வரும். ஆனால் அதை கொண்டாட நாம் ஒரு வருடத்திற்கு மேல் காத்திருக்க
வேண்டும்.
இப்படிப்பட்ட
அரிய வாய்ப்பை குருநாதர் நமக்கு கொடுத்ததை சரியான முறையில் அவர் பாதம்
பணிந்து அன்றைய தினம் ஏதேனும் ஒரு அகத்தியப்பெருமானின் சன்னதியில், அபிஷேக
பூசையுடன் சிறப்பாக அமைத்துக்கொள்ளுங்கள்.
யாம்
பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்கிற எண்ணத்தில், எப்போதும் போல்,
பாலராமபுரம் அகத்தியர் கோவிலில் அபிஷேக பூசைகளுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இந்த வருட இரண்டாவது பூசை, 23/12/2021 அன்று மாலை 5
மணிக்கு அபிஷேகத்துடன் தொடங்கி, அலங்காரம், புஷ்பாபிஷேகம், தீபாராதனை,
அன்னம் பாலித்தலுடன் நிறைவு செய்வார்கள்.
"அன்றைய
தினம், யாம் அங்கு வந்து அன்னம் பாலிக்க கேட்போம். அன்னம் இட்டுவிடு. அது
போதும்" என பூசாரி திரு சுமேஷ் அவர்களுக்கு நாடியில் அகத்தியர்
உரைத்துள்ளார்.
பாலராமபுரம்
கோவில், அகத்தியப்பெருமான் விரும்பி அமரும் இடங்களில் ஒன்றாக அவரே,
நாடியில் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில், பிரார்த்தனைக்குப் பின்
பலருக்கும் நடந்த நல்ல விஷயங்கள், விடிவுகாலம், போன்றவை சாட்சியாக
அமைந்துள்ளது.
அன்றைய
தின பூசையில் கலந்து கொள்ள விரும்பும், அகத்தியர் அடியவர்களுக்காக,
பாலராமபுரம் கோவில் நிர்வாக தொடர்புகளை கீழே தருகிறேன். அவர்களை தொடர்பு
கொண்டு, பூசையில் கலந்துகொண்டு, அகத்தியப்பெருமானின் அருளை பெற்றுக்
கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்கிறேன்.
பாலராமபுரம் அகஸ்தியர் கோவில்!
BALARAMAPURAM AGASTHIYAR TEMPLE!
திரு:ரதீஷ் (RATHEESH) - 9048322565 திரு:செந்தில் (SENTHIL) - 9840303281
பாலராமபுரத்தில் உள்ள அகத்தியர் கோவிலில் நம் குருநாதர், லோபா முத்திரா
தாய்க்கான சென்ற வருட திருவிழா, மிகச்சிறப்பாக நடந்தது. இந்த நாட்களில்,
புஷ்பாபிஷேகம், பூஜைகள் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, உங்கள்
பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்
நம் குருநாதரின் தரிசனத்திற்காக எப்போதும் போல் காத்திருக்கின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html
தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html
பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html
பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html
துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html
தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html
தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html
பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html
தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html
பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html
அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html
அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html
பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html
அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html
ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html
கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html
குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html
ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html
ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html
வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html
நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html
வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html
வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html
TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html
No comments:
Post a Comment