"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, December 30, 2021

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 51 - முருகனது ஆசியது! முழுமையாய் உண்டு!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. இந்த பெருந்தொற்று காலத்தில் நம் தளம் சார்பில் குருநாதரின் அருளால் பல இடங்களில் சேவை செய்து வருகின்றோம். வழக்கமான இம்மாத சேவைகளுடன்  கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குரு நாள் சேவையாக வியாழன் தோறும் இன்னும் தொண்டினை சிறப்பாக முருகன் அருள் முன்னிற்க செய்து வருகின்றோம். வியாழன் அன்று சிறப்பு அன்னசேவையாக இனிப்புடன் கூடிய காலை உணவு, காகங்களுக்கு, பசுக்களுக்கு வாழைப்பழம், கஜேந்திரருக்கு, பைரவருக்கு என்று அன்று சிறப்பு தொண்டாக செய்து வருகின்றோம்.

தேடல் உள்ள தேனீக்களாய்  - TUT குழுவின் மூலம் அன்னதானம், அமாவாசை லோக ஷேம தீபம், சித்தர் வழிபாடாக ஆயில்ய ஆராதனை,ஆலய கைங்கர்யம், சமூக அறப்பணிகள்  செய்து வருவது  மிகப்பெரிய சிவ பணியாகும். இந்த பணியில் அன்பர்கள் இணைந்து அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் ஈசனுக்கு உணவளிக்கும் வாய்ப்பு போன்ற சேவைகளை  எம்பெருமான் ஒரு சிலருக்கே கொடுத்துள்ளார். ஏனெனில் சிவத்தொண்டில் கலந்துகொள்ளவும் எம்பெருமான்  கருணை இருந்தால் மட்டுமே இயலும்.

அவர்களின் கர்மவினை முடிச்சுகளை அவர் அவிழ்ப்பார்.எனவே நமது நோக்கத்தை புரிந்து உதவி செய்து வரும் அன்பர்கள் அனைவரையும்  நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் 
     நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் 
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்
   ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் 



நாடி ஜோதிடம் என்றாலே ஒரு வித மோகம் ஏற்படவே செய்கிறது.சாதாரணமாக ஜாதகம் பார்த்து பலன் சொல்வதற்கும் நாடி பார்த்து பலன் தெரிந்து கொள்வதற்க்கும் என்ன வித்தியாசம் எனில் ஜாதகம் பார்ப்பவரின் தெய்வ பலம், ஆன்ம பலம், ஞானம், ஜோதிட அறிவு ஆகியவற்றைப் பொறுத்து பலன் அமைகிறது. ஒருவர் சொல்லுவார் அப்படியே நடக்கும்.

அதே ஜோதிடர் மற்றொருவருக்குச் சொல்லுவார் அது அப்படியே நடக்காமல் போய்விடும். காரணம் அது ஜோதிடரிடம் எந்தக் குறையும் கிடையாது. ஜோதிடம் பார்க்க வருபவரின் கர்ம வினையே காரணம்.அதனால்தான் 1+2=3 எனும் Forumula வின்படியெல்லாம் ஜோதிடத்தில் அரிதியிட்டுக் கூறமுடிவதில்லை. அப்படி பலிக்காமல் போனவர் ஜோதிடர் பொய் என்கிறார். நன்கு பலித்து நலன் அடைந்தவர் ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் தெய்வமாகப் பாவித்துக் கொண்டாடுகிறார். 

இந்தக் கதை நாடியில் பலன் சொல்லும் போது ஜோதிடராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் கூட போதுமானது. அந்த நாடியில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை படித்து விளக்கும் மீடியமாக, Translator ஆகத்தான் ஜோதிடரின் நிலைமை இருக்கிறது. இவரை ஜோதிடர் என்று கூட சொல்ல முடியாது காரணம் இவர் பலன் சொல்லுவதில்லை. ஏதோ ஒரு முனிவர் சுவடியில் எழுதி வைத்ததை படித்து அதை தெரிவிக்கிறார் என்பது மட்டுமே இவரது பணி. எனவே இவரை மீடியேட்டர் என்று சொல்லலாம். ஆனால் இந்த முறையான நாடி ஜோதிடத்தில் பல்வேறு ஏமாற்று வேலைகள் இருப்பதால் மக்கள் மரியாதை குறைவாகப் பேசுகின்ற நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்கள். எனவே அதைப்பற்றி எழுதுவது எமது பணியல்ல. அவரவர் அனுபவத்தைப் பொறுத்து பலன் நடக்கும் விதத்தைப் பொறுத்து நம்புவதும் நம்பாமல் போவதும் அவரவர் பொறுப்பு. 
 

ஆனால் இதில் எந்தவித வரையறுக்கும் விஷயங்களுக்கெல்லாம் உட்பட்டதல்ல ஜீவநாடி. ஜீவநாடி என்றால் ஓலைச்சுவடி என்று மட்டும் அர்த்தம் கிடையாது. ஜீவநாடியில் எதுவுமே எழுதப்பட்டு இருக்காது. ஒரு சாதாரண வெறும் தாளில் கூட என்னால் ஜீவநாடி படிக்க முடியும். சுவடிதான் தேவை என்பதில்லை. இது சித்தர்களின் வாக்கு.

சித்தர்களுக்கெல்லாம் சித்தரான முருகப் பெருமானின் வாக்கு. இது ஒரு வகையான சித்தி. இதை விலை கொடுத்து வாங்க முடியாது. என்னிடம் நான்கு ஜீவநாடி சுவடிகள் இருக்கின்றன. எல்லாமே வெறும் எழுதப்படாத ஓலைகள் தான். மிகச் சாதாரண ஓலைகள் தான். ஆனால் ஒரு சுவடியில்
கர்ம காண்டம் மட்டும் வரும். அதை நான் யாருக்கும் படிப்பதில்லை.

இன்னொன்றில் ஞான காண்டம் மட்டும் வரும். மீதமுள்ள இரண்டு சுவடிகளில் சாதாரண எதிர்காலப் பலன்களும், பரிகாரங்களும் வரும். இதையெல்லாம் அனுபவித்து வருகிறேன். இது எப்படி சாத்தியமாகிறது என்ற குழப்பம் எனக்கே ஆரம்ப காலத்தில் இருந்தது. ஆனால் ஒவ்வொருவர்

வாழ்விலும் மாற்றங்கள் நடப்பதைப் பார்க்கும் போது சில நேரங்களில் எனக்கே பிரமிப்பாய் இருக்கிறது. எழுதாத ஓலைச் சுவடிகளை கையில் எடுத்த உடனேயே என்ன வருகிறதோ அதை மட்டும் படிப்பதே என் பணி. நான் ஜோதிடன் அல்ல. எனக்கு ஜோதிடம் தெரியும் என்பதை “குருவருள் ஜோதிடம்” இதழில் வருகின்ற ஆய்வு கட்டுரைகளைப் பார்த்தாலே தெரியும். ஆனால் நான் ஜோதிடம் சொல்வதில்லை. ஜீவநாடி படிப்பது என்பது சித்தர்களோடும், முருகப் பெருமானோடும் உரையாடும் கலை. அதில் ஆத்ம திருப்தி உண்டாகிறது.  அதில் இறைகாட்சி கிட்டுகிறது. வாக்கிலே வகை வகையான வருங்கால நிகழ்ச்சிகள் வெளிப்படுகிறது. வந்தோரெல்லாம் வாழ்த்துகின்ற நிலை கிட்டுகிறது.




ஒரு 70 வயது மதிக்கத்தக்க தம்பதிகள் நீண்ட முயற்சிக்கு பின்பு  என்னிடம் வந்தவர் இருதய ஆபரேசன் செய்து உயிர்பிழைத்தவர் மூலம் வந்தார்கள். அவருக்கு ஜீவநாடியில் வாக்கு தந்தார் முருகப் பெருமான்.அதில் சுவராஸ்யமான பல விஷயங்கள் வந்தது. 

“கந்த வடிவேலனது நாமம் கொண்டான்

சொந்தமாய் இரு பெயரு கொண்டவன் கேள் 

மந்தமாய் இக்காலம் இருந்தாலும் 

வந்தமாய் மூவான பட்டம் உண்டு”

 வந்தவர்கள் தனது பேரனுக்கு நாடி கேட்டார்கள். தங்களது பேரனுக்கு முருகனது நாமமா அதாவது தங்கள் பேரனது பெயர் முருகனது பெயர்களில் ஒன்றா? ஆம் சுவாமி. 

 அது சரி அவருக்கு இருபெயர் உண்டு என்கிறாறே முருகப் பெருமான். 

ஆம் சுவாமி வைத்த பெயர் கார்த்திக் கூப்பிடும் பெயர் அப்பு. இப்போது மந்தமான காலம்தான். ஆனாலும் இவன் மூன்று பட்டம் படிக்க வேண்டும். 

என்ன படிக்கிறார்? 

சுவாமி MBBS படித்து பின்பு MS படித்து இப்போது ஒரு டிப்ளமோ  மருத்துவத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். மிகச் மிகச் சரி. 

“குருவாரம் ஒட்டி இவன் 

குவலயத்தில் தோன்ற 

அன்னைக்கு ஆங்காங்கு வலிக்கும் 

தகப்பனுக்கு பித்தப்பை ஆகாதென்போம்”

அடுத்தது நெற்றிப் பொட்டில் அடிக்கிறார் முருகப் பெருமான். இவன்  பிறந்தது வியாழக்கிழமையா ஆம் சுவாமி. இவனது தாய்க்கு உடலில் பல  இடங்களில் வலி வந்து கொண்டே இருக்கும் தந்தைக்கு பித்தப்பை ஆகாது என்கிறாறே முருகப் பெருமான்? எப்படி? இது நான்.

 சுவாமி இவரது அன்னைக்கு உடலில் பல வலிகள் வரும். வைத்தியமே இதுவரை பலிக்கவில்லை. தந்தைக்கு பித்தப்பையில் கல் வந்து சீழ் பிடித்து  விட்டது. அதை அகற்றி விட்டோம். இப்போது பித்தப்பை இவருக்கு இல்லை சுவாமி. இது அவர்கள். சற்று வியர்க்கத் தொடங்கியது வந்தவர்களுக்கு 
அந்த பையனின் தாய், தந்தையாரும் வந்திருந்தார்கள். எங்கும் இதுபோல் யாரும் இப்படிச் சொன்னது கிடையாது. சாட்சாத் முருகப் பெருமானின் வாக்கு என்றார் இவரது தந்தை. காரணம் இவரது பித்தப்பைக் கல்லைக்  கண்டுபிடிக்கவே  மருத்துவர்களுக்கு பல வருடம் ஆனது. முருகப் 
பெருமான் எடுத்த எடுப்பிலேயே ஒரு நொடியில் நாடியில் சொல்லி 

 “மணக்கோலம் இதுவரைக்கு மில்லை

 இனிமேலும் சிலகாலம் பொறுமைதேவை

 முறையற்ற சண்டாள கன்யா தோஷம் 

 உண்டுண்டு என்பதாலே 

 பெண்களால் பீடை வரும் 

 தொந்தரவு வரும் பொறு”

  இவருக்கு இதுவரைக்கும் திருமணம் ஆகியிருக்கக் கூடாது. ஆம் 

 சுவாமி. தற்போது தான் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம் சுவாமி. சரி நல்லது. 

ஆனாலும் சண்டாள கன்யா தோஷம் என்கிற தோஷம் இருப்பதால் சற்று சில காலம் பொறுமை தேவை. பெண்கள் வகையில் பல தொல்லைகள் வரும் என்கிறார் முருகப் பெருமான். அப்படி ஏதேனும் வந்ததா? இதுவரை  இல்லை சுவாமி. சரி இனிமேல் கவனமாக இருங்கள். இந்த சண்டாள கன்யா தோஷம் இவருக்கு ஒரு சண்டாளியை மனைவியாக்க காத்திருக்கிறது. 

எனவே நன்கு பொருத்தம் பார்த்து மணம் முடிக்க வேண்டும். படிப்பு முடியும் வரை கூட சற்று பொறுத்து பின்பு முடிவு செய்யலாம். படிக்கின்ற இடத்தில் ஏதேனும் பெண்கள் சகவாசம் உண்டா என்பதையும்  கண்டுபிடிப்பது நல்லது என்று சொன்னேன். சரி சுவாமி என்றார்கள். 

“வெளிநாட்டு யோகங்கள் 

விரும்பியே வரும் ஏற்கலாம் நட்பு”

வெளிநாடு செல்ல வேண்டுமா? சுவாமி இந்த டிப்ளமோ வெளிநாட்டில்  (US) தான் படித்து கொண்டிருக்கிறார். சரி சரி தொடரட்டும். 

வெளிநாட்டு யோகம் உண்டு. 

“படிப்பிலே பாங்கான வெற்றி 

பக்குவமாய் வந்து சேரும் 

பட்டம் பெறும் யோகம் 

உண்டுண்டு ஆனாலும் 

அடிமை பணி கொள் 

முப்பான மூன்று பின்பு 

சுயமாகலாம் சொல்”

படிப்பில் வெற்றி வந்து விடும். பட்டம் பெற்று விடுவார். சில காலம்  ஏதேனும் மருத்துவ மனையில் அடிமைத் தொண்டாக jobல் இருக்க வேண்டும். 33 வயது வரை சுயதொழிலோ மருத்துவமனையோ  வேண்டாம். சரிங்க சுவாமி. தற்போது அவருக்கு 29 வயதாகிறது. 

“முப்பானம் ஒட்டி இவனுக்கு 

முறையான திருமணமே 

காந்தர்வம் ஆகா 

உறவிலது மங்கையில்லை 

நங்கையில்லை 

பிற வகையில் வருமே”

30 வயது ஒட்டி இவருக்கு முறையான நிச்சயித்த திருமணம் நடக்கும். காந்தர்வம் என்று சொல்லக் கூடிய காதல் திருமணம் கிடையாது. உறவில் பெண் கிடையாது. ஆம் சுவாமி இருந்தாலும் ஆகாது. பிற வகையில் தேட வேண்டும். எனவே நன்கு ஜாதகம் பார்த்து பொறுமையாக ஒரு இடத்திற்கு 
நான்கு இடம் பார்த்து செய்ய வேண்டும். தற்போது 29 வயது நடப்பதால் 30  வயது ஒட்டி என்று வருவதால் இப்போதே அதற்குரிய ஆயத்தப் பணிகளில்  ஈடுபடுவது நலம் என்றேன். அவர்களும் அதைத்தான் செய்கிறோம் 

“முருகனது ஆசியது 

முழுமையாய் உண்டு 

நல்லவன்தான் 

பொல்லானில்லையே”

முருகனது ஆசி உண்டு என்கிறாறே முருகப் பெருமான் இவருக்கு  முருகனைப் பிடிக்குமா? சுவாமி சஷ்டி விரதம் இருந்து வருகிறார் முருகனது தீவிர பக்தர் என்றார்கள். முருக பக்தர்கள் நல்லவர்கள் தானே எப்படி பொல்லாதவனாக முடியும் என்றேன். 

“விடைகழி கந்தனை 

குராவடிக் குமரனை 

அபிடேக ஆராதனை 

செய்து ஆடை கொடுத்து 

அர்ச்சித்து வணங்கிய பின் 

அன்புடனே அவயாம்பிகையை 

சேவி அங்கு ஒருவள் 

செந்நிற ஆடைதாங்கி வருவர் 

ஆசி வாங்கி பின் 

அறுபத்தியாரு பேர்க்கு 

அண்ணாமலை தனிலே 

மகேஸ்வர பூஜை செய் 

அன்னையும் தந்தையும் 

அபிராமி தரிசனம் 

காலசங்கார மூர்த்தியையும் 

கச்சிதமாய் சேவிக்க வேனிமே”

 பின்பு பரிகாரம் உரைத்தார் முருகப் பெருமான். திருவிடைக் கழியில் அபிசேக பூஜையும், மயிலாடுதுறை அவயாம்பிகைக்கு அர்ச்சனையும், 66 பேருக்கு திருவண்ணாமலையில் மகேஸ்வர பூஜையும், தாய், தந்தை இருவரும் திருக்கடையூர் தரிசனமும் செய்ய வேண்டும் என்றார் முருகப் பெருமான். இதை செய்தால் எல்லா நலமும் வரும் என்றார். சொன்ன உடனேயே இவரது தாய், தந்தையர் தனது 60ஆம் கல்யாணத்தை 

திருக்கடையூரில் நடத்த திட்டமிட்டுருப்பதாகவும் அதற்கு முருகனது ஆசி கிடைத்து விட்டதாகவும் குதூகலித்தார்கள். இவர்களை அழைத்து வந்தவர் பெருமை தாங்காமல் ஐயா தங்களால் தான் இருதய ஆபரேஷன் மூலம் உயிர் பிழைத்தேன் என்று கண்ணீர் விட்டார். இவரைப் பற்றி ஏற்கனவே 
கன்னிமார் பூஜை செய்ததை எழுதியிருக்கிறேன். வியப்பில் ஆழ்ந்து  விழுந்து வணங்கி விடை பெறும் நேரத்தில் பெரியவர் ஐயா எனக்கு 70 வயதாகிறது எனக்கும் முருகன் நாடி படிக்க வேண்டும் என்றார். 

சுவடியைப் பிரித்தேன் அதிர்ந்துப் போனேன். 

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 50 - ஆனந்தமே ஆனந்தமே ஆசி ஆசி -  https://tut-temples.blogspot.com/2021/11/50.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 48 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/09/48.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 47 - ஓம் அகிலத்தின் அருளே போற்றி - https://tut-temples.blogspot.com/2021/08/47.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 46 - https://tut-temples.blogspot.com/2021/08/46.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 45- அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - மகேஸ்வர பூசை - https://tut-temples.blogspot.com/2021/07/45.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/06/44.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/41.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html



No comments:

Post a Comment