அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருநாதர் ஸ்ரீ அகத்திய மகரிஷி
குருபூஜை நாளை கொண்டாட உள்ளோம்.சில தலங்களில் இன்று முதல் கொண்டாட்ட நிகழ்வுகளை ஆரம்பிக்கின்றார்கள். நாளை வியாழக்கிழமை
அன்று வழிபாட்டில் நம் குருநாதரிடம் லோக ஷேமத்திற்காக விண்ணப்பம் செய்வோம்.
இதனையொட்டி தினமும் பல தலங்களில் இருந்து அழைப்பிதழ்களை பகிர்ந்து
வருகின்றோம்.அந்த வரிசையில் இன்று நாம் அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர் மகா ஆயில்ய இரண்டாம் ஆண்டு திருவிழா பற்றி காண இருக்கின்றோம்.
குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் நாமம் சொல்லவும், குருநாதர் தரிசனம் செய்யவும் புண்ணியம் இருந்தால் தான் முடியும். ஒவ்வொரு தலத்திலும் குருநாதர் தரிசனம் பெறுவது அவ்வளவு சுலபல்ல. கூடுவாஞ்சேரியில் நாம் இருந்த போது அங்கே குருநாதர் தரிசனம் எளிதில் மாமரத்து விநாயகர் கோயிலில் பெற்றோம். பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் தரிசனம் பெற பல ஆண்டுகளாயிற்று. நம் தேடல் உள்ள தேனீக்கள் குழு உழவாரப்பணி மூலம் பனப்பாக்கம் ஸ்ரீ மாயூர நாதர் ஆலயத்தில் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் தரிசனம் பெற்றோம். இதே போன்று தான் தூசி கிராமத்தில் உள்ள நம்
குருநாதர் தரிசனமும். பல ஆண்டுகள் காத்திருப்பில் 7
ஆம் ஆண்டு தெய்வீக விவாஹ விழா - 11.09.2020 அன்று நடைபெற்றது. இதில்
கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்து குருநாதர் தரிசனம் பெற்றோம். சில நேரங்களில் தல யாத்திரைகளில் நம் குருநாதர் தரிசனம் திட்டமிடாமல் பெறுவது உண்டு. அது போன்று தான் சென்ற வாரம் தென்காசி இலஞ்சி ஸ்ரீ அகஸ்தியர் பாத தரிசனமும், அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர் தரிசனமும் பெற்றோம். இனி நாம் பெற்ற அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர் தரிசன அனுபவத்தை இங்கே தொடர விரும்புகின்றோம்.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே திருப்புடைமருதூர் எனும் ஊரில், தாமிரபரணி நதிக்கரை படித்துறையில் அகத்திய பெருமான் வழிபாடு நடைபெற்றுவருவதாக நமக்கு கூறினார்கள். அதிலும் தரிசன நிலை கண்டு நாம் இன்புற்றோம். எப்போது காண்போம் என்று நெஞ்சார நினைத்து கொண்டிருந்தோம். ஆம். அந்த நாளும் வந்தது.
சென்ற வாரம் சனிகிழமை அன்று அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர் தரிசனம் பெற்றோம். முக்கூடலிலிருந்து அத்தாளநல்லூர் செல்லும் வழியில் ஒரு வாழைத்தோப்பு வரும். அங்கேயே கோயில் பற்றிய அறிவிப்பு பலகை இருக்கும். இங்கே இருந்து உள்ளே சென்றால் நாம் குருநாதர் தரிசனம் பெறலாம்.
இந்தப் பாதையின் வழியே உள்ளே செல்ல வேண்டும். இது ஒரு புது அனுபவமாக இருந்தது. ஆம். உள்ளே செல்ல செல்ல, வாழை மரங்களை காண முடிந்தது.
மனதுள் பல சிந்தனை ஓடியது. தாமிரபரணி நதிக்கரையில் ஐயன் தரிசனம் பெற உள்ளோம். எப்படி இருக்கும் என்று பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்க, இதோ..குருநாதர் தரிசனம் பெற நெருங்கி விட்டோம்.
சற்று தொலைவில் இருந்து நாம் கண்ட காட்சி. இங்கே நம் குருநாதரை குலதெய்வமாக மக்கள் வழிபட்டு வருகின்றார்கள். மிக பெரியமரம், சுற்றியும் வாழைத்தோப்பு, தாமிரபரணி நதிக்கரை, ஞான வடிவில் நம் குருநாதர் ..வேறென்ன வேண்டும் என்று தோன்றியது. குருநாதரே..நீர் போதும். நின் அருள் போதும்
அன்றைய தினம் பௌர்ணமி வழிபாட்டில் குருநாதர் தரிசனம் பெற்றோம். மனம் லயித்து. அங்கே அமர்ந்து குருநாதரைப் போற்றி துதித்தோம். வழிபாடு முடிந்து அன்னசேவை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாம் பிரார்த்தனை நிறைவு செய்து, அன்னம் உண்டோம். அத்தாளநல்லூர் ஊர் மக்கள் இங்கே வந்து வழிபாடு செய்து வருவது மிக மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் நமக்கு இறை பிரசாதம் கொடுத்தார்கள். நாம் நாளை நடைபெற உள்ள மகா ஆயில்ய வழிபாட்டிற்கு நம் தளம் சார்பில் பூஜை பொருட்களை கொடுத்தோம்.
மீண்டும் மீண்டும் அங்கேயே சுற்றிக் கொண்டு இருந்தோம்.
இங்கே இன்று மதியம் முதல் ஸ்ரீ அகத்தியர் மகா ஆயில்ய இரண்டாம் ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது. அழைப்பிதழை கீழே பகிர்கின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெறும்படி அழைக்கின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html
No comments:
Post a Comment