அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தினமும் மார்கழி ஆயில்ய வழிபாட்டிற்கான அழைப்பிதழ் கண்டு வருகின்றோம். ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா, பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 , பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021, சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 , பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) , மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021, தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 23.12.2021,குருவடி சரணம் - தென்காசி இலஞ்சி ஸ்ரீ அகஸ்தியர் பாத குருபூஜை - 23.12.2021, அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர் மகா ஆயில்ய இரண்டாம் ஆண்டு திருவிழா, செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை - மார்கழி ஆயில்ய வழிபாடு என பதிவுகளை பார்த்து வருகின்றோம். இந்த வரிசையில் இன்றைய பதிவில் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் - ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் பற்றி இங்கே காண இருக்கின்றோம்.
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் ஒவ்வொன்றும் வெறும் கற்களால்
கட்டப்பட்டதல்ல. நம் முப்பாட்டனின் கலாசாரத்தாலும், நால்வர் பெருமக்களின்
ஆசியாலும் கட்டப்பட்டது. இவை நம் தமிழின் பெருமை பேசும் வாழ்வியல்
கூடங்கள். பக்தியை பறைசாற்றும் உயிர் ஆலயங்கள். நாம் தலத்தில் பாடல் பெற்ற
தலங்கள் என்று ஒரு தொடர் அளித்து வருகின்றோம். சும்மா..ஏனோ தானோ என்று தான்
நாமும் முதலில் நினைத்தோம். ஆனால் ஒவ்வொரு பாடல் பெற்ற தல தரிசனமும் நம்
தலை எழுத்தை மாற்றும் சக்தி படைத்தவை என்று நாம் கருதுகின்றோம். ஒவ்வொரு தல
பயணமும் நமக்கு இன்னும் வாழ்வியலை ஊட்டுகின்றது. தல யாத்திரைக்கு சென்றால்
அவசரம் காட்டாது மிக மிக பொறுமையாக தரிசனம் செய்து வரவும். தலங்களின்
எண்ணிக்கையில் தரிசனம் செய்வதில் ஒன்றுமே பயனில்லை. ஒரு விடுமுறை தினத்தில்
ஓரே ஒரு தலம் தரிசனம் செய்தாலும் அது நமக்கு ஓராண்டு முழுதும் தெம்பை
தரும்.
மாதம் ஒரு பாடல் பெற்ற தலத்திற்கு என்று திட்டமிடுங்கள். இல்லையேல்
குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு முறையாவது இது போன்ற பாடல் பெற்ற
கோயில்களுக்கு சென்று வாருங்கள். இன்னும் திருநெடுங்களம் கோயிலுக்கு நாம்
சென்று வந்தது ஆச்சர்யமாக உள்ளது. வாகன வசதி இல்லாத வழித்தடத்தில் எப்படியோ
சென்று சேர்ந்தோம். கோயில் திறந்ததும் ஒவ்வொரு சந்நிதியாக சென்று
தரிசித்து, அங்கு பெருமக்கள் பாடிய பாடலை பாடி வழிபட்டோம். அப்போது தான்
நமக்கு இந்த தலம் திருப்புகழ் தலம் என்றும் தெரிந்தது. அங்கே கல்வெட்டில்
இருந்த பதிகங்களை படித்து தான் வந்தோம். இது போல் எத்தனையோ தலங்கள் உள்ளன.
ஒவ்வொரு தலத்திலும் பொறுமையாக தரிசனம் செய்து, நெய் விளக்கேற்றி, பதிகம்
படித்து தரிசித்து வாருங்கள். நாம் சொல்ல வருகின்ற செய்தி உங்களுக்கு
புரியும். இனி கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் தரிசனம் தான்.
கும்பேசுவரர்
கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர்,
அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்
மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 1300 ஆண்டுகள்
பழமையானது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத்
தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள
பெருமையினையும் இக்கோயில் பெற்றுள்ளது.
முதலில் அழைப்பிதழை காணுங்கள்.
இந்தக் கோயில் பற்றிய புராணக்கதைச் செய்திகளைக் காளமேகப் புலவர் ஒரு வெண்பாவில் பாடியுள்ளார்.
திருக்குடந் தையாதி கும்பேசர் செந்தா
மரைக்குளங் கங்கை மகங்கா – விரிக்கரையின்
ஓரங்கீழ்க் கோட்டங்கா ரோணமங்கை நாயகியார்
சாரங்க பாணி தலம்
இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் - திருக்குடந்தை ஆதி கும்பேசர் செந்தாமரைக்குளம் கங்கை மகம் காவிரிக்கரையின் ஓரம் கீழ்க்கோட்டம் காரோணமங்கை நாயகியார் சாரங்கபாணி தலம் . (காரோணம் = மந்திர மேடை, மந்திர பீடம்)
இக்கோயிலின் உட்பிரகார வாயிலின் நிலைக்காலில் காணப்படுகின்ற செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்திய (விக்கிரம ஆண்டு ஆடி மாதம் 22ஆம் நாள் எழுதப்பட்ட) கல்வெட்டு கூறும் செய்தி பின்வருமாறு அமையும்:
கும்பகோணம்-காரைக்கால் நெடுஞ்சாலையில், திருநாகேஸ்வரம்- திருநீலக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகாமையில் உள்ள சிறுகிராமம் எலந்துறை. செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் திருவிளந்துறை என அழைக்கப்பெற்றது. இவ்வூரின் கிழக்கே அமைந்த ஊர் திருமலைராஜபுரம். திருமலைராஜபுரம் அந்தணர்கள் கிராமமாகவும், எலந்துறை பௌத்தர்கள் கிராமமாகவும் திகழ்ந்தன. திருமலைராஜபுரத்திற்குப் புதிய பாசன வாய்க்கால் வெட்டியமையால் எலந்துறையிலிருந்த புத்தர் கோயிலின் நிலத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய திருமலைராஜபுரத்து ஊரார் தங்கள் ஊரில் உரிய அளவு நிலத்தை புத்தர் கோயிலுக்காக அளித்ததை அறியமுடிகிறது. கி.பி.1580இல் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள எலந்துறையில புத்தர் கோயில் இருந்ததை இதன்மூலம் அறியமுடிகிறது.
கும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் சப்தஸ்தான விழாவில் தொடர்புடைய தலங்கள் கீழ்க்கண்டவையாகும். இவ்விழாவிற்கான பழைய பல்லக்கு முற்றிலும் பழுதடைந்த நிலையில் இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்த விழா தற்போது நடைபெறுகிறது. இதற்கான வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது. 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது.
கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்
திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை
தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், தாராசுரம்
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், திருவலஞ்சுழி
கும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர்
மேலக்காவேரி கைலாசநாதர் கோயில், மேலக்காவேரி
சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில், சுவாமிமலை

No comments:
Post a Comment