அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அகத்தியர்
அன்பின் ஆழம் மூலம் நமக்கு கருணை மழை பொழிந்து வரும் சித்தர். அகத்தியரை வழிபட நாம்
எத்தனை பிறவிகள் எடுத்து வந்தோம் என்று நமக்குத் தெரியாது, புல்லாகி பூடாகி புழுவாகி மரமாய்
இதோ
இந்த மனித பிறவியில் நுழைந்திருக்கும் நாம் குரு வழிபாடு, சித்தர்கள் பூஜை
என்று செய்து வருகின்றோம். குருவருளால் நம் தேடல் உள்ள தேனீக்கள் குழு மூலமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை
கூடுவாஞ்சேரியில் உள்ள அகத்தியர் மகரிஷிக்கு செய்து வருகின்றோம். இதற்கு அருளுதவி,பொருளுதவி செய்து வரும் அனைத்து அன்பர்களுக்கும் இங்கே நன்றி கூறி மகிழ்கின்றோம்.
நாளை வியாழக்கிழமை 23.12.2021 ஆயில்யம் மகா குருபூஜை.இந்த குரு பூஜையை ஒட்டி, உலகெங்கும் உள்ள அகத்தியர் ஆலயங்களில் வழிபாடு, பூஜை என நடைபெற உள்ளது. நமக்குக் கிடைத்த தகவல்களை இங்கே தொகுத்து ஒருங்கே தர முயற்சிக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் அருகே நடைபெறும் அகத்தியர் பூசையில் கலந்து கொண்டு சித்தர் பெருமக்களின் அருள் பெற வேண்டுகின்றோம்.இந்த ஒரே பதிவில் வருகின்ற மார்கழி ஆயில்ய பூசை தகவல்களை இங்கே தருகின்றோம். இவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வசதியான நேரம் கிடைக்கும் போது அப்படியே தரிசனம் செய்து கொள்ள ஏதுவாக இந்தப் பதிவு உங்களுக்கு பயன்படும் என்று நாம் நம்புகின்றோம்.
என்னென்னெ கோயில்கள் என்று ஒரு பட்டியல் தருகின்றோம், அடுத்து கோயிலோடு சேர்ந்து ஆயில்ய பூசையின் விபரங்களை தருகின்றோம்.
1. பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்
2. பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்ய நாயகி உடனாய ஸ்ரீ மாயூரநாத ஆலயம்
3. கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் - பாடல் பெற்ற தலமாக
4. திண்டுக்கல் - அகஸ்தியர்புரம் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி விழா - மலைக்கோயில்
5. பண்ருட்டி கொஞ்சிக்குப்பம் லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி பெருவிழா அழைப்பிதழ்
6. பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம்
7. கல்லாறு ஸ்ரீ அகஸ்தியர் ஞானபீடம் 19 ஆம் ஆண்டு குரு பூஜை விழா
8. தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி
9. பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா
10. செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை - மார்கழி ஆயில்ய வழிபாடு
11. அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர் மகா ஆயில்ய இரண்டாம் ஆண்டு திருவிழா
12. குருவடி சரணம் - தென்காசி இலஞ்சி ஸ்ரீ அகஸ்தியர் பாத குருபூஜை - 23.12.2021
13. மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021
14. சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021
15. ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா
16. கிளார் - அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் - மார்கழி ஆயில்யம் - 23.12.2021
17. அக்னி தீர்த்தக்கரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் மார்கழி ஆயில்யம் - 23.12.2021
18. கோபி மொடச்சூர் அகத்தியர் குரு பூஜை விழா
19.பூண்டி மகான் வழிநடத்தும் ஸ்ரீ அகத்தியர் பெருமான் குருபூஜை
20. பொகளூர் ஸ்ரீ அகஸ்திய பெருமானுக்கு குரு பூஜை விழா
21. ஸ்ரீ மஹா காலபைரவ ஞான பீடம் - மகரிஷி ஸ்ரீ அகத்திய குருதேவருக்கு 326 ஆம் ஆண்டு குரு பூஜை விழா
22. அருள்மிகு செந்தூர் அழகன் திருக்கோயில் - மகான் ஸ்ரீ அகஸ்தியர் குருபூஜை விழா
23. செந்தூர் அகத்தியர் கோட்டம் - ஸ்ரீ அகஸ்தியர் மஹா ஆயில்யம் வழிபாடு
24. கீழக்கரை ஸ்ரீ அகஸ்தியர் வருஷாபிஷேக பெருவிழா அழைப்பிதழ்
25. கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி
1. பஞ்சட்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில்
அகத்திய முனிவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். (இஷ்டி என்றால் யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி) அதுவே இத்தலப் பெயரானது. அந்த யாகத்துக்கு அசுர சக்திகளும், தீயசக்திகளும் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய முனிவர் தேவியைத் துதித்து காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன் வைத்து மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் எரித்துச் சாம்பலாக்கினாள். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும் அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மஹா யந்திரத்தை தமது கையாலே பிரதிஷ்டை செய்தார். அம்பாளை இப்படி திரிநேத்ரதாரணியாக அதாவது முக்கண்ணுடையாளாக இந்தத் தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.
முதலில் பஞ்சட்டி அகத்தீஸ்வரர் தீருக்கோயில் குறிப்புகளும், பூசை விபரங்களும். இத்தலத்து ஈசன், அகத்தீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கின்றார். அகத்தியர் இந்தத் தலத்துக்கு வருவதற்கு முன்பே இங்கு ஈஸ்வரன் லிங்க வடிவில் கோயில் கொண்டிருந்தாராம். அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் அகத்தீஸ்வரர் என்றே ஈஸ்வரன் அழைக்கப்படலானார். லிங்கத்தின் இடதுபாகத்தில் அம்பாள் மனோன்மணி சக்தியை ஒரு ரூபமான தோற்றத்தில் வைத்து சிவசக்தி சொரூபமாக அகத்திய முனிவர் பூஜித்துள்ளார்.
அகத்தியரால் செய்யப்பட்ட ஐந்து யாகங்களில் அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைப்பதாகவும், உயர் பதவிகள் தேடி வரும் என்றும், பிறவிப்பயனைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இத்தனை சிறப்புகளைக் கொண்ட கோயியிலில் நடைபெற உள்ள குரு பூஜை அழைப்பு கீழே.
2. திண்டுக்கல் - அகஸ்தியர்புரம் அகத்தியர் ஜெயந்தி விழா
3 பண்ருட்டி கொஞ்சிக்குப்பம் லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி பெருவிழா அழைப்பிதழ்
8.பூண்டி மகான் வழிநடத்தும் ஸ்ரீ அகத்தியர் பெருமான் குருபூஜை
9. பொகளூர் ஸ்ரீ அகஸ்திய பெருமானுக்கு குரு பூஜை விழா
10. ஸ்ரீ மஹா காலபைரவ ஞான பீடம் - மகரிஷி ஸ்ரீ அகத்திய குருதேவருக்கு 326 ஆம் ஆண்டு குரு பூஜை விழா
11. அருள்மிகு செந்தூர் அழகன் திருக்கோயில் - மகான் ஸ்ரீ அகஸ்தியர் குருபூஜை விழா
No comments:
Post a Comment