அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
மார்கழி மாத வழிபாட்டில் அனைவரும் மனம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம். இதில் மார்கழி மாத கொண்டாட்டமாக குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமானின் பூஜை உலகம் முழுதும் அடியார் பெருமக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு உள்ளது. அந்த நாள் இந்த வருடம் என்ற தொகுப்பில் நாம் ஆலய தரிசனம் செய்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவை தொடர விரும்புகின்றோம்.
அகத்தியர் பூசையின் போது இந்த பாடல் கேட்டிருக்கின்றோம். நம் தளத்திலும் பதிவிட வேண்டும் என்று விரும்பி மீண்டும் ஒரு முறை உத்திரவு பெற்று இங்கே தருகின்றோம். இணைய வெளியில் தேடிய போது நமக்கு கிடைத்தது. கொங்கணர் கடைக்காண்டத்தில் இந்தப் பாடல் வருகின்றது. இதோ அந்தப் பாடல்...
அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேடமீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக்கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியார் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
-கொங்கணார் கடைக்காண்டம்.
ஆனால் உச்சரிக்கும் போது அகத்திய மகரிஷி நம என்றென்றோது என்று கூறுவதாக கேட்டுள்ளோம். சித்தர் பாடல் கிடைத்தால் நாம் எந்த செய்தி சரி என்று பின்வரும் நாட்களில் உறுதி செய்கின்றோம்.சரி...மகான்களை பூசித்தால் மனம் மகிழும், ஒடுங்கும்,ஓங்கும். ஒன்பது கோடி ஞானிகளுக்கு தலைவரும் கும்பமுனி என்றும் குருமுனி என்றும் பட்டம் பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூசித்துதான் ஒன்பது கோடி மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள். அகத்தியர் என்ற பெயரை உச்சரிக்கவே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எந்த பிறப்பில் நாம் செய்த புண்ணியமோ நம்மை சித்தர் மார்க்கத்தில் ஈடுபட வைத்துள்ளது. ஞாலம் சிறக்க ஞானிகளை போற்றுங்கள். போற்றினால் நமது வினை அகலுமப்பா..சரி..இந்தப் பதிவில் அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
சரி.. அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு என்று தலைப்பிட்டு
விட்டு, அதனை சொல்லாமல் இருக்க முடியுமா என்ன? ஜீவ நாடி அற்புதங்கள்
தொடரிலும் வைக்கலாம். மார்கழி மாதம் என்றாலே தினசரி ஆலய வழிபாடு தான்,
அதில் நம் குருநாதர்களின் குரு பூசையும் சேர்ந்து கொள்ளும். ஆம்..மார்கழி
ஆயில்யத்தில் ஸ்ரீ அகத்தியரின் குரு பூசையும், மார்கழி ரோஹிணியில் ஸ்ரீ
பிருகு மகரிஷியின் குரு பூசையும் அடியார் பெருமக்களால் சிறப்பாக
கொண்டாடப்பட்டு வருகின்றது. நம் தளம் சார்பில் கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர்
பூசையில் மார்கழி ஆயில்யத்தில் குருபூசை நம்மால் இயன்ற அளவில் செய்து
வருகின்றோம். இது ஒரு புறமிருக்கட்டும்.
அந்த நாள் இந்த வருடம் தொகுப்பு நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இன்னும்
ஓதிமலை அனுபவம் நம்மை இறையை ஓத வைக்கின்றது.அடுத்த யாத்திரையாக கோடகநல்லூர் வழிபாடும் மிக மிக சிறப்பாக குருவருளால் நடைபெற்றது. அடுத்து பாபநாச ஸ்நானம் மற்றும் தரிசனம். நாங்கள் எல்லாம் செய்த பாவத்தை வருடம்
ஒருமுறையேனும் போக்க தான் இந்த அருள்நிலையா என்று ஏங்க வைக்கும் பாபநாச
ஸ்நானம் மற்றும் தரிசனம் வருடத்திற்கு ஒரு முறை வாய்க்கிறது. பெயரளவில்
கேட்ட தாமிரபரணியை ,எம் உள்ளத்தில் பாய செய்கின்றது பாபநாச ஸ்நானம் மற்றும்
தரிசனம்.
இது போல் அந்த நாள் இந்த வருடம் தொகுப்பு நம்மை
அகத்தியத்தில் மூழ்கி முத்தெடுக்க வைக்கின்றது. மாதா மாதம் நாம் யாத்திரை
செல்வதில்லை. குறிப்பிட்ட சில நாட்களாக அந்த நாள் இந்த வருடம் மட்டும்
தவறாது யாத்திரையில் சித்தன் அருளால் செய்து வருகின்றோம்.
அனைத்தும் ஹனுமத்தாஸன் ஐயா அவர்களின் அருளாலே என்று நமக்கு தோன்றுகின்றது. இந்த உயிர்
உய்ய இன்றும் ஆசிகளும், வழிகாட்டலும் தருகின்ற தெய்வத்திரு.ஹனுமத்தாஸன்
பாதம் சரணம் அடைகின்றோம். மேலும் அவரின் ஆசி வேண்டி நிற்கின்றோம்.
பாபநாச ஸ்நானம் என்று நாம் பேசும் கண்டு பிடித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
பாபநாச ஸ்நானம்:-
தாமிரபரணி
புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில்
பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில்
தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள்.
எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை
கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே
இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து
"அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள்
மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2021 முதல் 13/01/2022க்குள்
வருகிறது. எனவே
வாய்ப்புள்ள அன்பர்கள் இந்த மார்கழி மாதத்தில் பாபநாச ஸ்நானம் செய்து
அம்மையப்பர் தரிசனம் பெற்று பிறப்பற்ற நிலை பெறும்படி வேண்டுகின்றோம். இதோ பாபநாசம் பற்றி சில குறிப்புகள் தருகின்றோம்.
தமிழ்
நாட்டைப் பொறுத்தவரை தமிழகத்தை உருவாக்கியவர் நம் குருநாதர் எனலாம்.
தமிழகத்தின் இரண்டு முக்கிய ஆறுகளான காவிரி, தாமிரபரணி இரண்டும்
அகத்தியரின் அருளால் கிடைக்கப்பெற்றவை. இந்த ஆற்றின் நதிக்கரையில்
வாழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள். இன்று நாம் நதிக்கரை விட்டு நரக வாழ்க்கை
வாழ்ந்து வருகின்றோம். இருந்தாலும் நம்மை நம் குருநாதர் பல்வேறு வழிகளில்
வழிநடத்தி வருகின்றார். நம் குருவின் பாதம் பட்ட மண்ணில் நாம் வாழ்கின்றோம்
என்பதே பெரும் பேறு. அகத்திய அடியார்கள் ஒவ்வொருவரும் நம் குருநாதரின்
வாக்கை மீண்டும் மீண்டும் கேட்டு ,அதன் வழி நடந்திட வேண்டும். இன்றைய
பதிவில் நாம் இந்திரகீழ ஷேத்திர இறைவனை காண இருக்கின்றோம். இந்திரகீழ
ஷேத்திரம் எங்குள்ளது என்று கேட்கின்றீர்களா?
திருநெல்வேலியிலிருந்து
சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பாபநாசம். இந்த கோயில் இந்திரகீழ
ஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது. திராவிடக் கட்டிடக்கலையில்
கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் இறைவன் பாபநாசநாதர், இறைவி உலகம்மை ஆவர்.
கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக்
கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சாளுக்கிய பாண்டியர்களால்
கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும்
நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் காலக்
கலைப்பாணியிலான சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன.
கோபுர
தரிசனம் கோடி புண்ணியம் பாபநாசநாதர் கோயில் கோபுரம் பார்க்கும் போது
தோன்றுகின்றது. இன்னும் சற்று தொலைவில் இருந்து தரிசிப்போமா?
கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே
தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரை பொதிகை
மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமண
கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண
சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன்
இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய
கோலத்தில் உள்ளனர்.
அப்படியே கோயிலுக்கு வெளியே பாயும் தாமிரபரணி இருக்கின்ற அழகு நம்மை இன்னும் கட்டிபோடுகின்றது.
பொதிகை
மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு
அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி
நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.
வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின்
கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில்
நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
என்ன அன்பர்களே..காட்சி படத்தை பார்க்கும் போது நேரில் சென்று ஸ்நானம்
செய்ய வேண்டும் என்று தோன்றுகின்றது அல்லவா? நம் விருப்பமும் இந்த ஆண்டில் நிறைவேறியது. ஆம். காவேரி ஸ்நானமும், பாபநாசம் ஸ்நானமும் இந்த ஆண்டில் குருவருளால் செய்துள்ளோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீள்பதிவாக:-
நாராயணா என்னும் நாமம் - குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப் பணி செய்ய வாங்க! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_16.html
மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும் - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_15.html
மார்கழி சிறப்பு பதிவு - நவ கைலாய திருத்தலங்கள் தரிசிக்கலாமே - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_22.html
வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்! - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_61.html
மார்கழி சிறப்பு பதிவு - அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_31.html
மாதங்களில் நான் மார்கழி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_21.html
ஆகாயத்தில் ஒரு ஆலயம் - ஸ்ரீ பர்வத மலை கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_16.html
யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html
பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_87.html
ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html
இந்திரகீழ ஷேத்திர இறைவா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post.html
அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html
ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html
கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html
குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html
ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html
ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html
வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html
நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html
சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html
வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html
No comments:
Post a Comment