"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, December 9, 2023

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் அருளால் வழக்கம் போல் நம் தளத்தின் சேவைகள் நடைபெற்று வருகின்றது. சென்ற வாரம் இதே நாளில் ஓதியப்பர் தரிசனம் அனைவரும் பெற்றோம். ஒவ்வொரு யாத்திரையிலும் குருநாதர் அருளால் சிறப்பாக தரிசனம் பெற்று வருகின்றோம். சென்னை புயல் பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கு நலம் பெற வேண்டி, மாலை கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றோம். மேலும் நம் தளம் சார்பில் கீழ்க்கண்ட சேவையில் இணைய வாய்ப்பு கிடைத்தது.

- செங்கல்பட்டு பூங்காவனம் ஐயா கஞ்சி ஊற்றும் சேவை 

- அம்மு நேச்சுரல்ஸ் அவர்களின் மூலம் சென்னை சேவை 

- எம் அலுவலக பணி அன்பர்களின் மூலம் சென்னை சேவை 

இவற்றுடன் நம் குருநாதரின் மார்கழி ஆயில்ய குருபூஜை வருகின்றது. வழக்கமாக பல தலங்களுக்கு நம் குழு சார்பில் சிறு தொகை சேர்ப்பது நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டிலும் இந்த சேவை ஓதிமலை தலத்தில் வீற்றிருக்கும் நம் குருநாதருக்கு வழிபாடு மேற்கொள்ளும் பொருட்டு பணிக்கப்பட்டு உள்ளோம்.அதே போன்று சென்ற ஞாயிறு வழிபாடு அன்று ஒரு பிரார்த்தனையும் நம் குழு சார்பில் பதிவின் தலைப்பையொட்டி வைத்துள்ளோம். 2024 ஆம் ஆண்டில் இது நிறைவேறும் என்று நாம் விரும்புகின்றோம். மேலும் திருச்செந்தூர் திருக்கண்ணபுரம் ஸ்ரீ அகத்தியர் மகா ஆயில்யம் வழிபாட்டிற்கும் சிறு தொகை அனுப்பி உள்ளோம். மேலும் பல ஆலயங்களுக்கும், அன்றைய தினம் அன்னசேவைக்கும் சேர்க்க வேண்டி, குருவிடம் பணிந்து இன்று அனைவரையும் திருப்புகழ் அமிர்தம் பருக அழைக்கின்றோம். திருப்புகழ் ஒவ்வொன்றும் அமிர்தம் என்றாலும் இதில் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் நமக்கு அருளிய மூன்று முத்தான திருப்புகழ் படித்து முருகன் அருள் பெறுவோமாக!

அவ்வப்போது நம் தளத்தில் திருப்புகழ் தலங்கள் தரிசனம் பெற்று வருகின்றோம். மேலும் நம் தளத்தில் நடைபெறும் கூட்டு வழிபாட்டில் முருகவேள் பன்னிரு திருமுறை மூலமாக திருப்புகழ் படிக்க வாய்ப்பு கிடைத்து. மீண்டும் மாலை வழிபாட்டில் திருப்புகழ் படிக்க முருகப் பெருமானிடம் வேண்டுகின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம்மில் தோன்றுவது இது தான். இது மட்டும் தான்.


முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!




இந்த நிலையில் நமக்கு சில திருப்புகழ் பாடல்கள் மிக மிக நெருக்கமாக அமைகின்றது. அவற்றை மீண்டும் படித்து அமுதம் பருகுவோமாக!

திருப்புகழ் 170 நாத விந்து  (பழநி)


தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

......... பாடல் .........

நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

இந்த திருப்புகழ் மதுரை பசுமலை அகத்தியர் கோயிலில் நாம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.



அடுத்து  அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கில் அடியார் ஒருவர் பாடிய திருப்புகழ் படிக்க உள்ளோம்.

குருநாதர்:- அப்பனே, ஏன் ஆடினாய்,? அப்பனே இவையே உன்னால் நிற்க முடியவில்லையே அப்பனே வாழ்க்கை எப்படியப்பா வாழ்வாய்? அப்பா. அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இப்படித்தான் மனிதன் பிறந்து விடுகின்றான். பின் வாழத்தெரியாமல் வாழந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. அப்பனே இப்பொழுது சொன்னானே , ஆடினானே இதுபோலத்தான் அப்பா. ஆடிக்கொண்டிருக்கின்றான் மனிதன். கர்மாவில் மிதந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. ஆடாமல் நிற்கவேண்டும் என்றால் அப்பனே எங்களை நிச்சயம் சரண்டதல் அதாவது எங்களை சரணடையத் தேவை இல்லை. நீங்கள் புண்ணியம் செய்து கொண்டிருந்தாலே யான் உங்களை நோக்கி வருவோம். அப்பனே (ஒரு) பாடலைப்பாடு முருகனை நோக்கி.

அடியவர்:- (முருகன் பாடலை பாட ஆரம்பித்தார் அடியவர். ஆனால் கால் ஊன்றிவிட்டு - திரு.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள - வாதினை அடர்ந்த  (பழமுதிர்ச்சோலை) என்ற பாடலை பாட ஆரம்பித்தார்.)

குருநாதர்:- அப்பனே, நிறுத்து. அப்பனே கால்களை யான் ஊனச்சொன்னேனா என்ன?

அடியவர்:- (மறுபடியும் இந்த அடியவர் குருநாதர் உத்தரவை ஏற்று ஒரு காலில் நின்று கையை தூக்கி பாட ஆரம்பித்தார். அந்த திருப்புகழ் பாடல் படித்து முருகனை உளம் உருகி தொழுது உய்யுங்கள்.

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ...... தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ...... பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று ...... தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப ...... தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து ...... திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே.


அடுத்து மீண்டும்  அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 05.09.2023 உரைத்த வாக்கில் அம்மை ஒருவருக்கு குருநாதர் அருளிய வாக்கில் நாம் அனைவரும் இந்த திருப்புகழை அனுதினமும் பாடி, முருகப் பெருமான் அருள் பெறுவோமாக!

அடியவர்:- ( அம்மை ஒருவருக்கு வாக்கு கேட்ட பொது )

குருநாதர்:- அம்மையே ஏதாவது ஒரு பாடலை பாட வேண்டும்.

அடியவர்:- ( அம்மை அவர் கந்த வடிவேலவன் அருளால் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள முத்தைத்திரு என்ற பாடலை மிக அருமையாக பாட ஆரம்பித்தார். அந்த மகிமை புகழ் பெற்ற மகத்தான பாடலை அடியவர்களுக்கு பகிர்கின்றோம். இந்தப்பாடல் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.)

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

(கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி பாடல் முடியும் வரை கேட்டார்கள். இந்த அம்மை செய்த பாக்கியம்)

குருநாதர்:- அம்மையே இவை தன் யான் சொல்லுகின்றேன் அம்மையே. யாருக்கும் சில அறிவுரைகளே இல்லை அம்மா.  அனுதினமும் அம்மையே அதாவது இல்லத்திலேயே தீபம் ஏற்றி ஒரு மண்டலம் வரை (48 நாட்கள் இந்த பாடலை) இதை உரைத்து அனைவரையும் பாடச்சொல்லிட்டு மீண்டும் வாக்குகள் கேட்கச்சொல். அதன் உள்ளே சில விசயங்கள். அனைவருமே கர்மாவில் இருக்கின்றார்கள் அம்மையே. அதனை (யான்) மாற்றி அமைக்கின்றேன் என்று நீ கூற வேண்டும். எழுந்து நில்.

அடியவர்:- (இந்த அம்மை அங்கு உள்ள அடியவர்களுடம் பின் வருமாறு உரைத்தார்கள்)  48 நாளைக்கு உங்க வீட்டில் தினமும்  தீபம் ஏற்றி, இந்த முத்தைத்திரு என்ற பாடலை பாடுங்கள். 48 நாள் முடிந்த பின் வாக்குகள் குருநாதர் ஐயாவிடம் கேளுங்கள்.

குருநாதர்:- அம்மையே நீயே பாட வேண்டும் இல்லத்தில் கூட.


அனைவரும் மூன்று திருப்புகழ் பாடல்கள் படித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். மீண்டும் மீண்டும் முருகப் பெருமானை மனதில் நினைத்து, திருப்புகழ் படித்து, பாடி மெய் உணர்வோமாக!


குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று நித்தமும் முருகப் பெருமானிடம் வேண்டிப் பணிவோம்.



திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

No comments:

Post a Comment