அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் குருவின் தாள்
பணிந்து அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்று மார்கழி ஆயில்யம் நமக்கெல்லாம் கொண்டாட்டமான நாள். நேற்றைய மார்கழி பூச
நட்சத்திர வழிபாடாக கூடுவாஞ்சேரி விநாயர் ஆலயத்தில் வள்ளலார் வழிபாடு மிக
சிறப்பாக இன்று நடைபெற்றது. நம் குழு சார்பில் இன்று இரவு ஏழு மணி கூட்டுப்
பிரார்த்தனையில் அருட்பெருஞ்சோதி அகவல் படித்து வழிபாடு செய்தோம். இதனை
மாதந்தோறும் தொடர் குருவருளை வேண்டி பணிகின்றோம். இதற்கு முந்தைய
பதிவில் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் தொகுப்பாக
பகிருந்தோம். தற்போது இன்னும் சில அழைப்பிதழ் நமக்கு கிடைத்தது. இவற்றை
இந்தப் பதிவில் தொகுப்பு 3 என்ற தலைப்பில் பகிர விரும்புகின்றோம்.இவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு வசதியான நேரம் கிடைக்கும் போது அப்படியே தரிசனம் செய்து கொள்ள
ஏதுவாக இந்தப் பதிவு உங்களுக்கு பயன்படும் என்று நாம் நம்புகின்றோம். இதுவரை கடந்த இரண்டு பதிவுகளாக ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் கண்டு வருகின்றோம்.
இது வரை 19 திருத்தலங்களின் அழைப்பிதழை பகிர்ந்துள்ளோம். இன்றைய பதிவில் இன்னும் சில தலங்களை பற்றியும் காண உள்ளோம்.
வாழ்க்கையின் நோக்கம் மெய் ஞான குருவை சந்திப்பது ஆகும். ஆம். அந்த வகையில் நாமெல்லாம் பேறு பெற்றவர்கள். மெய் ஞான குருவாக ஸ்ரீ அகஸ்தியர் பெருமானை வணங்கி வருகின்றோம். அவர் வழங்கி வருகின்ற ஞானத்தை பல்வேறு வழிகளில் பெற்று வருகின்றோம். குருவின் உபதேசங்களை மிக மிக எளிதாக கண்டு,கேட்டு வருகின்றோம். இவை அனைத்தும் நமக்கு எளிதாக கிடைக்கின்றது என்றால் நாமெல்லோரும் ஏதோ வகையில் புண்ணியம் செய்தவர்களே. இது நூற்றுக்கு நூறு உண்மை. இனி மேலும் சில இன்றைய வழிபாடு பற்றி அறிய உள்ளோம்.
1. திருவையாறு அகத்தியர் வழிபாடு - 30.12.2023
2, திருவள்ளூர், பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம்
காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வழிபாடு நடைபெறும்.
கலந்து கொள்ள தொடர்புக்கு :
திரு. D. கஜேந்திரன் அவர்கள்,
ஸ்ரீ அகத்தீஸ்வரர் சமூக சேவா அறக்கட்டளை திருப்பணிக்குழு,
பாக்கம் அருகில் ராமநாதபுரம் கிராமம்,
திருநின்றவூர்.
திருவள்ளூர் மாவட்டம்.
(திருநின்றவூரில் இருந்து 04 கி.மீ தாெலைவில் உள்ளது ஆலயம்)
மேலும் விவரங்களை நேரிலோ அல்லது கீழ்க்கண்ட அலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
CELL : 9789053053
3. திண்ணக்கோணம் ஸ்ரீ அகஸ்தியர் வழிபாடு
சிவ சிவ!
ஓம் அகத்தீசாய நம!
ஆலயம் : அருள்மிகு காேவிந்தவள்ளி சமேத பசுபதீஸ்வரர் ஆலயம்
ஊர் : திண்ணக்கோணம்
வட்டம் : முசிறி
மாவட்டம் : திருச்சி
ஆலயத் தொடர்புக்கு : 8056850650
4. கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் - ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ்
கும்பேசுவரர்
கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர்,
அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்
மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 1300 ஆண்டுகள்
பழமையானது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத்
தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள
பெருமையினையும் இக்கோயில் பெற்றுள்ளது.
முதலில் அழைப்பிதழை காணுங்கள்.
5. அனுவாவி ஸ்ரீ அகத்தியர் ஆயில்யம் நட்சத்திர குருபூஜை பெருவிழா - 30.12.2023
போக்குவரத்து வசதி
கோவை உக்கடம் டு அனுவாவி கோவில் 11A பேருந்து செல்கிறது. ஆனைகட்டி செல்லும்
வழியும் இதன் அருகில் தான் இருக்கிறது. இங்கே இருந்து மருதமலை கோவில் 10
கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
6. நாமக்கல் - ஸ்ரீ அன்னை அகத்தியர் ஞானாலயம் வழிபாடு அழைப்பிதழ்
7. கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் குரு பூஜை - 8 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 30.12.2023
கூடுவாஞ்சேரியில் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானுக்கு காலை 10 மணிக்கு மேல் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். இன்று மாலை 6 மணிக்கு வழக்கமான கூட்டு வழிபாடு செய்து, மஹா தீபாராதனை தரிசனம் பெற்று, பிரசாத வினியோகம் நடைபெறும்.
மேலும் பல ஆலயங்களில் இன்று குருநாதருக்கு வழிபாடு நடைபெற உள்ளது. இவற்றையெல்லாம் ஏற்கனவே தம் தலத்தில் பகிர்ந்து உள்ளோம். நமக்கு
கிடைத்த தகவல்களை ஒருங்கே இங்கே தொகுத்து தந்திருக்கின்றோம்.
வாய்ப்புள்ளவர்கள் அருகில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொண்டு
சித்தர்களின் அருள் பெறவும். கலந்து கொள்ள இயலாதவர்கள் அன்று காலை மாலை
நிகழ்த்தும் தினசரி வழிபாட்டில்
ஓம் ஸ்ரீம் லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடி சரணம்
என்று மனதில் நீங்கள் நினைக்கும் எண்ணிக்கையில் போற்றி செய்து, மனதார தியானிக்கவும்.
இந்தப் பதிவிற்காக பல்வேறு வழிகளில் அலைபேசி, சமூக ஊடகங்கள் வழியாக
(facebook,whatsapp ) தகவல்களை திரட்டித் தந்து உதவிய அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment