அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் குருவின் தாள் பணிந்து அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நாளைய மார்கழி ஆயில்யம் நமக்கெல்லாம் கொண்டாட்டமான நாள். இன்றைய மார்கழி பூச நட்சத்திர வழிபாடாக கூடுவாஞ்சேரி விநாயர் ஆலயத்தில் வள்ளலார் வழிபாடு மிக சிறப்பாக இன்று நடைபெற்றது. நம் குழு சார்பில் இன்று இரவு ஏழு மணி கூட்டுப் பிரார்த்தனையில் அருட்பெருஞ்சோதி அகவல் படித்து வழிபாடு செய்தோம். இதனை மாதந்தோறும் தொடர் குருவருளை வேண்டி பணிகின்றோம். இதற்கு முந்தைய பதிவில் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் தொகுப்பாக பகிருந்தோம். தற்போது இன்னும் சில அழைப்பிதழ் நமக்கு கிடைத்தது. இவற்றை இந்தப் பதிவில் தொகுப்பு 2 என்ற தலைப்பில் பகிர விரும்புகின்றோம்.இவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு வசதியான நேரம் கிடைக்கும் போது அப்படியே தரிசனம் செய்து கொள்ள
ஏதுவாக இந்தப் பதிவு உங்களுக்கு பயன்படும் என்று நாம் நம்புகின்றோம்.
1. ஓதிமலை ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் வழிபாடு
ஓதிமலையில் நாளை நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு ஒரு சேர குருவருளும், திருவருளும் பெற வேண்டுகின்றோம்.
2. தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 9 ஆம் ஆண்டு அவதார திருநாள்
தூசி
கிராமத்தில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ
அகத்திய பெருமானின் அவதார திருநாளை சிறப்பாக கொண்டாட இறையருள்
கூட்டுவித்துள்ளது. அனைவரையும் வருக! வருக!! என்று நம் தளம் சார்பில்
அழைக்கின்றோம்.
ஸ்ரீ
அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியருக்கு, முக்தி தரும் நகர் ஏழினுள்
முக்கிய நகராம் நகரேஷ { காஞ்சி என்று மகாகவி காளிதாசரால் புகழப் பெற்றதும்,
சப்த ரிஷிகள் வழிபட்டதும், ஷண்மதத்தில் (ஆறு மதம்) நான்கு மதங்கள்
சங்கமிப்பதும் சைவம் - பஞ்சப பூதத் தலங்களுள் ப்ருதி (மண்) ஸ்தலம்,
சமயக்குரவர்களால் (நால்வர்) பதிகம் பெற்ற தலமும், சாக்தம் - 108 சக்தி
பீடங்களில் நாபிஸ்தானமாக விளங்குவதும், வைணவம் - 108 திவ்ய தேசத்தில்
பதினைந்து திவ்ய தேசங்களைக் கொண்டதும், கௌமாரம் - கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய கந்தபுராணம் அரங்கேறியதும், ஸ்ரீ அகத்தியருக்கு பங்குனி உத்திர
நன்னாளில் சிவபெருமான் பார்வதி தேவியர் தமது திருமண கோலத்தில் காட்சி
அளித்ததுமாகிய இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றங்கரைக்கு அருகில்
திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை
அருளும் அபிராமி உடனுறை அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழகத்தில் சில
பகுதிகளில் மட்டுமே உள்ள ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி ஆலயம்
பழமையை பறைசாற்றும் வகையில, தொன்மைவாய்ந்த கட்டிட கலையில் முற்றிலும்
கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எட்டு திசைகளை குறிக்கும் வகையில்
எட்டு யானைகள், இந்த ஆலயத்தை தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ரிஷிகள், ஞானிகள், யோகிகள் ஆற்றங்கரையோரம் வாசம் புரிவதை கருத்தில் கொண்டு
(காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் மணிமண்டபம்
அருகில்) அமைந்து உள்ளது.
மேலும் விபரங்களுக்கு கீழே இணைத்துள்ள அழைப்பிதழை பார்க்கவும்.
3. உலக நன்மை வேண்டி மகா வேள்வி - மதுரை திருமங்கலம் - சத்ய யுக சிருஷ்டி கோவில் - 30.12.2023
கொரோனா காலத்தில் அகத்தியர் அய்யா அவர்கள் உத்தரவின்படி 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் சென்னை மற்றும் மதுரையிலும் 2023 ம் ஆண்டு மதுரையிலும் மகா சிவராத்திரி அன்று உலக நன்மைக்காக மகா வேள்வி செய்ததை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதேபோல் இந்த ஆண்டு அய்யாவின் வழிகாட்டுதலின்பேரில் 30.12.2023 சோபகிருது வருடம் மார்கழி மாதம் 14ம் தேதி ஆயில்ய நட்சத்திரம் சனிக்கிழமையன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுரை – விருதுநகர் ரோடு முக்தி நிலையம் சத்ய யுக சிருஷ்டி கோவிலில் காலை 8-00 மணி முதல் உலக நன்மைக்காக மகாவேள்வியும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் செய்ய முடிவு செய்துள்ளோம்.(தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இடம் மாற்றப்பட்டுள்ளது.)
வேள்வியில் 148 வகையான மூலிகைகள் ( 148 கிலோ) பயன்படுத்தி பெரிய அளவில் வேள்வி செய்ய உள்ளோம். இவ்வேள்விகளில் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
மகாவேள்விக்கும் அன்னதானத்திற்கும் பெரும் பொருட்செலவு ஆகும் என்பதால் அகத்தியர் அடியவர்களும் அன்புள்ளம் கொண்டவர்களும் தாராளமாக நிதியுதவி அளித்து ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம். தொகை அனுப்பும்போது ஹோமத்திற்கு என்று குறிப்பிட்டு அனுப்பவும்
விவரங்களுக்கும் நன்கொடை அனுப்புவதற்கும் கீழ் உள்ள அழைப்பிதழை பார்க்கவும்.
4. ஆன்மிக வாழ்வியல் கருத்தரங்கம் - சென்னை - 30.12.2023
ஸ்ரீ அகஸ்தியர் ஞான பீடம் சார்பில் நாளை நடைபெற உள்ள நன்னெறி - ஆன்மிக வாழ்வியல் கருத்தரங்கம் பற்றிய அழைப்பிதழை நிகழ்ச்சி நிரலோடு சமர்ப்பிக்கின்றோம்.
5. அகத்தியர் தவக்குடில், மதுராந்தகம்
அகத்தியர் பெருமானின் அருளால் நாளை 30-12-2023 அன்று நம் அகத்தியர் தவக்குடிலில் குரு நாதர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். சித்தர் மார்க்கத்தில் பயணிக்கும் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு நாதர் ஆசியுடன் கர்மாக்கள் விலகி பிறவாமை நிலையை அடையுங்கள்.
6. செந்தூர் - அகத்தியர் கோட்டம் சித்த ஆசிரமம்
நற்பவி நற்பவி நற்பவி
முருகனருள் முன்னிற்க
நாளை டிசம்பர் 30 சனிக்கிழமை
குருநாதர் அகத்திய பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமாம் மார்கழி மாதம் மஹா ஆயில்யம் முன்னிட்டு திருச்செந்தூர் திருக்கண்ணபுரம்
செந்தூர் அகத்தியர் கோட்டம் சித்த ஆசிரமம் ஸ்ரீ லோபமுத்ராம்பிகா சமேத ஶ்ரீ அகத்தியர் கீழ்கண்ட நேரத்தில் வழிபாடு நடைபெறும்.
காலை 6 மணிக்கு அபிஷேகம், அலங்காரம்
காலை 10.31 க்கு மஹா தீபாராதனை & பிரசாத விநியோகம்
மாலை ((சாயங்காலம்)) 6 மணிக்கு லலிதா ஸகஸ்ரநாமம் குங்குமார்ச்சனை
இரவு 7 மணிக்கு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆராதனை - ஐயப்ப பஜனை
இரவு 9 மணிக்கு மஹா தீபாராதனை & பிரசாத விநியோகம்
அனைவரும் வாருங்கள் வாருங்கள் வாருங்கள்
குருவருள் திருவருள் பெற வேண்டுகிறோம்
இறை பணியில்
செந்தூர் அகத்தியர் கோட்டம் சித்த ஆசிரமம்
7. மதுரை பசுமலை ஸ்ரீ அகத்தியர் குருபூஜை - 30.12.2023
மகரிஷி அகத்தியர் குருபூசை - மார்கழி மாத ஆயில்ய பூசை
அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
மதுரை - பசுமலை - தியாகராசர் குடியிருப்பில் உள்ள ஶ்ரீசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அன்னை லோபமுத்திரை சமேத மகரிஷி அகத்தியர் சன்னதியில் நாளை சனிக்கிழமை, 30/12/2023 காலை 08:00 மணிக்கு மாரகழி மாத மகா ஆயில்யத்தை முன்னிட்டு சிறப்பு பூசைகள் நடைபெற உள்ளன.
அன்னை லோபாமுத்திரை சமேத அகத்திய மகரிஷி அடியவர்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்
குடும்பத்துடன் வருக ஐயன் & அன்னையின் அருளை பெறுக
ஓம் அகத்தீசாய நம்:
அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக
நமக்கு
கிடைத்த தகவல்களை ஒருங்கே இங்கே தொகுத்து தந்திருக்கின்றோம்.
வாய்ப்புள்ளவர்கள் அருகில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொண்டு
சித்தர்களின் அருள் பெறவும். கலந்து கொள்ள இயலாதவர்கள் அன்று காலை மாலை
நிகழ்த்தும் தினசரி வழிபாட்டில்
ஓம் ஸ்ரீம் லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடி சரணம்
என்று மனதில் நீங்கள் நினைக்கும் எண்ணிக்கையில் போற்றி செய்து, மனதார தியானிக்கவும்.
இந்தப் பதிவிற்காக பல்வேறு வழிகளில் அலைபேசி, சமூக ஊடகங்கள் வழியாக
(facebook,whatsapp ) தகவல்களை திரட்டித் தந்து உதவிய அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment