அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அகத்தியர்!
அன்பின் ஆழம் மூலம் நமக்கு கருணை மழை பொழிந்து வரும் சித்தர். அகத்தியரை வழிபட நாம்
எத்தனை பிறவிகள் எடுத்து வந்தோம் என்று நமக்குத் தெரியாது, புல்லாகி பூடாகி புழுவாகி மரமாய்
இதோ
இந்த மனித பிறவியில் நுழைந்திருக்கும் நாம் குரு வழிபாடு, சித்தர்கள் பூஜை
என்று செய்து வருகின்றோம். குருவருளால் நம் தேடல் உள்ள தேனீக்கள் குழு
மூலமாக கடந்த ஏழு ஆண்டுகளாக மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை
கூடுவாஞ்சேரியில் உள்ள அகத்தியர் மகரிஷிக்கு செய்து வருகின்றோம். இதற்கு
அருளுதவி,பொருளுதவி செய்து வரும் அனைத்து அன்பர்களுக்கும் இங்கே நன்றி கூறி
மகிழ்கின்றோம்.
நாளை 30.12.2023 ஆயில்யம் மகா குருபூஜை.இந்த குரு பூஜையை ஒட்டி, உலகெங்கும் உள்ள
அகத்தியர் ஆலயங்களில் வழிபாடு, பூஜை என நடைபெற உள்ளது. நமக்குக் கிடைத்த
தகவல்களை இங்கே தொகுத்து ஒருங்கே தர முயற்சிக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள்
அருகே நடைபெறும் அகத்தியர் பூசையில் கலந்து கொண்டு சித்தர் பெருமக்களின்
அருள் பெற வேண்டுகின்றோம்.இந்த ஒரே பதிவில் வருகின்ற மார்கழி ஆயில்ய பூசை
தகவல்களை இங்கே தருகின்றோம். இவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு வசதியான நேரம் கிடைக்கும் போது அப்படியே தரிசனம் செய்து கொள்ள
ஏதுவாக இந்தப் பதிவு உங்களுக்கு பயன்படும் என்று நாம் நம்புகின்றோம்.
என்னென்னெ கோயில்கள் என்று ஒரு பட்டியல் தருகின்றோம், அடுத்து கோயிலோடு சேர்ந்து ஆயில்ய பூசையின் விபரங்களை தருகின்றோம்.
1. பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்
2. பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்ய நாயகி உடனாய ஸ்ரீ மாயூரநாத ஆலயம்
3. கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் - பாடல் பெற்ற தலமாக
5. பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம்
6. கல்லாறு ஸ்ரீ அகஸ்தியர் ஞானபீடம் 21 ஆம் ஆண்டு குரு பூஜை விழா
7. தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி
8. பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா
9. செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை - மார்கழி ஆயில்ய வழிபாடு
10. அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர் மகா ஆயில்ய இரண்டாம் ஆண்டு திருவிழா
11. குருவடி சரணம் - தென்காசி இலஞ்சி ஸ்ரீ அகஸ்தியர் பாத குருபூஜை - 30.12.2023
12. மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 30.12.2023
13. சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 30.12.2023
14. ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா
15. கிளார் - அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் - மார்கழி ஆயில்யம் - 30.12.2023
16. அக்னி தீர்த்தக்கரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் மார்கழி ஆயில்யம் - 30.12.2023
17. கோபி மொடச்சூர் அகத்தியர் குரு பூஜை விழா
18.பூண்டி மகான் வழிநடத்தும் ஸ்ரீ அகத்தியர் பெருமான் குருபூஜை
19. பொகளூர் ஸ்ரீ அகஸ்திய பெருமானுக்கு குரு பூஜை விழா
20. செந்தூர் அகத்தியர் கோட்டம் - ஸ்ரீ அகஸ்தியர் மஹா ஆயில்யம் வழிபாடு
21. கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி
இவற்றுள் நாம் இன்னும் பல கோயில்களுக்கு செல்லவில்லை. இந்த பதிவின் மூலம்
நம் குருநாதரிடம் விண்ணப்பம் வைக்கின்றோம். விரைவில் மேற்கண்ட தலங்களில்
நம் குருவின் அருள் பெற இறையருள் இயம்பட்டும்.இது போல் இன்னும் பல
தலங்களில் யாருக்கும் வெளியே தெரியாத வண்ணம் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியருக்கு பூசை
நடைபெற உள்ளது. வருகின்ற மார்கழி ஆயில்யம் குரு பரம்பரையை பின்பற்றும்
அனைவருக்கும் மிக மிக உகந்த நாள். மிக மிக மகிழ்வோடு நாம் நம் குருவை
வரவேற்போம். அது போல் நமக்கு பல வழிகளில் ஜீவ நாடி படித்து நம்மை
வழிநடத்தும் குருநாதர்களின் பாதம் பணிகின்றோம்.
இங்கே நாம் ஏற்கனவே பல பதிவுகளில் தனித்தனியே ஒவ்வொரு கோயிலாக தந்துள்ளோம். முதலில் விடுபட்டுள்ள கோயில்களை இங்கே முதலில் காண்போம்.
1. வினை தீர்த்த விநாயகர் ஆலயம் 12 ஆம் ஆண்டு அகத்தியர் அவதார் பெருவிழா
2. பனப்பாக்கம் - வேலூர் - ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில்
3. பஞ்சட்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில்
அகத்திய
முனிவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். (இஷ்டி என்றால்
யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி) அதுவே இத்தலப் பெயரானது. அந்த
யாகத்துக்கு அசுர சக்திகளும், தீயசக்திகளும் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய
முனிவர் தேவியைத் துதித்து காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று
கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன்
வைத்து மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளையும், தீய சக்திகளையும்
எரித்துச் சாம்பலாக்கினாள். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது
நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும்
அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மஹா யந்திரத்தை தமது கையாலே
பிரதிஷ்டை செய்தார். அம்பாளை இப்படி திரிநேத்ரதாரணியாக அதாவது
முக்கண்ணுடையாளாக இந்தத் தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.
முதலில்
பஞ்சட்டி அகத்தீஸ்வரர் தீருக்கோயில் குறிப்புகளும், பூசை விபரங்களும்.
இத்தலத்து ஈசன், அகத்தீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கின்றார்.
அகத்தியர் இந்தத் தலத்துக்கு வருவதற்கு முன்பே இங்கு ஈஸ்வரன் லிங்க வடிவில்
கோயில் கொண்டிருந்தாராம். அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் அகத்தீஸ்வரர்
என்றே ஈஸ்வரன் அழைக்கப்படலானார். லிங்கத்தின் இடதுபாகத்தில் அம்பாள்
மனோன்மணி சக்தியை ஒரு ரூபமான தோற்றத்தில் வைத்து சிவசக்தி சொரூபமாக அகத்திய
முனிவர் பூஜித்துள்ளார்.
அகத்தியரால்
செய்யப்பட்ட ஐந்து யாகங்களில் அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச்
செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள்
மீண்டும் கிடைப்பதாகவும், உயர் பதவிகள் தேடி வரும் என்றும், பிறவிப்பயனைப்
பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இத்தனை சிறப்புகளைக் கொண்ட கோயியிலில் நடைபெற உள்ள குரு பூஜை அழைப்பு கீழே.
பஞ்ஜேஷ்டி
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் நிகழும்
மங்களகரமான சோபகிருது ஆண்டு மார்கழி மாதம் 14 ம்நாள் (30.12.2023) சனிக்கிழமை ஶ்ரீ அகஸ்திய முனிவருக்கு ஆயில்ய நக்ஷத்திரத்தை(ஜன்ம
நக்ஷத்திரம்) முன்னிட்டு ஶ்ரீஅகஸ்தியர் ஜெயந்திவிழா நடைபெற இருக்கிறது
நிகழ்ச்சிகள்:
காலை 9மணி முதல் ஶ்ரீ அகஸ்திய முனிவருக்கு சிறப்பு மஹா அயிஷேகம்
சிறப்பு
அலங்காரம்,பலவகையான வாசனைமலர்களைக்கொண்டு சிறப்பு மலர்வழிபாடு
(புஷ்பாபிஷேகம்), உலக நன்மையை வேண்டி கூட்டு பிரார்த்தனை,மஹா தீபாராதனை
மற்றும் அன்னப்ரசாதம் விநியோகம்
அனைவரும் வருக! அகத்தீசன் அருள் பெருக!!
4. பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம்
5. கல்லாறு ஸ்ரீ அகஸ்தியர் ஞானபீடம் 21 ஆம் ஆண்டு குரு பூஜை விழா
6. கிளார் - அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் - மார்கழி ஆயில்யம் - 30.12.2023
7. அக்னி தீர்த்தக்கரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் மார்கழி ஆயில்யம் - 30.12.2023
அக்னி
திர்த்தகரை அருள்மிகுபாலசுப்பிரமணியசுவாமிஆலயம் சற்குரு
தவபாலேஸ்வர்ஜீவசமாதியில் சற்குரு ஸ்ரீ அகஸ்தியர் குருபூஜை
மார்கழி ஆயில்யம் 30.12.23
காலை11:30 மணி சிறப்பு அபிஷேகம் & புஷ்பாஞ்சலி பூஜை மாலை 6 மணி
8. கோபி மொடச்சூர் அகத்தியர் குரு பூஜை விழா
9. பொகளூர் ஸ்ரீ அகஸ்திய பெருமானுக்கு குரு பூஜை விழா
10. அப்புபிள்ளையூர் - ஸ்ரீலஸ்ரீ மஹாகுரு அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ்
11. ஆதிவராக நல்லூர் - ஸ்ரீ அகத்தியர் அவதார திருவிழா
12. திருச்சி மாவட்டம்..மணப்பாறை வட்டம்,வையம்பட்டி ஒன்றியம், அமையபுரம் கிராமம் - கும்பாபிஷேகம் அழைப்பிதழ்
நிகழும் மங்கலகரமான சோபகிருது வருடம், அகத்தியர் அய்யாவின் திருவுள்ளப்படி, அகத்தியர் அய்யாவின் ஜெனன மாதமான மார்கழி 14 ம் தேதியில், அகத்தியர் அய்யாவின் ஜெனன நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்தில் 30.12.2023 அன்று சனிக்கிழமை திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருஞ் சாந்திபெரு விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் இவ்வரலாறு சிறப்புமிக்க கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற்று உய்யுமாறு விரும்பி வேண்டிக்கொள்கிறோம்
நமக்கு
கிடைத்த தகவல்களை ஒருங்கே இங்கே தொகுத்து தந்திருக்கின்றோம்.
வாய்ப்புள்ளவர்கள் அருகில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொண்டு
சித்தர்களின் அருள் பெறவும். கலந்து கொள்ள இயலாதவர்கள் அன்று காலை மாலை
நிகழ்த்தும் தினசரி வழிபாட்டில்
ஓம் ஸ்ரீம் லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடி சரணம்
என்று மனதில் நீங்கள் நினைக்கும் எண்ணிக்கையில் போற்றி செய்து, மனதார தியானிக்கவும்.
இந்தப் பதிவிற்காக பல்வேறு வழிகளில் அலைபேசி, சமூக ஊடகங்கள் வழியாக
(facebook,whatsapp ) தகவல்களை திரட்டித் தந்து உதவிய அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment