"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, January 15, 2024

திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதுதல் (ஞான வேள்வி) - 04.02.2024

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

குருவருளால் நம் தளத்தின் சேவைகள் நிறைவாக நடைபெற்று வருகின்றது. இன்றைய பதிவில் முற்றோதுதல் அழைப்பிதழ் ஒன்றை இங்கே இணைக்க விரும்புகின்றோம். பொதுவாக முற்றோதுதல் என்று சொன்னாலே அது திருவாசக முற்றோதுதல் என்று தான் பொருள் கொள்ளும்படி கூறப்பட்டு வருகின்றது. முற்றோதுதல் என்று சொல்லும்போது நமக்கு ஒரு சந்தேகமும் வந்துவிட்டது. முற்றோதல் என்பது சரியா? இல்லை முற்றோதுதல் என்பது சரியா? என்று.  முற்றோதுதல் என்று சொல்வது தான் மிக சரியாக இருக்கும் என்று நம்புகின்றோம். ஏனெனில் முற்றும் ஓதுதல் என்று பொருள் பட உள்ளது. எனவே இது போன்ற ஞான நூற்களை முற்றும் ஓதுதல் முற்றோதுதல் ஆகும்.

முற்றோதுதல் என்பது குழுக்களாக தமிழ் மொழியில் உள்ள பக்தி  நூலை ஒருவரே படிக்காமல், குழுவில் உள்ள அனைவரும் படிக்கும் படி செய்வது ஆகும். பொதுவாக சைவ ஆதீனத் திருமடங்கள், கோயில்களில் இந்த முற்றோதல் நடைபெறுவதுண்டு. சைவர்கள் மிகுதியாகக் கையாளும் வழக்கம் இது. திருவாசக முற்றோதல்; திருமந்திர முற்றோதல் வழக்கத்தில் உள்ளவை. நாலாயிரப் பிரபந்த முற்றோதலும் உண்டு. ஆனால் நாம் திருவாசக முற்றோதல் என்று நிறைய கேட்டிருப்போம். இந்த முற்றோதல் நிகழ்வில் கண்டிப்பாக குழந்தைகள் பங்கு பெற வேண்டும். அப்போது தான் பக்தி வளரும். புத்தி தெளியும். ஐந்தில் வளைத்தால் தான் ஐம்பதில் வளைக்க முடியும். 

 திருவாசகம் மட்டும் முற்றோதல் செய்தல் என்ற நிலையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். தமிழில் இல்லாத பக்தி நூல்களா? சென்ற நூற்றாண்டில் ஒலிநாடாக்கள் சில தொடங்கின: அபிராமி அந்தாதி - சீர்காழி, டிஎம்எஸ் பாடியுள்ளனர் முற்றோதலாய். பாம்பே சகோதரிகளின் திருமுருகாற்றுப்படை முற்றோதல் ஒலிநாடா கிடைக்கும். திருப்பாவை அரியக்குடி, எம்எல்வி, பாலக்காடு கேவிஎன், வடமொழியில் சுப்ரபாதங்கள் (எம் எஸ்), கீதை முற்றோதல் ஒலிநாடாக்கள் உண்டு, யுட்யூபில் இருக்க்கின்றது.

இன்று கேட்பொலி (ஆடியோ), காணொளி (யுட்யூப்) போன்றன இருப்பதால் தமிழில்
உள்ள ஏராளமான புராணங்களையும், இலக்கியங்களையும் முற்றோதுவித்து ஏற்றலாம். ஓய்வு நேரத்தில் உலகெல்லாம் உள்ள தமிழர்கள் கேட்டுப் பயன்பெறுவர். முற்றோதல் செயலை பெரியவர்கள் மட்டுமின்றி யாவரும் செய்யலாம்.ஆர்வம், தணியாத வேகம், காதல், தான் ஓதிக்கொண்டுள்ள நூலின் மீது உண்மையான பக்தி--அல்லது பற்று--இவையும் இவற்றுக்கு மேலும் உள்ளவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் பெரியவர்களே என்கிற காரணத்தினால்,வயது,கல்வி தடையின்றி, ஈடுபாட்டின் அடிப்படையில் நடைபெறுவது முற்றோதலாகும்.

அந்த வகையில்  04.02.2024 அன்று  சென்னை குன்றத்தூர் அருள்மிகு நகைமுகவல்லி சமதே கந்தழீஸ்வரர் ஆலயத்தில்  நடைபெற உள்ள திருமந்திரம் 3000 முற்றோதல் நிகழ்வின் அழைப்பிதழை இங்கே இணைக்கின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டி பணிகின்றோம்.





அடுத்து திருமூலர் பற்றி சிறிது அறிய இருக்கின்றோம்.

சித்தர்களில் முதன்மையானவர்.திருமூலர் சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.


செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார்.


அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.

மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது.


1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
2. திருமூலர் சிற்ப நூல் – 1000
3. திருமூலர் சோதிடம் – 300
4. திருமூலர் மாந்திரிகம் – 600
5. திருமூலர் சல்லியம் – 1000
6. திருமூலர் வைத்திய காவியம் – 1000
7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
9. திருமூலர் சூக்கும ஞானம் – 100
10. திருமூலர் பெருங்காவியம் – 1500
11. திருமூலர் தீட்சை விதி – 100
12. திருமூலர் கோர்வை விதி – 16
13. திருமூலர் தீட்சை விதி – 8
14. திருமூலர் தீட்சை விதி – 18
15. திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
17. திருமூலர் ஆறாதாரம் – 64
18. திருமூலர் பச்சை நூல் – 24
19. திருமூலர் பெருநூல் – 3000

போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


குருவருளால் நாம் நேரில் சென்று திருமந்திரம் முற்றோதுதலில் கலந்து அருள் பெறும் வாய்ப்பு கிட்டியது. அந்த வகையில் சென்ற ஆண்டில் ஜூன் மாதம் நடைபெற்ற முற்றோதுதல் அருள்நிலைகளையும், நாம் நேரில் தரிசித்த ஆலய தரிசனத்தையும் (மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் )  சிலவற்றை இங்கே அறிய தருகின்றோம்.

அன்றைய தினம் சுமார் காலை 9 மணி அளவில் மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலை அடைந்தோம். மலைக்கோயில் என்பதால் நமக்கு இன்னும் ஈர்ப்பு உண்டானது. மேலும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் என்றதும் நாம் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். சிறிய மலைக்கோயில் தான் என்றாலும் மிக வெகுவாக ஆற்றல் இருப்பதை உணர்ந்து கொண்டோம்.




நாம் கொஞ்சம் தாமதமாகத் தான் சென்றோம். நாம் சென்ற நேரத்தில், முற்றோதுதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது.. முதலாம் தந்திரம் ஓதிக் கொண்டு இருந்தார்கள்.


நாமும் திருமந்திர புத்தகத்தை கொண்டு, அவர்களோடு சேர்ந்து ஒவ்வொரு மந்திரமாக படிக்க ஆரம்பித்தோம். திருமந்திரத்தை பாடல் என்றோ, பதிகம் என்றோ சொல்லக்கூடாது. மந்திரம் ஒவ்வொரு பாடலையும் மந்திரம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நூலின் பெயர்  அது தானே. மேலும் படிக்க படிக்க நமது மனதை திறப்படுத்தி விடும் என்பதாலும் திருமந்திரம் என்று கூறி வருகின்றோம். பின்னர் அங்கே திருமூலர் பெருமான் கண்டு, வழிபாடு செய்தோம்.







திருமூலர் பெருமானை காண, காண கண்கள் குளிர்ந்தது. திருமந்திரத்தை கேட்க, கேட்க இன்பம் கொண்டோம். ஐம்புலன்களும் நம்மை சிவபரம்பொருளின் பேரருளில் திளைக்க வைத்தது. பின்னர் மீண்டும் திருமந்திரம் படிக்க ஆரம்பித்தோம்.



சுமார் 9 மணி அளவில் காலை உணவாக பொங்கல், இட்லி என உண்டோம். வயிற்றுக்கு உணவாகவும், செவிக்கு உணவாக திருமந்திரமும் என்ற நிலை தொடர்ந்த வண்ணம் இருந்தது. 


அகத்தீஸ்வரர் பாட்டு கண்டு மகிழ்ந்தோம். பாடி, படித்து மகிழ்ந்தோம்.





மதியம் சுமார் 2 மணி அளவில் அன்னம்பாலிப்பு நடைபெற்றது. அறுசுவை உணவு மிக சுவையாக இருந்தது. மறுபுறம் முற்றோதுதல் தொடர்ந்த வண்ணம் இருந்தது. 


மதிய உணவை முடித்து மீண்டும் நாம் ஒரு முறை ஆலய தரிசனம் செய்தோம்.


சுமார் மாலை 5 மணி அளவில் ஒன்பதாம் தந்திரத்தில் உள்ள திருமந்திரம் ஓதிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு சிவன் அடியார் சிவ நடனம் புரிந்தார். சுமார் 30 நிமிடம் சிவத்திரு.சந்திரசேகரன் ஐயா ஆடிய சிவநடனம் நம்மை மெய் சிலிர்க்க வைத்தது. 




பின்னர் நாம் சிவ மல்லிகா அம்மையாரிடம் கூறிவிட்டு, அங்கிருந்து திருச்சியில் உள்ள திருமூலர் தரிசனம் பெற அங்கிருந்து புறப்பட்டோம். நிறைவாக கலந்து கொண்ட அன்பர்களுக்கு இனிப்பு,காரம் கொடுத்தார்கள். அன்றைய தினம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல் திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!! ஒரு சேர ஒரே நாளில் பெற்றோம். 

திருமூலர் அருளிய திருமந்திரம் பாராயணம் செய்வோம். திருமந்திரத்தையே வாழ்க்கையெனக் கொண்டு சிவத்தை பூஜித்து வாழ்வோம்! 

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_12.html

திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!! - https://tut-temples.blogspot.com/2023/08/3000.html

திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023 - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_15.html

ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா - 11.1.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/100-1112024.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html


 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

No comments:

Post a Comment