குருநாதர்:-
அப்பனே தன் தனக்கு அவை வேண்டும், இவை வேண்டும் நீங்கள் இப்படி கேட்டுக்
கொண்டிருந்தால் அப்பனே சிறு குழந்தைகள் கூட அப்பனே தாய் தந்தையர் இல்லாமல்
இருக்கின்றார்களே, அவர்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டுக்
கொண்டிருப்பார்கள்? யாராவது அதை உணர்ந்து இருக்கின்றீர்களா? என்பேன்
அப்பனே. ஆனால் நீங்கள் உங்கள் சுயநலத்திற்காகத்தான் கேட்டுக் கொண்டு
இருக்கின்றீர்கள். எப்படியப்பா? (நியாயம்). நீங்கள் சரியாக இருந்தால்
“அகத்தியனே, நீங்கள்தான் எந்தனுக்கு அனைத்தும், நீங்கள் ஏதாவது கொடுங்கள்”
என்று கையை தூக்கி வணங்கிவிட்டால் அப்படி கூட வணங்க வேண்டாம் அப்பனே மனதில்
நினைத்துக் கொள்ளுங்கள். யான் தருவேன் அப்பா. என்பிள்ளைகளுக்கு தராமல்
யாருக்கு தரப்போகின்றேன் அப்பனே சொல்லுங்கள்.
உங்கள்
கடமையை செய்யுங்கள். உன் கடமை என்றால் அப்பனே பிறர் நலனை காணுங்கள்
அப்பனே. போதுமானது அப்பனே. என் வழியில் வருபவர்கள் இப்படித்தான் செய்ய
வேண்டும். இப்படி செய்தால்தான் கஷ்டங்கள் நீங்கும். ஆனாலும் அச்செல்கள்
அங்கங்கு மாறி கிடக்கின்றது. அவை ஒன்றாக இணைந்தால்தான் வெற்றி உண்டாகும்.
கடைசியில் இணைத்து விடுகின்றேன். இதற்காகத்தான் அப்பனே திருநீறு, திருநீறு. ( திரு = இறைவன். நீறு = சாம்பல் ).
அடியவர்:- (அமைதி)
குருநாதர்:-
அப்பனே அன்றைய நேரத்தில் (பழங்காலத்தில்) அவ்செல்கள் சிதறாமல் இருக்க பல
மூலிகைகள் ஆன நீற்றை அணிந்தார்கள். ஆனால் இன்றளவும் பின் மாறிவிட்டதப்பா.
அதை இழுத்தால் அப்பனே எங்கும் செல்லாதப்பா. அங்கேயே (அவ் செல்கள்) தேங்கி
நிற்கும் அப்பா. உயர்ந்த பக்தியை காண்பித்தார்களப்பா. இன்றளவு அப்பனே
மாறிவிட்டது. அதாவது இயற்கை முறையில் நன்றாக (திருநீறு செய்து) அப்பனே
அனைவருக்கும் கொடுங்கள் அப்பனே. அணியச் சொல்லுங்கள் அப்பனே. (பின்
அவ்செல்கள்) அது மாறாதப்பா. அதை (அவ்செல்களை பழைய நிலைக்கு ஈசன் படைத்தது
போல் உங்கள் நெற்றியில் ) மாற்றுவதற்கு பசும் சாணியிலே இருக்கின்றதப்பா.
அடியவர்:- சரி அய்யா
குருநாதர்:-
அப்பனே நல்ன்கள். ஆசிகள். நின்று கொண்டு இருப்பவர்களே யாராவது என்ன
கேள்விகள் எதிர்பார்க்கின்றார்கள் என்று தெரிந்து எவை என்றும்
புரியப்புரிய. ( கேள்விகள் கேட்கலாம் )
அடியவர்:-
ஐயா, (எங்கள்) உடல் பொருள், எண்ணம் , செயல், சொல் அனைத்தாலும் பிறர்
நலத்தை மட்டுமே நாட வேண்டும். ஐயா ஆசிர்வாதம் செய்யவேண்டும். வழி
காட்டனும்.
குருநாதர்:- இவ்வளவு நேரம் யான் என்ன தெரிவித்துக் கொண்டிருந்தேன் அப்பனே?
அடியவர்:- இதைத்தான்…(சொல்லி கொண்டு இருந்தீர்கள்)
குருநாதர்:-
அப்பனே என்னை நோக்கி வந்து விட்டாலே யான் அப்படித்தான் செய்வேன். முதலில்
அதைத்தான் கொடுப்பேன். பின்பு அனைத்தும் கொடுப்பேன் அப்பனே. முன்பே
அனைத்தும் கொடுத்து விட்டால் பறப்பீர்கள் நீங்கள். பறந்தாலும் நீங்கள்
விழுந்து விடுவீர்கள். அதனால்தான் உங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு
நீங்கள் இப்படியும் செல்லாமல், அப்படியும் செல்லாமல் எப்படி பக்குவப்படுத்த
என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்து மாற்றுகின்றேன். நின்று கொண்டு
இருப்பவர்களே ஈசனை எப்படி அழைப்பது?
அடியவர்:- கருணை வடிவானவர்.
குருநாதர்:- அப்பனே இது சரியா? பக்கத்தில் இருப்பவனே கூறு?
அடியவர்:- சிவபுராணம் படிச்சு அழைக்கனும்.
குருநாதர்:- அப்பனே (ஆதி ஈசன்) வந்து விடுவானா என்ன?
அடியவர்:- உண்மையான பக்தி இருந்தால் வருவார். மாசற்ற…
குருநாதர்:- அப்பனே உண்மையான பக்தி என்றால் என்ன?
அடியவர்:- தன்னலம் இல்லாமல் பொது நலத்தோட இருத்தல்.
குருநாதர்:-
அப்பனே அது யாரிடத்திலும் இருப்பது இல்லை அப்பா. அதனால்தான் (அந்த பொது
நலம் உங்களிடம்) இருப்பதற்கு யாங்கள் பல கஷ்டங்கள்
பட்டுக்கொண்டிருக்கின்றோம் அப்பனே. இது தவறா? சரியா?
அடியவர்:- (அமைதி) சரிதான்
குருநாதர்:-
அப்பனே நல் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் முதலில் கூட அப்பனே.
தூய்மையான எண்ணத்தில், இதயத்தில் இறைவன் வாழ்வான் என்பேன் அப்பனே. அப்படி
இல்லாமல், கடன் அங்கு, அங்கு மனம் செலுத்துவது இப்படி கஷ்டங்களோ
என்றெல்லாம் இருந்தால் அப்பனே அவ்மனதில் இறைவன் குடி கொண்டு இருக்க
மாட்டான் அப்பா. முதலில் பின் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை பற்றி
நினைக்காதீர்கள் அப்பனே. இறைவன் நம் மனதிலே உள்ளான் என்று எண்ணிக்கொண்டால்
அப்பனே நிச்சயம் வருவான் இறைவன். அனைத்தும் செய்வானப்பா.
அப்பனே
உடல் எப்படி எல்லாம் இயங்குகின்றது? உயிர் எங்கு இருக்கின்றது? அப்பனே
உயிர் எப்படி எல்லாம் இவை பற்றி எல்லாம் எடுத்துரைக்கின்றேன். முதலில் இவை
எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. அப்பனே உணவை எப்படி
உண்ணுகின்றீர்கள்? அப்பனே. அதனை அருமை பற்றி பெருமை பற்றி எல்லாம் தெரிந்து
கொண்டு அப்பனே முதலில் நீரை ஊற்ற வேண்டும். பின்பு எதைச்செய்ய வேண்டும்.
எதை இட வேண்டும் என்றெல்லாம் அனைத்தும் தெரிவித்துக் கொண்டுதானே
உண்ணுகின்றீர்கள்? அப்பனே. இது தெரியாமல் உண்டு விட்டால் என்ன லாபம்? அரிசி
மட்டும் உண்டுவிட்டால் போதுமா அப்பனே? இப்பொழுது அரிசி மட்டும்தான் உண்டு
கொண்டு இருக்கின்றீர்கள் அப்பனே. அப்படி இல்லாமல் பக்குவங்கள் பட்டு பட்டு
வாழந்தால்தான் சிறப்பு. ஆனால் தெரியாமலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்
பைத்தியக்காரர்கள். இங்கு மனிதர்கள்தான் பைத்தியக்காரர்கள் என்பேன் அப்பனே.
அவ் பைத்தியனே அப்பனே பொய் சொல்லி ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றான் அப்பா.
இதுதான் அப்பா திருடன் மனிதன் என்றார்கள் அப்பனே. இன்னும் (வாக்குகள்
சொல்ல) புசண்டன் ( சித்தர் ஶ்ரீ காகபுசண்ட பிரம்ம ரிஷி ) வருவான் அப்பனே.
அப்பனே புரியவைப்பான் வரும் காலத்தில் என்னென்ன தவறுகள் செய்திருக்கின்றான்
என்று கூட. இதனால் என்ன பிரயோஜனம்? அப்பனே. எங்களால் அனைத்தும் நீக்க
முடியும் ஒரு நொடியில். ஆனால் நீங்கள் சரியான முறையில் நிச்சயம் அதனை
பயன்படுத்த மாட்டீர்கள் என்பது தெள்ளத் தெளிவான கருத்து என்பேன்!. இன்று
யான் சொல்லி விடுவேண். நாளை மனிதன் அங்கு சென்று ஏதாவது சொல்லிக்
கொண்டிருந்தால் “ஆ இப்படியா” என்று அங்கேயே மயங்கி விடுவீர்கள் என்பேன்
அப்பனே. இதுதான் அப்பனே மனிதனின் புத்தியை கீழ் நோக்கி அழைத்துச்
செல்கின்றது என்பேன்.
அதனால் முதலில் தன்னை உணருங்கள் யார் என்பதைக்கூட. தன்னை உணர்ந்தால் அங்கு இறைவன் வருவானப்பா. அனைத்தும் சொல்லிக் கொடுப்பானப்பா.
கூறு இன்னும்?
அடியவர்:- ஐயா , இங்க உள்ள எல்லோரும் உங்களை பற்றி நல்லபடியா வேண்டுவதற்கு ஒரு அருமையான பாடல் ( ஒன்று கூறுங்கள்).
குருநாதர்:-
அப்பனே அகத்தியன் என்று சொல்வதற்கே புண்ணியங்கள் தேவைப்படுகின்றதப்பா. பல
கோடி அப்பனே. ஆனால் சரியாக அதை பயன் படுத்த தெரியவில்லை அப்பா. அதனால்தான்
அப்பனே மீண்டும் அப்பனே கஷ்டங்கள். அப்பனே யான் கொடுக்க மாட்டேன் என்
சீடர்களே கொடுத்து விடுவார்கள் அவ்வளவுதான்.
அடியவர்:- அகத்தியர் என்று சொல்வதற்கே பெரும் புண்ணியம் ஐயா
குருநாதர்:- அப்பனே வாக்கு, வாக்கு என்று கேட்டுக் கொண்டிருந்தாயே இப்பொழுது கேள்.
அடியவர்:- ( அடியவர்கள் சிரிப்பு) என்ன சொல்றதுன்னு தெரியலங்க ஐயா.
குருநாதர்:- அப்பனே பின் வாயில் தெரியாது தெரியாது என்றுதான் வருகின்றது. தெரியும் என்ன தெரியும் கூறு?
அடியவர்:- தெரியும் என்பது எதுவும் இல்லை
குருநாதர்:-
அப்படி இல்லை என்றால் அனைவரையுமே ஒன்று கேட்கின்றேன் அப்பனே. அனைத்தும்
தெரியாது என்று கூறுகின்றான். இவன்தனக்கு யான் ஏதாவது கொடுத்தால் இவன்
சரியாக பயன் படுத்துவானா என்ன? நீங்களே கூறுங்கள் அவன்தனக்கு.
அடியவர்:- …..
குருநாதர்:-
அப்பனே துன்பங்கள் ஏன் என்று தெரிந்து கொண்டாயா? அப்பனே. உந்தனுக்கு
கொடுக்கப் போகின்றேன். அதனால்தான் பக்குவங்கள் பட வேண்டும் என்பதற்கே
இத்துன்பங்கள் அப்பனே.
அடியவர்:- ………..
குருநாதர்:-
அப்பனே இவ் அகத்தியன் செய்வது உங்கள் நண்மைக்கே என்பேன் அப்பனே. ஆனால்
நீங்கள் தீமை என்றால் அப்பனே உங்களுக்கு தெரியாது அப்பனே ஒர் முறையில்
நீங்கள் என்னென்ன கஷ்டங்கள் அப்பனே விதியில் உள்ளதை முன்பே ஆராயந்து உங்களை
யான் பக்குவப்படுத்திக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. ( உங்கள் அனைவரின் )
அகத்தின் உள்ளேயே இருந்து.
(அகத்தீசன் = அகத்தின் + ஈசன் = நம் அகத்தில் இருக்கும் ஈசன் )
அப்பனே
சிறு நொடியில் உன் உள்ளே நுழைந்து வெளியே சென்று விட்டால் கர்மங்களை யான்
அழித்து எங்கோ விட்டு விடுவேன். ஆனால் நீங்கள் தகுதியான ஆளாக இல்லையப்பா
இல்லை, இல்லை.
அத்தகுதியை முதலில்
வளரத்துக்கொள்ளுங்கள். அத்தகுதி எப்படி வரும் மனதில் எதுவுமே
இருக்கக்கூடாதப்பா. முதலில் தான் யார்? முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
அப்பனே. முதலில் இவ்வுலகத்திற்கு ஏன் வந்தோம்? எவை எவை செய்யவேண்டும்? எவை
எவை செய்யக்கூடாது ? என்பதை எல்லாம் அப்பனே புரிந்து கொண்டால் நன்று
என்பேன் அப்பனே. அனைவருமே இதை புரிந்து கொளவதே இல்லையப்பா. அதனால்தான்
கஷ்டங்கள் என்பேன் அப்பனே. அதை புரிந்து கொண்டால், சரியாகவே வாழ்ந்து
வந்தாலே யாங்களே அதை புரிய வைப்போம். புரிந்து கொண்டு வாழ்ந்தாலே வெற்றி
நிச்சயம். புரியாவிடில் தோல்வி நிச்சயம்.
அடியவர்:- ………
குருநாதர்:-
அப்பனே அதனால் கவலைகள் இல்லை. ஒரு பொழுதும் என் பக்தர்களுக்கு யான்
கஷ்டங்கள் தருவதே இல்லையப்பா! நீங்கள் தான் கஷ்டத்தை (கர்மாவை) நோக்கி
செல்கின்றீர்கள் அப்பனே. கூறுங்கள் அப்பனே. என் மீது தவறா?
அடியவர்:- இல்லங்கய்யா
குருநாதர்:-
அப்பனே உங்களை பக்குவப்படுத்தி பக்குவப்படுத்தி, ஆற்றி ஆற்றி இப்பிறவிக்கு
என்னென்ன கஷ்டங்கள் படுவீர்கள் எல்லாம் வரும் காலத்தில் எடுத்துரைப்பேன்.
அதற்கு என்னென்ன தீர்வுகள் என்றெல்லாம் யான் எடுத்துரைப்பேன்.அதனால்
எக்குறைகளும் கொள்ளத்தேவை இல்லை என்பேன். கேளுங்கள் இன்னும்.சொல்கின்றேன்.
அடியவர்:-
( நீன்ட அமைத்திக்குப்பின் ஓர் அடியவர்) ஐயா அடியார்கள் பூசுவதற்கு
தென்காசி சுரண்டையில் இருந்து இப்போ விபூதி வாங்கி (மற்றவருக்கு) எல்லாம்
கொடுக்க ஆரம்பிச்சு இருக்கோம் ஐயா. அதை சாணம் வாங்கி அதையே திரும்ப ஐயா
கிட்ட…
குருநாதர்:- அப்பனே தாராளமாக கொடு.
ஆனாலும் சில கர்மங்களை ஏற்பாய். அதை வரும் காலங்களில் பின் எப்படி அழிப்பது
என்பதையும் சொல்லி விடுகின்றேன்.
அடியவர்:- குருநாதர்தான் வழி காட்டனும்.
குருநாதர்:- அப்பனே வழியும் காட்டி விட்டேன். மீண்டும் கேட்கின்றாய் என்பேன். இதுதான் மனிதர்களின் புத்தி. மட்ட புத்தி.
அடியவர்:-
ஐயா ஒரு முறை ஜீவ சமாதி போகும்போது, மக்கள் எல்லாம் உட்காந்து (வாக்கு)
கேட்கும்போது அந்த ஜீவ சமாதியிலிருந்த மகான் வந்து அருள் பாலிக்கும் விதம்
ஒரு மந்திரம் சொல்ரேன்னு சொன்னீங்கல்ல.
குருநாதர்:-
அப்பனே அதை நீ இப்பொழுது செப்பினாலும் வீணாகப்போய் விடும் என்பேன் அப்பனே .
ஆனால் மீண்டும் கடன் தான் அதிகமப்பா. ஆனாலும் அதை வரும் காலங்களில்,
எப்பொழுது எதை செப்ப வேண்டுமோ என்பதை எல்லாம் யான் சொல்லி விட்டேன் அப்பனே.
எப்பொழுது எதைத்தர வேண்டுமோ அப்பொழுது கொடுத்தால்தான் நல்லது என்பேன்.
இப்பொழுது சொன்னாயே ஜீவசமாதி என்று அது எப்படியப்பா? ( ஜீவ சமாதி என்றால்
என்ன?)
அடியவர்:- இறைவனை நமக்குள் பார்த்து இறைவனுடன் ஒடுங்குதல்.
குருநாதர்:-
அப்பனே. உயிரோடு இருப்பதப்பா அப்பனே இதில் உயிரோடு இருப்பதே எப்படி
நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்றால் சிறிது தொலைவில் அமர்ந்து தியானங்கள்
செய்தாலே அப்பனே உன் உடம்பு ஆடுமப்பா. ஆடும். அப்பொழுதே நீங்கள் புரிந்து
கொள்ளலாம். இதற்கு பன்மடங்கு தியானங்கள் செய்யவேண்டும். அப்பொழுதுதான்
உண்மை நிலை புரியும் என்பேன். (உங்களை) ஆட்டுவிப்பான் அவனை (ஜீவ சமாதியில்
உள்ள சித்தர்களை) நினைத்து தியானங்கள் செய்து கொண்டிருந்தால் இங்கு உன்
உடம்பு அப்படியே ஆடும் அப்பா. அதிர்வுகள் ( உன் உடம்பின் உள் )
தோன்றுமப்பா. பின் உடம்பே ஆடுமப்பா. அப்பொழுதுதான் (உனது) சில கர்மாக்கள்
தொலையுமப்பா. அப்படி இல்லை என்றால் ஒரு நொடி போய் விடுகின்றது. பின் ஏதோ
வணங்கி விடுகின்றீர்கள் என்றால் நிச்சயம் பின் கஷ்டங்கள் தான் வருமப்பா.
பின் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் அப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே. ஜீவன்
இப்பொழுது எல்லாம் அதை சொல்லக்கூடாது வரும் காலத்தில் அதை
சொல்லிவிடுகின்றேன் அதைக்கூட.
அடியவர்:- …….
குருநாதர்:- அப்பனே செந்தூர் (திருச்செந்தூர்) ஏன் செல்கின்றோம் அப்பனே, கூறு?
அடியவர்:- முருகன் ஸ்தலம். சடாச்சரன் உள்ள இடம்
குருநாதர்:- அப்பனே, அது இல்லையப்பா.
அடியவர்:- (மனித பின் மூளையில் உள்ள) கர்மக்குடுவையை செந்தூரான் மட்டுமே அழிக்க முடியும்
குருநாதர்:- அப்பனே, அதை யான் (ஏற்கனவே) தெரிவித்து விட்டேன். பின் தெரியாததை கூறுங்கள்.
அடியவர்:- …….
குருநாதர்:-
அப்பனே யான் சொன்னேனே பின் வரிசையாக ( நெற்றியில் ) செல்கள் இருக்கும்
என்று. அப்பனே சில செல்கள் அங்கு சென்றால் புருவின் ( புருவத்தின் )
மத்தியில் வந்து விடும் அப்பா. ஆனால் சென்று கொண்டே இருக்க வேண்டும்.
இன்னும் தலங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. அங்கெல்லாம் சென்றால்
(நெற்றியில் உள்ள) சிதறி கிடக்கின்றதே அதெல்லாம் ஒன்று சேரும் அப்பனே.
இப்படி சேரந்தால்தான் அப்பனே பக்தியில் வெற்றி கிடைக்கும். ஆனாலும் அப்பனே
பின் சில சில மனிதர்களுக்கு தானாகவே புண்ணியங்கள் சேர்ந்து விடும். இறை
பலங்கள் வந்து விடும். தானாகவே ( அவ் செல்கள்) சேர்ந்துவிடும். (அப்படி)
அவை சேர்ந்துவிட்டால் நீங்கள் நினைத்ததை எளிதில் அடைந்து விடலாம் என்பேன்
அப்பனே. வரும் காலங்களில் அதனை பற்றியும் எடுத்துரைக்கின்றேன் அப்பனே.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment