அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் இம்மாத சேவைகள் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றது. தை மாத மக நட்சத்திரத்தில் ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் 102 ஆம் ஆண்டு குருபூஜை காணும் வாய்ப்பு கிடைத்தது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சதானந்த சுவாமிகள் ஆசிரமம் சென்று தரிசனம் செய்தோம். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. குருவருளால் நாம் மூன்று முறை உழவாரப்பணி இங்கே செய்துள்ளோம். சில முறை மக பூசை வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளோம். நமக்கும் , சதானந்த சுவாமிகள் ஆசிரமத்திற்கு நெருங்கிய உறவு உண்டு. தமிழ் கூறும் நல்லுலகம் என்று ஒரு சிறிய விழா, TUT குழுவின் அகத்தியர் கீதம் இசைத்திட்ட இரண்டாம் ஆண்டு விழா என ஒவ்வொன்றும் முத்தாய்ப்பாக இங்கே நடைபெற்றது. தற்போது திரும்பி பார்க்கும் போது இறைவா! அனைத்தும் நீயே!! என்றும் குருவிடம் சரண் அடைகின்றோம்.
அன்றைய தரிசனம் நமக்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தது. இதற்கு காரணம் முழுதும் நமக்கு சித்தர்களை உணர வேண்டும் என்பதே. முதல் முறை தரிசனம் செய்த போது ஆங்காங்கே சித்தர்கள் பற்றி ஒரு எளிமையாக உணரும் படி, எழுத்தில் பதித்து வைத்து இருந்தார்கள். நாம் அவற்றை அருள்நிலை படங்களாக எடுத்து வந்தோம். அதில் தன்வந்திரி பகவானின் விளக்கம் நமக்கு கிடைக்கவில்ல. இதனையொட்டி நாம் இரண்டாம் முறையாக மதியம் தரிசனம் செய்ய சென்றோம். அப்பொழுது தான் இது போன்று 18 சித்தர்களின் அருள்நிலை நமக்கு புரிந்தது. சில சித்தர்களின் படங்கள் தோட்டத்தின் உள்ளே இருக்க, நாம் முறையாக அனுமதி பெற்று சென்று, நம் அலைபேசியில் பதிந்தோம். இன்றைய பதிவில் அவற்றை நாம் இங்கே தொகுப்பாக தருகின்றோம். நன்கு உள்வாங்கிக் கொண்டு சித்தர்களை வணங்குங்கள்.
No comments:
Post a Comment