அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் நம் தளம் சார்பில் தை மாத சிறப்பு சேவைகள் நடைபெற்றது. இதற்கு உறுதுணையாக அருளுதவியும், பொருளுதவியும் செய்து வருகின்ற அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவின் மூலமாக நன்றி கூறி மகிழ்கின்றோம். இன்றைய பதிவில் 21.01.2024 அன்று நடைபெற்ற பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அருள்நிலைகளை காண உள்ளோம்.
அன்றைய தினம் காலை சுமார் 10 மணி அளவில் கோயிலுக்கு சென்றோம். பச்சைமலை என்றதும் மலை எப்படி இருக்கும் என்று மனதுள் பல கேள்விகள். சிறிய மலை தான் என்று சொன்னார்கள். இருந்தாலும் நமக்குள் ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டது.
தாம்பரம் சானிடோரியம் அருகில் இந்த பச்சைமலை அமைந்து உள்ளது. இதோ பச்சைமலை நகர் நாம் வந்துவிட்டோம்.
விநாயகர் பெருமானை வணங்கி , பச்சைமலை மேலே செல்ல உள்ளோம். இங்கே இரு விநாயகர் தரிசனம் பெற்றோம்.
இரண்டு விநாயகப் பெருமானின் அதாவது இடது, வலது என தரிசனம் பெற்று மலை ஏற ஆரம்பிக்க உள்ளோம்.
சிறிய மலை தான் . கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா ? என்ற பழமொழிக்கு ஏற்ப, சிறிய மலை தான் என்றாலும் அருளை வாரி வழங்கி கொண்டிருந்ததை நாம் உணர்ந்தோம்.
அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் தரிசனம் பெற உள்ளோம்.
கோயிலின் உள்ளே நால்வர் பெருமக்கள் தரிசனம் பெற்றோம்.
அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் தரிசனம் பெற்றோம்.
அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி தரிசனம் பெற்றோம்.
தரிசனம் பெற்று கோயிலை வலம் வந்தோம். பின்னர் அப்படியே மேலே ஏறி சென்றோம்.
அங்கே ஒரு சன்னிதி கண்டோம். மேலும் நாம் உந்தப்பட்டோம்.
மேலே சென்று பார்த்த பின்னர் நமக்கு ஆச்சரியமாக இருந்தது. தீப தரிசனம் பெற்று, அருட்பெருஞ்சோதி தரிசனம் கண்டோம்.
ஜோதி ஜோதி ஜோதி சிவம் என்று மனதுள் வேண்டி பணிந்து, மேலும் அங்கே உள்ள மரத்தடி நோக்கி சென்றோம்.
ஆஹா. அரசமரத்து விநாயகர் . குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான், அத்திரி மகரிஷி என தரிசனம் பெற்றோம். நீங்களும் பெற்றுக்கொள்ளுங்கள்.
மீண்டும் கீழே வந்து கோயிலை கண்டோம்.
அத்திரீஸ்வரர் துதி
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
என்று திருமூலரின் திருமந்திரத்தை போற்றி வணங்குவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment