"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, April 10, 2024

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3

                                                           இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகளை  இன்றைய பதிவில் நாம் காட்சிப்  பதிவுகளாக காண உள்ளோம். கண்களுக்கு விருந்தாகவும், நம் மனதிற்கு மருந்தாகவும் இன்றைய பதிவு இருக்கும் என்று நாம் நம்புகின்றோம். இதுவரை குருநாதர் அருள்வாக்கில் கூறிய மிக மிக முக்கியமான செய்திகளை சித்தன் அருள் வலைத்தளம் மற்றும் ஏனைய பகிர்வுகளில் இருந்தும் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். ஒரே ஒரு முறை படித்தால் நமக்கு குருவின் அருள் வாக்கு மேலோட்டமாகத் தான் புரியும். மீண்டும் மீண்டும் பல முறை படித்து, உள்ளத்தில் வைத்து, இவற்றை வேத வாக்காக கொண்டு, வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்வோமாக! 

ஒவ்வொரு அருள்மொழியையும் நன்கு படித்து வாருங்கள். இந்தப் பதிவை மூன்று முறை படித்து பாருங்கள். ஏனெனில் முதலில் படிக்கும்போது மேலோட்டமாக படிப்போம். அடுத்த முறை படிக்கும் போது நாம் இந்த செய்திகளை உள்வாங்க ஆரம்பிப்போம். அடுத்து படிக்கும் போது நம் எண்ணத்தில் பதிந்து, சொல்லில் வந்து, செயலாக்கம் பெறும். எண்ணத்தில் அகத்தியரை வைப்பதே நம் வாழ்வின் நோக்கமாக கொள்ள இன்றைய நன்னாளில் பிரார்த்தனை செய்து மகிழ்கின்றோம்.




"அனைத்தும் இறைவா நீ!!!!!"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :-

நாங்கள் கூறுகின்ற சூட்சுமத்தை யாரும் புரிந்து கொள்ளவேயில்லை. ஒரு மனிதன் தன் தேவை மறந்துவிட்டு பிறருக்கு சேவையையும், பொது நலத் தொண்டையும் செய்யத் துவங்கும் பொழுதே, அவன் தேவையை இறைவன் கவனிக்கத் துவங்கிவிடுவார் என்பதே சூட்ச்சுமம்.

சுருக்கமாக சொல்வதென்றால், ஒருவன், ஆலயங்கள் சென்றாலும், சொல்லாவிட்டாலும், யாகங்கள் செய்தாலும், செய்யாவிட்டாலும், (அவனது இல்லத்தில் தீபம் ஏற்றி பூசை,வழிபாடுகள் செய்தாலும், செய்யாவிட்டாலும்) எவன் ஒருவன், சத்தியத்தையும், தர்மத்தையும், விடாப்பிடியாக பிடித்துக் கொள்கிறானோ, அவனைத்தேடி இறை வரும் என்பது மெய்.

ஒருவனிடம் தர்ம சிந்தனை இருக்கும் பொழுது, அந்த தர்மமே எதிர்காலத்தைப் பார்த்துக் கொள்ளும். ஏன் என்றால், ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும் கூட, அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால், இறை அருளைப் பெற முடியாது. ஒரு மனிதன் இறை அருளைப் பெற வேண்டுமென்றால், ஏன்? இறைநம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, தர்ம குணமும், பிறருக்கு உதவும் குணமும் இருந்துவிட்டால் போதும், இவன் இறையை தேடவேண்டியதில்லை. இறை, இவனைத்தேடி வந்துவிடும். அவனிடம், இறையே வந்து கை ஏந்தும்!

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.































































ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2  - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html
 

No comments:

Post a Comment