இறைவா.! அனைத்தும் நீயே..!!
சர்வம் சிவார்ப்பணம்...!!!
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் இதற்கு முந்தைய பதிவில் குருநாதர் அருளிய வாக்கில் சுத்த சன்மார்க்கம் பற்றி சிறிது தெரிந்து கொண்டோம். எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது? எப்போது அகவல் படிப்போம்? எப்போது திருஅருட்பா படிப்போம் ஏங்கிய நிலையில் தற்போது வள்ளலார் பெருமான் அருளால் தினசரி இரவு கூட்டுப்பிரார்தனையில் திருஅருட்பா படித்து வருகின்றோம். தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஞான நூல் திருஅருட்பா என்றால் அது மிகையாகாது. நடராஜர்,முருகப்பெருமான் , வடிவுடை மாணிக்க மாலை என்று பெருமானார் படைத்த பாடல்கள் ஒவ்வொன்றும் ஞானத்தின் உச்சம், பக்தியின் உச்சம் என்று சொல்லலாம். இன்றைய பதிவில் நாம் வடலூரில் பெற்ற தரிசன நிலைகளை இங்கே தொட்டுக்காட்ட விரும்புகின்றோம்.
முதன் முதலாக வடலூர் செல்ல இருக்கின்றோம். சத்திய ஞான சபை எப்படி இருக்கும்? பல அன்பர்கள் ஜோதி தரிசனம் காண மாதந்தோறும் பூசத்திற்கு சென்று வருகின்றார்கள். நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று ஏங்கிய நிலையில் முதன் முதலாக அன்றைய வடலூர் யாத்திரை அமைந்தது.
மிக சரியாக சத்திய ஞான சபைக்கு எதிராக நாம் பேருந்திலிருந்து இறங்கினோம். காலை உணவாக அங்கே கூழ் குடித்தோம். பின்னர் நம்மை வரவேற்கும் சத்திய ஞான சபை உள்ளே சென்றோம். மனதுள் ஒரு வித இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.
உள்ளே சென்று கொண்டே இருந்தோம். மிக நீண்ட தூரம் நடக்க வேண்டி இருந்தது.
இதோ..நாம் சத்திய ஞான சபை அருகே வந்து விட்டோம். பின்னர் உள்ளே நுழைந்தோம்.
இங்கிருந்து தான் உள்ளே செல்ல வேண்டும்.
அன்றைய தினம் ஜோதி தரிசனம் கண்டோம். ,முதன் முதலாக நாம் பெற்ற ஜோதி தரிசனம்..இன்னும் மனதுள் ஒளிர்கின்றது. தற்போது நினைத்துப் பார்க்கும் பொது அன்றைய தினம் ஜோதி தரிசனம் சென்ற ஆண்டில் திருஅண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம் பெற தூண்டியது என்று கூறலாம். ஒவ்வொருவரும் சென்று தரிசிக்க வேண்டிய இடம் வடலூர் ஆகும்.
பிறகு அங்கிருந்து மேட்டுக்குப்பம் சென்று தரிசனம் பெற்றோம்.
ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
என்று மனதுள் கூறி வழிபட்டோம்.
இந்த அறையில் தான் வள்ளல் பெருமானார் இறைக்கலப்பு செய்து தன்னை மறைத்தார். மாபெரும் ஞானியின் முன்னர் பணிந்து வணங்கினோம்.
அருபெருஞ்சோதி!
அருபெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை!!!
அருட்பெருஜோதி..!!!!
என்றும் வேண்டிக் கொண்டே இருந்தோம்.
அன்றிரவு மேட்டுக்குப்பதில் உறங்கினோம். மீண்டு காலை ஒருமுறை சித்திவளாக தரிசனம் பெற்றோம்
மீண்டும் மீண்டும் வடலூர் தரிசனம் பெற மனம் ஏங்குகின்றது. ஒவ்வொரு பூசத்திற்கும் தரிசனம் செய்து வருகின்ற அன்பர்கள் புண்ணியம் செய்தவர்களே. நமக்கும் இது போன்ற பூச நட்சத்திர வழிபாடு தர வேண்டி, விண்ணப்பம் செய்கின்றோம். பற்பல வழிகளில் நம்மை வழிநடத்தி வரும் வள்ளலார் பெருமானின் பதம் தொட்டு மகிழ்கின்றோம். மீண்டும் நமக்கு கிடைத்த வடலூர் தரிசனம் பற்றி இனிவரும் பதிவுகளில் காண்போம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment