"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, April 19, 2024

திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார்

                                                               இறைவா.! அனைத்தும் நீயே..!!

                                                               சர்வம் சிவார்ப்பணம்...!!!

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

குருவருளால் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் விடுமுறை நாட்களில் ஆலய தரிசனம் மிக அருமையாக நமக்கு கிடைத்தது. அனைத்து ஆலயங்களும் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் வாக்குரைத்த ஆலயங்கள். சோழர் காலத்தில் சம்பந்தப்பட்ட ஆலயங்கள். மேலும் தற்போது திருப்பணி நடைபெற்று வரும் ஆலயங்களாக அமைந்தது. இதனையொட்டியே இன்றைய பதிவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மானாங்கோரை வட்டத்தில் உள்ள நெடார் கிராமத்தில் அருள்பாலித்து வரும் 
அருள்மிகு ஸ்ரீ நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் தரிசனம் கண்டு, அனைத்து அடியார் பெருமக்களிடம் ஆலய திருப்பணிக்கு உதவி வேண்டி பணிகின்றோம்.

ஒவ்வொரு ஆலய தரிசனமும் நமக்கு நம் குருநாதர் அருளால் மட்டுமே கிடைத்து வருகின்றது. இந்த ஆலயத்தில் நாம் பெற்ற அருள்நிலைகளை பதிவின் இறுதியில் கொடுத்துள்ளோம். மேலும் 06.08.2023 ஆம் நாள் நடைபெற்ற திருவாசக முற்றோதுதல் வழிபாட்டை இன்றைய பதிவில் காண்போம்.


அன்றைய தினம் காலை சுமார்  9  மணி அளவில் கோயிலை அடைந்தோம். நம் குழு அன்பர்கள்ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். காலை சிற்றுண்டி பரிமாறப்பட்டது. சுவையான இட்லி,பொங்கல் என வயிறார உண்டு மகிழ்ந்தோம். வயிற்றுக்கு உணவு கிடைத்து விட்டது. அடுத்து செவிக்கான உணவிற்கு தயாராக இருந்தோம். 



திருக்கோயிலை ஒரு முறை வலம் வந்தோம். 






நம் தளம் சார்பில் பூஜைப் பொருட்கள் கொடுக்க பணிக்கப்பட்டோம்.


சென்னை அடியார் ஒருவர் வழங்கிய திருவாசகம் புத்தகம் அன்று கொடுத்தோம்.



முற்றோதுதல் செய்யும் சிவனடியார்களுக்கு நம் தளம் சார்பில் இனிப்பு, காரம் , பழங்கள் என கொடுக்க பணிக்கப்பட்டோம். சென்ற 7 ஆம் ஆண்டில் நம் தளம் சார்பில் கொடுத்த மஞ்சள் பையுடன் சேர்த்து இவை வழங்கப்பட்டது.












இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த திருவாசகம்  முற்றோதுதல் வழிபாடு சரியாக 9  மணிக்கு  ஆரம்பமாகியது. முதலில் வழக்கமான பதிகங்களுடன் சிவபுராணம் இனிதே பாட ஆரம்பித்தோம்.



அப்படியே திருவாசகத்  தேன் பருக ஆரம்பித்தோம். நம் குழுவின் சரவணன் ஐயா அவர்கள் நன்கு பாட ஆரம்பித்தார். மதுரையில் இருந்து சில அடியார்களும் வந்தார்கள். சில வெளிநாட்டு அன்பர்களுக்காக இணையத்தில் ஒளிபரப்பு செய்து கொண்டு நாம் அப்படியே கேட்டுக் கொண்டே இருந்தோம்.



திருவாசகம் அப்படியே படித்துக் கொண்டிருந்தோம். அடியார் பெருமக்கள் பாடிக் கொண்டும் இருந்தார்கள்.







அன்றைய தினம் அனைத்து இறை மூர்த்தங்களுக்கும் மலர் மாலை கண்டு இன்புற்றோம்.







ஒரு புறம் அடியார் பெருமக்கள் பாமாலை கொண்டு வழிபாடு செய்து கொண்டிருந்தோம்.



இடையில் மதிய உணவு இடைவேளையில் மிக அருமையாக அமுது உண்டோம். இதனை வள்ளலார் பெருமான் வழி அன்பர் ஏற்பாடு செய்து இருந்தார். அவருக்கு நம் நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.



















நேரம் ஆக , அகா சுமார் 6 மணி அளவில் திருவாசகம் முற்றோதல் நிறைவு செய்து மேலும் பதிகங்கள் பாடி வழிபாட்டை நிறைவு செய்தோம். பின்னர் அனைவரும் கோயிலை சுற்றிலும் தீபமேற்றினோம்.





























கோயில் முழுதும் தீபமேற்றி, அந்த விளக்கொளியில் இன்புற்றோம்.


மீண்டும் கோயிலினுள் வந்து, வழிபாடு செய்தோம்.


பின்னர் அங்கிருந்த சிவனடியார்களிடம் கூறி, விடை பெற்றோம். இப்பொழுது நினைத்து பார்த்தாலும் இன்னும் நம்மை சிவத்துள் இணைத்த நிகழ்வு என்று நாம் சொல்லலாம். மீண்டும் இது போன்று எப்போது நம்மை அழைப்பார் என்று ஏங்குகின்றோம். இந்த திருவாசக முற்றோதுதல் வழிபாட்டிற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறி மகிழ்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீள்பதிவாக:-

 ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_18.html

 குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த நெடார் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_45.html

 காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html

 சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/08/blog-post_4.html

No comments:

Post a Comment