"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, April 3, 2024

வேண்டும் எல்லாம் தரும் மந்திரம் - குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி


                                                           இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் தளத்தின் சேவைகள் சிறப்பாக  நடைபெற்று வருகின்றது. கோடை  காலம் ஆரம்பித்து விட்டதால் நீர் மோர் சேவையில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டி பணிக்கப்பட்டுள்ளோம். இதன் பொருட்டு சின்னாளபட்டியில் நீர் மோர் சேவை தினமும் 50 நபர்களுக்கு நடைபெற்று வருகின்றது. மேலும் சென்ற பங்குனி பௌர்ணமி முந்தைய நாளில் சுமார் 200 அன்பர்களுக்கு திருஅண்ணாமலையில் நம் குழு சார்பில் மோர் சேவை நடைபெற்றது. இன்னும் இந்த மோர் சேவை சிறப்பாக செய்வதற்கு குருவிடம் வேண்டி பணிகின்றோம்.

இது ஒரு புறமிருக்க, வழக்கம் போல் தினசரி இரவு 7 மணி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டுப் பிரார்த்தனையில் நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக குருவருள், திருவருள் பெற்று வருகின்றோம். தற்போது வள்ளலார் பெருமான் அருளிய திருஅருட்பா ஐந்தாம் திருமுறை படித்து வருகின்றோம். திருஅருட்பா படிக்க, படிக்க திருஒற்றியூர் தரிசனம் எப்போது நமக்கு கிடைக்கும் என்று ஏங்கினோம். தற்போது தணிகைமலை தணிகைமலை என்று எப்போது முருகப்பெருமான் தரிசனம் என்று ஏங்கி வருகின்றோம். இந்த நிலையில் நமக்கு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

இது போன்ற நூல்கள் நமக்கு கிடைக்க, படிக்க நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. ஏனென்றால் குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதியில் ஒரு பாடலை 27 முறை படிக்க வேண்டும் என்று நமக்கு கிடைத்த செய்தியை கொண்டு நாம் குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி நூலை தேட, குருவருளால் நமக்கு மிக சரியாக கிடைத்தது. இது அந்த கந்தக கடவுளின் கருணையால் தான் என்று நமக்கு நன்கு உணர்த்தப்பட்டது. அந்தப்பாடல் செய்தியை மற்றொரு நாள் பதிவு செய்கின்றோம். இது போன்று தான்  பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்!, ஸ்ரீமத் குமார சுவாமியம் , குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி  படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.



இது நம்மால் இயலாத காரியம். அனைத்தும் குருவருளால் தான் என்று நமக்கு புரிகின்றது. ஆம். நமக்கு பதிற்றுப்பத்தந்தாதி படிக்க காரணமாக அமைந்தது அடியார் ஒருவர் கொடுத்த வேண்டும் எல்லாம் தரும் மந்திரம் என்ற பாடலே ஆகும். முன், பின் என்ற படத்தில் ஒரு புறம் வேண்டும் எல்லாம் தரும் மந்திரம் என்று பதிற்றுப்பத்தந்தாதி முதல் பாடல் இருந்தது. மற்றொரு பக்கம் குமாரஸ்தவம் இருந்தது. குமாரஸ்தவம் நாம் எப்போதாவது தான் படிப்போம். அப்புறம் இந்த படத்தை பூஜை அறையில் வைத்து மறந்தே விட்டோம்.

குருவருளால்  கூட்டு வழிபாடு வழக்கம் போல் நடைபெற்று கொண்டிருந்தது. ஒரு நாள் இந்த வேண்டும் எல்லாம் தரும் மந்திரம் பற்றி நமக்கு சிந்தனை வர, குழு அன்பர்களிடம் அடுத்து  குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி படிக்கலாம் என்று கூறி, இணையத்தில் தேடினோம். குருவருளால் நமக்கு இந்த பாராயண நூல் கிடைத்தது. இதே போன்று தான் கந்த ஷஷ்டி வழிபாட்டின் போதும் நமக்கு ஸ்ரீமத் குமார சுவாமியம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முருக வழிபாட்டில் உள்ளவர்கள் கண்டிப்பாக  ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பாடல்களை படிக்க வேண்டும். அப்படி நமக்கு ஒரு வாய்ப்பு சென்ற தீபாவளி முதல்  ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வழியில் கிடைத்து வருகின்றது.

ஏற்கனவே குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி பற்றி நாம் பகிர்ந்தமையால் குமாரஸ்தவம் பாடல் படிக்க உள்ளோம் 






1.   ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
         ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்

2.   ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
         ஓம்  ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்

3.   ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
         ஓம்  ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்

4.   ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
         ஓம்  ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்

5.   ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
         ஓம்  அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்

6.   ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
         ஓம்  ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்

7.   ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
         ஓம்  ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்

8.   ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
         ஓம்  பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்

9.   ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
         ஓம்  அரசர் தலைவனுக்கு வணக்கம்

10.   ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
         ஓம்  தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்

11.   ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
         ஓம்  நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்

12.   ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
         ஓம் ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்

13.   ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
         ஓம் கவியரசர் தலைவனுக்கு வணக்கம்

14.   ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
         ஓம்  தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்

15.   ஓம் இகபர பதயே நமோ நம ஹ
         ஓம்  இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்

16.   ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
         ஓம்  திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்

17.   ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
         ஓம்  மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்

18.   ஓம் நயநய பதயே நமோ நம ஹ
         ஓம்  மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்

19.   ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
         ஓம்  அழகுருவான தலைவனுக்கு வணக்கம்

20.  ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
         ஓம்  தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்

21.  ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
         ஓம்  வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்

22.  ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
         ஓம்  மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்

23.  ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
         ஓம் கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்

24.  ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
         ஓம்  கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்

25.  ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
         ஓம்  சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்

26.  ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
         ஓம்  வேள்வித் தலைவனுக்கு வணக்கம்

27.  ஓம் அபேத பதயே நமோ நம ஹ
         ஓம்  வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்

28.  ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
         ஓம்  மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்

29.  ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
         ஓம்  சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்

30.  ஓம் மயூர பதயே நமோ நம ஹ
         ஓம்  மயூர நாதனுக்கு வணக்கம்

31.  ஓம் பூத பதயே நமோ நம ஹ
         ஓம்  பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்

32.  ஓம் வேத பதயே நமோ நம ஹ
         ஓம்  வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்

33.  ஓம் புராண பதயே நமோ நம ஹ
         ஓம்  புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்

34.  ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
         ஓம்  ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்

35.  ஓம் பக்த பதயே நமோ நம ஹ
         ஓம்  அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்

36.  ஓம் முக்த பதயே நமோ நம ஹ
         ஓம்  பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்

37.  ஓம் அகார பதயே நமோ நம ஹ
         ஓம்  அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

38.  ஓம் உகார பதயே நமோ நம ஹ
         ஓம்  உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

39.  ஓம் மகார பதயே நமோ நம ஹ
         ஓம்  மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

40.  ஓம் விகாச பதயே நமோ நம ஹ
         ஓம்  எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்

41.  ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
         ஓம்  எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்

42.  ஓம் பூதி பதயே நமோ நம ஹ
         ஓம்  சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்

43.  ஓம் அமார பதயே நமோ நம ஹ
         ஓம்  மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்

44.  ஓம் குமார பதயே நமோ நம ஹ.
         ஓம்  குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று.


வேண்டும் எல்லாம் தரும் மந்திரம் என்ற தலைப்பில் குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதியும், குமாரஸ்தவம் பாடலும் படித்து விட்டோம். இதனை நம் மந்திரமாக ஏற்று அனுதினமும் படித்து. பாடி முருகப் பெருமான் அருள் பெற வேண்டுவோமாக!

PDF வடிவில் தரவிறக்க - https://drive.google.com/file/d/1O2dHUtv1jIP4uw9lDTUB9uSY1r6Oyn5N/view?usp=sharing


                                      எழும் போது வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து  

                                         தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்

தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்

அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன், செந்தில் வேலவனே!

ஓம் சரவணபவஓம் 

சிவ சிவ ஓம்

ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_30.html

 அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html


 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

No comments:

Post a Comment