"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, April 16, 2024

காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!!

                                                             இறைவா.! அனைத்தும் நீயே..!!

                                                               சர்வம் சிவார்ப்பணம்...!!!

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

திரு குரோதி வருடத்தில் சித்திரை மாதம் பிறந்து விட்டது. நம் குருநாதர் அருளால் இந்த எட்டாம் ஆண்டு துவக்கத்தை திருஅண்ணாமலையில் ஆரம்பித்துள்ளோம்.நம் குழு அன்பர்கள் சந்திப்பு,கிரிவலம், பெருமான் தரிசனம், அன்னசேவை, மோர் சேவை என அனைத்தும் குருவருளால் நடைபெற்றது. சித்திரை மாதத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள் பற்றி காகபுஜண்டர் ரிஷி அருளிய வாக்கினை இங்கே பகிர்கின்றோம். நன்கு படித்து காகபுஜண்டர் ரிஷி உரைத்த வழிபாட்டு முறைகளை  செய்து  விதியை இறையருளால் மாற்றிக் கொள்ள குருவிடம் வேண்டுவோமாக!

16/4/2022 சித்ரா பவுர்ணமி அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம். நாசிக் மாவட்டம். மகாராஷ்டிரா. 



1. ஸ்ரீ சித்திர குப்தர் திருஅண்ணாமலை, காஞ்சிபுரம் தரிசனம் - வெற்றிலையில் சர்க்கரை இட்டு தீபம் 


யான் ஒரு சூட்சுமத்தை சொல்கின்றேன்...இவ் மாதம் எதையென்று... சித்ரகுப்தாவின்(சித்திர குப்பன்) மாதம் என்றுதான் யான் சொல்வேன்.இவ் மாதத்தை!! 

எதனால்?? எப்படிப்பட்டது என்பதை கூட... ஓர் யுகத்தில் எதை என்று கூட  பின் நலமாக நலமாக இதனையும் என்று அறிவதற்கு இவைதன் உணர உணர .

எந்தனுக்கு ஒர் நாள் வேண்டும்...ஓர் நாள் வேண்டும்.. யான் உறங்க!!! 

உறங்க!!! அதுமட்டுமில்லாமல் பின்பற்றும் அளவிற்குக் கூட யான் பல ஓய்வுகள் எடுக்க வேண்டும்!!

அதனால் ஓர் அரை மணி நேரமாவது எந்தனுக்கு பின் இறைவா கொடுக்க வேண்டும் என்று ஈசனுடன் வாதாடினான் சித்திரகுப்தன்.

அதனால் சரி அரை மணி நேரங்கள் எடுத்துக் கொள் என்பதற்கிணங்க சொல்லிவிட்டான் ஈசனும். 

இதற்கு இணங்க சித்திரகுப்தனும் இவ் அரைமணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டான்.

ஆனால் அவ் அரை மணி நேரம் என்பது இவ் சித்திரையே!!!! 

ஆனாலும் அவ் அரை மணி நேரமும் எதனையும் என்று கூற கூற அவந்தன் ஓய்வு எடுக்கவில்லை....

ஆனால் சில மனிதர்கள் தெரிந்தவர்கள் அரசர்கள் பலர் அன்றே இவனை தொழுதால் நன்றாகும் என்பதை கூட முனிவன் வாக்கு சொல்லிவிட்டார்கள் ரிஷிகள் அதனால் அவ் அரைமணி நேரத்திலும்(சித்திரை மாதம் முழுவதும்) சித்ரகுப்தனின் ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி இவையன்றி கூற...அவ் தீபத்தின் வழியே சித்திர குப்தனை பார்த்துப் பார்த்து மனதில் 
"""
சித்ரகுப்தாய நமஹ"""!!! என்று ஓதி, ஓதி , ஓதி, ஓதி ,பல அரசர்களும் மாற்றி அமைத்துக்கொண்டனர் தன் பாதையை.

இதனால் தான் இவ் மாதத்தில் சித்ரகுப்தனை பின் என்றாவது அவந்தனுக்கு சக்கரையை இட்டு அதுவும் சக்கரை எங்கு இட வேண்டும் என்றால் வெற்றிலையிலே இட்டு அவந்தனுக்கு நல் விதமாக பின் தீபமும் ஏற்றி ஏற்றி...  இவை யான்  சொன்னேன் மந்திரத்தை பின் அவ் தீபத்தின் வழியே அவனையும் பார்த்து... 

ஆனாலும் யான் முக்கியத்துவம் தருவேன்... காஞ்சியிலும்!!! அண்ணாமலையிலும்!!! 

காஞ்சியிலும் இதையன்றி கூற...அங்கே அமர்ந்து பின் தீபமேற்றி. ... தீபத்தின் வழியே உற்று நோக்கினால் நிச்சயம் மனமார ஆசீர்வதிப்பான்... 

ஆசீர்வதித்து பின் ""ஏகனையும் "" (ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம்) தரிசித்து....ஏகனையும் தரிசித்தல்!!!

பின்பு அண்ணாமலை அண்ணாமலையும் சென்று எதனையென்று அறிவதற்கு பின் அங்கு அனைத்து லிங்கங்களையும் (கிரிவல அஷ்டலிங்கங்கள் தரிசனம்) பின் பார்த்து உற்று நோக்கிப் பின் கடைசியில் பின் திருத்தலத்திற்குச் சென்று அங்கேயும் "நமச்சிவாயா!! "நமச்சிவாயா!!! என்று அழைத்தால் பின் சித்திரகுப்தனே!!! அவன் எதிரில் நின்று கூட யான் சொல்லி விட்டேன்....

அங்கேயும் அவனை அழைத்து கொண்டே இருந்தால்..... ஓ!!!!  இவந்தன் பின் ஈசனுடைய பக்தன் என்று மனம் இரங்கி சில உதவிகளையும் செய்வான்.

நிச்சயமாய் மனிதர்களே இதை பின்பற்றி கொள்ளுங்கள்!!!





 2. ஐந்தறிவு ஜீவன்களுக்கு நீர் மற்றும் உணவு சேவை 

செப்பிவிட்டேன் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளுக்கு...இவ் சித்திரை திங்களில்... எதை என்று கூற அனைத்தும் பின் நீர், மற்றும் பிற பிற வகைகளான உணவுகளையும் கொடுக்க கொடுக்க அவைதன் மகிழ !!மகிழ!! தான் மனிதன் இனிமேலும் நிச்சயமாய் வாழ்வான் என்பது நிச்சயமான வாக்கு.







அதனால்தான் அவ் ஜீவராசிகளுக்கு கொடுத்தால் நிச்சயம் ஈசன் மனம் மகிழ்ந்து பின் ஜீவராசிகளும் மகிழ்வித்து வாழ்க என்று மனதார வாழ்த்தும் என்பதையும் மெய்யப்பா!!!!!





3. மூலிகை குடிநீர் அருந்துதல் (துளசி,மஞ்சள் எலுமிச்சை சாறு நெல்லிக்கனி இட்டு  சித்ர குப்தா நமஹ என்று சொல்லி அருந்துதல்)

அதனால் சொல்லி விடுகின்றேன் இனிமேலும் எதையன்றி  கூற....

""இவ் மாதத்தில் நிச்சயம் செய்ய வேண்டும்!  

செய்ய வேண்டும் அவை மட்டுமில்லாமல் இன்னும் சொல்கின்றேன் இவ் மாதத்தில் சிறிதளவு துளசியும் துளசியுமின்றி முறையாக அதில் மஞ்சளும் இட்டு சிறிதாக எலுமிச்சை சாற்றையும் இட்டு... அதனுடன் சிறிது நெல்லிக்கனியும் இட்டு... இட்டு இட்டு அதனையும் அருந்தி வர அருந்திவர சில நோய்களும் தீரும்.

(நீரில் துளசி மஞ்சள் பொடி எலுமிச்சை சாறு நெல்லிக்காய் சாறு சேர்த்து) நோய்களைத் தீர்ப்பதற்கும் வழிகள் உண்டு வழிகள் உண்டு.

இதனையும் பின் """சித்ரகுப்தா நமஹ"" என்று சொல்லி அதிலும் அவ் நீரிலும் கையில் விட்டு பின் இவற்றின் வழியாக நீயாவது இரங்கு என்று கூறிவிட்டால் நிச்சயம் மனமகிழ்ந்து சித்திரகுப்தன் செய்வான்.(பாத்திரத்தில் இவற்றை கலந்து சித்ரகுப்தனை வேண்டி கையில் இட்டு வணங்கி அருந்த வேண்டும் இம் மாதம் முழுவதும்) 

அதனால் இவையன்றி கூற அவ் மணி நேரத்தைப்(சித்திரை மாதம் முழுவதும்) பயன்படுத்திக் கொள்ளுங்கள். மானிட ஜென்மங்களே!!!  அவ் அரைமணி நேரம் தான் இச் சித்திரை திங்கள்!!!



அதனால் இவையன்றி கூற அவ் மணி நேரத்தைப்(சித்திரை மாதம் முழுவதும்) பயன்படுத்திக் கொள்ளுங்கள். மானிட ஜென்மங்களே!!!  அவ் அரைமணி நேரம் தான் இச் சித்திரை திங்கள்!!!







4. தினமும் திருமூலரின் திருமந்திரம் ஓதுதல் 

இதனால்தான் ஆனாலும் யாங்கள் இனி எதையென்று கூற....ஓர் ஓர் முறை வழி காட்டுவோம்... அதை பயன்படுத்துவதற்கு அகத்தியன் சொன்னான் பல புண்ணியங்கள் வேண்டுமென்று!!

ஆனாலும் இதனையுமென்று அறிவதற்கு அதற்கு மூலனின்(திருமூலரின் திருமந்திரம்) வாக்கியத்தை படித்தாலே போதுமானது!!!

அனுதினமும் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு மூலத்தையும் குறிப்பிடுகின்றான் மூலன்!! மூலன் இதையன்றி கூற!!! அதனாலே!! அவந்தன் மூலன்!!! 

ஆனாலும் வாழ்க்கையில் அனைத்தும் அனுபவித்து அனுபவித்து பின் ஒவ்வொரு பாடலையும் எழுதியருளிள்ளான்!! மூலன்!!

இதனால் அது சாதாரண விஷயம் இல்லை!!!

அனுபவித்தால்தான் அவ் பாடல்களும் கூட வரும்..

அதனால் ஈசனிடமே முறையிட்டு யான் எழுதுவது சரியாக இல்லை..

ஆனாலும் என் வாழ்க்கையில் ஒவ்வொரு படியும் யான் அனுபவித்தே தீரவேண்டும் என்று கூட அதனால் பல வருடங்களாக பல கஷ்டங்களை அனுபவித்து அனுபவித்து ஒவ்வொரு பாடல்களையும் எழுதினான். 

இது நிச்சயமான உண்மை!!!

இதனால் அதிலே திறமைகள் ஒளிந்துள்ளது இன்னும் மூலன் பல வாக்குகளிலும் செப்புவான்!!

இன்னும் பல எதையென்று கூற நூல்களையும் சொல்லாமல் சொல்லிவிட்டான்!!  சொல்லாமலும் சென்றுவிட்டான்!!

இனிமேலும் அவனுடைய வாக்குகளும் நன்றாகவே வரும்!!!






5. வள்ளலார் அருளிய சன்மார்க்கம் 

இவையன்றி கூற வள்ளலான் வழிகளை பின்பற்றுங்கள் மக்களே!! திருந்திக் கொள்ளுங்கள்!! திருந்திக் கொள்ளுங்கள்!! 








ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீள்பதிவாக:-

 சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/08/blog-post_4.html

No comments:

Post a Comment