"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, February 14, 2022

அக்னிதீர்த்தக்கரை - மாசி மகம் 10,008 தீப பூஜை - 16.02.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மாசி மக கொண்டாட்டங்களில் ஒன்றாக கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழை இதற்கு முந்தைய பதிவில் கண்டோம். இந்தப் பதிவில் நாளைய மாசி மாத லட்ச தீப வழிபாடு அழைப்பிதழை பகிர விரும்புகின்றோம். அதற்கு முன்பாக இன்று மதியம் 3 மணி முதல் மாசி மாத ஆயில்ய நட்சத்திரம் தொடங்கி நாளை மாலை 4 மணி வரை உள்ளது. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் இன்று மாலை 6 மணி முதல் குருநாதருக்கு வழிபாடு செய்ய உள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருள் பெற வேண்டுகின்றோம்.

அடுத்து மாசி மக வழிபாட்டில் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அன்று மாலை அக்னிதீர்த்தக்கரை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் லட்ச தீப வழிபாடு நடைபெற்று வருவதாக நமக்கு கூறினார்கள். ஆனால் எப்போது இந்த லட்ச தீப வழிபாட்டு அருள்நிலை நமக்கு கிடைக்கும் என்று நாம் காத்திருந்து வருகின்றோம். இதோ..இனி அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம்.


நாளைய மாசி மாத ஆயில்ய வழிபாடு இங்கே காலை 7 மணி முதல் கணபதி ஹோமத்துடன் ஆரம்பம் செய்து சிறப்பு அபிஷேகம், அன்னசேவையுடன் மதியம் 1 மணி அளவில் நிறைவு பெறுகின்றது. சரி..இனி அக்னிதீர்த்தக்கரை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய தரிசனம் பெறலாமா? இந்த ஆலயத்தின் சிறப்பு பற்றிய செய்தியை கீழே உள்ள இணைப்பு படம் மூலம் அறிய தருகின்றோம்.


ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் பித்ரு தோஷங்களை போக்குவதற்காக மோட்ச தீபவழிபாடு மாதந்தோறும் அமாவாசை அன்று நடைபெற்று வருகின்றது. ஆழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் வழியில் அக்னி தீர்த்தக்கரை உள்ளது. இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி, சற்குருநாதர், சுவாமி தவபாலேஸ்வரர் ஜீவசமாதிபீடம் உள்ளது. இங்கு அமாவாசை நாளன்று காலை பித்ரு தோஷங்களை நீக்குவதற்காகவும், பித்ருக்கள் முக்தி பெறவும், அகஸ்தியர் ஜீவநாடியில் கூறியுள்ளபடி சித்தர்கள் முறைப்படி மோட்சதீப வழிபாடு நடைபெற்று வருகின்றது.  







மேலே நீங்கள் கண்ட காட்சிகள் அனைத்தும் அக்னிதீர்த்தக்கரை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இருந்து அருளப்பட்டது ஆகும். நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமானின் தரிசனம் பெற்று இருப்பீர்கள் என்று நாம் நம்புகின்றோம். 

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அக்னிதீர்த்தக்கரை செல்லும் அருள் நமக்கு கிட்டியது. வி.கே புரத்தில் உள்ள அடியார் திரு.செல்லப்பா ஐயா அவர்களை அன்றைய தினம் சந்தித்து சில கோயில்களுக்கு சென்றோம். சுமார் 11 மணி அளவில் அக்னிதீர்த்தக்கரை சென்றோம்.


அங்கே நடைபாதையில் கொஞ்ச தூரம் நடந்து சென்று பார்க்கும் போது தான் அக்னி தீர்த்தகரை கோயிலை கண்டோம்.


அக்னிதீர்த்தக்கரை பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. தரையில் இருந்து உள்ளே தீர்த்தக்குளம் இருந்தது.



இங்கே செல்ல மனம் துடித்தது. உள்ளே தான் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமான் உள்ளார் என்று நமக்கு தோன்றியது. முதன் முதலில் இங்கே சென்ற போது தலத்தில் உள்ள இறை சொரூபங்கள் பற்றி நமக்கு புதுமையாக இருந்தது. இங்கே பைரவர் தரிசனம் பெற்ற போது நம்முள் புது ஆற்றல் பெருகியது கண்டு இன்புற்றோம். அடுத்து பிரம்ம நவகோள் ஸ்தூபி கண்டோம். 



இந்த ஸ்தூபிக்கு நேரே பைரவர் தரிசனம் பெற்று, அடுத்து அக்னிதீர்த்தக்கரை கோயிலுக்கு உள்ளே சென்றோம்.


உள்ளே சென்றதும், ஸ்ரீ  தவபாலேஸ்வரர் தரிசனம் பெற்றோம்.






தீர்த்தக்கரையில் மீன்கள் அங்கும் இங்கும் கண்டோம். அடுத்து நம் குருநாதர் தரிசனம் பெற்றோம்.





 நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

என்று வேண்டினோம்.





கண்களில் ஒளியாகி
 கருத்தினில் பொருளாகி
எண்ணமதில் நினைவாகி
 இதயமதில் அன்பாகி
என் உடலுக்குத் துணையாகி
  என் உள்ளத்தில் நிறைவாகி
என் செயல்யாவும் உனதாகி
  என்னை நடத்தும் வழியாகி
என்னுள்ளே நீயாகி
 உன்னாலே  நானாகி 
என்னை ஆள்கின்ற தேவனாகி
   என் குருநாதனின் தாளே போற்றி
   என் குருநாதனின் தாளே போற்றி
   என் குருநாதனின் தாளே போற்றி! போற்றி



ஐந்திலக்கணம் தந்த அகஸ்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவயோகியே
கடலுண்ட காருண்யரே கும்ப முனியே
குருவே சரணம்... சரணம்.. சரணம்



அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பரித்து
எழுந்து நின்ற என்னிலா ஈஷருக்கு பட்டம்
சூட்டி எண்ணத்தில் கலந்து
எண்ணத்தை சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய்
தேர்ந்தெடுத்த என் சற்குருவே அகஸ்தியா வா... வா....




















ஸ்ரீ அகஸ்தியர் பாடல்களை படித்து, அங்கே முழுதும் தரிசனம் பெற்றோம். அமைதி காக்க வேண்டிய இடம். அமைதியாக அமர்ந்து தியானத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்தோம். ஒளவைப்பாட்டி சொன்னது போல் சத்தத்தின் உள்ளே சதாசிவமும், சித்தத்தின் உள்ளே சிவலிங்கமும் காட்டிய நிலையின் சிறு துளியை அங்கே உணர்ந்தோம். மீண்டும் மேலே வந்து கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தோம்.

இன்னும் அக்னிதீர்த்தக்கரை தரிசனம் தொடர்வோம்.

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 17.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/17022022.html

ஓம் கும்பமுனி குருவே சரணம்!  - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_13.html

 சகல தோஷமும் பாவமும் நீக்கும் மாசி மகம் - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/08032020.html

 மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

No comments:

Post a Comment