அன்பார்ந்த மெய்யன்பர்களே.
அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் சிவ ராத்திரி நாளை அனைவரும் கொண்டாட உள்ளோம். சகல சிவாலயங்களிலும் சிறப்பு பூஜை தான் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இருந்தாலும் நமக்கு கிடைத்த அழைப்பிதழ்களை இங்கே ஒரு சேர பகிர்கின்றோம். அனைவரும் அருகில் உள்ள தொன்மை வாய்ந்த சிவாலயம் சென்று, ஈசனை வழிபட்டு, வினைத் தூய்மை பெறவும்.சித்தன் அருளில் மாமகரிஷி அகத்தியர் பெருமான் அஷ்ட திக்குகளிலும் விளக்கு போடுங்கள் என்று வாக்கு உரைத்தார். அதனை நாம் திரு அண்ணாமலையிலும், கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயத்தில் பைரவர் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட்டோம். இந்த அஷ்ட திக்கு விளக்கு வழிபாட்டை தொடரவும். முடிந்தவர்கள் வாரம் ஒருமுறையாவது கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். முடியாதவர்கள் மாதம் ஒருமுறையாவது விளக்கேற்றி வழிபடவும்.இந்த அஷ்ட திக்கு விளக்கு வழிபாட்டை நாளை நாம் மேற்கொள்ள உள்ள சிவ ராத்திரி வழிபாட்டில் தயவு செய்து இணைக்கவும். நமக்கு முதன் முதலாக சிவராத்திரி அழைப்பு ஸ்ரீ துளஸீஸ்வரர் வழங்கி உள்ளார். இணைப்பைப் பார்த்து அருள் பெறவும்.
2. சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர்! - 19 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ் இங்கே பகிர உள்ளோம்.
3. அக்னி தீர்த்தக்கரை மஹா சிவராத்திரி 1008 சிவலிங்க பூஜை அழைப்பிதழ்
4. அருள்மிகு மயிலாண்டவர் கோயில் - 15 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி திருவிழா அழைப்பிதழ்
5. திருவள்ளூர் பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அழைப்பிதழ்
6. வழுவதூர் கிராமம் மகா சிவராத்திரி பெருவிழா அழைப்பிதழ்
7. கந்தர்வகோட்டை ஆதிநாதர் சிவராத்திரி அழைப்பிதழ்
8. ஸ்ரீ பால்சுனை கண்ட சிவபெருமானின் 35 ஆம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ்
9. ஓம் ஸ்ரீ சிவகுருமடம் - விருதுநகர்
பைபாஸ் ரோடு வடமலைக்குறிச்சி ரோடு முக்கு- கெளசிக மகாநதி அருகில்
சிவராத்திரி பெரு விழா அழைப்பிதழ்
ஸ்ரீ மகா அமிர்த பஞ்சலிங்கேஷ்வரர் ஆலயத்தில் வருகின்ற 1.3.2022 பிலவ வருட மாசி மாதம் 17 ம் தேதி செவ்வாய்கிழமை
இரவு 7.00 மணிமுதல் மறுநாள் புதன் கிழமை காலை 6.00 மணி வரை நடைபெறும்
சிவராத்திரி பூஜையில் ஐந்து சாம பூஜையும் இடையிடையே பக்தி இன்னிசை கச்சேரியும், மேலும் அதிருத்ரபாராயணம், ராமகாசி தீர்த்தத்தை இரைத்து அவரவர் கைகளால் அங்குள்ள* ராமலிங்க சாமிக்கு ருத்ர கோடீஸ்வர அபிஷேகம் செய்யலாம்.
சக நாமாவளி நான்கு வேதத்திற்கு பொருள், நான்கு தீட்சைக்கும் குருநாதர் பொருள் கூறுவார்.
1008 மூலிகை வேர்களால் தீர்த்த அபிஷேகம் நடைபெறும்.
குரு கடாட்ஷம் பரிபூரணம்.
10. தென்காசி கீழப்பாவூர் ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் அழைப்பிதழ்
மன்னர்கள் காலத்தில் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்றழைக்கப்பட்ட கீழப்பாவூரில் வாலியால் பூஜை செய்யப்பட்ட திருவாலீஸ்வர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி திருநாள் ( 01 -03- 2022 ) பூஜைகள் நடைபெறவுள்ளது. பக்தர்கள் கலந்து கொண்டு சிவகாமி அம்பாள் ஸமேத திருவாலீஸ்வரரின் பேரருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டு கொள்கிறோம்.
11. பூந்தமல்லி கைலாசநாதர் ஆலய அழைப்பிதழ்
12. விக்கிரமங்கலம் கோவில்பட்டியில் மதுரோதைய ஈஸ்வரமுடையார் ஆலய அழைப்பிதழ்
14. திருஅண்ணாமலை பரிகார நந்தீஸ்வரர் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ்
15. ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நிகழ்த்தும் அழைப்பிதழ்
16. திருஅண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமம்
சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு 1/3/2022 மாலை 6 மணி முதல் 2/3/2022 அன்று காலை 6 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் ஆச்ரமத்தில் நடைபெறவுள்ளன. சிவராத்திரி பூஜைகள் முழுவதும் கண்டு பயன்பெற அன்பர்கள் அனுமதிக்கப்படுவர்.
In view of Maha sivaratri, Special abhishekams and pujas will be held at the Ashram from 6 pm on 1/3/2022 to 6 am on 2/3/2022.
Devotees will be allowed to take part in the pujas and receive the blessings throughout the Shivratri night.
17. தீர்த்தமலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம்
வருகிற 01-3-2022 அன்று நமது தீர்த்தமலை ஆஸ்ரமத்தில் மஹா சிவராத்திரி மஹோச்சவம்… நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடக்கவுள்ளன. அடியார்கள் , இந்த வைபவத்தில் கலந்து கொண்டு, ஶ்ரீ லோபாமுத்ரா சமேத ஶ்ரீ அகஸ்த்தியர் மற்றும் 18 சித்தர்களின் அருள்தனை பெற்றிட அன்போடழைக்கிறோம்… ஓம் ஶ்ரீ அகஸ்த்யாய நமோ நம:ஶ்ரீ
18. அருள்மிகு குலசேகர விநாயகர் அறநிலையம் அகஸ்தீஸ்வரம்
19. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் கோதை கிராமம்
20. கணக்கம்பட்டி சிவராத்திரி வழிபாடு
21. திருஆரூர் - மகா சிவராத்திரி விழா
22. திருப்பத்தூர் மாவட்டம் கருமன் குட்டை கிராமம் மகா சிவராத்திரி அழைப்பிதழ்
23. அருள்மிகு திருநலமங்கை சமேத அருள்மிகு சொர்ணலிங்கேஸ்வரர் திருக்கோயில் அழைப்பிதழ்
24. கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து ஈஸ்வரர் ஆலய அழைப்பிதழ்
இது தவிர கூடுவாஞ்சேரி வேலி அம்மன்
ஆலயம், நந்திவரம் நந்தீஸ்வரர் கோயில், ஆதனுர் ஸ்ரீ கைலாச நாதர் கோயில்,
ஊர்ப்பக்கம் ஊரணீஸ்வரர் கோயில் என உலகெங்கிலும் உள்ள அனைத்து
சிவாலயங்களிலும் சிறப்பு நான்கு கால பூசைகள் நடைபெறும்.
குருவின் அருளாலே குருவின் தாள் வணங்கி,. இத்தனை அழைப்பிதழ்களையும் நமக்கு பகிர்ந்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.
ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சந்திப்போம்
மீள்பதிவாக:-
சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர்! - 19 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2022/02/19.html
ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய 12 ஆம் ஆண்டு மஹா சிவராத்திரி அழைப்பிதழ் - 01.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/12-01032022.html
ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய 11ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி அழைப்பிதழ் - 11.03.2021 - https://tut-temples.blogspot.com/2021/03/11-11032021.html
மகா சிவராத்திரியில் மகேசனை நினைப்போம் - 2020 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/2020.html
சிவராத்திரி தரிசனம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_97.html
TUT சிவராத்திரி தரிசனம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/02/tut_25.html
உலக நன்மை வேண்டி மஹாவேள்வி - சிவராத்திரி சிறப்பு வழிபாட்டு அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2021/03/blog-post.html
சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_82.html
கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம் - மகா சிவராத்திரி 10 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/10-21022020.html
TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html
ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_8.html
TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html
அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் - மகா சிவராத்திரி அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/21022020.html
No comments:
Post a Comment