"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, March 1, 2022

தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன் - 02.02.2022

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

இன்று மாசி மாத சதய  நட்சத்திரம். இன்று காலை  5:00  மணி முதல் நாளை காலை   3 மணி வரை  சதய நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் கோச்செங்கட் சோழ நாயனார் குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய  அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் , அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதியடிகள், கலிக்கம்ப நாயனார், எறிபத்த நாயனார்,காரி  நாயனார் பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். 

இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார்.  மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார், இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த திருநீலகண்ட நாயனார்,   திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்து ,தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்து பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்று, சிவானந்த அனுபவத்தில் முக்தி பெற்றவர் அப்பூதியடிகள். அதுபோல்  இன்று நாம் கோச்செங்கட் சோழ நாயனார் பற்றி அறிய உள்ளோம்.



63 நாயன்மார்களில் இன்று நாம் காணவிருப்பது கோச்செங்கட்சோழ நாயனார்.இவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இவருடைய முற்பிறவியையும் சேர்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் எனக்கு மட்டுமே உரியவன் என்னும் எண்ணம் மனிதர்களைத் தாண்டி சிவகணங்களுக்கும் இருந்தது.புஷ்பதத்தன், மாலியவான் இரு வர்களுக்குள்ளும் சிவனின் பக்தியில் தான் தான் பெரியவன் என்னும் வாக்குவாதம் இருக்கும்.எப்போதும் சச்சரவாக இருக்கும் இவர்கள் இரு வருக்கும் ஒருநாள் வாக்குவாதம் உச்சமடைந்து ஒருவரையொருவர் சபித்துக்கொண்டார்கள்.

புஷ்பதத்தன் மாலியவானை சிலந்தியாகவும், மாலியவான் புஷ்பதத்தனை யானையாகவும் சபித்தார்கள். இருவரும் சோழநாட்டில் வற்றாமல் பாயும் காவிரி ஆற்றின் கரையில் இருக்கும் திருவானைக்காவல் என்னும் இடத்தில் சிலந்தியாகவும், யானையாகவும் பிறந்தார்கள்.கரையின் ஓரமிருந்த நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கம் ஒன்று இருந்தது.

யானையாக இருந்த புஷ்பதத்தன் தனது முற்பிறவியின் பலனால் தும்பிக்கையில் நீரை நிரப்பி மலரை கொணர்ந்து சிவலிங்கத்துக்கு நீர் அபி ஷேகம் செய்து வழிபட்டு வந்தது. சிலந்தியாக இருந்த மாலியவான் லிங்கம் மீது காய்ந்த இலைகள் விழாமல் இருக்க லிங்கத்தைச் சுற்றி வலை களைப் பின்னியது. மீண்டும் யானை பூஜை செய்ய வரும்போது லிங்கத்தின் மீது சிலந்தி பின்னியிருக்கும் வலையை களைந்து பூஜை செய் வதும், அதன் பிறகு வரும் சிலந்தி தன் வலையை காணாமல் வருந்தி மீண்டும் பின்னுவதும் வழக்கமாயிற்று.

யார் இதை செய்வது என்று கண்டறிய நினைத்த சிலந்தி மறுநாள் மரத்தின் பின்பு ஒளிந்து யானை களைவதை கண்டது.யானையை கொல்லாமல் விடுவதில்லை என்று யானையின் தும்பிக்கையில் நுழைந்து யானையைக் கடிக்க, யானை வலிதாங்காமல் தும்பிக்கையை நிலத்தில் அடித்தது. இதில் சிலந்தி யானை இரண்டுமே இறைந்துவிட்டது. யானை குற்றம் புரியாததால் சிவனிடமும், சிலந்தி யானையைக் கொல்ல நினைத்ததால் மனிதபிறவியாக எடுக்க நேரிட்டது. சிவனை வணங்கியதால் அரச குலத்தில் பிறந்தது.

குழந்தைசெல்வம் இல்லாத சோழ மன்னனான சுபதேவரருக்கும், கமலவதி அரசிக்கும்  மகனாகப் பிறந்த மாலியவானை கோச்செங்கட்சோழர் என்னும் பெயரிட்டு அன்புடன் வளர்த்துவந்தார்கள். இவர் பிறக்கும் போது ஜொதிடர் ஒருவர் இன்னும் சற்று காலம் தாழ்த்தி இந்தக் குழந்தை பிறந்தால் உலகையே ஆள்வான் என்று சொல்லவே அதைக் கேட்ட அரசியார் சற்று நெரம் வலி தாங்கலாம் என்று அரசனிடம் சொல்லி தலை கீழாக தொங்கினாள்.

ஜோதிடர் குறிப்பிட்ட நேரம் வந்ததும் அழகான ஆண்மகவை பெற்றெடுத்து கொஞ்சினாள். ஆனால் என் கோவே செங்கண்ணா  என்று சொல்லி மகிழ்ந்த சிலநேரத்தில் இயற்கை எழுதினாள்.சுபதேவர் மகனை போர்க்கலையிலும், வீரத்திலும், தீரத்திலும் மகனை சிறப்பாக வளர்த்து தகுந்த வயதில் அவனை அரசனாக முடிசூட்டினார்.

தனது முற்பிறவி பற்றி அறிந்துகொண்ட கோச்செங்கட்சோழர் சிவனின் மீது பக்தி கொண்டு திருவானைக்காவலில் கோயில் எழுப்பினார். பூர்வ ஜென்மத்தில் புஷ்பதத்தன் யானை உருவம் கொண்டு தன் வலையை அழித்ததால் யானை சிவலிங்கத்தை வழிபட முடியாதபடி மாடக் கோவில்க ளைக் கட்டினார். இவர் 70 கோயில்களை மாடக்கோவிலாக கட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோச்செங்கட் சோழ நாயனார் தில்லையில் தங்கி தியாகேச பெருமாளை மூன்று வேளையும் வழிபட்டு  இறுதியில் தில்லையம்பனையே சரண டைந்து அவரது பாதங்களை அடைந்தார்; சிவாலயங்கள் மாசிமாதம் சதயம் நட்சத்திரத்தன்று இவருக்கு குருபூஜை செய்யப்படுகிறது.


"திருவானைக்கா திருமதில் பணிகளைச் செய்தவர். எழுபது சிவாலயங்களைக் கட்டியவர்."



தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் - 26.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/26022022.html

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - 20.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/20022022.html

 கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/06022022_5.html

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் - 03.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/03022022.html

 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் - 26.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/26012022_25.html

சண்டேசுவர நாயனார் குரு பூஜை - 22.01.22 - https://tut-temples.blogspot.com/2022/01/220122.html

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் - 16.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/16012022.html

கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன் - 15.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/15012022.html

 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் - 09.01.2022  - https://tut-temples.blogspot.com/2022/01/09012022.html

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் - 03.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/03012022.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

No comments:

Post a Comment