"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, March 18, 2022

பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் தரிசனம் பெறலாமே!

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

பங்குனி மாதம் என்றாலே நாம் கொண்டாடி மகிழும் விழாக்கள் ஸ்ரீ ராம நவமி மற்றும் பங்குனி உத்திரம் வழிபாடு ஆகும். உத்திரம் நட்சத்திரம் சித்திரை மாதம் முதல் வந்தாலும் பங்குனி மாத உத்திர நட்சத்திரம் மிக மிக சிறப்பு வாய்ந்த ஒன்று ஆகும். பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் அனைத்து கோயில்களிலும் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகின்றது. ஒரே ஒரு இறையின் திருக்கல்யாணம் என்றாலே நமக்கு கொண்டாட்டம் தான். ஆனால் பங்குனி உத்திரம் அன்று முருகன் - தெய்வானை திருமணம், ஸ்ரீராமர் - சீதை திருமணம், சுந்தரேஸ்வரர் - மீனாட்சி திருமணம், ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் என நாம் காண முடிகின்றது.

பங்குனி உத்திர திருக்கல்யாண தரிசனம் கண்டு அன்றைய தினம் கோயிலில் சேவை செய்வது மிக சிறந்த பரிகாரம் என்று கூட சொல்லலாம். இன்றைய பதிவில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்  தரிசனம் பெற இருக்கின்றோம். 



தாயார் லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மகரிஷி  திருக்கல்யாணக்காட்சி 

சித்தர் முத்தர்

விண்ணவரும் மலர் தூவ ,

வாத்தியங்கள் முழங்க

சதுர்முகனார் பதி உடன் நின்று மந்திரம் ஓத!

காக்கும் கடவுள் 

தம் இதயத்தில் வீற்றிருக்கும் லட்சுமியுடன் நின்று கருணைபுரிய!! 

அங்கே, ஆதி சிவனார் தம் சக்தியுடன் அருட்பார்வை கொண்டு கருணை விழியால் அகமகிழ்ந்து அருளாசி பொழிய!!! 

மூஷிக வாகன முதல்வனும்! 

செந்தமிழ் தலைவன் முருகனும்! 

முத்தமிழால் ஆசி கூற!! 

நாரதர் வீணை மீட்ட!!!

அகில் சந்தனவாசம் உலகெலாம் பரவ அண்டங்கள் யாவும் வியந்த நோக்கிய வைபவம் அகத்தியர் லோபமுத்திரை திருக்கல்யாண வைபோகமே...

முதலில் ஸ்ரீ லோபாமுத்திரா ஸ்ரீ அகத்தியர் திருக்கல்யாணம் அரும்பாக்கம் அண்ணாநகர் சென்னை





மயிலை கபாலியார், ஶ்ரீ ரெங்கநாயகி தாயார் நம்பெருமாள் ,பங்குனி உத்திர , வருடத்தில் ஒரு நாள் மட்டும் நடைபெறும் சேர்த்தி வைபவம், பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி குதிரை வாகனத்தில் பவனி திருப்பரங்குன்றம், மதுரை, அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம், அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அ௫ள்மிகு பஞ்சலிங்கேஷ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் அலங்காரம் கொண்டாபுரம் காவேரிப்பாக்கம்,வானமாமலை ஸ்ரீ வரமங்கை தாயார் சமேத தெய்வநாயக பெருமாள் பங்குனி பிரம்மோற்சவம், திருத்தேர் என அனைத்து அருள்காட்சிகளையும் கீழே பகிர உள்ளோம்.
























































ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத மாமரத்து  ஈஸ்வரருக்கு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் மேலே பெறலாம்.

என்ன அன்பர்களே..எப்படி இருந்தது? இடையில் ஓதிமலை ஓதியப்பர் தரிசனம் பெற்றுள்ளோம். ஒரே பதிவில் பல திருத்தலங்களில் நேற்று கொண்டாடிய பங்குனி உத்திர தரிசன காட்சிகளை அனைவரும் பெற்று இருப்பீர்கள் என்று நாம் நம்புகின்றோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பிரார்த்தனை செய்து இந்தப் பதிவை நிறைவு செய்வோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம். முருகன் அருள் முன்னின்று நம்மை வழிநடத்திட வேண்டுகின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீள்பதிவாக:-

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே - பங்குனி உத்திரம் சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/03/blog-post_26.html

பங்குனி உத்திரம் - கந்த குரு கவசம் சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_41.html


 முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_23.html

பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் தரிசனம் பெறுங்கள் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_5.html

நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_22.html

பங்குனி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_3.html









No comments:

Post a Comment