"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, March 26, 2022

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104 ஆம் ஆண்டு குருபூஜை - 27.03.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது குருபூஜை தரிசனங்கள் கண்டு வருகின்றோம்.நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை, பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022,  குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022, ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை,  ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022  என சித்தர்களின் தரிசனம் நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்று அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104வது மஹா  குரு பூஜை அழைப்பிதழ் காண இருக்கின்றோம்.


அருள்மிகு  ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104வது மஹா குருபூஜை நாளை 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை  நடைபெறுகிறது.அடியார்கள், பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆசிர்வாதம் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

இடம் : ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்  மடாலயம், முதல்  தெரு,  சாமியார் மடம், வியாசர்பாடி -39.(அம்பேத்கர் கல்லூரி எதிர்ப்புறம்  உள்ள தெரு

நம்முள் உள்ள இருளை நீக்கி, அஞ்ஞானம் அறுத்து , ஞானம் புகுத்தி நம்மை உயர்வுற செய்பவர் குரு. நமக்கு தெய்வத்தை உணர்த்துபவர், குருவருள் இருந்தால் தான் நமக்கு திருவருள் கிடைக்கும். இது ஏதோ மேம்போக்காக சொல்லும் வாக்கியம் அல்ல. நம்மால் நம்மை பார்க்க முடியுமா?

முடியும் என்றால் நம் முதுகை பார்க்க முடியுமா? முடியாது அல்லவா? முதுகை பின் எப்படி பார்ப்பது? நம் முதுகிற்கு பின்னே ஒரு கண்ணாடி வைத்தால் பார்க்கலாம் அன்றோ? அடுத்து நம் முகத்தை நம்மால் பார்க்க முடியுமா? கண்ணாடியின் துணையின்றி நம் முகத்தை நம்மால் பார்க்க முடியாது. ஆக மொத்தத்தில் நம் முதுகு,முகம் இரண்டும் பார்க்க கண்ணாடி வேண்டும். குருவருள் என்ற கண்ணாடியும்,திருவருள் என்ற கண்ணாடியும் இருந்தால் தான் நாம் நம்மை முழுமையாக காண முடியும். நம் புறத்தோற்றம் பார்க்கவே இப்படி என்றால். நம் அகத்தோற்றம் காணவும் கட்டாயம் குருவருள் வேண்டும். அப்படியொரு குருவை இன்றைய பதிவில் காண இருக்கின்றோம்.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் - நாம் இரண்டு முறை தரிசித்து இருக்கின்றோம். முதல் முறை எடுத்த காட்சி படங்கள் இல்லாததால் நாம் பதிவை அளிக்க முடியவில்லை. இந்த ஆண்டும் மீண்டும் தரிசனம் பெற்றோம். தரிசன துளிகளை அந்த பெருங்கடலில் இருந்து எடுத்து தருகின்றோம். தாகம் உள்ள அன்பர்கள் சுவைத்து கொள்ளவும். வியாசர்பாடியில் அருள்பாலிக்கும் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் பற்றி இதோ உணர உள்ளோம். அதற்கு முன்பாக வியாசர்பாடி பற்றி சுருக்கமாக...

இந்த கோவில் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில். வியாசர் வழிபட்ட ஸ்தலம். அதனால் தான் இந்த ஊருக்கு வியாசர்பாடி என்னும் பெயர் வந்தது. இந்த ஸ்தலத்து சிவன் சூரியனால் பூஜிக்கப்பட்டவர். அதனால் தான் இந்த ஸ்தலத்து சிவனுக்கு ரவீச்வரன் என்னும் பெயர் வந்தது.சூரியனின் பல பெயர்களில் ரவியும் ஒன்று. வியாசர் முதலான ஞானிகள் வந்த பொழுது இது ஒரு அழகிய கிராமமாக இருந்தது. சென்ற நூற்றாண்டில் கூட. அந்த பசுமையை குறிக்கும் விதமாக அம்மனுக்கு மரகத அம்மன் என்னும் பெயர் வந்ததாம்.பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கோவிலில் ஒரு மரகத அம்மன் இருந்ததாக கூட செவி வழி செய்தி உண்டு. தினமும். இன்றும் இந்த ஸ்தலத்து சிவனை சூரியன் உதிக்கும் பொழுது, உச்சி வேளையில், மற்றும் மாலையில் வழிபடுவதாக ஐதீகம். அதற்கு ஏற்றவாரே. மூன்று வேளையும் சூரிய ஒளி சிவ லிங்கத்தின் மீது மாலை போல் விழுமாறு. பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இன்று நிறைய கட்டிடங்கள் முளைத்து விட்டதால் முன்பு பட்ட அளவு இப்பொழுது சூரிய ஒளி சிவ லிங்கத்தின் மீது படவில்லையென்றாலும். சூரியன் சிவனுக்கு செய்யும் வழிபாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.


அடுத்து கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் தரிசனம். 




தூய மாதவம் செய்தது தொண்டை நன்னாடு என்று பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாராலும், தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்று ஓளவ்வையாராலும் போற்றப்பட்ட தொண்டை நன்ணாட்டில் அவதரித்தவர் தான் கரபாத்திர சுவாமிகள். தொண்டை நன்னாடு. 
அன்று 24 கோட்டங்களாக இருந்தது அவை.

1. புழல் கோட்டம், 2. ஈக்காட்டுக் கோட்டம், 3. மணவிற் கோட்டம்,4. செங்காட்டுக் கோட்டம், 5. பையூர்க் கோட்டம், 6. எயில் கோட்டம், 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம், 9.களத்தூர்க் கோட்டம், 10. செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம், 12. வெண்குன்றக் கோட்டம், 13. பல்குன்றக் கோட்டம், 14.இளங்காட்டுக் கோட்டம், 15. காலியூர்க்கோட்டம், 16. செங்கரைக் கோட்டம், 17. பழுவூர்க் கோட்டம், 18. கடிகூர்க் கோட்டம், 19. செந்திருக்கைக் கோட்டம், 20. குன்றவர்த்தனக் கோட்டம், 21.வேங்கடக் கோட்டம், 22. சேத்தூர்க் கோட்டம், 23. வேலூர்க் கோட்டம், 24. புலியூர்க்கோட்டம் என்பவையே அவை.


இக்கோட்டங்களில் சென்னையையும் அதைச் சூழ்ந்துள்ள ஊர்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கினவை புழல், புலியூர்,மணவில் என்னும் மூன்று கோட்டங்களாகும்.சென்னை திருப்போரூரில் செங்கமலத்தமையாருக்கும், முத்து சாமி அய்யா அவர்களுக்கும் மகனாக அவதரித்தவர் தான் சிவப்பிரகாசர்.


விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்னும் முதுமொழிக்கு ஏற்ப்ப சுவாமிகள். 3, 4 வயதில் கூட விளையாட்டில் நாட்டம் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு மௌன நிலையில் மணிக்கணக்காக அமர்ந்து விடுவார். ஒரு குழந்தைக்கு இயற்கையாய் இருக்க வேண்டிய குறும்பு இல்லை, சுட்டி தனம் இல்லை, எந்த வித சேட்டையும் செய்வதில்லை. எப்பப்பாரு மௌனமாக, அமைதியாக எங்கோ சிந்தித்து கொண்டு இருந்தால். அந்த குழந்தையின் பெற்றோர்கள் என்ன? நினைப்பார்கள். குழந்தையின் மூளையில் ஏதோ குறைபாடு என்று நினைப்பார்கள். சுவாமிகளின் பெற்றோர்களும் அவ்வாறே நினைத்தார்கள். பயந்தார்கள். இது தெய்வீக குழந்தை என்பதை அவரது பெற்றோர்களாலும் சரி. உடன் பிறந்தவர்களாலும் சரி. புரிந்து கொள்ள முடியவில்லை. ரத்தின வேல், மாணிக்கம், சிவ ஞானம் ஆகிய மூவர் பிறக்க கடை குட்டியாக பிறந்தவர் தான் சிவப்பிரகாச சுவாமிகள்.


சிவப்பிரகாச சுவாமிகளுக்கு 16 வயது இருக்கும் பொழுது அவரின் தந்தை முத்துசாமி காலமானார். அப்பொழுது அவரின் வயது 60. அதன்பிறகு. இவர் தனது அண்ணன்களோடு சேர்ந்து வெற்றிலை ஏல வாணிகத்தை சற்று பெரிய அளவில் நடத்தினார். அந்த சமயத்தில் வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவற்றில் கரைக்கண்ட ரத்தின தேசிகரிடம் இவர் பல நூல்களை பயின்றார். அதில். இவர் மனத்தின் கண் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நூல் ரிபு கீதை. இவரது குரு பரிசாக அதை சிவபிரகாச ஸ்வாமிகளுக்கு கொடுத்தார்.

 பகவத் கீதை தவிர்த்து மொத்தம் 26 கீதைகள் உள்ளன. அவை.
1. ரிபு கீதை, 2. பிட்சு கீதை, 3. பராசர கீதை, 4. போத்திய கீதை, 5. ஷடாஜ கீதை, 6. உதத்திய கீதை, 7. ராம கீதை, 8. தேவி கீதை, 9. ஹம்ச கீதை, 10. ஹரித கீதை, 11. சம்பக கீதை, 12. வாமதேவ கீதை, 13. சூரிய கீதை, 14. சிவ கீதை, 15. கபில கீதை, 16. மங்கி கீதை, 17. ரிஷப கீதை, 18. விருத்திர கீதை, 19. வசிஷ்ட கீதை, 20. உத்தவ கீதை, 21. பிரம்ம கீதை, 23. பாண்டவ கீதை, 24. உத்தர கீதை, 25. அவதூத கீதை, 26. வியாச கீதை.


ரிபு கீதை- காணும் அனைத்துமே பிரும்மம்; நாமனைத்தும் அதன் ஸ்வரூபமே. சிவரகசியத்தின் இதயத்தானமாக ரிபு கீதை விளங்குகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை முன்னர் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் திருக்கேதாரத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது எனக்கூறப்படுகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை 50 அத்தியாயங்களில் 2493 சுலோகங்களில் சொல்லப்படுள்ளது.


காணும் அனைத்துமே பிரும்மம்; நாமனைத்தும் அதன் ஸ்வரூபமே பேதத்திலுள்ள மோகத்தை விலக்கு என்று பிரும்ம புத்திரரான ரிபு அவரது சீடர் நிதாகருக்குஅருளியது ரிபு கீதை.

சுவாமிகளுக்குப் பதினாறு வயதாகும்போது, அவரது குடும்பம் சென்னைக்கு வந்து சேர்ந்தது. எதிலும் பற்றற்று இருந்த சிவப்பிரகாச சுவாமிகள், வேதாந்த பானு சைவ இரத்தின தேசிகரிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

அடிக்கடி தனியிடம் நாடி யோகப் பயிற்சியிலும் ஈடுபட்ட சுவாமிகள், ஒருமுறை நிர்விகற்ப சமாதி நிலையை அடைந்தபோது, அவர் இறந்துபோனதாகக் கருதி அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். சுவாமிகள் அந்த நிலையிலிருந்து மீண்ட பின், அவரது பெற்றோர் அச்சமுற்று அவருக்குத் திருமணம் செய்விக்க முயற்சி செய்தனர்.

அடிக்கடி தனியிடம் நாடி யோகப் பயிற்சியிலும் ஈடுபட்ட சுவாமிகள், ஒருமுறை நிர்விகற்ப சமாதி நிலையை அடைந்தபோது, அவர் இறந்துபோனதாகக் கருதி அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். சுவாமிகள் அந்த நிலையிலிருந்து மீண்ட பின், அவரது பெற்றோர் அச்சமுற்று அவருக்குத் திருமணம் செய்விக்க முயற்சி செய்தனர்.

சுவாமிகள் அதிலிருந்து விடுபட எண்ணித் திருவொற்றியூர் பட்டினத்தடிகளின் ஆலயத்திற்குச் சென்று தாம் அணிந்திருந்த உடைகளைத் துறந்து, கோவணத்தை உடையாகக் கொண்டார். அப்போது அவருக்கு வயது பத்தொன்பது.சுவாமிகளைத் தேடி வந்த அவரது தமையனார் அவரை இல்லத்திற்கு அழைத்து வந்தார். அவரது கோலத்தைக் கண்ட சுவாமிகளின் தாயார் திடுக்கிட்டு அவரை இல்லத்திற்குள் அழைத்தார். சுவாமிகள் இல்லத்திற்குள் வர மாட்டேனென்று திண்ணையில் அமர்ந்துகொண்டார். அவரது அன்னையார் உணவு கொடுக்க முன் வந்த போது இதுதான் விதி என்று கூறித் தமது கரத்தினை நீட்டினார் . அதில் மூன்று பிடி அன்னம் பெற்று உண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அவர் வாழ்ந்த காலம் முழுவதும் கரத்தில் அன்னம் பெற்று உண்டதால் சுவாமிகளுக்குக் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் என்ற பெயர் நிலைத்தது.
பின்னர் திருவான்மியூரில் ஓரு ஆசிரமத்திற்குச் சென்று அங்கிருந்த மரத்தினடியில் தவமியற்றினார். அன்பர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று சூளை செங்கல்வராயன் தோட்டத்திற்குச் சென்று ஒரு கிச்சிலி மரத்தினடியில் ஐம்புலன்களை ஒடுக்கிச் சமாதி நிலையிலிருந்தார். இங்கு தம்மைத் தரிசிக்க வரும் பக்தர்களால் தமது தவத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்று ஒருவருமறியாமல் பொதிகை மலைக்குச் சென்றார். அங்கு அகத்தியர் ஆசிரமத்தின் அருகில் ஒரு மரத்தினடியில் நிஷ்டையில் இருந்தார். அங்கு அவர் தேடிய ஞானம் சித்துக்கள் அனைத்தும் கிட்டின. மூன்று ஆண்டுகள் அங்கேயே தங்கிவிட்டார். அவருடைய அன்பர்கள் அவரைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் அழைத்துவந்தனர்.

சுவாமிகள் தங்கியிருந்த தோட்டத்தில் அவருக்கு ஓரு ஆசிரமம் அமைத்துக் கொடுத்தனர். அந்த ஆசிரமத்தினுள் நாற்பத்தெட்டு நாட்கள் வரை உணவின்றி சமாதி நிலையில் இருந்தார். பின்னர் தமது அன்பர்களுக்கு உபதேசம் செய்ததுடன் ‘ஞானசகாய விளக்கம்’, ‘மனன சிந்தாமணி’ போன்ற நூல்களையும் இயற்றினார். மொழி விற்பன்னர்களை அழைத்துவந்து யோக நூல்களைத் தமிழில் இயற்றச் செய்தார்.

சாதுக்களுக்கு நிரந்தரமாக ஒரு மடம் அமைக்க விரும்பினார் . இதனையறிந்த அவரது தொண்டர் ஒருவர் வியாசர்பாடியில் நாகர் ஆலயம், குளம் உட்பட்ட தோட்டத்தைக் கிரயம் பெறுவதற்கு உதவினார். சுவாமிகள் அங்கு ‘ஆனந்தாசிரமம்’ அமைக்கத் துவங்கியதும் அது சாமியார் தோட்டம் என்ற பெயரைப் பெற்றது.

தமது ஞான யோகத்தால் பல சித்துக்களைப் பெற்ற சிவப்பிரகாச சுவாமிகள் வெளிப்படையாக எந்த சித்துக்களையும் நிகழ்த்திக் காட்டியதில்லை. தம்மை நாடி வரும் பக்தர்களின் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தமது பார்வையாலும் வார்த்தையாலும் தீர்த்து வைத்திருக்கிறார்.

தமது உடலிலிருந்து ஆன்மாவைப் பிரிக்கும் நேரம் வந்துவிட்டதை அறிந்து மூன்று நாட்களுக்கு முன்பே அதனைத் தமது பக்தர்களுக்கு அறிவித்துவிட்டு ‘சம்போ சம்போ’ என்று உரத்துக் கூறிக்கொண்டே யோகத்தில் ஆழ்ந்துவிட்டார். பிங்கள ஆண்டு, பங்குனி மாதம், குரு வாரம் உத்திராட நட்சத்திரத்தில் சுவாமிகள் விதேக கைவல்யம் அடைந்தார்.

பக்தர்கள் சுவாமிகளின் திருமேனியை முறைப்படி சமாதி செய்து சமாதியின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தனர். இப்போது சுவாமிகளின் ஜீவசமாதி மிகப் பெரும் சிவாலயமாக உருவாகியுள்ளது.



ஒரே ஒரு ஞானி அதிஸ்டானம் என்று நினைத்து போய் கடைசியில் ஒன்பது ஞானியர்கள் கோவில் என்றதும் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒரு ஞானியை தரிசிக்க போக ஒரே இடத்தில் ஒன்பது ஞானியர்களின் அதிஸ்டானம் என்று அங்கு பூஜை செய்பவர் சொன்னதும் நமக்கு  எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.  9 இல் 6 பேர் சமாதி தான் இப்பொழுது அங்கு இருப்பவர்களுக்கு தெரிகிறது  என்பது இங்கு கண்கூடாய்த் தெரிகின்றது.




அன்பே உருவான ஆற்றல் இங்கே வெளிபட்டுக் கொண்டிருக்கின்றது. உள்ளே நுழைந்து இடப்புறம் சென்றால் சுவாமியைத் தரிசிக்கலாம். சித்தர்களை நாம் தரித்தால் அவர்கள் நம்மிடம் சிக்கலாம். அதான் "தரி"சிக்கலாம் என்பதன் தாத்பர்யம்.




இந்த ஆலயத்தைக் கட்டி முடித்த ஸ்ரீ முக்தாநந்தா சுவாமிகள் கண்டோம். பின்னர் கோயிலை விட்டு வெளியே வந்தோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சித்தர்கள் ஜீவ நிலை கண்டோம்.








இவர் அதிஷ்டானம் உள்ள் இதே இடத்தில் இவரது ஒன்பது சீடர்க்ளின் அதிஸ்டானமும் இருக்கிறது. அதில் யதிராஜர் எனும் ஒரு வைஷ்ணவரின் அதிஸ்டானமும் இருக்கிறது. வெளியில் சங்கு, சக்கர முத்திரைகள் பொறிக்கப்பட்டு இருக்கிறது. அவரை பற்றிய விவரங்கள் நமக்கு  கிடைக்கவில்லை. ஆனால் நாம் தரிசனம் பெறலாமே.







அங்கிருந்த  தாயம்மா ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஜீவ ஆலயம் மேலே. இது போல் தான் கிட்டத்தட்ட 6 சித்தர்கள் இங்கே அருள் பாலித்து வருகின்றார்கள். 

நாம் நம் நீண்ட நாள் நெருங்கிய நண்பரை( ராணிப்பேட்டை சார்ந்த திரு.ஸ்ரீதர் ) இங்கே சந்தித்தோம் என்பது மகிழ்வாய் இருந்தது. இணைய உறவுகளை இதய உறவுகளாக மாற்றிய அந்த தருணம் இன்னும் உயிர்ப்பாய் இருக்கின்றது.

இது போன்ற ஆலயங்களுக்கு செல்லுங்கள். கர்ம வினைகளை கரைத்துக் கொள்ளுங்கள்.

இடம் : ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்  மடாலயம், முதல்  தெரு,  சாமியார் மடம், வியாசர்பாடி -39.(அம்பேத்கர் கல்லூரி எதிர்ப்புறம்  உள்ள தெரு

குருவே சரணம்.

 ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/68-27032022.html

ஓம் ஸ்ரீ குருவே சரணம்! - ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை - https://tut-temples.blogspot.com/2022/03/99.html

குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/8-13032022.html

 குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

 பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/11032022.html

 மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 09.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/134-09032022.html

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

No comments:

Post a Comment