அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய குரு நாளில் நம் தளம் சார்பில் குருவருளால் வழக்கம் போல் அன்னசேவை, மருத்துவ உதவி என சிறு தொண்டில் நாம் இணைந்தோம். இன்றைய அன்னசேவையாக சின்னாளபட்டியில் 7 அன்பர்களுக்கு காலை உணவாக தயிர் சாதம் குருவருளால் வழங்கப்பட்டது. அடுத்து இறை மடம் அமைப்பின் மூலம் 50 அன்பர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அவர்கள் பகிர்ந்த செய்தியை இங்கே அனைவரும் அறிய தருகின்றோம்.
இறைமடம் இறை அமுது
இன்று ( 24.3.2022 ) வியாழன் கிழமை இறைவன் கருணையால் 50 நபர்களுக்கு இறை மடம் சார்பாக இறையமுது வழங்கப்பட்டது.
இந்த புண்ணிய மாத பூர்வ புண்ணிய விசேஷ காலத்தில் இறை அருளுடன், இறையமுது வழங்கிய
இறைமட அன்பர்கள்:
இறைமடம் அன்பர் அன்பு சகோதரர் திரு ராகேஷ் அவர் மனாளினி சகோதரி திருமதி ஸ்ரீவித்யா, மற்றும் தேன் கூடு தேனீக்கள் (TUT) குடும்பத்தினர்கள்.
குழு அன்பர் அவர்களின் செல்வக்குழந்தை, மற்றும் அவர்கள் குடும்பத்தார் அனைவரும் சர்வ மங்களத்துடன் எல்லா வளமும் பெற்று வளமாய் வாழ குரு அருளாலும், திரு அருளாலும் சகல சௌபாக்கியத்துடன், ஆனந்தமாய் வாழ்வில் எந்தவித குறையும் இல்லாமல் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை இறைமடம் சார்பாக பிரார்த்தனை செய்கிறோம்.
சிவாய நம
திருச்சிற்றம்பலம்
இறைமடம்
இந்த ஒரு வாழ்த்து செய்தி நம் குழு அன்பர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். மேலும் இறை மடம் அமைப்பின் தொண்டிற்கும் தலை வணங்குகின்றோம்.
யோக கலையின் குரு என்று அழைக்கப்படும் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் ஜென்ம நட்சத்திரம் பங்குனி மாத மூலம் நக்ஷத்திரம் ஆகும். நாளை காலை ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அவதார பெருவிழா சென்னை அரும்பாக்கம் வினை தீர்த்த விநாயகர் கோயிலில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. அனைவரும் வருக! ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் அருள் நிறைந்து பெருக!! நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நிறைந்து வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பதஞ்சலி மகரிஷியின் அருள் பெறுக!! என்று அன்போடு அழைக்கின்றோம்.
நமக்குத் தெரிந்த வரையில் யோக சாஸ்திரத்திற்கு மூலமே இவர் தான் என்று தெரிந்தது.சற்று ஆழ்ந்த தேடலுக்குப் பிறகு கிடைத்த செய்திகளை இங்கே பகிர்கின்றோம்.
குருவின் உத்தரவின் பேரில் பதஞ்சலியின் குரு காயத்ரி மந்திரம்
ஸ்ரீபதஞ்சலி காயத்ரி
ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்
ஸ்ரீ
ராமர் என்று சொன்னவுடன் அவரது இணை பிரியாத பக்த சிரோண்மணி ஸ்ரீ ஆஞ்சநேய
ஸ்வாமியினை நினைப்பது போல,ஸ்ரீ நடராஜப் பெருமானை நினைக்கும்போது இருவரின்
நினைவு வரும். ஸ்ரீ நடராஜரின் பிம்பமானாலும் சரி, ஓவியம் ஆனாலும் சரி அவர்
அருகே இந்த இருவரும் கண்டிப்பாக இருப்பார்கள்.
பாம்பும் புலியும் இருபக்கம் என்று இந்த இவர்களைப் பற்றி பல சாஸ்திரங்கள் , புராணங்களில் சொல்லப் பட்டுள்ளது. இதில்
ஒருவருக்கு உடலில் பாதி கீழே பாம்பாகவும், இன்னொருவருக்கு பாதி உடல்
புலியாகவும்.அதாவது, புலிக்கால்களுடன் இருக்கும்.பாண்டிய மன்னனுக்காக கால்
மாறி ஆடிய நடராஜர் இவர்களுக்காகவும் கால் மாறி ஆடியுள்ளார். இந்த இருவரே ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி என்றும்,வியாக்ர பாதர் எனவும் அழைக்கப் படுகின்றனர்.
இந்த
இருவரும் நடராஜப் பெருமானின் நடனத்தில் எப்போதும் தங்கள்
கண்களையும்,இதயத்தையும் நிலை நிறுத்தி,சதா இறை சிந்தனையில் தங்களை
அர்ப்பணித்துக் கொண்டு தொழுத வண்ணம் நின்றிப்பார்கள்.ஸ்ரீ பதஞ்சலி ஸ்ரீ
ஆதிசேஷனின் அவதாரம் என்று வரலாற்றில் உண்டு.பிரளயம் ஏற்பட்டபோது,இந்த உலகம்
அழிந்த பின்பு,மிச்சமாய் இருந்தவர் ஆதிசேஷன் என்கிற நாமம் மட்டுமே.
திருப்பாற்
கடலில்,ஸ்ரீமன் நாராயணனுக்கு படுக்கையாக இருப்பவர்.அனந்தன் என்றால் பாம்பு
என்று பொருள்.நாராயணன் மேல் படுத்து இருப்பதால் அனந்த சயனன் என்று
புராணங்கள் சொல்கின்றது.
ராமாவதாரத்தில்.ஸ்ரீ ராமருக்கு தம்பியாக,கிருஷ்ணாவதாரத்தில் அண்ணன் பலராமராகவும் அவதாரம் செய்தவர் ஆதிசேஷராகிய பதஞ்சலி மகரிஷியே ஆவார்.
இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.
தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.
இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.
வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.
“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர்.
“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.
“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்று கேட்டார் இன்னொரு சீடர்.
“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்” என்றார் பதஞ்சலி.
பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.
முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.
“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.
படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.
பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.
பதஞ்சலி முனிவரின் தியானச் செய்யுள்
ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே
சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே
பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தர வேண்டும் பதஞ்சலியாரே!

போகர் பெருமான் போற்றிய சத்குரு பதஞ்சலி மாமகரிஷி
ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம்
வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின் நந்தி பாதம்
தானந்தமாகியதோர் காளாங்கி பாதம் கனவருடவியாக்கிரமர் பதஞ்சலியின் பாதம்
போனந்தமாகியதோர் ரிஷிகள் பாதம் போற்றி ஏழாயிரம் நூல் பகலுவேனே.
-போகரின் சப்த காண்டம் – 7000
அத்தியின் புத்திரரை முத்தியின் வித்தகரை தத்திதன் சோததரை சித்திதன் நாதகரை
தித்தித்தன் அஞ்சலரை பத்தித்து வந்தவரை புத்தகத்தைப் போற்றிடவே
எத்தித்தும் ஏந்தலாமே......பதஞ்சலி மகரிஷியே நமக
இது ஒரு யோகத்தின் குறிப்பு .பிறப்பின் ரகசியம்.இரண்யகர்ப்பர்
இந்த நன்னாளில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் தாள் பணிவோம்.
ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
ஓம் ஸ்ரீ குருவே சரணம்! - ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை - https://tut-temples.blogspot.com/2022/03/99.html
குருவை
நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு
குருபூஜை - 13.03.2022 -
https://tut-temples.blogspot.com/2022/03/8-13032022.html
குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html
பேரானந்தத்தின்
திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022 -
https://tut-temples.blogspot.com/2022/03/11032022.html
மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 09.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/134-09032022.html
ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html
ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html
யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html
பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html
அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html
இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html
கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html
புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html
புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html
திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html
TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html
சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html
சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html
சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html
சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html
சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html
உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html
கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html
ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html
பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3) - https://tut-temples.blogspot.com/2019/09/3.html
பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html
சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html
தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html
நினைத்ததை
நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் -
04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html
களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html
நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html
சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html
குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html
சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html
அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html
No comments:
Post a Comment