"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, March 3, 2022

அய்யா உண்டு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளம் சார்பில் மாசி மாத சிவராத்திரி வழிபாடு குருவருளால் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆலய தீப எண்ணெய், பூசைக்கான சிறு தொகை, சிவபுராணம் வழங்கியது என அமைந்தது. நம் தளம் சார்பில் வழக்கம் போல் செய்து வரும் சேவைகளுக்கும் இம்மாதம் குருவருளால் கொடுத்துள்ளோம். இவற்றை தங்கள் பார்வைக்கு அறிய தருகின்றோம்.

1. கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய பூஜை

2. கூடுவாஞ்சேரி விநாயகர் கோயில் - அமாவாசை லோக ஷேம தீப வழிபாடு - அன்னதானத்துடன் 

3. மாதந்தோறும் தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் - சிறு தொகை 

4. மாதந்தோறும் ஒரு நாள் - ERS டிரஸ்ட் சார்பில் நடைபெறும் அன்னதானம் 

5. தென்காசி ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் தினமும் மதியம் ஒரு அன்பருக்கு அன்னசேவை 

6.மாதந்தோறும் திருஅண்ணாமலை சாதுக்கள் அன்னதானம் - சிறு தொகை உபயம் 

7. மாதந்தோறும் தர்ம சிறகுகள் அறக்கட்டளை - சிறு தொகை உபயம் 

8.கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மாதந்தோறும் குடிநீர் உபயம் 

9.கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மாதந்தோறும் கிருத்திகை,சதுர்த்தி பூஜைக்கு மாலை உபயம் 

10. வருடமொருமுறை திருஅண்ணாமலையில் மகேஸ்வர பூஜை 

11. தமிழ் மாத விழாக்கள் ஒட்டி கோயில்களில் நம் தளம் சார்பில் சேவை - உதாரணமாக இந்த சிவராத்திரியில் கோயில்களுக்கு இலுப்பெண்ணெய் கொடுத்துள்ளோம்.

சிவராத்திரி சேவை 

1. சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர் - சிவராத்திரி வழிபாட்டிற்கு சிறு தொகை

2. இறை மடம் ஆன்மிக குழு சார்பில் திருச்சி சுற்றியுள்ள கோயில்களுக்கு இலுப்பெண்ணை - 2 டின் 

3, பண்ருட்டி ஸ்ரீ அகத்தியர் கோயிலுக்கு ஆலய தீப எண்ணெய் 

4. விருதுநகர் ஸ்ரீ சிவகுரு மடம் - சிவராத்திரி வழிபாட்டிற்கு சிறு தொகை 

5. ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில் - சிவராத்திரி வழிபாட்டிற்கு சிறு தொகை

6. சின்னாளப்பட்டி ஸ்ரீ சதுர்முக முருகப்பெருமான் ஆலயம், கலிக்கம்பட்டி காசி விஸ்வநாதர் கோயில்களில் சிவபுராணம் கொடுத்தோம்.

இது தவிர மாதந்தோறும் நமக்கு கிடைக்கும் பொருளுதவி கொண்டு மேலும் பல கோயில்களுக்கு நம்மால் இயன்ற சேவைகள், மருத்துவ உதவி, ஞான தானமாக திருவருள் பயணம் இதழ் சந்தா, TUT தளத்தின் பதிவுகள்  என இன்னும் பல... அனைத்தும் நீங்கள் தருகின்ற பொருளுதவியாலும், அருளுதவியாலும் தொடர்ந்து செய்து வருகின்றோம். இன்னும் பற்பல சேவைகளை நாம் குருவருளால் செய்ய வேண்டியுள்ளது. நமக்கு உற்ற துணையாகவும் உறுதுணையாகவும் உள்ள தங்கள் அனைவருக்கும் நன்றி கூறி இங்கே மகிழ்ச்சி அடைகின்றோம்.


மகான் ஸ்ரீ வைகுண்டர் பற்றி நாம் அவ்வவ்போது படித்து மெய் சிலிர்த்து இருக்கின்றோம். நம் தளத்தில் தரிசனம் எப்போது பதிவில் தர என்று நாம் பலமுறை நினைத்து இருக்கின்றோம். நேற்று இரவில் தினசரி கூட்டுப் பிரார்த்தனை முடித்து பாராயண நூற்களை தேடிய போது நம் கண்ணில் அய்யா வைகுண்ட தர்மபதி இறைவன் அருளிய வழிபாடு முறை கிடைத்தது. அடுத்த வாரம் வியாழக்கிழமை அன்று கூட்டுப்பிரார்தனையில் இணைக்கலாம் என்று நினைத்தோம். .ஆனால் குருவருள் இன்று இன்றையப் பதிவின் மூலம் அய்யா உண்டு என்று நம் அனைவரையும் சேர்ப்பித்து விட்டார்கள். அய்யா வைகுண்டரின் 190- ஆவது அவதார தினம் இன்று 04.03.2022 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.இன்றைய நாளில் அய்யா பற்றி படிப்பதும்,கேட்பதும் மிக மிக சிறப்பான அருள்நிலை ஆகும்.


பிரம்மா விஷ்ண சிவனின் கலவையாகவும் , விஷ்ணுவின் அம்சமாகவும் அனைத்து பெண் சக்திகளின் கலவையாகவும் இப்பூவுலகில் அவதரித்தவர் மகான் ஸ்ரீ வைகுண்டர்.அய்யா வைகுண்டரின் 190- ஆவது அவதார தினம் இன்று 04.03.2022 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

நாராயணர் தாமே வைகுண்டராக பிறக்கிறார் என்னும் கூற்று அகிலத்திரட்டில் மேலோங்கியிருந்தாலும், 'கலியழிப்பு' 'தர்மயுகத் தோற்றம்' என்ற இரு நோக்கங்களுக்காக நாரண-வைகுண்டர், நாராயணர் வைகுண்டர் என்ற இரு வேறு ஆளுமைகளாக, காலவோட்ட பின்னலில் ஒரே நேர்கோட்டை சுற்றும் இரு துருவங்களாக சூக்ஷும்மாக செயல்படுகின்றனர். இதையே வேறு விதமாக சொன்னால், நாராயணர் தனது கலியழிப்பு பணியின் சூக்ஷும்மான நிலைகளமாக வைகுண்டர் விளங்குகிறார். மும்மூர்த்திகள் முதலான 33 கோடி தேவர்கள் மற்றும் 44 கோடி தேவ ரிஷிகளின் தவங்களின் பயனாகவும், அவர்களை கலி ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்கவும் வைகுண்டரின் பிறவி அமைவதால் பிரபஞ்சத்தின் அனைத்து ஆண்/பெண் தெய்வ சக்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாக அவர் அமைவதோடு, அனைவரின் வணக்கத்துக்குரிய ஏகமூர்த்தியாக வைகுண்டர் திகழ்கிறார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய மகான் ஆன அய்யா வைகுண்டரின் பிறந்த நாளான மாசி மாதம் 20 ஆம் தேதி, அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவாக 'அய்யாவழி' சமூகத்தினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி அய்யா வைகுண்டர் திருச்செந்தூர் கடலில் இருந்து வெளிப்பட்ட நாளான இன்று 190- ஆவது அவதார தினவிழாவாக கொண்டாடப்படுகிறது.

அகிலத்திரட்டு அம்மானை என்ற நூலும் அருள் நூலில் சாட்டு நீட்டோலை என்ற பாடலும் அனைத்து உலக அழிவு, கலியுக தன்மை அனைத்தையும் தோல் உரித்து காட்டுகிறது.

அகிலத்திரட்டு அம்மானை அய்யா சொல்லும் போது எழுதப்பட்டது ஆகும்.




1016 ஆண்டு, கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி, வெள்ளி கிழமை அரிகோபாலன் சீசர் அவர்கள் தோத்திரம் என்று சாமியை தொழுது இராத்திரி தூக்கத்தில் இருக்கும்போது நாதன் நாராயணன் நலமாக அவர் அருகில் வந்திருந்தது சீதமுடன்(அன்பாக)  சீசரை எழுப்பி உலக மக்கள் அனைவரும் வைகுண்ட அவதாரத்தை அறியும்படியும், தர்மயுக வாழ்வை பெறவேண்டியும் இறுதி வேதமான அகிலத்திரட்டு அம்மானையை எழுதும்படி கூறி, "ஏரணியும் மாயோன்" என்கின்ற முதல் சீரையும் எடுத்துக்கொடுத்தார். மேலும் எம்பெருமான் நாராயணர் அரிகோபாலனிடம் " மகனே நீ எழுது நான் உன் அகம் அமர்ந்து எல்லவற்றையும் பார்த்துக்கொள்வேன் " என்று கூறி அவரின் சிந்தையில் நாராயணர் அன்னை மகாலஷ்மிக்கு ஆதி முதல் தர்மயுகம் வரை உள்ள அனைத்தும் நிகழ்வுகளையும் கதை போல் சொல்லுவதை காட்டினார். அதனை அப்படியே அகிலத்திரட்டு அம்மானையாக அரிகோபாலன் சீசர் ஏட்டில் எழுதினார். நாராயணரின் வாக்கான இந்த அகிலத்திரட்டு அம்மானையை அனைவரும் படித்து, அதன்படி நடந்து, பாவத்தினை நீக்கி தர்மயுக வாழ்வினை பெறுவோம். 

அகிலத்திரட்டு அம்மானையின் சிறப்புகள்:

1. இறைவன் ஒருவனே அவனே பல்வேறு  பெயர்களில் அழைக்கப்படுகிறான்.

2. இறைவனின் படைப்பில் சாதிகளில் ஏற்ற தாழ்வு எதுவும் இல்லை. சமத்துவ சமுதாயமே அய்யா காட்டிய சமுக வழி ஆகும். ஆண்டான் அடிமை என்ற வேறுப்பாடு இறைவனுக்கு கிடையாது. அகிலத்தில் இறைவன் கூறும் இரண்டே குலம் (அ) சான்றோர்குலம் (ஆ) நீசக்குலம்.

3. நாராயணரின் முந்தைய அவதாரங்கள் மற்றும் எட்டு யுக செய்திகள்.

4. நமது சனாதன இந்து சனாதன தர்மத்தின் பல புராணங்களை ஒரே வரியில் அங்கங்கே சொல்லப்பட்டுள்ளது.

5. கலியுகத்தில்  இறுதியில் நடக்கும் நிகழ்வுகள் தீர்க்க தரிசனமாக எடுத்து கூறப்பட்டுள்ளது . அது அனைத்தும் ஒன்றுக் கூட தவறாமல் அப்படியே இப்போது நடந்து வருகிறது.

6. இல்லறத்தை விட்டு தவம் எதுவும் இல்லை உலகில் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என காலமெல்லாம் வாழ வலியுறுத்துகின்றது. 

7. இறைவனுக்கு பூசை, பூ, புனக்காரம், உயிர் பலி, காணிக்கை, காவடி போன்ற எதுவும் தேவையில்லை அன்பு மட்டுமே இறைவனை அடையும் வழி என்ற உண்மையை எடுத்துரைக்கிறது. இறைவன் நமக்குள்ளே இருக்கிறான் என்பதை உணர்த்துவதே அய்யா வழி ஆகும்.

8. இறைவனை தவிர பேய், பிசாது, மைய்,செய்வினை போன்றவைக்கு அஞ்ச வேண்டியதில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. ஜோதிடம், கிரக பலன் என்று தேடும் முதலை விறுதாவில் போடாமல் படைத்த பரம் பொருளின் மீது மட்டுமே முழு நம்பிக்கையுடன்  இருக்க வலியுறுத்துகிறது.

9. சோதி வடிவான இறைவனை அடைய சைவ உணவு முறையை பின்பற்ற வேண்டும். எல்லா உயிரிலும் இறைவன் உள்ளான் என்பதை உணர்துகிறது.

10. அன்பு,பொறுமை, தர்மமே கலியை அழிக்கும் ஆயுதம் ஆகும். கோபம், சாபம், காமம், குரோதம், ஆணவம், பொறாமை போன்ற கலிமாயத்தை அகற்ற வலியுறுத்துகின்றது.

அகிலம் கற்போம்! அய்யா காட்டிய வழிப்படி நடப்போம்!! என்றும் சாகா வாழ்வாம் இறைவன் பாதம் அடைவோம்!!!.



இன்னும் அய்யா நிகழ்த்திய அற்புதங்களை இங்கே தொடர்வோம்.

அய்யா அருளால் அய்யா வைகுண்டரின் அற்புதங்கள் ( வாட்சப்பில் வந்த பதிவு )

எனது ஊர் தர்மபுரம். எனது பெயர் கீர்த்தனன். இன்று எனது வயது 65. இன்றிலிருந்து 50 வருடங்களுக்கு முன்னால் உள்ள சம்பவம் ஒன்றை கூறுகிறேன்.

அப்போது ஒவ்வொரு ஊரிலும் சிறு தெய்வ வழிபாடுதான் அதிகமாக இருக்கும். 100 பேர் சிறு தெய்வ வழிபாட்டில் உள்ளவர்களாக  இருந்தால் 30 பேர்தான் அய்யாவழி மக்களாக இருப்பார்கள். ஊரை பொறுத்தவரை சிறு தெய்வ வழிபாட்டை சார்ந்தவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை தான் நியாயமாக எடுத்து கொள்வார்கள். அய்யாவழி மக்களிடம் பேசி பழகினாலும் கிண்டலும் கேலியும் சேர்த்தே பேசுவார்கள். அந்த வகையில் நானும் ஒருவனாக இருந்தேன். சிவ வழிபாடும், சிறு தெய்வ வழிபாடுதான் எனக்கு தெரிந்தது. அய்யாவை பற்றி தெரிந்தாலும் நான் ஏற்று கொள்ளும் மனநிலையில் இல்லை.

அந்த நேரம் எனக்கு திருமணம் நிச்சயமானது. பெண் அயலூராக இருந்தாலும் அய்யாவுக்கு கோவில் வைத்து வழிபடும் குடும்பத்தை சேர்ந்தவள்.
இப்பொழுது திருமணம் நடப்பதற்கு முன்னாலே சொல்லி விடுவார்கள் அய்யா வழியில்தான் திருமணம் நடத்துவோம் என்று பெண் வீட்டார்கள் கூறுவார்கள். இல்லை ஐயரை வைத்து இந்த முறைப்படி தான் திருமணம் நடத்த வேண்டும் என்று முன் கூட்டியே சொல்லி விடுவார்கள். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் எல்லா பொருத்தமும் இருக்கும் கடைசியில் திருமணம் நடத்துவது அய்யா வழியா! அல்லது இந்து முறைப்படியா! என்ற பிரச்சனை பெரிதாகி தடைப்பட்ட திருமணம் நிறையவே உண்டு இந்த சம்பவம் இன்றும் கிராமத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நகரங்களில் முழுக்க முழுக்க அய்யா வழிபாட்டுகாரராக இருந்தாலும் நல்ல வரன் அமைந்தால் போதும் என்று நடத்தி விடுகிறார்கள்.

அன்று அப்படியல்ல அய்யாவின் கோட்பாடுக்கு உட்பட்டே வாழ்ந்தார்கள். அய்யா கோவில் தவிர மற்ற கோவில்களில் உள்ள பழ வகைகளை சாப்பிட மாட்டார்கள். அய்யாவின் மேல் மிகவும் பற்றாகவும் அய்யா வழிபாட்டை கடைபிடிப்பவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இன்று எல்லாமே ஒன்றுதான் என்று தனது கொள்கையை பெரும்பாலானோர் தளர்த்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எனக்கு அய்யாவழி பிடிக்காது. எப்பவாவது அய்யா கோவிலுக்கு சென்றால் எல்லா கோவிலும்  போல் இதுவும் ஒரு கோவில் என்று  நினைத்தேனே  தவிர  எல்லா தெய்வத்தை விடவும் அய்யா உயர்ந்தவர் எல்லா சக்தியும் ஒன்று சேர்ந்து வந்தவர் என்பது  எனக்கோ என்னை போன்றவர்களுக்கோ தெரியாது. உலகுக்கு தெரியவைக்கும் முயற்சியும் யாரும் பண்ணவில்லை. எனக்கு தெரியவே தெரியாது எனது திருமணத்தன்று அய்யாவழி முறைப்படி  திருமணம் நடத்துவார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. இப்படி தெரிந்திருந்தால் இந்த திருமணமே வேண்டாம்  என்று  சொல்லி  இருப்பேன்.

திருமணத்தன்று பெண்  பிறந்த  ஊருக்கு நாங்கள் ஊரார்கள் சுற்றம் சுழு வருகை தந்தோம். பெண்ணுடைய  அண்ணன் மாலையுடன் வந்து மாப்பிள்ளைக்கு நாமமிட்டு மாலையும் போட்டு மாப்பிள்ளை கழுத்தில் இருந்த மாலையை  கழட்டி பெண்ணுக்கு போடுவதற்கு கொண்டு செல்வார்கள். இது வழக்கமாக  இருந்தது.

எனக்கும்  நாமமிட்டார்கள். நாமத்தை அழித்தேன்! அவர்களுக்கு மிகவும் மனக் கஸ்டமாகவும் இருந்தது. மாப்பிள்ளை என்ற அதிகாரத்தை காட்டினேன், எனது நெஞ்சத்தில் கொஞ்சமும் ஈரம் இல்லாமல் நடந்து கொண்டேன். அவர்கள் பெண் கொடுப்பவர்களாக இருந்ததால் மிகவும் பொறுமையாக இருந்தார்கள் . என் நெற்றியில் இருந்த நாமத்தை அளித்த அன்றே என்னுடைய வாழ்வு அழியப் போகிறது என்பதை அன்று என்னால் உணர  முடியவில்லை!  ஆனால் இன்று  உணர்கிறேன்.  எப்படியோ திருமணம் முடிந்தது.  அய்யா வழியில் திருமணம் முடித்து விட்டார்களே என்ற ஆதங்கம் என் மனதை விட்டு போகவில்லை! பெண் வீட்டார்கள் பல வழிகளில் தொல்லை கொடுத்தேன். பல காரணங்களால் ஒரு மாதத்திற்குள் பிரிந்தோம். நான் தனிமை ஆனேன். நான் செய்வது அனைத்தும் எனக்கு சரியாகவேபட்டது. நாளுக்கு நாள் எனது வாழ்க்கை  தரம் தாழ்ந்து கொண்டே இருந்தது. பல லட்சங்களுக்கு அதிபதியான நான் வறுமை  கோட்டுக்குள் வாழும் நிலை ஏற்பட்டது.
அய்யாவின் திருநாமத்தை அழித்த அன்றே பாவத்தை சுமக்க ஆரம்பித்து விட்டோம் என்பதை என்னால் உணர  முடிந்தது.

நான் செய்த பாவத்தை கழுவ முதலில் அய்யாவை பற்றி தெரிந்து கொண்டேன். அய்யாவின் ஆலயம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம்  சென்றேன்.  ஒருதடவை  பலதடவை நாமத்தை கேட்டு வாங்கி பூசி கொள்வேன். எந்த திருநாமத்தை என் கையால் அழித்தேனோ! அதே திருநாமத்தால் எனது மூன்று வேளை பசியையும் தீர்த்து அய்யாவின் திருவடியே  தஞ்சம்  என  வாழ்ந்து  கொண்டிருக்கிறேன்.
எனவே அய்யாவே தஞ்சம் என்று உங்கள் வாழ்க்கையை அய்யாவிடம் ஒப்படைத்து விடுங்கள். உங்களுக்கு எந்த நேரத்தில் என்ன செய்யவேண்டுமோ அந்த நேரத்தில் தவறாது செய்து உங்களை காப்பார். உங்கள் தேவைகள் உற்ற நேரத்தில் பூர்த்தி செய்வார். எதோ சிறு சிறு தடைகள் வந்தாலும் அதற்கும் எதாவது ஒரு காரணம் இருக்கும், அது என்ன காரணம் என்பது.

 அய்யாவுக்கு தான் தெரியும். சமயம் வரும்போது நமக்கு  நல்லதை  செய்வார் என்று எண்ணி, அய்யாவின் திருநாமத்தை உதாசீனம் செய்யவோ, பூசியதுபோக  கையில் இருக்கும்  நாமத்தை சுவர் ஓரம் கொட்டவோ செய்யாதீர்கள். நாம் வாழ்வில் படிப்படியாக உயர வேண்டும் என்றால் அய்யாவின் திருவடியை பற்றி பிடித்து வாழ்வோம் - வளம் பெறுவோம்.


அய்யா அருளால் அய்யா வைகுண்டரின் அற்புதங்கள்

நெல்லை மாவட்டத்தில் தட்டார்மடம் என்னும் ஊரைச்சேர்ந்தவர் மாதவடியான்.
இவரின் குலத்தொழில் சித்த வைத்தியம். அதில் சிறந்து விளங்கிய இவர் ஏழை எளியவர்களிடம் வைத்தியத்திற்குப் பணம் வாங்குவதில்லை. வசதிபடைத்தவர்களிடம் மருந்துக்கு மட்டும் அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்வார். நோய் குணமடைந்தவர்கள் இவரைப் பாராட்டி ஏதேனும் கொடுத்தால் அதை வாங்க மறுத்துவிடுவார்.

தேசபக்தியும், இறைஞானமும் கொண்ட அவரை மக்கள் பெரிதும் பாராட்டிப் புகழ்வர். அவர் பாராட்டப்படுவதை அவர் நண்பர் அணஞ்சுபெருமாளால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. அணஞ்சு பெருமாள் படித்தவர் மற்றும் பணக்காரராக இருந்தாலும், நண்பர் மாதவடியானுக்கு மக்களிடம் செல்வாக்கும் சிறப்பும் உயர்ந்திருப்பதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

ஒருநாள் அவ்வூரில் தோண்டப்படும் கிணற்றுவேலையை ஆரம்பித்துவைக்க மாதவடியானை அழைக்க முடிவுசெய்யப்பட்டது.ஆனால் அணஞ்சுபெருமாளின் பிடிவாதத்தால் அவ்வேளை வேறு ஒருவரை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. மேலும் அவர் மாதவடியானைப்பற்றி அவதூறான புரளிகளைக் கிளப்பவும் ஆரம்பித்தார். அதை மக்கள் மாதவடியானிடம் தெரிவிக்க அவர் அவனைக் கடவுள்தான் திருத்தவேண்டும். என்னை நீங்கள் நேசிப்பதாக இருந்தால் இத்தகைய செய்திகளை இனிவந்து என்னிடம் சொல்லாதீர்கள் என்று கூறி அனுப்பிவிடுவார்.

நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் அதிகாலை அணஞ்சுபெருமாளின் மனைவி நாச்சியம்மாள் மாதவடியானின் வீடு நோக்கி ஓடிவந்தார். இதை மாதவடியானின் மனைவி பூஜை செய்து கொண்டிருந்த மாதவடியானிடம் தெரிவித்தார்.பூஜையை இடையிலேயே நிறுத்திவிட்டு வெளியே வந்த மாதவடியான் நாச்சியம்மாளிடம் நலம் விசாரித்தார்.

அதற்கு நாச்சியம்மாள் அணஞ்சுபெருமாள் கை, கால் விளங்காமல் இரண்டு நாட்களாகப் படுத்தபடுக்கையாகி விட்டதாய்க் கூறினார். உடனே தன் நண்பனின் வீட்டுக்கு மருத்துவப் பெட்டியோடு புறப்பட்டுச்சென்றார். 

அணஞ்சுபெருமாளிடம் அவர் மனைவி உங்களுக்கு உடல்நலமில்லை என்ற செய்தி அறிந்ததும் உங்கள் நண்பர் பூஜையை பாதியிலேயே நிறுத்திவிட்டு உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். உடனே அணஞ்சுபெருமாள் பூஜையை முடித்துவிட்டு வரக்கூடாதா? என்றார். உடனே மாதவடியான் அங்கே பாதி பூஜையை முடித்தேன். உன் மூலமாக மீதி பூஜையை முடிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே நண்பனின் கைநாடியைப் பிடித்துப் பார்த்து நோயில்லை என்பதை உணர்ந்தார். பிறகு ஏன் இப்படி ஆயிற்று என்ற யோசனையில் இருந்தார். நண்பனின் உடல் நிலையை எண்ணிக் கண்ணீர்வடித்தார். அந்நேரம் மாதவடியான் அணஞ்சுபெருமாளின் வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்த மக்கள் அவரைக் காண வந்தனர்.

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது, வஞ்சித்த குடி ஒருநாளும் வாழாது, நல்லவனைப் பழித்தவன் நாசமாகத்தான் போவான், உங்களைப் பற்றி ஏறுக்கு மாறாகச் சொன்ன இவனுக்காக நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? என்றார்கள்.இதைக்கேட்டுக் கொண்டிருக்கும் அவனின் மனைவியின் மனம் என்ன பாடுபடும்? என்று கூறி அவர்கள் பேசுவதை நிறுத்தச் செய்தார். பின்னர் தான் கொண்டுவந்த தைலத்தை அணஞ்சுபெருமாளின் உடலெங்கும் தேய்த்துக்கொண்டிருந்தார்.

தற்செயலாக அங்கு வந்த அவர்களின் நண்பர் மாதவடியானை சற்றுத் தொலைவில் அழைத்துச் சென்று, உன் மருந்தால் அவனுக்குக் குணமடையாது. இது நோயல்ல அவன் உனக்கு செய்த துரோகத்திற்கு இறைவன் கொடுத்த தண்டனை. அவனை இறைவனால் மட்டுமே காப்பாற்றமுடியும் என்று கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சிஅடைந்த மாதவடியான், இப்போது என்ன செய்யச் சொல்கிறாய்? என்றார். உடனே அவர் சுவாமித்தோப்பில் அய்யா நிகழ்த்திவரும் அற்புதங்களைக் கூறி அவரிடம் அழைத்துச் சென்றால், அவனுக்காக இல்லாவிட்டாலும் உனக்காக அந்த சாமி குணமடையசெய்வார் என்றார்.

மறுநாள் எல்லோருமாகச் சேர்ந்து மாட்டுவண்டியில் அணஞ்சுபெருமாளை ஏற்றி சுவாமித்தோப்பைச் சென்றடைந்தனர். எல்லாரும் முத்திரிக் கிணற்றில் பதமிட்டு, தலைப்பாகை தரித்து அய்யாவை தரிசனம் செய்வது போல் இவர்களும் தரிசனம் செய்தனர். காவி விரித்த கட்டிலில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்த அய்யாவின் திருவடிகளில் அணஞ்சுபெருமாளைப் படுக்கவைத்தார்கள்.

 அனைவருக்கும் இன்முகத்தோடு நாமம் கொடுத்த அய்யா, அணஞ்சுபெருமாளை சீறிப் பார்த்து "நஞ்சு கக்கிய நல்ல பாம்பு வாழாது, அதுபோல உன் நாவு இனி மீளாது, உன் உடலை உன் நண்பனின் கண்ணீருக்காகத் தேற்றித் தந்தேன். இதுவே உன் விதி, இவ்வுலகிற்கு ஒரு பாடம்" என்று சொல்லி அனுப்பினார். உடனே திடகாத்திரமாக எழுந்த அணஞ்சுபெருமாள் தன் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளை வார்த்தையாக்கி வாயினால் சொல்ல நாவு எழவில்லை. இனி அந்த நாவு நஞ்சான வார்த்தைகளைச் சொல்ல உதவாது.








இங்கு நாம் பகர்ந்த இரண்டு அற்புதங்களும் சிறு துளியே. அய்யா வைகுண்டர் நிகழ்த்தி வரும் அற்புதங்கள் கணக்கில் அடங்கா. இவையெல்லாம் பரிபூரண சரணாகதியில் தான் குருவருளால் நடைபெறுகின்றது.

அய்யா வைகுண்டர் வழிபாட்டில் கீழ்காணும் பதியில் சென்று நாம் தரிசனம் பெறுவது சிறந்ததாகும்.

அய்யா வைகுண்டர் பதிகள் வருமாறு:-
.
1.சுவாமிதோப்பு பதி 
2.முட்டப்பதி, 
3.தாமரைக்குளம் பதி, 
4.அம்பலப்பதி, 
5. பூப்பதி

1.சுவாமிதோப்பு பதி

அய்யாவழி சமயத்தின் தலைமையகமாகும். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புள்ளவைகளான பதிகளுள் சுவாமிதோப்பு பதி மிக முக்கியமானதாகும். அய்யா வைகுண்டர் ஆறு ஆண்டுகள் தவம் இருந்ததும் இத்தலத்தில் ஆகும்.
மக்கள் கடவுள் வழிபாடு செய்வதற்காக அய்யா ஐந்து பதிகளை நிறுவினார். இதில் முதன்மையான பதி அய்யா வழியின் தலைமை இடமான சாமித்தோப்பில் அமைந்து உள்ளது. மற்ற பதிகள் வருமாறு:-

2. முட்டப்பதி

கன்னியாகுமரி கடலில் இருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ளது முட்டப்பதி. அய்யா வைகுண்டருடைய பக்தர்கள் துவையல் பதியின் கடைசி கட்டத்தை நடத்தியது இங்குதான். அந்த ஊரில் எழுநூற்று குடும்பங்கள் ஒன்றாக வசித்தனர். சைவ சமையல் அருந்தி எளிமையாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.

அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைக் காண பலர் அங்கு வந்து சென்றனர். துவையல்பதி நடந்த இடமான தேங்காய்த் தோப்பு கன்னியாகுமரியில் இருந்த ஒரு ஆசார பிராமணர் ஒருவருடைய இடமாகும். அந்த இடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களுடைய வாழ்க்கை முறையைப் பார்த்த அவர், அய்யா வைகுண்டரின் பக்தராகவே மாறி அந்த இடத்தை அவருக்கே தானமாகக் கொடுத்து விட்டார்.
அய்யா வைகுண்டர் கடலுக்குள் நுழைந்து விஷ்ணுவைக்கண்டு ஆசி பெறச் சென்ற கடல் பால் கடல் ஆகும். அது இந்த பதியின் பக்கத்தில்தான் உள்ளது. அந்த கடலில் சென்று குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள். எனவே ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் சாமித் தோப்பில் இருந்து ஆயி ரக்கணக்கான பக்தர்கள் முத்துப்பதிக்கு நடந்தே வந்து அந்த இடத்தில் உள்ள கடலில் குளிக்கின்றனர்.

3. தாமரைக் குளம்பதி

அய்யா வைகுண்டரின் பக்தரான அரிகோபாலன் பிறந்த ஊர் தாமரைக்குளம். அவரை சகாதேவன் என்றும் கூறுவார்கள். அவர்தான் அகிலத்திரட்டு என்ற புனித நூலை அய்யா வழி காட்ட எழுதி முடித்தார். அதனால் அவர் அய்யா வைகுண்டருடைய பக்தர்கள் மத்தியில் பிரபலமானவர்.
சாமித்தோப்பில் இருந்து ஒரு கிலோ தொலைவில் தெற்கு பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் இந்தப்பதி அமைந்து உள்ளது. கன்னியா குமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து அந்த இடத்திற்கு பஸ் மூலமும் செல்ல முடியும். நாகர்கோவிலில் இருந்து பதினாலு கிலோ தொலைவில் உள்ளது இந்தப்பதி. ஒரு முறை அய்யாவை அந்த இடத்திற்கு வருமாறு பக்தர்கள் அழைத்தனர். அவரும் அவர்களுடைய அழைப்பை ஏற்று அங்கு சென்று ஒருநாள் தங்கி விட்டு சாமித்தோப்பிற்குத் திரும்பினார். அங்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

4.அம்பலப்பதி

அய்யா வைகுண்டர் பலம் என்ற இடத்திற்குப் போய் இரண்டு வருட காலம் தங்கி இருந்தார். அதனால் இந்த பதி அம்பலபதி ஆனது. நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளது இந்த முக்கியமான பதி. இந்தப் பதியை பல்லத்துப்பதி என்றும், மூலகுண்டப்பதி என்றும் அழைக்கின்றனர்.
அம்பலப்பதி என்ற அந்த இடத்தில் தான் அய்யா சிவசொருபியாக இருந்தார். அய்யா அந்த இடத்தில் இருந்தபொழுது பார்வதி மற்றும் பகவதியின் சக்திகளை தனக்குள் எடுத்துக் கொண்டார். முருகனாக இருந்து வள்ளி மற்றும் தேவானையின் சக்திகளையும், பிரும்மாவாக இருந்து மண்டைக்காட்டம்மனின் சக்தியையும் பெற்றுக் கொண்டார்.

அங்கிருந்து அய்யாவின் பக்தர்கள் அவரை குதிரை ஒன்றின் மீது அமர வைத்து கடம்பான்குளம், பாம்பன் குளம் போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். அந்த இடங்களில் எல்லாம் அய்யா நிழல் தாங்கல்களை அமைத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சாமித்தோப்பிற்குத் திரும்பி விட்டார்.

அவர் நிறுவிய அம்பலம் கவனிக்கப்படாமல் அழிந்து போக அதன் பின் வேறு சிலர் அந்த இடத்தில் ஆலயம் அமைத்து பணிவிடை செய்யத் துவங்கினர். அவர்களுடைய சந்ததியினர் இன்றும் அந்த நல்ல காரியத்தைத் தொடர்ந்து செய்தவண்ணம் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் அங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அய்யாவை ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்துச் செல்ல பல வாகனங்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன.

5.பூப்பதி

பூப்பதி நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஈத்தமொழி என்ற இடத்தில் பூமதன்தாய் என்ற உருவில் ஆறு வயது சிறுமியாக பூமாதேவி இருந்தாள். தெய்வீகத் தம்பதிகளான அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்விக்க சிலர் விரும்பினாலும் அந்த சிறுமியின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அந்தச் சிறுமியோ அய்யா வைகுண்டரின் புகழைப் பாடிக்கொண்டே இருந்து அவள் சாதாரணப் பெண் அல்ல என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டினாள். அதன்பின் அவளுடைய உறவினர்கள் அய்யா வைகுண்டரை தங்களுடைய ஊருக்கு அழைத்து அவருடன் அவளைத் திருமணம் செய்து வைத்தனர்.

அதன் பின் அந்த இடத்தில் இருந்த குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்த புன்னை மரத்தோப்பில் சென்று அய்யா தங்கினார். அந்த இடத்தில்தான் பின்னர் பூப்பதி என்ற பதி நிறுவப்பட்டது.


நாமும் இந்த நன்னாளில் குருவின் அருளைப்பெற அய்யா காட்டிய வழியில் தொடர்வோம்.

அய்யா உண்டு!                                    அய்யா உண்டு!!                              அய்யா உண்டு!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

No comments:

Post a Comment