அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவில் அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் பகிர விரும்புகின்றோம். நந்திவரம் என்று அழைக்கப்படும் தலத்தில் நாம் அவ்வப்போது நந்தீஸ்வரர் தரிசனம் பெற்று இருக்கின்றோம். பலமுறை நாம் தரிசனம் பெற்றாலும், சில தரிசனங்கள் என்றும் நமக்கு இனிமையாக அமைவது உண்டு. முதலில் அழைப்பிதழை இங்கே கண்டு இன்புறுவோம். அடுத்து தரிசனம் காண்போம்.
அடுத்து நாம் அங்கே பெற்ற ஷஷ்டி தரிசனம் இங்கே பகிர உள்ளோம்.
அடுத்து 2018 ஆம் ஆண்டில் நாம் பெற்ற தரிசனம் இங்கே பகிர உள்ளோம். அப்போது நம் தளம் சார்பில் ஒரு மூட்டை சிமெண்ட் வாங்கி கொடுக்க குருவருளால் பணிக்கப்பட்டோம்.
2018 ஆம் ஆண்டில் நம் தளம் சார்பில் சிறு சேவை செய்துள்ளதை பார்க்கும் போது, நம்மை வழிநடத்தும் குருமார்களின் பாதம் பணிகின்றோம். நாளை நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கும் சிறு தொகை சேர்பித்துள்ளோம்.
அனைவரும் கலந்து கொண்டு திருவருள் பெற வேண்டுகின்றோம்.
No comments:
Post a Comment