"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, September 4, 2024

கந்தர் அனுபூதி - பாடல் 3 - வானோ? புனல் பார் - ஆறுமுகமான பொருள் எது?

                                                                    இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

குருவருளால் இந்த மாத அதாவது செப்டம்பர்  மாத சேவைகள் வழக்கம் போல் தொடங்கியுள்ளோம். நம் தளத்தின் சேவைக்கு அருளுதவி, பொருளுதவி செய்து வரும் அனைவருக்கும் இங்கே நன்றி கூறி மகிழ்கின்றோம். தங்களின் உறுதுணையால் மட்டுமே நம்முடைய சேவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது, தீப எண்ணெய் சேவை, சின்னாளபட்டியில் மோர் சேவை, அன்னசேவை என தொண்டுகள் தொடர்ந்து வருகின்றது. 

சமீபத்தில் கூட பெங்களூரு சத்சங்கத்தில் பக்தர்கள் அனைவரும் ஆறுபடை வீடுகளுக்கும் தோரணமலை தோரணமலை செல்வதற்கு முன் குற்றாலத்தில் நீராடி சென்று முருகனை வழிபட வேண்டும் என்று வாக்குகள் தந்திருக்கின்றார். 

(பெங்களூர் சத்சங்க வாக்குகளும் விரைவில் வெளிவரும்)

முருக வழிபாடு அனுதினமும் கந்தர் அனுபூதியும் கந்த சஷ்டி கவசமும் ஓதி வர வேண்டும் என்றும் உத்தரவு தந்திருக்கின்றார் குருநாதர். இதனையொட்டியே இன்றைய பதிவில் கந்தர் அனுபூதியில் இருந்து மூன்றாம் பாடலை இன்று சிந்திக்க உள்ளோம். kaumaram.com இணைய தளத்திற்கு நன்றி கூறி பதிவினில் செல்வோம். 




பாடல் 3 - வானோ புனல்பார்

வானோ புனல்பார் கனல்மா ருதமோ
   ஞானோ தயமோ நவில்நான் மறையோ
      யானோ மனமோ எனையாண் டவிடந்
         தானோ பொருளா வது சண் முகனே?

......... சொற்பிரிவு .........

வானோ புனல்பார் கனல் மாருதமோ
   ஞானோதயமோ நவில் நான்மறையோ
      யானோ மனமோ எனையாண்ட இடம்
         தானோ பொருளாவது சண்முகனே?

(ஆறுமுகமான பொருள் எது?)

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.


......... பதவுரை .........

சண்முகனே ... ஆறுமுகக் கடவுளே,

பொருளாவது ... நித்தய அழிவில்லாத பொருள் என்பது (எது?)

வானோ ... ஆகாயமோ?,

புனல் ... தண்ணீரோ?,

பாரோ ... நிலமோ?,

கனலோ ... நெருப்போ?,

மாருதமோ ... காற்றோ?,

ஞானோதயமோ ... அறிவு தோன்றும் இடமோ?,

நவில் நான் மறையோ ... ஓதப்படும் நான்கு வேதங்களோ?,

யானோ ... நான் என்கிற தத்துவமோ?,

மனமோ ... மனமோ?,

எனை ஆண்ட இடம் தானோ ... என்னை ஆட்கொண்ட இடம் தானோ?

......... பதவுரை .........

ஆறுமுகக் கடவுளே! 'பரம்பொருள்' என்பது யாது? ஆகாயமோ? நீரோ? பூமியோ? நெருப்போ? காற்றோ? ஞானத்தினால் அறியக்கூடிய பொருளோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களோ? 'நான்' என்று சொல்லப்படுகின்ற சீவனோ? மனமோ? ['நீயேநான்-நானேநீ' என்று கூறி] அடியேனை ஆட்கொண்ட தேவரீரோ?

......... விளக்கவுரை .........

இந்தப் பாட்டில் பர தத்துவத்தை நிர்ணயம் செய்கிறார். எது மெய்ப்பொருள்? நித்ய வஸ்து எது? என்று நிர்ணயம் செய்யும்போது ஒன்று ஒன்றாக விலக்கி இறுதியில் முருகனே பர தத்துவம் என்று
முடிவுகட்டுகிறார். நித்ய வஸ்து என்பது யாது? தனக்கென்று ஆதி அந்தம் இல்லாததாய், யாவற்றிக்கும் ஆதாரமாய் வேதம் கூறுவதுபோல்.. எதினின்றும் இவை எல்லாம் தோன்றினவோ, தோன்றியவை எல்லாம் எதனால் வாழ்கின்றனவோ, முடிவில் யாவும் எதில் ஒடுங்குகின்றனவோ
அதுவே நித்ய வஸ்து ..

அது எது? வானோ? ஆகாசம் என்பது சூன்யம்.இதுவே பிரபஞ்ச தோற்றத்திற்கும் அழிவிற்கும் காரணம் என்பது சூன்யவாதிகளின் சித்தாந்தம். பானையில் இருக்கும் காற்று, பானை உடைந்தவுடன் வெளிக் காற்றோடு கலந்துவிடுவதுபோல் உடலில் இருக்கும் ஆகாசம் உடல் அழிந்தவுடன் வெளி ஆகாசத்தில் கலந்துவிடும்.இறந்த உடல் மீண்டும் பிறப்பதில்லை என்பது இந்தச் சித்தாந்தம்.

 புனல் பார் கனல் மாருதமோ?

அடுத்தபடி நிலம், நீர், தீ, காற்று என்ற நான்கு தத்துவங்கள். இவையா நித்தியம்? இவற்றின் பலவித சேர்க்கையினால்

   "Permutation and Combination"

ஆனது தானே இந்தப் பிரபஞ்சம். உடம்பு அறிவு எல்லாம் வெறும் தோற்றமே. உடம்புக்கு தனியாக ஆன்மா என்று இல்லை. வினை கிடையாது. வினைக்கு ஈடாக உயிரை உடலோடு கூட்டுவதற்கு கடவுள்
என்ற தத்துவம் உண்டு என்பது கட்டுக்கதை. இது சார்வக மதம்.

ஞானோதயமோ?

ஞானோதயமோ என்கிற கேள்வியில் பெளத்த மதம் குறிப்பிடப்படுகிறது. ஞானம் தான் ஆன்மா. இந்த ஞானம், ஒவ்வொரு கணமும் தோன்றித் தோன்றி அழியும். முன்பு அழிந்த ஞானத்தின் வாசனை பிற கணத்தில் தோன்றும் ஞானத்தில் தென்படுகிறது. இந்த தொடர்ச்சியின் வாசனை அழிவதே முக்தி.

நவில் நான் மறையோ?

நவில் நான் மறையோ என்பதில் 'மீமாம்ச' மதம் குறிப்பிடப்படுகிறது. வேதம் அனாதி. அவற்றில் குறிக்கப்பட்டுள்ள யாகம் யக்யங்களை செய்து வந்தாலே முக்தி கிடைக்கும். இதற்கென்று கடவுள் தேவையில்லை.உலகம் நித்யமானது. வேதத்தில் கரும காண்டமே இதற்கு பிரமாணம்.

 யானோ? மனமோ?

இத்தனை ஆராய்ச்சிகள் செய்யும் நான் என்பதுதான் நித்ய வஸ்துவா? இது அடுத்த கேள்வி. இது ஆன்ம வாதம். மனமே ஆத்மா. இறைவன் கிடையாது. மூலப் ப்ரகிருதியின் பரிணாமமே இந்தப் பிரபஞ்சம். இதுவே சாங்கிய மதம்.

 எனை ஆண்ட இடம்தானோ?

கடைசியாக என்னை ஆண்ட இடம்தானோ? என கேட்கிறார். இடம் என்றால் நிலை. ஜீவாத்மாவின் பக்குவ நிலையை அறிந்து, ஆண்டவன் எழுந்தருளி ஆட்கொள்ளும் அந்த கருணை நிலைதான் மெய்த் தத்துவம் என்பதுதான் அருணை முனிவரின் முடிவான துணிவு. 'தானோ' என்கிற பதம் சேர்ந்திருப்பதால் மற்ற எல்லாவற்றையும் விலக்கிவிட்டு இதுவே மெய்ப் பொருள் என்பது அருணகிரியார் சுட்டிக் காட்டும் உண்மை விளக்கம்.

மீண்டும் ஒரு முறை 


முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா! 

என்று வேண்டி பணிந்து கந்தர் அநுபூதி படிப்போம்.



வேலும் மயிலும் சேவலும் துணை!

திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

அகத்திய மாமுனிவர் உத்தரவு - ஆவணி மாதம் முழுதும் விநாயகர் அகவல் பாராயணம் - ஏன்? எதற்கு? எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_27.html

 ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

No comments:

Post a Comment