இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கின் தொகுப்பை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. பெரிதினும் பெரிது கேள் என்று சொல்ல கேட்டிருப்போம். ஆம். நம் குருநாதர் நமக்கு உரைக்கும் வார்த்தைகள் மிக மிக பெரியது.இவற்றை வெறும் வார்த்தைகளாக கொள்கின்றோமா? இல்லை. வாழ்க்கையாக கொள்கின்றோமா? என்பதில் தான் அர்த்தம் உள்ளது. மதுரைக்கு முன்பாக கோயம்பத்தூரில் குருநாதர் வாக்குகள் அருளியுள்ளார். இதில் யாருமே கூறாத தான, தருமம் பற்றி உரைத்துள்ளார். இவற்றையெல்லாம் நாம் கேட்டு, வாழ்வில் பின்பற்ற வேண்டும். குருநாதரின் வாக்கிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டிய நிகழ்வு கண்டுள்ளோம். குருநாதரின் உபதேசம் எப்படி எல்லாம் இருக்கும் என்று யார் அறிவார்?ஆனால் நாம் தான் எதையெதையோ தேடிக்கொண்டு இருக்கின்றோம். குருவை இறுக இரு கை கொண்டு சிக்கென பிடித்தாலே போதும். நமக்கு வேண்டியது கிடைக்கும். வாழ்வு சிறக்கும்.
ஓம் குரு மொழியே வேதம் வேதம்
ஓம் குரு விழியே தீபம் தீபம்
ஓம் குரு பதமே காப்பு காப்பு
“அனைத்தும் இறைவா நீ”
அகத்திய பிரம்ம ரிஷி மனித குலத்திற்குக் கலியுகத்தில் - மனிதர்கள் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய உண்மைகளை - முதல் முறையாக மதுரையில் 4-9-2023 அன்று உரைத்த வாக்கு, அகத்திய பிரம்ம ரிஷி அருளால் 29 பகுதிகளாக இந்த தளத்தில் மலர்ந்து உள்ளது.
இந்த 29 பகுதி வாக்குகளின் தொகுப்பு இந்த பதிவு. இதனை அனைத்து அடியவர்களுக்கும் பகிருங்கள். இந்த வாக்குகளை உலகமெங்கும் அனைவருக்கும் வகுப்பு எடுத்துச் சொல்லுங்கள்.
முதல் நிலை உயர் புண்ணியம் பெற்று , உலகத்தைத் தர்ம வழிக்குத் திசை திருப்ப அடியவர்களுக்கு ஓர் உயர்த்த மகத்தான வாய்ப்பு.
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2024/04/04092023-1.html
No comments:
Post a Comment