அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவில் ஒரு முக்கிய நிகழ்விற்கான அழைப்பை இங்கே தருகின்றோம். அழகிய மணவாளத்தில் நடைபெற உள்ள பூசை பற்றிய அழைப்பு இது. அழகிய மணவாளம் என்ற பெயரைக் கேட்டதுமே நமக்கு ஒரு வித புதிய உணர்வு ஏற்படுகின்றது. இணையத்தில் அழகிய மணவாளம் என்று தேடிய போதும் கிடைத்த செய்திகளை நாம் காப்புரிமை காரணமாக தர முடியவில்லை. திருச்சியின் அருகில் உள்ள ஒரு கிராமம் அழகிய மணவாளம். இங்கே ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி தாயாருடன் ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் அருள்பாலித்து வருகின்றார். ஸ்ரீ ராமானுஜர் தரிசனம் செய்த திருத்தலம் ஆகும்.
ஸ்ரீ நாராயண மகா அபிஷேகம் - அருள்மிகு ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமாதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் - அழகியமணவாளம்
குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் ஆசியாலும்,மஹான்களின் ஜீவ அருள் நாடி வாக்கின் படியும் உலக நன்மைக்காக,உலகம் நலம் பெறவும், மழை வளம் பெருகவும்,நீர் வளம் உயரவும், பஞ்சபூதங்கள் சம நிலை பெறவும் தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் சார்பாக வருகின்ற 23.06.2019 ஞாயிற்று கிழமை அன்று மிக உயர்வான யாகமும்,அபிஷேகமும்,திருமஞ்சனமும் அழகியமணவாளம் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் நடைபெற உள்ளது.
காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை யாகங்களும்,பூஜைகளும்,இறைவனுக்கு மகா திருமஞ்சன அபிஷேகமும் நடைபெற உள்ளது.சித்தர்களின் வாக்கின் படி மிக உயர்வாக நடைபெற உள்ள இந்த அபிஷேகத்தில் 1500 லிட்டர் பசும் பாலும்,100 லிட்டர் தயிரும் மற்றும் சுத்தமான சந்தன அபிஷேக அலங்காரங்கள் நடைபெற உள்ளது.
சித்தர் அருட்குடில் இதுவரை எண்ணற்ற யாகங்கள்,பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளை மகான்களின் ஜீவ அருள் நாடி வாக்கின் படி மிக மிக உயர்வாக பல வருடங்களாக செய்து கொண்டு வருகின்றது.நடைபெறும் அனைத்து யாகங்களும்,அபிஷேகங்களும் உலக நன்மைக்காக மட்டுமே சித்தர்கள் செய்யும் படி அருளானை இட்டு வருகின்றனர்.
அதன் படி வருகின்ற 23.06.2019 (ஞாயிறு) அன்று திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகில் உள்ள அழகிய மணவாளம் என்ற கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமாதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் மிக உயர்வான அபிஷேகம் நடைபெற உள்ளது.மஹான்கள் அருளானையிட்டு நடைபெறும் அபிஷேகம் என்பதால் பங்கு கொள்வது என்பது மிக உயர்ந்தது.அதோடு மஹான்கள் ஜீவ அருள் நாடியில் நடைபெற உள்ள அபிஷேகத்தில் ஏனைய சித்தர்களும்,மகான்களும் அரூபமாக வருகை தருவதாக வாக்கு உரைத்து உள்ளனர்.
ஆகவே அனைவரும் கலந்து கொண்டு ஆத்மார்த்தமாக வழிபட்டு தாயார்,பெருமாள் அருளையும்,சித்தர்கள் மஹான்கள் ஆசிகளையும்,தேவர்களின் ஆசிகளையும் பெறும் படி வேண்டிக் கேட்டுகொள்கின்றோம்.
காலை 7 மணி முதல் யாக பூஜைகள் ஆரம்பம் ஆகின்றது.குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் மிக உயர்ந்த பிரசாத காலை உணவு
மற்றும் மதியம் உணவு வருகை புரியும் அனைவருக்கும் வழங்கப்படும்.அதோடு சித்தர் அருட்குடில் அழகியமணவாளம் - தேர்முட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆலயம் வரை அழைத்துச்செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்து உள்ளது.
திருச்சியில் இருந்து வருவோர்கள் டோல்கேட் வழியாக மணச்சநல்லூர் வந்து அங்கிருந்து அழகியமணவாளம் அடைந்து ஆலயம் வரலாம்.சேலம் - நாமக்கல் - திருச்சி மார்க்கம் வருபவர்கள் மணச்சநல்லூர் பிரியும் இடத்தில் திரும்பி அழகியமணவாளம் வந்து ஆலயம் அடையலாம்.பிற பகுதிகளில் இருந்து வருவதாக இருந்தால் திருச்சி வந்து டோல்கேட் இல் இருந்து மேல் சொன்ன மார்க்கம் வழியாக ஆலயம் வந்து அடையலாம்.பஸ்சில் வருபவர்கள் மணச்சநல்லூர் - அழகியமணவாளம் (தேர்முட்டி) பஸ் ஸ்டாப் வந்து அங்கிருந்து அருட்குடில் வாகனத்தில் ஆலயம் வரலாம்.
குறிப்பு :
மகான்களும்,சித்தர்களும் அபிஷேகத்திற்கு வருகை புரிவதாக சுவடியில் சித்தர்கள் கூறியுள்ள படியால் அனைவரும் அமைதியாக வந்து அபிஷேகத்தில் கலந்து கொண்டு,ஆத்மார்த்தமாக வழிபட்டு இறைவன் அருளையும்,சித்தர்களின் ஆசிகளையும் பெரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.புகைப்படங்கள்,வீடியோக்கள் எடுப்பதை தவிர்க்கவும்.
அபிஷேகத்திற்கு வருகை புரிபவர்கள் எந்த ஒரு அபிஷேக,பூஜை பொருள்களும் வாங்கி வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது.அனைத்து ஏற்பாடுகளையும் சித்தர் அருட்குடில் மிக உயர்வாக செய்து உள்ளது.ஆகவே உங்களது வருகையும் ஆத்மார்த்தமும் இருந்தால் போதுமானது.
ஆலய அமைவிடம் :
அருள்மிகு ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமாதேவி சமேத ஸ்ரீ சுத்தரராஜ பெருமாள் ஆலயம்
அழகியமணவாளம்,
மணச்சநல்லூர் வட்டம்,
திருச்சி மாவட்டம்.
மணச்சநல்லூரில் இருந்து - 5 கிலோ மீட்டர் தொலைவு
ஸ்ரீரங்கத்தில் இருந்து - 15 கிலோ மீட்டர் தொலைவு
திருப்பைஞ்சலியில் இருந்து - 6 கிலோ மீட்டர் தொலைவு
திருவெள்ளறையில் இருந்து - 8 கிலோ மீட்டர் தொலைவு
சமயபுரத்தில் இருந்து - 10 கிலோ மீட்டர் தொலைவு
திருவெறும்பூரில் இருந்து - 25 கிலோ மீட்டர் தொலைவு
உத்தமர் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து - 9 கிலோ மீட்டர் தொலைவு
ஆலயத்தின் அமைவிட கூகுள் மேப்
https://goo.gl/maps/TTZTCKQ3YDdBGtrW9
அனைவரும் வருக ! திருவருள் பெறுக!!
மீண்டும் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
சித்தர்களின் திருவிழாவிற்கு அனைவரும் வருக! வருக!! - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_20.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

அருமையான தகவல் ஐயா நன்றி
ReplyDelete