"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 31, 2019

மருதேரி மன்னவன் அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா (08.01.2020 ) - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர்!

ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

 ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.

என்ற வள்ளலாரின் அருள்வாக்கோடு இப்பதிவைத் தொடர்வோம். 

அனைவருக்கும் புதிய ஆண்டின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். புதிய ஆண்டின் முதல் பதிவாக என்ன பதிவு தரலாம் என்று நாம் பலவாறாக யோசித்தோம். குருவை பற்றி பேசாது, சிந்திக்காது புதிய ஆண்டினை தொடர முடியுமா என்ன? இதோ..குருவே நம்மை இங்கே வழிநடத்துகிறார்.

சன்மார்க்கம் ஒன்றையே தம் குறிக்கோளாய்க் கொண்டு மருதேரியில் பிருகு மகரிஷி அருள் நிலையம் இயங்கி வருகின்றது. இங்கே ஜோதி வழிபாடு ஒன்றே பிரசித்தம். நாம் ஏற்கனவே மருதேரி அனுபவங்களை பகிர்ந்துள்ளோம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திர வழிபாடு இங்கே நடைபெறும். அன்றைய நாளில் நவகோடி சித்தர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.


சித்தர்கள் ஆசி  இங்கே கிடைக்கின்றது , உருவ வழிபாடு கிடையாது. ஜோதியை மனதுள் நினைத்து, மனதினை செம்மைப் படுத்த, சித்தர்களை உணரலாம். சித்தர்கள் போற்றிய வாழ்வியலை போதிக்க ஆசிரமம் முனைந்து செயல்பட்டு வருகின்றது.

தமிழ் மாத கடைசி ஞாயிறு அன்று, ரவி வழிபாடு யாகத்துடன் நடைபெறுகின்றது. இயற்கையை இன்று யார் வழிபடுகிறார்கள்? இதோ. நம் மருதேரி ஆசிரமம் இயற்கை வழிபாட்டினை - ரவி வழிபாடாக செய்து வருகின்றது.

 இத்தகு சீரும், சிறப்புமிக்க மருதேரியில் வருகின்ற 08.1.2020 அன்று அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா நடைபெறுகின்றது. இந்த விழாவில் அகண்ட ஜோதி தரிசனத்தோடு, உலக மக்கள் அனைவரும் உடல் நலம், மன வளம் பெற்று வாழ்ந்திட சுமார் 2000 பேர் சேர்ந்து   பாசுபத யஃனம் நடத்த  உள்ளார்கள்.இந்த யஃனம் பிருகு மகரிஷியாலும் ,  மரிஷீ, காஷ்யபர் மற்றும் அத்திரி குருக்களின் கருணையாலும், ஆசியாலும் மற்றும் நவகோடி சித்தர்களின் அருளாலும்  நடைபெற உள்ளது.  உலகம் உய்வு பெறவும், சன்மார்க்கம் ஓங்கவும் நடைபெறும் இந்த யக்ஞத்தில் அனைவரும் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

 மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழைப் பார்க்கவும்.






                                                    குரு ஆன்மாவின் தலைவன் 
ஆன்மாவை வழிநடத்திச் செல்பவன் 
ஆன்மாவின் பிழைகளை மன்னிப்பவன் 
ஆன்மாவை உய்விப்பவன் குரு 

உன் ஆன்மாவை அரவணைத்து 
உன் ஆன்மாவை அனுசரித்து 
உன் ஆன்மாவிற்கு அரண் அமைத்து 
உன் ஆன்மாவைக் காப்பவன் குரு 

குருவை அடைதல் என்பது எளிதோ?
குருவின் அருள் பெறுதல் சுலபமோ?
குருவின் அருகாமை உனக்கு சாத்தியமோ?
மருதேரி மன்னவனால் எளிதாம்,சுலபமாம்,சாத்தியமாம் 







சில பொக்கிஷங்களை மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். நர்மதை ஆற்றங்கரையில் உள்ள குஜராத்தில் அருள்பாலிக்கும் பாருச் (bharuch) கோயிலில் அருள்பாலிக்கும் பிருகு மகரிஷியின் தரிசனம் தான் மேலே நீங்கள் காண்பது. அங்கே ஏற்றியுள்ள அகண்டம் கீழே பாருங்கள். 


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html

வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

  சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

 முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html



No comments:

Post a Comment