"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, December 4, 2019

ஞானியை தேடாதே...ஞானத்தை தேடு...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாம் அனைவரும் யாரைத் தேடுகின்றோம்? எதை தேடுகின்றோம்? இன்பம் என்று வைத்துக் கொள்ளலாமா? ஏனெனில் துயர வாழக்கையில் இன்பமாக வாழ வேண்டும் என்பதே நம் குறிக்கோள். இந்த நிலையில் ஆன்மிகம் என்ற பெயரில் நடக்கும் கூத்தை பார்த்தால் நம்மால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில் நம்மால் நம் கஷ்டத்தை அனுபவிக்க முடியவில்லை என்பது நிதர்சனம். என்ன செய்வது? துயர வாழ்க்கை என்று நாம் சொல்லிவிட்டோம். உடலோடு உயிர் சேர்ந்தாலே துயரம் தானே..அதனோடு மனமும் சேர்ந்து செய்யும் கூத்து இருக்கின்றதே..சொல்லி மாளாது. என்ன தான் செய்வது? மனம் ஒரு குரங்கு ஆயிற்றே. அடக்க நினைக்கும் மனதை அறிய பழகி, அனுபவித்து தீர்க்க வேண்டிய துன்பத்தை அனுபவித்து, நித்தம் வழிபாடு செய்து, இறையிடம் பேசி, மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்து வாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதி பெறுவீர்கள்.

நாமும் பல குருமார்களை தொட்டுக்காட்டியுள்ளோம். ஆரம்பத்தில் நாமும் புற வழிபாட்டில் தான் இருந்தோம். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அக வழிபாடு நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். சித்தர்களை தேடுவது தவறன்று; முதலில் அப்படி தேடிக் கொண்டே இருங்கள். பின்னர் அவர்கள் சொல்வதை பின்பற்ற தொடங்குங்கள். மீண்டும் பதிவின் தலைப்பை படியுங்கள். ஞானியை தேடாதே...ஞானத்தை தேடு...

எந்த மார்க்கத்தை நீங்கள் பின்பற்றினாலும் ஆரம்ப காலத்தில் ஞானியை தேடுங்கள்.
பின்னர் அவரிடமிருந்து ஞானத்தை தேடுங்கள். அப்படி ஒரு சம்பவத்தை இங்கே காட்சிப்படமாக பகிர்கின்றோம். குருவின் பாதம் பிடிக்க ஆரம்பத்தில் கற்றுக் கொண்டு பின்னர் குருவின் பதம் பிடிக்க கற்றுக் கொள்ளுங்கள்.


இதோ..எம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி  வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தை தருகின்றோம்.

















காட்சி பதிவு எப்படி இருந்தது.. மீண்டும் அடுத்த  பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html


வாழ்க வளமுடன்! என்ற மந்திரச் சொல் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_53.html

குருவைக் கொண்டாடுவோம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_14.html

குரு உரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_54.html


வாழ்வாங்கு வாழ - தொடர்பதிவு (2) - ஞான ஆசிரியர்கள் தின விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/2_12.html

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_98.html

No comments:

Post a Comment