அனைவருக்கும் வணக்கம்.
நம் பற்பல தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றோம். இவற்றில் அறுபடை வீடு, திருப்புகழ் தலங்கள், தேவாரத் தலங்கள், 108 திவ்ய தேசங்கள், நவகிரக கோயில், உயிர்நிலை கோயில்கள் என அடங்கும். இதில் நாம் இன்று நட்சத்திரக் கோயில் பற்றி காண உள்ளோம். வானியல் ஜோதிடமும் மிக மிக அற்புதமானது. ஆனால் இன்று ஒரே ஜாதகத்திற்கு பல பரிகாரங்கள். பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லையே என்று புலம்புவதும் உண்டு. ஏனோ தானோ என்று பரிகாரம் செய்தால் பலனும் ஏனோ தானோ என்று தான் பலனும் கிடைக்கும். இங்கு பரிகாரம் என்று நாம் சொல்வது ஆலய வழிபாடே..ஆலய வழிபாடு மூலம் ஆன்ம வழிபாட்டை நாம் தொட வேண்டும். சரி..அதென்ன நட்சத்திரக் கோயில்? நட்சத்திரங்களான இருபத்து ஏழு பெண்களும் வணங்கிய தலங்கள் நட்சத்திர கோயில்களாகும். நட்சத்திரங்கள் வழிபட்ட தலங்களின் பட்டியல் கீழே...
மேற்கண்ட பட்டியலை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வருடம் ஒருமுறை உங்களின் நட்சத்திரம் வருகின்ற நாளில் சென்று, நெய் விளக்கேற்றி, அன்னசேவை செய்து, அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து, உங்கள் பேரில் அர்ச்சனை செய்து பாருங்கள். சிறிய அளவிலாவது மாற்றத்தை உங்கள் வாழ்வில் உணர்வீர்கள்.
இதில் மூல நட்சத்திர கோயிலான மப்பேடு ஸ்ரீ சிங்கீஸ்வரர், சுவாதி நட்சத்திர கோயிலான சித்துக்காடு ஸ்ரீ தாத்திரீஸ்வரர் கோயில் இரண்டுமே சென்னைக்கு மிக அருகிலே உள்ளது.வாய்ப்புள்ள அன்பர்கள் கண்டு தரிசிக்கவும். அடுத்து 27 நட்சத்திரங்களில் திரு என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் நட்சத்திரங்கள் இரண்டு. ஒன்று திருவாதிரை, மற்றொன்று திருவோணம். இதில் திருவாதிரை நட்சத்திரக் கோயிலான அதிராம்பட்டினம் ஸ்ரீ அபயவரதீஸ்வரர் கோயிலுக்கு இப்போது நாம் செல்ல இருக்கின்றோம். அட..இன்று (13.12.2019) திருவாதிரை நட்சத்திரம் ஆயிற்றே.
முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார்.
இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.
நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம்.
வினை தீர்க்கும் விநாயகர் தரிசனம் வெளிப்பிரகாரத்தில் பெற்றோம்,
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய சிறந்த தலம் இது. திரிநேத்ர சக்தி கொண்ட தலம். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபய வரதீஸ்வரராக இத்தல இறைவன் விளங்குகிறார். இத்தல அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. திருக்கடையூருக்கு அடுத்தபடியாக எமபயம் போக்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. சமயக்குரவர் மூவரில் சுந்தரரும், சம்பந்தரும் இத்தலத்தை தங்களது தேவார வைப்புத்தலமாக பாடியுள்ளனர்.
தீராத நோயால் அவதிப் படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நட்சத்திர பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளார். ஆரம்ப காலத்தில் இத்தலம் திருஆதிரைப்பட்டினமாக இருந்து,அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது.
பிரகாரத்தில் விநாயகர்,முருகர்,அம்பாள் என தரிசனம் முடித்து வந்து, உள்ளே சென்றோம்.
கோயிலுனுள் இருந்து வெளியே நநதியெம்பெருமான் தரிசனம் கண்டோம். பின்னர் பிரசாதம் வாங்கி அப்பனிடம் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
நம் பற்பல தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றோம். இவற்றில் அறுபடை வீடு, திருப்புகழ் தலங்கள், தேவாரத் தலங்கள், 108 திவ்ய தேசங்கள், நவகிரக கோயில், உயிர்நிலை கோயில்கள் என அடங்கும். இதில் நாம் இன்று நட்சத்திரக் கோயில் பற்றி காண உள்ளோம். வானியல் ஜோதிடமும் மிக மிக அற்புதமானது. ஆனால் இன்று ஒரே ஜாதகத்திற்கு பல பரிகாரங்கள். பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லையே என்று புலம்புவதும் உண்டு. ஏனோ தானோ என்று பரிகாரம் செய்தால் பலனும் ஏனோ தானோ என்று தான் பலனும் கிடைக்கும். இங்கு பரிகாரம் என்று நாம் சொல்வது ஆலய வழிபாடே..ஆலய வழிபாடு மூலம் ஆன்ம வழிபாட்டை நாம் தொட வேண்டும். சரி..அதென்ன நட்சத்திரக் கோயில்? நட்சத்திரங்களான இருபத்து ஏழு பெண்களும் வணங்கிய தலங்கள் நட்சத்திர கோயில்களாகும். நட்சத்திரங்கள் வழிபட்ட தலங்களின் பட்டியல் கீழே...
வரிசை எண் | நட்சத்திரங்களின் பெயர் | கோயில் பெயர் |
---|---|---|
1 | அஸ்வினி | திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் |
2 | பரணி | நல்லாடை அக்னீஸ்வரர் கோயில் |
3 | கார்த்திகை | கஞ்சனாகரம் காத்ர சுந்தரேஸ்வரர் கோயில் |
4 | ரோகிணி | காஞ்சிபுரம் பாண்டவதூதப்பெருமாள் கோயில் |
5 | மிருகசீரிடம் | எண்கன் ஆதிநாராயணப்பெருமாள் கோயில் |
6 | திருவாதிரை | அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் கோயில் |
7 | புனர்பூசம் | வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில் |
8 | பூசம் | விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில் |
9 | ஆயில்யம் | தேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில் |
10 | மகம் | விராலிப்பட்டி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
11 | பூரம் | திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயில் |
12 | உத்திரம் | இடையாற்று மங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில் |
13 | ஹஸ்தம் | கோமல் கிருபாகூபாரேச்வரர் கோயில் |
14 | சித்திரை | குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயில் |
15 | சுவாதி | சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில் |
16 | விசாகம் | திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில் |
17 | அனுஷம் | திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில் |
18 | கேட்டை | பசுபதிகோவில் வரதராஜப்பெருமாள் கோயில் |
19 | மூலம் | மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில் |
20 | பூராடம் | கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் |
21 | உத்திராடம் | கீழப்பூங்குடி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
22 | திருவோணம் | திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் |
23 | அவிட்டம் | கொருக்கை பிரம்மஞான புரீஸ்வரர் கோயில் |
24 | சதயம் | திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில் |
25 | பூரட்டாதி | ரங்கநாதபுரம் திருவானேஷ்வர் கோயில் |
26 | உத்திரட்டாதி | தீயத்தூர் ஸ்ரீ சக்கரலட்சுமீஸ்வரர் கோயில் |
27 | ரேவதி | காருகுடி கைலாசநாதர் கோயில் |
மேற்கண்ட பட்டியலை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வருடம் ஒருமுறை உங்களின் நட்சத்திரம் வருகின்ற நாளில் சென்று, நெய் விளக்கேற்றி, அன்னசேவை செய்து, அபிஷேக பொருட்களை வாங்கி கொடுத்து, உங்கள் பேரில் அர்ச்சனை செய்து பாருங்கள். சிறிய அளவிலாவது மாற்றத்தை உங்கள் வாழ்வில் உணர்வீர்கள்.
இதில் மூல நட்சத்திர கோயிலான மப்பேடு ஸ்ரீ சிங்கீஸ்வரர், சுவாதி நட்சத்திர கோயிலான சித்துக்காடு ஸ்ரீ தாத்திரீஸ்வரர் கோயில் இரண்டுமே சென்னைக்கு மிக அருகிலே உள்ளது.வாய்ப்புள்ள அன்பர்கள் கண்டு தரிசிக்கவும். அடுத்து 27 நட்சத்திரங்களில் திரு என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் நட்சத்திரங்கள் இரண்டு. ஒன்று திருவாதிரை, மற்றொன்று திருவோணம். இதில் திருவாதிரை நட்சத்திரக் கோயிலான அதிராம்பட்டினம் ஸ்ரீ அபயவரதீஸ்வரர் கோயிலுக்கு இப்போது நாம் செல்ல இருக்கின்றோம். அட..இன்று (13.12.2019) திருவாதிரை நட்சத்திரம் ஆயிற்றே.
நம்மை வரவேற்கும் கோயிலின் ராஜ கோபுரம் மற்றும் பெயர் பலகை. சார்..கோயிலின் தல வரலாறு தெரிந்து கொள்வோம்.
இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.
நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம்.
வெளிச்சுற்று பிரகாரத்தை ஒரு முறை வலம் வந்தோம்.
வினை தீர்க்கும் விநாயகர் தரிசனம் வெளிப்பிரகாரத்தில் பெற்றோம்,
முருகன் அருள் பெற்ற போது ...
எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுதே உருகி அழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும்போதும் வேலும் மயிலும் என்பேன்
செந்தில் வேலவனே
என்று தொழுதோம்.
அர்ச்சித்து ஆராத்தி காட்டினார்கள்.
காயத்திரி மந்திரங்கள் .. அனைவர்க்கும் உபயோகம் ஆகும்படி தந்து உள்ளார்கள்.
மீண்டும் ஒரு ஆலய தரிசனத்தில் சந்திப்போம்.
மீள்பதிவாக :-
பாடல் பெற்ற தலங்கள் (8) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/12/8.html
பாடல் பெற்ற தலங்கள் (7) - அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - https://tut-temples.blogspot.com/2019/11/7_29.html
பாடல் பெற்ற தலங்கள் (6) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/11/6_13.html
பாடல் பெற்ற தலங்கள் (6) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/11/6_13.html
பாடல் பெற்ற தலங்கள் (5) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/10/5.html
தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html
பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html
பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html
ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html
பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html
தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html
பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html
பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html
ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html
No comments:
Post a Comment