அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சில பதிவுகளுக்கு முன்பு நாம் குறிஞ்சி ஆண்டவரே போற்றி! போற்றி!! என்று முருகனைப் போற்றினோம். பதிவின் இறுதியில் அடுத்த முருகப் பெருமான் பற்றி கூறி இருந்தோம். கொடைக்கானல் செல்லும் அன்பர்களுக்கு சுற்றுலாவுடன் ஆன்மிக தரிசனம் பெற உதவியாக இந்த பதிவுகள் இருக்கும் என்று நாம் விரும்புகின்றோம். இதோ..இன்றைய பதிவில் பூம்பாறையில் மேவு பெருமாள் தரிசனம் பெற இருக்கின்றோம்.
தெளிவெல்லாம் முருகனே
தெய்வமும் முருகனே
அழகெல்லாம் முருகனே ...
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே
தெய்வமும் முருகனே
தெய்வமும் முருகனே
சில பதிவுகளுக்கு முன்பு நாம் குறிஞ்சி ஆண்டவரே போற்றி! போற்றி!! என்று முருகனைப் போற்றினோம். பதிவின் இறுதியில் அடுத்த முருகப் பெருமான் பற்றி கூறி இருந்தோம். கொடைக்கானல் செல்லும் அன்பர்களுக்கு சுற்றுலாவுடன் ஆன்மிக தரிசனம் பெற உதவியாக இந்த பதிவுகள் இருக்கும் என்று நாம் விரும்புகின்றோம். இதோ..இன்றைய பதிவில் பூம்பாறையில் மேவு பெருமாள் தரிசனம் பெற இருக்கின்றோம்.
"பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
பூங்கதலி கோடி திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பறையில் மேவு பெருமாளே."
பூங்கதலி கோடி திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பறையில் மேவு பெருமாளே."
என திருப்புகழில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலம் இது.
தாந்ததன தான தாந்ததன தான
தாந்ததன தான ...... தனதான
......... பாடல் .........
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
வாந்தவிய மாக ...... முறைபேசி
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
வாழ்ந்தமனை தேடி ...... உறவாடி
ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
ஏங்குமிடை வாட ...... விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
ஏய்ந்தவிலைமாதர் ...... உறவாமோ
பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
தாஞ்செகண சேசெ ...... எனவோசை
பாங்குபெறு தாள மேங்கநட மாடு
பாண்டவர்ச காயன் ...... மருகோனே
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
பூங்கதலி கோடி ...... திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பறையின் மேவு ...... பெருமாளே.
தாந்ததன தான ...... தனதான
......... பாடல் .........
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
வாந்தவிய மாக ...... முறைபேசி
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
வாழ்ந்தமனை தேடி ...... உறவாடி
ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
ஏங்குமிடை வாட ...... விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
ஏய்ந்தவிலைமாதர் ...... உறவாமோ
பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
தாஞ்செகண சேசெ ...... எனவோசை
பாங்குபெறு தாள மேங்கநட மாடு
பாண்டவர்ச காயன் ...... மருகோனே
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
பூங்கதலி கோடி ...... திகழ்சோலை
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
பூம்பறையின் மேவு ...... பெருமாளே.
பூம்பாறை குழந்தை வேலப்பர்
எழுந்தருளியுள்ள பூம்பாறை என்னும் அழகிய சிற்றூர் கொடைக்கானலில் இருந்து 20
கி.மீ தொலைவில் மேல்மலைப் பகுதியில் சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டு
நடுவில் அமைந்துள்ளது.
இங்குச் செல்லும்போது மலையில் வளைந்து நெளிந்து செல்லும் சாலையிலிருந்து
தொலைவில் தெரியும் இவ்வூரின் காட்சியைத் தவறவிட்டுவிடாதீர்கள்.அடுக்கடுக்கான நிலங்கள், பெட்டிபெட்டியான வீடுகள், சுற்றிலும் பசேலெனப்
போர்த்திய புல்வெளிகள் என மனத்தைக் கொள்ளைகொள்ளும் அழகுடன்
காட்சியளிக்கிறது பூம்பாறை.
ஊருக்குள் நுழைந்ததுமே முதலில் தெரிவது 'அருள்மிகு குழந்தை வேலப்பர்
கோயில்', இது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலின் உபகோயிலாகும். சிறிய கோவில்தான்.... ஆனால் மிகவும் பழமையானது.... இக்கோவில் மிகப்பழமை
வாய்ந்தது என்பதற்குச் சான்றாகப் பழமையானச் சிற்பங்களைக் காணமுடிகிறது.
பழனியில் இருக்கும் போகர் உருவாக்கிய,நவபாஷான முருகர் சிலை, முதலில் இந்த கோவிலில் தான் போகரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது.பிறகு தான் பழனிக்கு கொண்டு செல்லப் பட்டது என்று கூறுகிறார்கள். இந்த கோவிலும் பழனி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது... ஒவ்வொரு வருடமும்,தை பூசத்திற்கு அடுத்து வரும் கேட்டை நட்சத்திரத்தில் இங்க தேர் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
போகர் சித்தர்வேட்கோவர் வகுப்பைச் சார்ந்தவர். சர்வ சாத்திரங்களையும் கற்றவர் இவர் சித்தத்தை அடக்கியதால் மட்டும் சித்தர் அல்ல,இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர் இவர். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் என்று அறியப்படுகிறார்.
நவ பாஷாணங்களின் சேர்க்கையில் போகர் மூன்று நவ பாஷாண சிலைகள் உருவாக்கினார் என்றும், ஒன்று பழனிமலையிலும் மற்றொன்று பூம்பாறையிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் மூன்றாவது இந்த பூம்பாறை கிராமத்தில் எங்கோ மறைக்கப் பட்டதாகவும் அதை குறிப்பிட்ட மக்கள் இன்றும் வழிபட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.
போகர் மூன்று நவ பாஷாண சிலைகளையும் செய்த இடம் தமிழ்நாட்டில், வருஷ நாடு, வத்திராயிருப்பு என்ற பகுதியில். சதுரகிரி மலையில் கோரக்கர் குகை இருப்பது பற்றியும், இவர்கள் பயன்படுத்திய நவபாஷாணக் கலவைகளை கட்டிய இடம் இங்கு உள்ளதாகவும்உறுதிப்படுத்த முடியாத செவிவழிச் செய்திகள் உலவுகின்றன.
பழனி மலைக் கோயிலின் தென்மேற்கு திசையில் உள்ளது“போகரின் ஜீவ சமாதி” இங்கு அவர் பூசித்த“புவனேசுவரி அம்மன் சிலையும்,மரகத லிங்கமும் இன்றும் பூசையில் உள்ளது இந்த சன்னிதியில் இருந்து முருகனின் திருவடி நிலைக்கு உள்ள சுரங்க பாதையில் சென்ற போகர் திரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.இத்தகைய பல சிறப்புக்கள் மிக்க, பூம்பாறை முருகன்
” குழந்தை வேலப்பரை விபூதி அலங்காரத்தில் காண்பது அருமையாக இருக்கும், எம்பெருமான் முருகன் நினைத்தால் தான் இங்கு வர முடியும்” இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம், ”கோவில் வாசல் வரை வந்தாலும் தண்ணீர் குடித்து வரலாம், சாமான்கள் வாங்கி வரலாம் என்று சிலர் போய் விடுவார்கள் அவர்கள் திரும்பி வரும் போது நடை சாத்திய நிகழ்வுகள் உண்டு” .
பழனி மலை முருகன் போல இவரும் நவபாஷணத்தால் செய்யப்பட்ட சிலை. போகரால் செய்யப்பட்டது . பஞ்சாமிர்த தீர்த்தம் கொடுப்பதுதான் கோவில் சிறப்பு ,முருகனுக்குச் செய்திருந்த அந்த ராஜ அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
பழனி தேவஸ்தானக் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும், தை
பூசத்திற்கு அடுத்து வரும் கேட்டை நட்சத்திரத்தில் தேர் திருவிழா மிகவும்
சிறப்பாகக் கொண்டாடப்படுமாம்.
மூலவர் சந்நிதி உள்ளேயே தேனீக்கள் கூடுகட்டியுள்ளன. அதிலிருந்துப் பெறப்படும் தேனைக் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்வார்களாம்.
இனி கோயிலை சுற்றி தரிசனம் செய்வோமா?
கோயில் கொடிமரம் தரிசனம் செய்தோம்.பின்னர் அப்படியே கோயிலினுள் சென்றோம். அப்பனை கண்ணார கண்டோம், கொண்டோம். கொண்டாடினோம். மீண்டும் ஒரு முறை அழகனை தரிசிக்க மனம் ஏங்குகின்றது.
கோயிலை சுற்றி பிரகார வலம் வந்தோம்.இயற்கையின் இன்பத்தில் இளைப்பாறினோம்.
நம் அன்பர்களுக்காக அருணகிரிநாதரின் தரிசனம்.
என்னப்பா? இது..அருணகிரிநாதரின் தரிசனம் பெற இயலவில்லை என நீங்கள் ஏங்குவது நமக்கு புரிகின்றது. இதோ. மீண்டும் உங்கள் அனைவருக்காகவும் தருகின்றோம்.
பூம்பறையின் மேவு ..பெருமாளே! என்று பாடிய நம் பெருமானின் தரிசனம். கண்களில் ஒற்றிக் கொள்ளுங்கள். திருப்புகழ் பாடி செவியில் நிறைத்துக் கொள்ளுங்கள். மொத்தத்தில் அருணகிரிநாதரின் தரிசனத்தை அன்பில் ஆழ்த்துங்கள்.
அப்பனே..அகத்தீசா ..குருநாதா என்று வேண்டும் நாம் இங்கே அப்பனே..முருகா..குருவின் குருநாதா...என்று மனதுள் வேண்டினோம்.
இதோ..ராஜ அலங்காரத்தில் பூம்பாறை முருகன் தரிசனம். இந்த தரிசனம் கண்டு அனைவரும் அழகெல்லாம் முருகனே..என்று பாடுவது உறுதி.
அழகெல்லாம் முருகனே ...
அருளெல்லாம் முருகனேதெளிவெல்லாம் முருகனே
தெய்வமும் முருகனே
அழகெல்லாம் முருகனே ...
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே
தெய்வமும் முருகனே
தெய்வமும் முருகனே
பதிவின் தலைப்பும் நீங்கள் பெற்ற தரிசனமும் சரியாக இருக்கும் என்று நாம் நினைக்கின்றோம். அவன் குருவின் அருளாலே குருவின் குருவாம் முருகப்பெருமான் தாள் வணங்குகின்றோம். இங்கிருந்து நாம் மீண்டும் ஒரு முருகப்பெருமானை தரிசித்தோம். அடுத்த பதிவில் மீண்டும் முருகப்பெருமான் தரிசனம் பெறுவோம்.
மீள்பதிவாக:-
வள்ளிமலை அற்புதங்கள் - (7) - https://tut-temples.blogspot.com/2019/12/7_26.html
வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html
வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html
நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html
தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html
முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html
No comments:
Post a Comment