"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, May 14, 2020

இன்றைய தேய்பிறை அஷ்டமியில் குரு அரிச்சந்திர பைரவர் திருக்கோயில் தரிசிக்கலாமே !

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று தேய்பிறை அஷ்டமி திதி ஆரம்பம். இதோ. இந்த அஷ்டமி திதியையொட்டி அனைவரும் குரு அரிச்சந்திர பைரவர் திருக்கோயில் தரிசனம் பெற அழைக்கின்றோம். மேலும் வீட்டிலேயே பைரவரை மனதார தியானித்து இரண்டு நெய் தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டுகின்றோம். 

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.

பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.




இன்றைய பதிவில் குரு அரிச்சந்திர பைரவர் திருக்கோயில் பற்றி அறிய உள்ளோம்.

உலகில் திருப்புகழோடு நற்குணங்களோடு வாழ்ந்த மாமனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறப்பு அருங்குணத்திற்கும், பண்பிற்கும் புகழுடையவராக வாழ்ந்தனர்.இறைவனின் அருங்குணங்களாக கூறப்படுவது, 

ஒன்று தூய்மையான அறிவு வடிவமானவன் 
இரண்டாவது விருப்பு வெறுப்பு இலாதவன்
மூன்றாவது  அறவழி அந்தணன்
நான்காவது பாருக்குள் சிறந்தவன்
ஐந்தாவது பாரசார சகோதரன்
ஆறாவது சுத்த வீரன்
ஏழாவது மறைபொருளுக்கும், புகழுக்கும் தலைவன்
எட்டாவது சத்திய வடிவமானவன்
ஒன்பதாவது முடிவில்லாதவன்.

இந்த இறை குணங்கள் அனைத்தும் ஒருங்கே கொண்டு வாழ்ந்தவர் அயோத்தி நாட்டு சக்கரவர்த்தி அரிச்சந்திரர் ஆவார். சூரிய குலத்தின் வழித்தோன்றல்களான உயிரோடு சொர்க்கம் சென்ற திரிசங்கு மகாராஜாவிற்கு குமாரரும், மஹா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமபிரானுக்கு முப்பாட்டனர் ஆன அயோத்தியில் அவதரித்த அரிச்சந்திர மாமன்னராவார். காசி நாட்டு இளவரசியான சந்திரவதியை சுயம்வரத்தல் மணம் புரிந்தார். குலக்கொளுந்தான லோகிதாசனை மகனாக பெற்றெடுத்தனர். அயோத்தியில் அரிச்சந்திரனின் ஆட்சி அரண் (சிவன்) சாட்சியாக நடந்தது. அயோத்தி நாட்டு மக்கள் எல்லா நலன்களும் பெற்று அமைதியாக வாழ்ந்தனர். குறிப்பாக பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது பேரன்புக் கொண்டு அவர்களுக்கு உழுது வாழ நிலமும், இருக்க இருப்பிடமும் கொடுத்து சமதர்ம நிலையில் கொண்டார்.

இவரது மனுதர்மம் மானிடர்களிடம் மட்டுமல்லாத கால்நடை ஜீவன்களிடத்தும் கருணை கொண்டு ஆட்சி செய்தார். உதாரணமாக, பசு மாட்டின் முதல் இரு காம்புகளின் சுரக்கும் பாலை அதன் கன்றிற்கும், மற்ற இரு காம்புகளில் சுரக்கும் பாலை மனிதர்களிக்கும் உரியது என்று சட்டம் இயற்றினார். சிறப்புகளோடு ஆட்சி மாட்சியோடு நடந்தது. இவரது புகழ் பூலோகத்தில் மட்டுமல்லாது இந்திரலோகம் வரை எட்டியது. இந்திர சபையில் பிரம்மரிஷி வசிஷ்டர் அரிச்சந்திரனை பாருக்கு ஒருவன் சத்தியவடிவமானவன் என்று புகழ்ந்தார். இதற்கு மாறாக விஸ்வாமித்திர மாமுனிவர் அரிச்சந்திரனை ஒரு பொய்யன் என்றும் அவன் தர்மத்தை விட்டும், உண்மையை விட்டும் விலகியவன் என்று தான் நிரூபிப்பதாக சபதமிட்டு பூலோகம் திரும்பினார்.

ஒருநாள், மாமன்னர் அரிச்சந்திரன் சபையில் விஸ்வாமித்திரர் வருகை தந்தார்.இதனை உணர்ந்த சக்கரவர்த்தி மாமுனியை வரவேற்று பல உபச்சாரங்கள் செய்தார். அவரிடம் தாம் என்ன பணி செய்ய வேண்டுமென்று வினாவினார். அதற்கு உலக அமைதிக்காகவும் மக்கள் நலனுக்காக மாபெரும் செல்வம்  வேண்டுமென்று கேட்டார். அதற்கு இப்பொழுதே தருவதாக வாக்களித்தார்.
அதற்கு மற்றொரு முறை அச்செல்வத்தை பெற்றுகொள்கிறோம் என்று கூறி
விடைபெற்றார்.

பின்பு ஒருநாள் அவைக்கு வருகை தந்த விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனிடம் அயோத்தி ராஜ்யத்தை தனக்கு கொடுக்கும்படி ஆணையிட்டார். மறுப்பு கூறாமல் மாமன்னர் முழு மனதோடு தனது அரசை விஸ்வாமித்திரரிடம் கொடுத்தார். அரசை தாரை வார்த்துக் கொடுத்த அரிச்சந்திரனிடம் அயோத்தியை விட்டு வெளியேறவும் தான் முன் கேட்ட மஹா வேள்விக்கான செல்வத்தை மாமுனிவர் கொடுக்கும்படி உத்தரவிட்டார்.இராச்சியத்தை கொடுத்த அரிச்சந்திரனிடம் மனைவி, மகன் தவிர வேறொன்றும் தன்னிடம் இல்லை என்று பதிலளித்தார். அதற்கு விஸ்வாமித்திரர்  அரிச்சந்திரனிடம் மாபெரும் செல்வத்தை கொடுப்பதாக சொல்லவில்லை என்று பொய் கூற வற்புறுத்தினார். அதற்கு  அரிச்சந்திரனோஉண்மைக்கு மாறாக என்றும் நடப்பது இல்லை என்று கூறினார். 

இதை கேட்ட நட்சத்திரேசன் என்ற தரகனை அனுப்புவதாகவும் ஒரு வாரம் காலகெடுவிற்க்குள் மாவேள்விக்கான செல்வத்தை தரும்படி விஸ்வாமித்திரர் மாமன்னரையும், அவரது மனைவியையும் நாடு கடத்தினார். காசி நாடு வரும் வரை தரகன் கொடுத்த தொல்லையை ஏற்க முடியாத சந்திரவதி தன்னை விற்று அதன் மூலம் கிடைக்கும் செல்வத்தை நட்சத்திரேசனிடம் கொடுக்கும்படி தன் கணவரிடம் கேட்டுக் கொண்டார். மன்னனும் வேறுவழியின்றி காசி பஜாரில் சந்திரவதியை ஏலமிட்டார். 

காலகண்ட என்ற ஐயர் பெரும் செல்வத்திற்கு விலைக்கு வாங்கினார்.ஐயருடன் சந்திரவதியும் லோகிதாசனும் அடிமையாக சென்றனர். ஏலத்தில் கிடைத்த பெரும் செல்வத்தை  நட்சத்திரேசனிடம் கொடுத்து விடைபெறசெய்தார். ஆனால் தரகனோ ஒரு வார காலம் அரிச்சந்திரனிடம் இருந்ததற்கு தனக்கு தரகு வேண்டும் என்று கண்டித்தார். தரகனுக்கு பணம்
தரும் பொருட்டு தன்னையே வீரபாகு என்கிற சுடுகாட்டை ஆள்பவனுக்கு அடிமையாகி அவன் பின் சென்றார். வீரபாகு  அரிச்சந்திரனை அடிமையாக்கி காசியில் உள்ள சுடுகாட்டில் பணி செய்ய வேண்டும் என்றும் வரும் சடலங்களை சிதை மூட்ட கூலியாக கால்பணமும், முழத்துண்டும், வாய்க்கரிசியும் பெற்றபின் ஈமக்கடன்களை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். 

எஜமானின் கட்டளையை ஏற்று வீரபாகுவிற்கு உரிய பொருட்களைப் பெற்றுக் கொண்டு சுடலையை காத்துவந்தார். இரவு பகலும் மயானத்திலே இருந்ததால் சுடலைப்  புகையால் உடல் கறுத்து தேகமே உருமாறியது. அது மட்டுமில்லாமல் தனிமை அவரை வாட்டியது. இரவில் பேய், பிசாசுகள், கேட்ட ஆவிகள் தம் ஆசைகள் அடங்காமல் கூக்குரலிட்டு அலறியது. தனிமையும், கெட்ட ஆன்மாக்களின் தொல்லையிலிருந்தும் விடுபட எண்ணினார். காசியை இறையாட்சி செய்கின்ற ஸ்ரீ கால பைரவரின் புராணத்தை நினைத்தார். சூரிய பகவானின் மகனான ஸ்ரீ சனீஸ்வரர் அவரது அண்ணன் ஸ்ரீ  எமதர்மராஜாவால் அலட்சியப்படுத்தி அவமானப்பட்டு மனம் புண்ணாகினார்.
இதை உணர்ந்த தாய் அவள் மகனான சனீஸ்வரனை ஸ்ரீ கால பைரவர் வழிபாடு  செய்ய தூண்டினார். சனீஸ்வரர் கால பைரவர் வழிபாடு செய்ததால் சனீஸ்வரனுக்கு பைரவர் நல்ல குருநாதராக இருந்து மகாதவத்தின் மூலம் நவகிரக பதவியும், ஈஸ்வர பட்டமும் பெறச்செய்தார். அந்த புராணத்தை உணர்ந்த ஸ்ரீ கால பைரவர் வழிபாடு செய்ததால்  ஸ்ரீ அரிச்சந்திரன் மயான
காண்டம் முழுவதும் நல்ல குருநாதராக இருந்து தனிமை, கெட்ட ஆவிகளின் தொந்தரவுகள் முதலியனவைகளிலிருந்து மீட்டு நல்வழிபடுத்தினார்.

இவ்வாறு சுடலையை காத்து காவல் செய்து, பன்னிரண்டு ஆண்டுகள் அடிமை வாழ்வு வாழ்ந்தார். காசியிலே அரிச்சந்திரனும், தனது மனைவியும், மகனும்,மூவரும் இருந்து சுடலை காத்து சத்தியத்தின் காவலனாக விளங்கிய அரிச்சந்திரனுக்கு ஈமக்கடன் முன்பு முதல் மரியாதை செய்வது உத்தமமே. கங்கை யமுனை சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்தேஸ்மின் கன்னிதிம் குரு வேதங்களின் கூற்றுப்படி ஏழு நதிகளும் தலைச்சிறந்த ஏழு நதிகளாக வர்ணிக்கப்படுகிறது. அதில் பாரதத்தாயின் சிரசாக கங்கையான புண்ணிய நதி தவழ்ந்து விரிந்து ஓடுகிறது. தாயின் பாதத்தில் காவேரி என்கின்ற புண்ணிய நதி தவழ்ந்து ஓடுகிறது. தலை நதியான கங்கையில் காசி என்கிற புண்ணிய  தலத்தில் ஸ்ரீ கால பைரவரின் ஆட்சிக்கு உட்பட்டு  பல அற்புதங்கள் நடைபெறுகின்றன. உதாரணமாக 

மாடு முட்டுவதில்லை, 
இறந்த சடலம் துர்நாற்றம் அடிப்பதில்லை,
கருடன் பறப்பதில்லை, 
பள்ளி கௌலி சொல்லாது,
பூக்கள் மணக்காது, 

அதே போல் கடை புண்ணிய நதியான காவேரி நதியில்  திருச்சிராப்பள்ளி மாநகரில் ஓயாமரி சுடுகாட்டில் ஸ்ரீ அரிச்சந்திர பகவானும் அவரின் நல்ல குரு நாதராக ஸ்ரீ கால பைரவர் தென்முகம் நோக்கி தென்முக கடவுளாக பல அற்புதங்களை செய்து வருகிறார். குறிப்பாக பக்தர்கள் நினைத்த
அனைத்து நற்காரியங்களும் அவரவர் எண்ணியபடி நன்மையாகவே நடக்கின்றன. துன்பங்களும், இடர்பாடுகளும் அகற்றி சந்தோஷமான நல்ல விஷயங்கள் நடைபெறுகின்றன. 



இங்கு இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அதன் உச்சி கால அபிஷேக ஆராதனையும், தயிர் அன்னம் மற்றும் உளுந்து மிளகு வடை நெய்வேத்தியதுடன் பூஜை ஆராதனை செய்து
பக்தர்களுக்கும், வழிபோக்கர்களுக்கும் தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இரவில் அர்த்தஜாம பூஜையாக அபிஷேக ஆராதனையும், பால், பழங்கள் நெய்வேத்தியத்தோடும் வேத ஆகம திருமுறைகள் உடன் சங்கு,தாளம், உடுக்கை, வாத்திய கோஷங்களுடன் நடைபெறுகிறது. 




இவ்வாறு பூஜை நடைபெறும் காலங்களில் நாய்கள் ஓங்காரமிடுகிறது (ஊளையிடுவதில்லை).
இது எங்கும் பாராத அற்புதமாக நடைபெறுகிறது. ஸ்ரீ கால பைரவருக்குரிய இருப்பிடமான ருத்ர பூமியில் (ஓயாமரியில்) தேய்பிறை அஷ்டமி நன்னாளில் சித்தர்களும், கைலாய சிவஞான சிவபூதங்களும் வந்து வருகை தந்து முக்காலமும் உணர்ந்த ஸ்ரீ காலபைரவரை தரிசிக்க வருகிறார்கள். இக்கால ஞானிகள் மூலம் அருள் சொல் கேட்டு மகிழ்கிறோம். ஸ்ரீ கால பைரவற்குரிய க்ஷேத்திரமான சுடுகாட்டில் தென்முக கடவுளாக நல்ல குருநாதராக எங்கும் இல்லாத சுனவாகனம் (நாய் வாகனம்) இறைவற்கு வலது முகம் காட்டாமல் இடது முகம் காட்டுவதால். பக்தர்களின் பில்லி, சூனியம், கெட்ட காலம் முதலியவைகள் இவரை தரிசனம் செய்தால் வெயிலை கண்ட பனி  போலமறைந்து நற்காரியமே நடைபெறும்  . அபிஷேகம் நடைபெறும் காலங்களில் சுனங்கள் (நாய்கள்) ஸ்ரீ கால பைரவரின் திரு பாதங்களின் அருகிலே
உட்கார்ந்திருக்கும். தீர்த்த நீர் தன் மீது பட்டாலும் அவ்விடத்தை விட்டு அகலுவதில்லை. இந்த அற்புதம் ஸ்ரீ கால பைரவர் திருக்காட்சி காண்பது போலே.




தோரண மலை யாத்திரையில் நம்முடனே பைரவர் வந்தார். மிக மிக ஆச்சர்யமாக இருந்த நிகழ்வு இது.




ஓம் பைரவாய நமஹ ..பைரவர் ஆற்றல் மனிதன் பெற வேண்டிய ஆற்றல் . ஆம். நன்றிப் பெருக்கை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த பைரவ ஆற்றல் நமக்கு உணர்த்துகின்றது.

இதே போன்று ஒரு முறை பர்வத மலை யாத்திரையிலும் பைரவர் தரிசனம் பெற்றோம். இது போன்ற ஆசிகள் நமக்கு எப்போது கிட்டும் என தெரியாது. இறையின் சூட்சும தரிசனத்தை இது போன்ற நிகழ்வுகளால் நாம் பெறும்போது நாம் இறையில் ஒன்றுவது உறுதி ஆகும்.



இதே போன்று பொதிகை மலை யாத்திரையில் நாம் பெற்ற பைரவர் தரிசனம்.


பைரவர் ஆற்றல் இந்த உலகில் உள்ள அனைவரையும் காக்க வேண்டி பிரார்த்தித்து மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (6) - https://tut-temples.blogspot.com/2020/05/tut-6.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html


சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html



No comments:

Post a Comment