"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 2, 2023

நீரின்றி அமையாது உலகு (உழவு,உணவு,உயிர்) - ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆடி மாதம் என்றாலே அம்மனின் அருள் தான். தினம் தினம் கொண்டாட்டமாக இந்த ஆடி மாதம் இருக்கின்றது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம் என்று சொல்லலாம். ஆடிப்பூரம் அன்று மிக இயல்பாக இரண்டு ஆலய தரிசனங்கள் அமைந்தது.  இன்று ஆடி மாதம் 18 ஆம் நாள். அதாவது இன்று ஆடிப் பெருக்கு என்று கொண்டாடுவார்கள். இன்றைய நாளில் அனைவருக்கும் அருளும், பொருளும் பெருகட்டும் என்று குருமார்களிடம் வேண்டி பணிகின்றோம்.


ஆடிப் பெருக்கு வழிபாட்டின் நோக்கமே நதி வழிபாடு ஆகும். நதி வழிபாடு தாய் வீட்டிற்கு செல்வது. இந்த உடல் நிலைக்க நீர் அவசியம். தாயின் ஸ்பரிசம் நீரில் உணரலாம்.ஆயிரமாயிரம் வேள்வி தரும் ஆத்மானுபவம் இந்த வழிபாட்டில் பெறலாம். நதி, நாதம், நந்தி உணர்த்தவே இந்த வழிபாடு. முருக வழிபாடு இதில் இலங்கும். சித்த மரபில் நீர் முக்கியம். நகாரத் தொடர்பு இதில் அடங்கும். நகாரமே ஆதி..நமசிவாய.

 இதோ..ஆதி வழிபாடான நதி வழிபாட்டை பிரதானப்படுத்தியே ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. நதி வழிபாட்டின் மேன்மையை சற்று உணர்வோமா?

  அவனின்றி ஓர் அணுவும் அசையாது - ஆம் கடவுளின் அருளின்றி துரும்பும் இங்கே அசைவதில்லை . திருக்குறளில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வான்சிறப்பை கூறி மழையை வள்ளுவனும் சிறப்பித்துப் போற்றுவதால், மழை கடவுளுக்கு அடுத்து நாம் கண்ணில் காணும் கடவுள் என்று சொன்னால் அது மிகையாகாது. இங்கே மண்ணுயிர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது மழையினால் தான்.அவனின்றி ஓர் அணுவும் அசையாது  என்பது போல மழையின்றி மண்ணுயிர்கள் வாழாது என்பது உண்மையே.



இவ்வுலகில் உள்ள புல்,பூண்டு முதலான மனிதன் வரை உள்ள ஆறறிவு உடைய மனிதர்கள் வாழ நீர் அவசியம்.இந்த நீரின் தோற்றம் மழையின் மூலமே உருவாகின்றது. மாதம் மும்மாரி பொழிந்த காலம் உண்டு. வருடம் மும்மாரி பொழிந்த காலமும் உண்டு. இதென்ன ஆச்சர்யம் என்று தோன்றுபவர்கள் 
விவேக சிந்தாமணியை படித்தால் புரியும்.

வேதம் ஓதிய வேதியற்கு ஓர் மழை 
நீதி மன்னர் நெறியருக்கு ஓர் மழை
மாதர் கற்புடை மங்கையருக்கு ஓர் மழை 
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே

மேற்கண்ட பாடல் மூலம் மாதம் மும்மாரி மழை பொழிய காரணம் ஒவ்வொருவரும் தன் கடமையைச் செம்மையாகச் செய்வதே.தம் கடமை தவறும் போது, வருடம் மும்மாரி மழை பொழியும் என்று விவேக சிந்தாமணி பின்வரும் பாடல் மூலம் கூறுகின்றது.

அரிசி விற்றிடும் அந்தனருக்கு ஓர் மழை 
வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை
புருடனைக் கொன்ற பூவையற்கு ஓர் மழை 
வருடம் மூன்று மழையெனப் பெய்யுமே 

ஆனால் இன்று மழை என்பது பெரிய கேள்விக்குறியாகி விட்டது ..மாதம் மும்மாரி மழை பொய்த்து, வருடம் மும்மாரி ஆகி ,தற்போது வருடத்திற்கு ஒருமுறை பெய்வதே அதிசயமாகி விட்டது. வெயிலோடு விளையாடி என்றொரு திரைப் பாடல் நினைவிற்கு வரும்போதே..
மழையோடு உறவாடி என்று நினைக்க தோன்றுகின்றது. தற்போது உள்ள குழந்தைகள் மழையை புத்தகத்தில் வார்த்தையாக , திரையில் பார்த்திருப்பார்களோ என்று நினைக்க தோன்றுகின்றது.


வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்று கேட்டிருக்கின்றோம். ஆனால் மழையின் அருமை வெயிலில் அல்லவா தெரிகின்றது. சற்று யோசித்து பாருங்கள். இயற்கை அளித்த கொடையாம் நீர் விலைக்கு விற்கப்படும் அவல நிலை ! இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்த நிலைக்கு யார் காரணம்? நாமே..நாம் மட்டுமே .
மழைக்கு ஆதாரமான மரங்களை வெட்டினோம். 
விவசாய நிலங்களை அடுக்கு மாடி குடியிருப்புகளாக்கினோம்.
சுற்றுசூழலை புறக்கணித்தோம் 
மரபை மறந்தோம் 
பாரம்பரியத்தை பழித்தோம்
என்று அடுக்கி கொண்டே போகலாம்.

இப்போதேனும் நாம் சற்று விழிக்க வேண்டும்.அப்போது தான் நம் தலைமுறை மழையில் நனைந்து வாழும். இப்பதிவை படிக்கும் ஒவ்வொருவரும் கீழ்காணும் செயல்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.

1. ஒவ்வொருவரும் குறைந்தது 1 மரக்கன்றை நட்டு பராமரிக்க வேண்டும் 
2. வீட்டினில் காய்கறி தோட்டம் அமைக்கவும் 
3. பிளாஸ்டிக் பொருள்களின்(பாலிதீன் பை, பாட்டில் )பயன்பாட்டினை  குறைக்கவும்.
4. குழந்தைகளிடம் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 
5. கீழ்கண்ட வேதாத்திரி மகரிஷி அருளிய  மழை வாழ்த்து பாடலை தினமும் காலையில் எழுந்த உடன் மற்றும் இரவில் உறங்கும் முன்பு -3 முறை கூறவும்

மழை வாழ்த்து

ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய் பொழிக! மக்கள் வளமாய் வாழ்க!



தாமிரபரணி, வைகை, பாலாறு என தமிழகத்தின் பல ஊர்களில் நதிகள் இருந்தாலும், நதிதேவதையைக் கொண்டாடுகிற பழக்கம், ஆடிப்பெருக்கு எனும் பெயரில் வழிபடுகிற விஷயம், காவிரி நதிக்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பு!

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, ஒகேனக்கல், மேட்டூர், ஈரோடு, கரூர், திருச்சி வழியே புகுந்து புறப்பட்டு, தஞ்சை தேசத்தை அடைந்து, பிறகு கும்பகோணம், மயிலாடுதுறை வரை பாய்ந்து, பூம்புகாரில் கடலுடன் கலக்கிறது காவிரி. அதனால்தான் பூம்புகாரை காவிரி புகும்பட்டினம் என்றே அழைத்தார்கள். அது பின்னாளில் காவிரிப்பூம்பட்டினம் என மருவியது.எனவே காவிரித்தாயைப் போற்றி மகிழ்வோம்.

அடுத்து தாமிரபரணி தாயார் தரிசனம் காண இருக்கின்றோம்.






 தாமிரபரணி தோற்றம் பற்றி 

"திங்கள் முடிசூடும் மலை
தென்றல் விளையாடும் மலை
தங்கும் முகில் சூழும் மலை
தமிழ் முனிவர் வாழும் மலை
அங்கையற்கண் அம்மைதிரு
அருள் சுரந்து பொழிதெனப்
பொங்கருவி தூங்குமலை
பொதிய மலையென்மலையே”

என குற்றால குறவஞ்சியில் குற்றால குறத்தியிடம் பொதிகை மலை குறத்தி பொதிகை மலை பெருமையை கூறுவதாக உள்ள பாடல் இது. குற்றால மலையை திரிகூட மலை என்று கூறுவார்கள். தாமிரபரணி தோன்றும் இடத்தை ஐந்து தலை பொதிகை என்பர். தாமிரபரணி பற்றி தனியாக தொகுத்து தரும் அளவிற்கு செய்திகள் நமக்கு கிடைத்திருக்கின்றது. குருவருளால் மட்டுமே இதனை பற்றி நாம் சிந்திக்க முடியும். நதி,நீர்நிலைகள் வழிபாடு என்பது நம் முன்னோர்கள்,சித்தர்கள் வழிபாட்டில் மிக மிக முக்கியமானது. இதனை நாம் தொடர் வேண்டும் என்பதே சிறப்பு செய்தியாகும்.தினசரி வழிபாட்டில் நாம் நீர்நிலைகளை நினைத்து வழிபட வேண்டும்.அன்றைய காலத்தில் நீர்நிலைகள் அருகில் தான் பல பூசைகள் நடைபெறும்.ஆனால் இன்று நீர்நிலை என்பது வெறும் எழுத்தின் மூலம் தான் சொல்ல முடிகின்றது.இருக்கின்ற நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இது நம் பொறுப்பும் கடமையும் கூட.

தாமிரபரணி தரிசனம் நாம் பாபநாசம் முதல் சேர்ந்தபூமங்கலம் வரை நவகைலாய யாத்திரையில் சென்ற மாதம் பெற்று வந்தோம். இந்த ஆண்டு மாசி மக கும்ப ஹோமத் திருவிழா அன்றும் தாமிரபரணி அன்னையை தொழுதோம். முதன் முதலாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பங்குனி உத்திரம் அன்றும் பாபநாசத்தில் தாமிரபரணி தாயை மலர் தூவி வணங்கினோம். அன்றைய தினத்தில் இருந்து சில காட்சிகள் இங்கே பகிர்கின்றோம்.













அடுத்த நாள் பங்குனி உத்திரம் அன்று பாபநாசம் ஆற்றில் நந்தி வழிபாடு பிரசாதத்தை நன்கு சங்கல்பம் செய்து ஆற்றில் சமர்பித்தோம். இதே முறையை கல்யாண தீர்த்தத்திலும் செய்தோம்.










தற்போது கல்யாண தீர்த்தம் சென்று இங்கே செல்ல குருக்களிடம் பேசி அங்கே உள்ள சிறு கதவை திறந்து தான் செல்ல முடியும். 

அடுத்து கோடகநல்லூர் தாமிரபரணி தாய்க்கு சென்ற ஆண்டில் 12.02.2021 அன்று நடைபெற்ற வழிபாட்டின் துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.






தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் சமர்ப்பித்தல்.








இன்னும் நதி வழிபாடு நம்மை ஆதி பரம்பொருள் நோக்கி ஈர்த்து வருகின்றது. பதிவின் நீளம் கருதி அடுத்து பதிவில் தொடர்வோம். இது  வழிபாடுகளை நமக்கு அளித்து வாழ வழி காட்டி வரும் நம் குருநாதர்களின் பாதத்தை என்றும் வணங்கி மகிழ்கின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

-மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

மழை வாழ்த்து - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_72.html

வளங்களை அள்ளித் தருகின்றாள் வனபத்ர காளி - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_31.html
 
காவிரித் தாயே போற்றி! போற்றி!! - ஆடிப் பெருக்கு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_5.html

வரம் பல அருளும் வரலட்சுமி நோன்பு இருக்கலாமே - 31.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/31072020.html

நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

திருவாசகம் முற்றோதுதல் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் கிராமம், தஞ்சாவூர் - 06.08.2023 - https://tut-temples.blogspot.com/2023/07/06082023.html

வீரபாண்டி - ஸ்ரீ அகத்தியர் குரு பீடம் - திருவாசகம் முற்றோதல் பெருவிழா - 23.07.2023 - https://tut-temples.blogspot.com/2023/07/23072023.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர் - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

திருவாசகத் தேன் - 01- சிவபுராணம் - https://tut-temples.blogspot.com/2022/02/01.html

பிரார்த்தனை எனும் மகா சக்தி!  - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_17.html

இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html

சத்தியத்தைப் பேசு, தர்மத்தை கடைப்பிடி! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post.html

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே... - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_29.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

No comments:

Post a Comment